Powered By Blogger

Wednesday, 14 December 2011

பஞ்சாயத்து பேசி வாய்யா!!!


பொன்னாங்கண்ணி தோட்டத்திலே
களையெடுக்கும் சின்னபுள்ளே
சிணுங்காம பக்கம்வாடி 
சின்னமச்சான் காத்திருக்கேன்!!
 
சின்னமனூர் சந்தையிலே
சுங்குடிச்சீலை  வாங்கிவந்தேன்!
தங்க மணிச்சிலையே
தாவியிங்கே ஓடிவாடி!! 

ஆண்டிப்பட்டி அழகு அத்தை 
பெத்தெடுத்த கருத்த மச்சான்!
தூண்டிபோட்டு நீ இழுக்க 
திருக்க மீனா நானுமிங்கே!!
 
சின்னமனூர் போயிவந்து
சிங்கப்பூரு போனதுபோல்!
சிலுத்துகிட்டு நிக்குறியே 
சீமான்பெத்த செல்லமச்சான்!! 


குச்சனூரு குமரிப்புள்ளே
களையெடுக்கும் நேரத்திலே!
கும்பக்கரை தண்ணிபோல
குளிர்ச்சியாக பாடிடடி!!
 
அள்ளி பூமுடிச்சி
அலுங்காம பக்கம்வாடி!
ஆசையெல்லாம் மனசுக்குள்ளே
அவிச்ச நெல்லா கிடக்குதடி!!
 
 
வாடிப்பட்டி மேளம்போல
தாளம்போட்டு பேசும் மச்சான்! 
வௌவ்வாலு  நிற்பதைப்போல்  
தலைகீழா நிற்குறியே!!
 
வேலை தலைக்குமேல
வெடவெடன்னு கிடக்குதய்யா!
கீரை கொஞ்சம் பறிச்சுத்தாரேன்
கூளையனூர் போய்வாங்க!!
 
 
சுருளித் தண்ணிபோல  
சுள்ளுன்னு பேசுறியே!
கொஞ்சி பேசினாலோ
குறைஞ்சாடி போயிடுவ!!
 
கௌமாரி குடியிருக்கும்
வீரபாண்டி போயிடுவோம்!
கூரைச்சீலை வாங்கியாறேன்
குடித்தனந்தான் தொடங்கிடுவோம்!!
 
 
உத்தம பாளையத்து
உடுக்குபோல சலம்புறியே!
அப்பனாத்தா பார்த்தாகன்னா
எவ்வுசிரே போயிடுமே!!
 
கோக்குமாக்கு செய்யாதய்யா 
கோலிக்குண்டு கண்ணுமச்சான்!
உனக்கின்னு பொறந்தவ நான் 
உன்னைவிட்டு எங்க போவேன்!!
 
 
எகத்தாளம் பேசாதடி
எனக்கின்னு பொறந்தவளே!
அயித்தையும் மாமனும் ஏன் 
கட்டிவைக்க மாட்டாகளா!! 
 
கொட்டக்குடிச் சந்தையில
தாலியொன்னு வாங்கியாறேன்!
தளம்விட்டு எறங்கிவாடி  
தம்பதியா வாழ்ந்திடுவோம்!!
 
 
அல்லிராணி நானுமில்ல
அகங்காரம் பேசவில்லை!
ஊரிருக்கும் நிலையிலே நீ
புத்திகெட்டு பேசாதய்யா!!
 
முல்லை பெரியாறு 
கொல்லையிலே ஓடினாத்தான்!
நமக்கெல்லாம் கஞ்சியின்னு 
தெரியாதா தங்கமச்சான்!!
 
ஊரே கொதிக்குதய்யா 
எல்லையிலே நிக்குதய்யா!
மதிகெட்டு நீயிங்கே 
சுதிபோட்டு பேசுறியே!!
 
தேனி பெரியகுளம் 
போடிப்பட்டி சரகமெல்லாம்!
அந்தத் தண்ணி நம்பித்தானே 
இந்தவுசிர் வைச்சிருக்கோம்!!
 
