Powered By Blogger

Saturday, 17 December 2011

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே??!!!
தனிமை ஒரு தவம் போன்றது. உணர்வுகள் போராட்டம் நடத்தும் வாழ்வில்
தனிமை தனக்கிட்ட பணியை செவ்வனே செய்கிறது. இருக்கின்ற மனநிலையைப்
பொறுத்து தனிமை நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் சிலசமயம் குரூரமாகவும்
பல சமயங்களில் சீர்மிகு சிந்தனையாகவும். இப்படி நான் விடப்பட்ட ஒரு தனிமை
வேளையில் என் மனதுக்குள் உதித்த எண்ணம் தான் இது.

நம் தமிழ் மொழியில் சொற்களுக்கு பஞ்சம் இல்லை. அதில் ஒரு சொல்லை எடுத்து
ஒரு விடுகதை போட்டால் என்ன என்ற எண்ணம் தான் அது..

முயற்சிக்கிறேன்....

இதோ பாடல் வடிவில் ஒரு விடுகதை. முடிவில் இங்கு விடுகதைக்காக எடுக்கப்பட்ட
சொல்லை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

ஐந்தெழுத்தை அழகாய் 
தன்னுள் பதித்த 
கைதவழ் பொருளின் 
அழகிய சொல்லே!!

முதலெழுத்தின்
"ஆ"காரம் "அ"கரமாக
மாறிநின்றால்
இருபொருள் படும்!
ஒன்றோ ஆவணமாய்
சட்டம் பேசும்!
மற்றொன்றோ
தட்டி எழுப்பி  
விழித்துக்கொள்ளச் செய்யும்!! 

முதலெழுத்து திரிந்து
"ச"கர "ஊ"காரமாய் 
மாறிநின்றால் 
நான் இல்லையேல் 
கணிதமில்லை என 
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து 
"ச"கர "ஆ"காரமாய் 
மாறிநின்றால் 
சகல் கலைகளும்  
என் கட்டுக்குள் தானென 
ஆணவம் பேசும்!!

முதலெழுத்து திரிந்து
"ம"கர "இ"கரமாயும்
கடையெழுத்து திரிந்து 
"ன"கரமாயும் மாறி
அதே ஐந்தெழுத்தாய்
உருமாறி நின்றால்
நம்பிக்கைக்கு உரியவராயும்
உற்ற நேரத்தில்
தோள் கொடுப்பவராயும்  
மிளிர்ந்து நிற்கும்!!
முதலும் கடையிரண்டும்
கூடிநின்றால் 
தாளாத அதிகப்படியான
பொருள் அளவை
முன்மொழிந்து நிற்கும்!!

முதல் மூன்றும்
தனித்து நின்றால்
விதைப்பதற்காய்
உழவன் அமைத்த
வடிவை அழகாக
சொல்லி நிற்கும்!!

எனதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
இன்று மாலை வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.

அன்பன்
மகேந்திரன்


64 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
வாழ்த்துக்கள்.

ராஜி said...

இங்க ஏதோ கேள்வி கேட்டிருக்காப்ல இருக்கு. சாரி, அதெல்லாம் அறிவாளிங்களுக்கு. நான் போய்ட்டு அப்புறமா வரேன் சகோதரா

Admin said...

முயற்சிப்போம்..நன்று..

கோவி said...

ஹி ஹி.. மேல் மாடி நமக்கு எப்பவுமே காலிதான்.. விடைய போடுங்க.. முதல் ஆளா வந்து பார்த்திடறேன்.

சத்ரியன் said...

மகேந்திரன் அண்ணா,

உங்க பேச்சி ‘கா’.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன ஒரு கொல வெறி...

இந்த ஆட்டத்துக்கு நான் வரல...

சாயங்காலம் வந்து கண்டுக்கிறேன்ங்க...

arasan said...

அண்ணே வணக்கம் ...
நான் முயன்று பார்த்தேன் ,
ஒன்னும் புலப்படவில்லை ..
நான் அந்தியில் வந்து அறிந்து கொள்கிறேன் .

Sakunthala said...

உங்கள் புதிருக்கான விடை
பாத்திரம் என்பதாகும்
முதலெழுத்தின்
"ஆ"காரம் "அ"கரமாக
மாறிநின்றால்
இருபொருள் படும்!
பத்திரம்
முதலெழுத்து திரிந்து
"ச"கர "ஊ"காரமாய்
மாறிநின்றால்
சூத்திரம்
முதலெழுத்து திரிந்து
"ச"கர "ஆ"காரமாய்
சாத்திரம்
முதலெழுத்து திரிந்து
"ம"கர "இ"கரமாயும்
கடையெழுத்து திரிந்து
"ன"கரமாயும் மாறி
மித்திரன் -தோழன்
முதலும் கடையிரண்டும்
கூடிநின்றால்
பாரம்
முதல் மூன்றும்
தனித்து நின்றால்
பாத்தி
சரிதானா??

kunthavai said...

