Powered By Blogger

Sunday 18 September 2011

பூங்கரகம் ஆடிவந்தேன்!!
வணக்கமைய்யா! வணக்கமைய்யா!
வாழ்த்தியோரே வணக்கமைய்யா!
சுனக்கமின்னு எண்ணாதைய்யா!
சுத்தமான வணக்கமைய்யா!
சூதுவாது இல்லாம நாந்தான்
கூறிவந்தேன் வணக்கமைய்யா!!

கூடியிருக்கும் கூட்டமெல்லாம்
குந்தியிருந்து பாருங்கைய்யா!
குலைவையிட்டு பாடிக்கொண்டே
கும்ப ஆட்டம் ஆடிவாறேன்!
கறந்தபால குடிச்சிபுட்டு
கரக ஆட்டம் ஆடிவாறேன்!!


முத்துக்கும்பம் மூலக்கும்பம்
மூத்தோர்கள் தந்த கும்பம்!
மூனுகல்லு எடையிருக்கும்
செவந்திமாலை செப்புகும்பம்!
கும்பத்துக்குள் அரிசிகொட்டி
கரகமாக்கி தலையில் வைச்சேன்!!

தென்னைத்தேங்காய் தேனுத்தேங்காய்
மேலூரு சந்தைத் தேங்காய்!
மூனுகண்ணு முக்கண்ணாரின்
கொண்டைபோல இருக்கும் தேங்காய்!
கும்பம் மேல தேங்கா வைச்சு
சுத்திசுத்தி ஆடிவந்தேன்!!
கொஞ்சும்கிளி பவளக்கிளி
கோவைப்பழம் தின்னும் கிளி!
கொஞ்சிகொஞ்சி பேசும்கிளி
கோமகளின் கையுக்கிளி!
கும்பத்தின் உச்சியில
ஒய்யாரமா அமர்ந்த கிளி!!

மாண்போர்கள் வாழ்ந்திருக்கும்
மாமதுரை ஊர்தனிலே!
நாணிக்கோணி வளர்ந்திருக்கும்
நெட்டியெனும் நாணல்கொண்டு!
கிளிக்கொச்சம் செய்துவந்து
கரகாட்டம் ஆடிவந்தேன்!!
பொன்னான கரகம் கொண்டு
உக்கிரமா ஆடையில!
தகதகக்கும் தங்ககும்பம்
தளர்ந்துவிடக் கூடாதுன்னு!
கொக்குமுடி பொறுக்கிவந்து
வெள்ளைக்குஞ்சம் செஞ்சி வைச்சேன்!!

மணமணக்கும் சந்தனத்தை
உடம்பெல்லாம் பூசிக்கிட்டு!
சலசலக்கும் சலங்கையதை
சோக்காக போட்டுக்கிட்டு!
மூலவன கும்பிட்டுட்டு
முக்கரகம் ஆடிவந்தேன்!!ஒருகையில் வில்லிருக்க
மறுகையில் அம்பிருக்க !
தாம்பூலத் தட்டின்மீது
தாமரைப் பாதம்வைச்சு
தரையில கால்படாம
கரகரன்னு ஆடிவந்தேன்!!

ஆடும் கரகம் எடுத்துகிட்டு
அம்பிகையின் கோவில்வந்து!
ஆங்கார கரகம் கொண்டு
ஆத்தாள வேண்டிகிட்டு!
மடமடன்னு மழைபொழிய
மாங்கரகம் ஆடிவந்தேன்!!

சக்திகரகம் எடுத்துகிட்டு
சமுதாயம் நாடிவந்தேன்!
சந்தையில மலிஞ்சிபோன
கொடுமைகள பார்த்துபுட்டு!
சவுக்கொன்னு எடுத்துகிட்டு
சதிராட்டம் ஆடிவந்தேன்!!

தலையில கரகத்தோட
ஒருகையில் கத்தியேந்தி!
ஆடிவந்த ஆட்டமெல்லாம்
அனலாக இருக்கையில!
கூடிநின்ன கூட்டமெல்லாம்
கும்பிட தோணுச்சைய்யா!!

அந்தக்காலம் ஆடுகையில்
ஆர்வமாக இருந்துச்சய்யா!
மஞ்சத்தண்ணி ஊத்திவந்து
மரியாதை செஞ்சாங்கய்யா!
கரகாட்டம் முடிந்தபின்தான்
உச்சிபூசை நடக்குமய்யா!!
குறையாடை தெரிந்தாலும்
குத்தாடாம் போட்டாலும்!
சுத்திசுத்தி ஆடயில
கெண்டக்காலு தெரிஞ்சாலும்!
அன்றிருந்த மக்க எல்லாம்
கலையத்தான் பார்த்தாங்கய்யா!!

இன்னைக்கு கரகாட்டம்
நாசமத்து போச்சுதய்யா!
நாராச பேச்செல்லாம்
மலிஞ்சிபோயி கிடக்குதய்யா!
கரகாட்டம் என்பதெல்லாம்
ஆபாசமா ஆச்சுதய்யா!!


ஏனப்பா பார்க்குறீங்க?
என்னக்குத்தம் சொல்லாதப்பா!
கலைக்காக நானிங்கே
உயிரைக்கூட தருவேனப்பா!
பசித்துபோன வயிறு இங்கே
பல்லாங்குழி ஆடுதப்பா!!