அண்டை நாட்டுக்காரன் 
அகம்பாவம் பேசுராய்யா!!
பாய்ஞ்சி ஓடிப்போயி 
பஞ்சாயத்து பேசி வாய்யா!!
 
 
தேக்கம்பட்டி தேனுன்னு
தோதாக நினைச்சிருந்தேன்!
ஊக்கமாக பேசிபுட்ட 
உடனே நான் கிளம்புறேண்டி!!
 
பக்கத்து நாட்டுக்காரன்
போட்டுவைச்ச புகார்மனுவ!
உச்சநீதி மன்றமது 
தள்ளிவைச்சி போட்டாகளாம்!!  
 
ஊரெல்லாம் தண்ணிக்காக
கூடிநிக்கும் வேளையிலே!
சுயநலமா இருந்த என்னை 
புத்திசொல்லி மாத்திபுட்ட!!
 
தரணி போற்றிவந்த 
தமிழ்நாட்டு நிலமையிங்கே!
தண்ணிக்காக காலமெல்லாம் 
தவிச்சிகிட்டே கிடக்குதடி!!
 
ஊரோட கூடப்போறேன் 
ஊர்வலமா போகப்போறேன்!
ஒத்துமையா சேர்ந்துநின்னு
ஓங்கிக்குரல் ஒலிக்கப்போறேன்!!
 
இன்னைக்கு நடக்கப்போகும் 
பஞ்சாயத்துக்கு அப்புறமா!
இனிமேல் ஒருபொழுது 
வந்திடாம காத்திடணும்!!
 
 
தேசிங்கு ராசாபோல்
வீரநடை போட்டிடய்யா!
தேசமின்னா ஒன்னுன்னு
உரக்க நீயும் பேசிவாய்யா!!  
 
எம்மனசு நிறைஞ்சுதய்யா 
இட்டுகட்டி பாடுதய்யா!
உனக்காக காத்திருப்பேன்
போய்வாய்யா ஆசைமச்சான்!! 
 
 
 
அன்பன் 
மகேந்திரன்    


பின்குறிப்பு:
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழக கேரள எல்லையில் இன்னும் பதட்டம் ஓய்ந்தபாடில்லை. உச்சநீதிமன்றம் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்திருந்தாலும். இன்னும் 
மத்திய அரசு வாய்திறந்து பேசவில்லை. மத்திய அரசிற்கு இதை உணர்த்தும் வகையில் அன்பு நண்பர் சசிக்குமார் அவர்கள் கையெழுத்து கேட்கிறார். நாம் அங்கே சென்று ஆதரவை தெரிவிப்போம். நமது நண்பர்களுக்கும் சொல்வோம். ஓங்கிக் குரல் எழுப்புவோம்.
 
நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் தனது பதிவில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டின் வரலாற்றை தனது பதிவில் வெளியிட்டிருக்கிறார். சென்று பார்ப்போம் நண்பர்களே.
 

71 comments:

RAMA RAVI (RAMVI) said...

முல்லைப்பெரியாறு பிரச்சனையை,மிக அழகாக நாட்டுப்புற பாடலில் விளக்கி விட்டீங்க. சிறப்பாக இருக்கு மகேந்திரன்.வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

அழகான கிராமிய தெம்மாங்கு

மும்தாஜ் said...

காதல் கவிதைய இருக்கேன்னு படிச்சுட்டு வந்தா இறுதியில் நாட்டுப்பற்று கவிதையாக முடிந்தது..
காதலர்களின் உரையாடலோடு சொன்ன மகேனின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்!!!!
..
தரணி போற்றிவந்த
தமிழ்நாட்டு நிலமையிங்கே!
தண்ணிக்காக காலமெல்லாம்
தவிச்சிகிட்டே கிடக்குதடி!!
அருமையான வரிகள் !!!!!
இப்போது தேவை ஒற்றுமை மட்டுமே..
ஓங்கி குரல் கொடுப்போம் .. நமது உரிமையை நிலை நாட்டுவோம் !!!!