பாத்திரம் -

எனக்கு முன்பே இங்கு வேறொருத்தர் பதில் சொல்லிட்டு போயிருக்றாங்க :(

kunthavai said...

அட.......வெறும் மூன்றே நிமிடங்கள் நான் கண்டுபிடிப்பதற்கு எடுத்த நேரத்தில் இங்கு பதில் வந்திருக்கிறதே.

ஹாஹா....வாழ்த்துகள் பதில் பகின்றவருக்கும்...விடுகதையின் வடிவமைப்பாளருக்கும்.....

- அனு

ஹேமா said...

பெரிய கேள்வி.கஸ்டமாயிருக்கு !

துரைடேனியல் said...

Naan kandupidichitten. Evening Neenga answers sonna piragu compare pannittu solren. O.K.?!

TM 8.

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு வயிறு பசிக்குது போயி சாப்டுட்டு அப்பாலிக்கா வாறன் அவ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

வாசித்து முடித்ததும் மண்டைக்குள்ளே "ங்கே"ன்னு சத்தம் அது ஏனுங்க...

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
இங்க ஏதோ கேள்வி கேட்டிருக்காப்ல இருக்கு. சாரி, அதெல்லாம் அறிவாளிங்களுக்கு. நான் போய்ட்டு அப்புறமா வரேன் சகோதரா//

ஹா ஹா ஹா அண்ணனுக்கு தப்பாமல் பிறந்த தங்கச்சி ஹி ஹி "ங்கே"

பால கணேஷ் said...

-அட, இந்த புதிர் விளையாட்டு நல்லா மூளைக்கு வேலை தருதே... நான் லேட்டா வந்துட்டதனால விடைய முன்னாடியே சொல்லிட்டாங்க. அடுத்த தடவை முன்னாடியே வந்துடறேன். தொடர்வீங்கதானே மகேந்திரன்...

சக்தி கல்வி மையம் said...

என்ன தலீவா கேள்வி எல்லாம் கேட்கறீங்க?


ங்கே....

Unknown said...

அருமையான விடுகதை!
அழகாக அமைத்துள்ளீர்
இது தமிழுக்கே பெருமை!
விடை கண்டு எழுதியவருக்கும்
பாராட்டு!

புலவர் சா இராமாநுசம்

ஷைலஜா said...

வழக்கம்போல தாமதமா வந்து பின் என்ன சொல்றது மகேந்திரன்?:) ஆனா இப்படி புதிர் போட்ட கவிதைகள் பிடிச்சதுதான்..ஏதாவது யோசிக்க வைக்கிறதே கண்டுபிடிச்சவருக்கு வாழ்த்துகள்...

M.R said...

இருக்கின்ற மனநிலையைப்
பொறுத்து தனிமை நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் சிலசமயம் குரூரமாகவும்
பல சமயங்களில் சீர்மிகு சிந்தனையாகவும்.//2

யதார்த்தமான உண்மை நண்பரே

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மேலான கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
இப்படி ஓடுனா எப்புடி...
அடுத்த முறை கண்டுபிடிங்க .. சரியா....

தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
முயற்சி செய்யுங்கள் நண்பரே,
தங்களின் மேலான கருத்திற்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோவி,
வசந்தமண்டபம் தங்களை சாமரம் வீசி வரவேற்கிறது.
இதோ பதில் சொல்லும் நேரம் வந்துவிட்டது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சத்ரியன் அண்ணா,

நான் உங்க கூட சேக்கு தான்..

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
வாங்க நண்பரே சாயந்திரம்.
இதோ பதில் போடும் நேரம் வந்தாச்சு.

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்,
வாங்க நண்பரே சாயந்திரம்.
இதோ பதில் போடும் நேரம் வந்தாச்சு.

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

நேசத் தோழி சகுந்தலா,

வாரே வா..

அசத்தலா கண்டுபிடிச்சுடீங்க.

சரியான விடை.

பாத்திரம்.

அழகாக விடை பகர்ந்தமை மகிழ்ச்சி.

தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான் விடுகதை ரொம்ப யோசித்தும் புரியவில்லை
அடுத்த விடுகதையில் ஜெயிக்க முயல்கிறேன்
த.ம13

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி அனு,

அட.. கொஞ்சம் முன்னாடி வந்திருக்க கூடாதா...