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பதிவு மிக மிக அருமை
வார்த்தைகள் ஓடை மீன்கள் போல
மிக அழகாய் துள்ளி துள்ளி விளையாட
மனம் சொக்கிப் போனேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

எனது கவிதைகள்... said...

முல்லைப்பெரியாறு பிரச்சனையை,மிக அழகாக நாட்டுப்புற பாடலில் விளக்கி விட்டீங்க. மிக மிக அருமையாக இருக்கு மகேந்திரன்.வாழ்த்துக்கள்!


உண்மைவிரும்பி.
மும்பை.

Admin said...

கிராமிய மணத்தில் முல்லைப் பெரியாறு பற்றிய கவிதை அருமை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எந்தந்த ஊர் எதுக்கு சிறப்பு என்று தங்கள் கவிதையை படித்தாலே தெரிந்து விடும்..

Unknown said...

மாப்ள அழகான விளக்க பாடலுக்கு நன்றிங்கோ!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதையில் சமூக பிரச்சனையை திரம்பட கையாண்டுள்ளீர்...


உச்ச நீதிமன்றம் உத்தரவை கூட மதிக்காத மாநிலம் நம் பேச்சை எப்படி கேட்கப்போகிறது...


அண்டை மாநிலங்கள் நட்பு பாராட்டி அரவணைக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் நாம் எல்லோரும் ஒரே இந்தியா என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை

பால கணேஷ் said...

கிராமிய நடையில் முல்லைப் பெரியாறு விஷயத்தைச் சொல்லி அசத்தி விட்டீர்கள். உவமைகள் துள்ளி விளையாடுகின்றன. மிக ரசித்தேன். (பக்கத்து மாநிலத்தை பக்கத்து நாடுன்னு கவிதைல சொல்லிட்டிங்களே... அதுசரி... அவிங்க நடந்துக்கறது அப்படித்தானே இருக்கு...)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள்!
பகிர்விற்கு நன்றி!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

ராஜா MVS said...

கிராமிய பாடல் வழியில் சமூக பிரச்சனைகளை எடுத்தாண்டவிதம் அருமை... நண்பரே...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா வித்தியாசமாக முல்லைப்பெரியார் போராட்டத்தை காதலோடு பேசி போராட்டத்துக்கு அனுப்பும் பெண்ணே நீதான் உண்மையான தமிழச்சி, கண்ணில் ஆனந்தகண்ணீர் நிறைந்து கண்ணை மறைக்கிறது, நாளைய சரித்திரம் நம்மை சொல்லும் என் செல்ல கண்மணியே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

என் பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி மக்கா மகேந்திரன்.

Unknown said...

அருமை மகி!

புலவர் சா இராமாநுசம்

கோகுல் said...

தேசிங்கு ராசாபோல்
வீரநடை போட்டிடய்யா!
தேசமின்னா ஒன்னுன்னு
உரக்க நீயும் பேசிவாய்யா!!

இத நம்ம மௌன குரு கேக்கணும்.

தெம்மாங்கிலும் தேசத்தை இழுத்து வந்து விட்டீர்.அருமை!

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் பதிவுக்கு ஒவ்வொரு முறை வந்துசெல்லும்போதும்...

மண்வாசம் நுகர்ந்துசெல்கிறேன்..


அழகான பதிவு..

முனைவர் இரா.குணசீலன் said...

இந்தமுறை மண்வாசனையோடு கொஞ்சம் சிந்தனையும்..


சிந்திப்போம்...

ஒன்றுபடுவோம்...

Sakunthala said...

மண் மணம் வீசும் அழகிய பாடல்
பாடலில் இன்றைய சமூக சிந்தனை
வாழ்த்துக்கள் தோழரே

M.R said...

அழகிய தெம்மாங்கு பாட்டு அழகான வரிகளில் அருமை நண்பரே

குறையொன்றுமில்லை. said...

a அழகான கிராமிய மனம் கமழும் கவிதை.. வாழ்த்துக்கள்.

ஷைலஜா said...

நாட்டுப்புற மெட்டில் பாட்டைப்பாடிப்பார்த்தேன் தெம்மாங்கு ஜோரா இருக்கு.

shanmugavel said...

கிராமங்கள் உங்கள் வார்த்தைகளில் அனுபவத்தை சரியாகத்தருகிறது.சொல்ல வந்ததை சிறப்புடனும்சொல்லிவிட்டீர்கள்,அருமை.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
விரைந்தோடி வந்து சொல்லிய அழகிய கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த மேலான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் உண்மைவிரும்பி,

தங்களை வசந்தமண்டபத்திற்கு வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறேன்.
தங்களின் அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம்நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
தேனி மாவட்ட ஊர்களை கவிதையில் கொண்டு வரவேண்டும் என்பதுதான்
எண்ணம். அதைச் செய்தேன்.
ஏற்கனவே கர்நாடக அரசுக்கு உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று பிறப்பித்த நீதியை அவர்கள் இன்னும் கடைபிடிக்கவில்லை. எப்போதும் சண்டை போட்டே வாங்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு பிரச்சனையும் வந்தால், தண்ணீருக்கு எங்கே தான் போவது.
வேற்றுமையில் ஒற்றுமை என்று மார்தட்டினால் மட்டும் போதாது. அதை குறைந்தபட்சம் மாநிலங்கள் இடையிலாவது செய்து காட்ட வேண்டும்.

தங்களின் மேன்மையான கருத்து என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு
கோடானுகோடி நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
பக்கத்து மாநிலம் என்று எழுதத்தான் நினைத்தேன், ஆனால்
நாட்டுப்புறக் கவி நடைக்கு அந்த சொல் ஒத்துவர வில்லை.
அதனால்தான் நாடு என்று குறிப்பிடும்படி ஆகிப்போனது.

தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறைநண்பர்
திண்டுக்கல் தனபாலன்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறைநண்பர் ராஜா MVS,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ,
நம்ம நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் இப்படித்தான்..
காதல் மொழிகளிநூடே சம்பவத்தை பகிர்ந்துகொள்வார்கள்.
ஏற்றம் இறைக்கையில் விலைவாசி பேசுவதும், நாற்று நடுகையில் அரசியல் பேசுவதும், வண்டிக்காரன் நாகரீகம் பேசுவதும்...
அடேயப்பா ஒரு கட்டற்ற களஞ்சியம் நண்பரே.
தங்களின் மேன்மையான ஆழமான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

அம்பாளடியாள் said...

அழக்கான வாக்குவாதம் .மிகவும் எளிமையான கவிதை
வரிகளில் அருமை !...மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ..

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
அவரது இசைக்கு நான் அடிமை. அவர் பார்த்தாலே போதும் இக்கவிதையை.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் மேன்மையான கருத்துக்கும், என் மீதான அன்பிற்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

நேசத் தோழி சகுந்தலா,

தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஸ்,.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,

தங்களின் அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

vetha (kovaikkavi) said...

சிறப்பான கிராமியப் பாடல். சிந்தனையும் சேர்ந்து. வாழ்த்துகள் மகேந்திரன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Anonymous said...

கிராமிய மனம் கமழும் வரிகள் நன்றாக உள்ளது பாஸ்.. இப்ப எல்லாம் நாட்டுப்புற வரிகள் காண்பது மிக அரிது..தொடருங்கள்

சுதா SJ said...

பாரதிராஜா படம் பார்த்த உணர்வு வருது உங்க கவிதை படிக்கும் போது... உங்க கிராம ரசனைகள் ரெம்ப சூப்பர் பாஸ் :)

சுதா SJ said...

சின்னமனூர் சந்தையிலே
சுங்குடிச்சீலை வாங்கிவந்தேன்!
தங்க மணிச்சிலையே
தாவியிங்கே ஓடிவாடி!!
<<<<<<<<<<<<<<<<<<
பாடல்வரிகள் போல் அவ்ளோ கவர்ச்சியா இருக்கு... சூப்பர்

சுதா SJ said...