அடுத்த புதிர் விடுகதைக் கவிதை இன்னும் சில நாட்களில் தோழி.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

Anonymous said...

சேர்! இதுக்கெல்லாம் எங்கேங்க நேரம்? வந்தமா வாசித்துக் கருத்துப் போட்டோமா தான். நேரமிருந்தா பதிலை பாத்துக்கிறேன் முயற்சிக்கு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

சென்னை பித்தன் said...

அருமையான விடுகதை!

shanmugavel said...

நல்ல வாய்ப்பு.தவறிவிட்டேன்.என்னால் இரவில்தான் கணினி பக்கமே வரமுடிகிறது.கவிதையில் விடுகதை நல்ல முயற்சி.அருமை மகேந்திரன்.புலவர் அய்யா சொன்னதுபோல தமிழுக்கு பெருமை.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
வாழ்த்துக்கள்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ,
அட..ஓடாதீங்க நண்பரே..
அண்ணனும் தங்கச்சியும் இப்படி ஓடிட்டா எப்புடி..

தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
நிச்சயம் தொடர்கிறேன்.
இதுபோல ஏதாவது வித்தியாசமாக
செய்யவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

அடுத்த முறை தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

தங்களின் மேன்மையான கருத்துக்கும் ஊக்கத்திற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்,
கேள்வி கேட்டே பெயர் வாங்குபவர்கள்..
கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் தானே...

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,
தங்களின் கருத்து என்னை மகிழ்ச்சியுறச் செய்கிறது.
முதலில் நன்கு யோசித்தேன் இதுபோன்ற பதிவுக்கு
எப்படி வரவேற்பு கிடைக்குமென்று.
என்னை ஊக்கபடுத்தும் விதமாக தங்களின் கருத்து
அமைந்தது என்னை பட்டை தீட்டுகிறது.

தங்களின் மேலான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
தங்களின் மேலான கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் மேலான கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
அடுத்தமுறை உங்களுக்கான வாய்ப்பு கிடைக்குமென்று
விரும்புகிறேன்.
என்னை ஊக்குவிக்கும் தங்கள் கருத்து மகிழ்ச்சியுறச் செய்கிறது.

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழமைகளே,
இந்தப் பதிவின் விடுகதைக் கவிதைக்கான
விடை:


பாத்திரம்

சரியாக விடை பகன்ற தோழமைக்கும், முயற்சி செய்த அனைவருக்கும்
என்னை ஊக்குவித்த எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அன்பன்
மகேந்திரன்

RAMA RAVI (RAMVI) said...

கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டேன்.
நல்ல முயற்சி மகேந்திரன்.நன்றி.

r.v.saravanan said...

ம்ஹும் சாயந்தரம் வந்து தெரிந்து கொள்கிறேன்

Unknown said...

நல்ல மொழி ஆளுமை! தமிழ் புலமை வளம் மிக்கது! வாழ்த்துக்கள்!

சுதா SJ said...

அண்ணே... என்னால் முடியல்ல..... அவ்வ்வ்வ்

சுதா SJ said...

உண்மையில் உங்கள் மொழி பற்றும் மொழி ஆளுமையும் பிரமிப்பாய் இருக்கு :) ரியலி கிரேட் அண்ணா

ராஜா MVS said...

மிக அருமையான முயற்சி நண்பரே...

தொடர்ந்து எழுதுங்கள் இது போல்...

நிரூபன் said...

மகேந்திரன் அண்ணா,
சாரி கிறிஸ்மஸ் வேலைகளில் மூழ்கி விட்டேன்!

தொடர்ந்து வருவேன்!
தமிழ்க் கவிதையில் சிந்தைக்கு விருந்தளித்திருக்கிறீங்க.

நல்ல முயற்சி அண்ணா.

கே. பி. ஜனா... said...

'பாத்திரம்' என்ற சொல் தான் விடை என்று நினைக்கிறேன்.

மாய உலகம் said...

விடுகதை கவிதையை பார்த்து வியக்க தான் முடிந்தது... விடையை ஆராயும் அளவுக்கு மூளைக்கு எட்டவில்லை இலக்கியம்... மொத்தத்தில் கலக்குறீர்கள் எட்டா கனியாக.. தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே! வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஆர்.வி.சரவணன்,
வசந்தமண்டபம் தங்களை சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
வசந்தமண்டபம் தங்களை சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துஷி,
இப்படி ஓடினா.. எப்பூடி...
நில்லுங்க.. அட.. நில்லுங்க னா.

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரூபன்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கே. பி. ஜனா,
வசந்தமண்டபம் தங்களை சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்,

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் மகேந்திரன்.

Post a Comment