ஆசையெல்லாம் மனசுக்குள்ளே
அவிச்ச நெல்லா கிடக்குதடி!!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

பாஸ் இந்த கவிதைகளில் எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப புடிச்ச வரிகள். பாஸ் பிரமாதம் ரெம்ப ரசிச்சேன்.... ரியலி சூப்பர்... இந்த வரிகள் அவ்ளோ அழகா இருக்கு... ரியலி கிரேட்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,

தங்களின் அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கந்தசாமி,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துஷ்யந்தன்,

தங்களின் மேன்மையான ஆழமான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

கீதமஞ்சரி said...

மண்ணின் மணம் வீசும் படங்களுடனும் அழகானக் காதலுடனும் ஆரம்பித்த பாடல் இறுதியில் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அந்நிய மாநிலத்தின் அராஜகச் செயலைக் கண்டிக்கும் விதமாய் அமைந்து மனம் வருத்தியது. இப்பிரச்சனை தீரும் நாளெந்த நாளோ?

கா.ந.கல்யாணசுந்தரம் said...

அருமையான கவிதை. மீண்டும் மீண்டும் படித்தேன்.

இது ஒரு வரலாற்று ஆவணம்.

kunthavai said...

தோழமைக்கு வந்தனம்...

மிகத்தேவையான பாடல்...மிகத்தேவையான நேரத்தில்.

அரசியல்வியாதிகள் நம் நாட்டை நாசப்படுத்த உபயோகப்படுத்தும் காரணிகளில் ஒன்று இந்த தண்ணீர் பிரச்சனை .
இன்னும் மதம், மொழி போன்ற உணர்வுமயமான விஷயங்களில் உடன்பிறந்தோர் போன்று பழகி வந்த மனிதர்களிடையே வேறுபாடு உருவாக்கிப் பார்த்த அவர்களுக்கு இன்னும் வெறி அடங்கவில்லை போலும் !
சாமானிய மனிதனால் இந்த தாக்குதலை எதிர்நோக்க இயலவில்லை.
அவனது உணர்ச்சிகளைத்தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் ரத்தவெறி கொண்ட மிருகங்கள் இன்னும் என்னென்ன செய்யக்காத்திருக்கின்றனரோ ?!

தங்கள் பாடலும், அதன் நயமும், எழுத்துச்செறிவும் மிக மிக அருமை !

அன்புடன்,
அனு .

ராஜி said...

கவிதை வெகு அருமை. அதைவிட படங்கள் வெகு அருமை

ஹேமா said...

கிராமத்து அழகைப் படங்களோடு சொல்லியிருக்கிறீர்கள்.தெரியாத எங்களுக்கும் கண்களில் விரிகிறது காட்சிகள் !

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
வாழ்வாதாரம் நிலைத்திருக்க நாம் மேற்கொண்டிருக்கும் இந்தப்
போராட்டம், மாநிலங்கள் தோறும் மாநிலங்கள் தோறும்
வருந்தம் தோறும் வருடம் தோறும் நடைபெறும் .. முடிவற்ற செயல்..

சுயநலம் அறுத்து பொதுநல நோக்கில் ஆட்சியாளர்கள்,,
சிந்திக்க வேண்டும் ..
அப்போதுதான் இதற்கு தீர்வு.

தங்களின் மேன்மையான ஆழமான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கல்யாணசுந்தரம்,

வசந்தமண்டபம் தங்களை வருக வருக என வரவேற்கிறது.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி அனு,

சரியாகச் சொன்னீர்கள், ரத்தவெறி கொண்ட மிருகங்கள்
மற்றவர்களின் உணர்சிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான்
நடந்துகொண்டிருக்கிறது.
ஊடகங்களையும், அரசியல் செல்வாக்கையும் தவறான முறையில்
செயல்படுத்தி. நிதர்சனமான உணமையான நிலை தெரிந்தொரையும் மிரட்டி வைத்து அப்பாவி மக்களை தூண்டிவிடுவோர்கள் இருக்கும் வரை
இதுபோல பிரச்சனைகள் இருந்துகொண்டு தான் இருக்கும்.

நமக்கு போராட்டமே வாழ்க்கை..

தங்களின் மேன்மையான ஆழமான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

kowsy said...

நாட்டுப்புறப் பாடலுக்குத் தனிமவுசு. ஒரு ராகம் கூட்டிப் படித்துப் பார்த்தேன். ஐயோ .... அற்புதமாய் இருக்கிறது. உவமை எல்லாம் கச்சிதமாய் கலை எடுக்கப் பட்டுக் கவிதையிலே கலந்திருக்கிறது. அவிச்ச நெல்லைக் கிடக்குதடி. அப்படிஎன்றால்.உடனடியாக உண்ணக்கூடிய நிலைமையிலே இருக்கிறது.முல்லைபெரியாறு பிரச்சினையில் இப்படியொரு அழகுப் பாடல் வெளிப்பட்டிருப்பது அற்புதம்.
உத்தம பாளையத்து
உடுக்குபோல,கோலிக்குண்டு கண்ணுமச்சான்!, தேக்கம்பட்டி தேன்,தேசிங்கு ராசாபோல், சுருளித் தண்ணிபோல , இப்படி அழகாக உவமைகளைக் கையாளக் கூடிய வல்லமை. கிராமத்து மக்களுக்கு நிறையவே இருக்கிறது. அந்த மண்ணுக்குரிய மகிமை அது. சிறப்பு மகேந்திரன் தொடருங்கள். புதிய ஆக்கம் இடும்போது எனக்கும் ஒருமுறை தட்டிவிடுங்கள். புரிந்து கொள்வேன். மகேந்திரன் பக்கத்தில் புதிதாய் ஒன்று தோன்றியுள்ளது என்பதை

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,

இன்னும் கிராமப்புறங்களில் அதுவும் தேனி மாவட்ட
கிராமங்களில், யாரேனும் ஒருவர் மனம் நொந்து இருந்தால்
அவரை பார்த்து அடுத்தவர், ஏன்யா இப்படி நடந்ததை மனசில
அவிச்ச நெல்லா போட்டு வைச்சிருக்க என்று சுட்டிக் காட்டுவார்கள்.

கவிதையை நன்கு உள்ளுணர்ந்து மேன்மையான
கருத்து சொன்னமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல சகோதரி.

சத்ரியன் said...

நாட்டுப்புற பாட்டிலெல்லாம் நாட்டு நடப்பை பாடி வைப்பர்.

நாளை வரும் சந்ததிக்கு நயமான சேதி வைப்பர்.

அந்தக்கலை மறைந்தே போனதென்று
அடிமனதில் கவலைக்கொண்டேன்.

நண்பா நானிருக்கேன்
நம் கலைக்கு உயிர் கொடுக்க - என

வலைப்பூவில் வந்து பூத்த தோழன்
மகேந்திரரே வாணக்கமய்யா.

இன்னைய சேதி வெச்சி
பாடியிருக்கும் பாட்டு இது
நாளைய ஏட்டில் உன்னை
கண்ணாடி போல் காட்டுமய்யா.

arasan said...

தெளிந்த நீரோடையில் தெளிவாக தெரியும் முகமாய்
அற்புத வரிகொண்டு அழகிய கவிதை தொடுத்து
புத்தியில உறைக்கும்படி புகட்டிய புதுக் கவிஞரே
உங்களை வாழ்த்த வயதில்லை ..
வணங்குறேன் ..

ஆதரவு தெரிவிப்போம் ...அழுத்தமாய் பதிவோம் நம் உரிமையை ..

காட்டான் said...

வணக்கம் மாப்பிள...!
ஒரு வெள்ளைக்காரனுக்கு இருந்த ஈர மனசு இவர்களுக்கு இல்லையே..! 

நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்கனும் என்று தோன்றியது இந்த படங்களை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள்..? எல்லா பதிவுகளிலும் உங்ககள் கவிதைக்கு நிகராய் நிற்கின்றன படங்கள் வாழ்த்துக்கள்... !!

r.v.saravanan said...

கவிதையும் படங்களும் போட்டி போட்டு கொண்டு ரசிக்க வைத்தன அருமை நண்பரே

Rathnavel Natarajan said...

அருமை மகேந்திரன்.
வாழ்த்துகள்.

Post a Comment