வாரமொரு ஆட்டம் வந்தா
வக்கனையா வாழ்ந்திடுவோம்!
மாதமொரு ஆட்டம் வந்தா
மாமாங்கம் செஞ்சிடுவோம்!
ஆண்டுக்கொரு ஆட்டம் வந்தா
நானென்ன செயவேனப்பா!!
கலையெல்லாம் மூட்டைகட்டி
பரண்மேல போட்டுவிட்டு!
பூங்கரகம் எடுத்துவந்து
கெரகமின்னு ஆடிவந்தேன்!
காலத்தோடு ஒத்துப்போனேன்
கால்வயிறு சாப்பிடத்தான்!!

நல்லமனசு படைச்சவங்க
நாலுபேரு வரட்டுமய்யா!
கெட்டுப்போன இக்கலைய
நெட்டுநிமிர்த்தி பார்த்தாகன்னா!
கரகாட்டம் என்றுமிங்கே
தரம் குறைஞ்சி போகாதுய்யா!!


அன்பன்
மகேந்திரன் 

82 comments:

Unknown said...

அழகு கவிதை.
வாழ்த்துக்கள் அண்ணா <3

F.NIHAZA said...

கவிதை நன்றாக இருக்கிறது...
அந்தக் கரகாட்டமெல்லாம்...சினிமாவிலதான் பார்த்திருக்கேன்...
இப்படிப்பட்ட கலைகளை அறிந்துகொள்ளக்கூடிய சூழலில் நாங்கள் இல்லை எனும் போது கவலைதான்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனம் முழுக்க ஆக்கிரமித்து விட்டது பூங்கரகம்...

கவிதையில் அதை கொண்டுவந்த விதமும் சூப்பர்..

வாழ்த்துக்கள் மகேந்திரன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கடந்த வாரம் வேலை பளு காரணமாக வரமுடியாமல் இருந்தது...

கவி அழகன் said...

கரகமும் படங்களும் கிராமத்து உணர்வை
தருகுது

கோகுல் said...

அழிந்துவரும் கலைகளை தங்கள் பதிவுகள் மூலம் எங்களின் மனதில் பலகாலம் வாழ வைக்கும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள்!

RAMA RAVI (RAMVI) said...

//ஏனப்பா பார்க்குறீங்க?
என்னக்குத்தம் சொல்லாதப்பா!
கலைக்காக நானிங்கே
உயிரைக்கூட தருவேனப்பா!
பசித்துபோன வயிறு இங்கே
பல்லாங்குழி ஆடுதப்பா!!//

நாட்டுபுற கலைகள் நலிவடைந்து வருவதை அழகான பாடலில் விளக்கி இருக்கீங்க.அருமை.

பரதேசித் தமிழன் said...

நாட்டுப்புற இசைக்கான தங்கள் வலைப்பூ மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடருங்கள்......!

M.R said...

இன்னைக்கு கரகாட்டம்
நாசமத்து போச்சுதய்யா!
நாராச பேச்செல்லாம்
மலிஞ்சிபோயி கிடக்குதய்யா!
கரகாட்டம் என்பதெல்லாம்
ஆபாசமா ஆச்சுதய்யா!!

உண்மை தான் நண்பரே கரகாட்டம்
என்றாலே இதுதான் என்று இப்பொழுது
அனைவர் மனதிலும் பதிந்து போய் விட்டது வருத்தம் தான்

M.R said...

கரகாட்டம் என்றால் என்ன ,கரகத்துள்
என்ன இருக்கு ,அப்போது எப்பிடி இருந்தது ,இப்பொழுது எப்பிடி மாறி
விட்டது என்று அருமையாக விளக்கி
அழகிய கவிதை ,அருமை நண்பரே

தமிழ் மணம் எட்டு

SURYAJEEVA said...

நம்ம அரசியல்வாதிங்க ஆடுற ஆட்டத்துக்கு பேரு என்ன சாமியோ

kobiraj said...

அருமை ஓட்டு போட்டாச்சு .

rajamelaiyur said...

Super kavithai

Unknown said...

கிராமத்து மெட்டினிலே
கவிபாடி விட்டீங்க
படமெல்லாம் முன்னாடியே
பாத்துபாத்து எடுத்தீங்களா

நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

சென்னை பித்தன் said...

கால மாற்றத்தில் நலிந்து வரும் கலை பற்றி நல்ல கவிதை!

shanmugavel said...

உண்மை,கரகாட்டம் என்றுமே தரம் குறைந்துவிடாது.கூத்து போல இதுவும் நலிந்து வருகிறது.நல்ல கவிதை.

மாய உலகம் said...

பாரம்பரிய கரகாட்டம் பற்றி கவிதையில் கலக்கலாக சொல்லி அசத்திவிட்டீர்கள் நண்பரே

Anonymous said...

, இன்றைய காலத்தில் கரகாட்டம் நலிவடைந்து கொண்டே தான் செல்கிறது.. நீங்கள் கவிதையாய் வடித்தது அசத்தல் பாஸ்

ம.தி.சுதா said...

எத்தனை தான் நடன முறை வந்தாலும் இதன் மதிப்பே தனி தானே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

Anonymous said...

Nicely penned...Dear brother...
I thought you were on vacation...

Anonymous said...

Sorry for the mobile comment...

Unknown said...

படங்களும் அருமை.கவிதைகளும் அருமை

kupps said...

சமுதாயத்தில் சீரழிந்து வரும் கலைகளுக்கு காரணம் சமுதாயமே என்பதை அழகுற எடுத்துரைக்கிறது கவிதை.வாழ்த்துக்கள் கவிஞரே!

vetha (kovaikkavi) said...

மகேந்திரன் நல்ல கருத்துக் கொண்டது நெடுங்கவிதை. இவைகளைத் தேடிச் சொல்வதற்கு வாழ்த்துகள். ரெம்பப் பெரிய வேலை. ஆனால் ரெம்ப ரெம்ப நீட்டம். ரெம்ப ரெம்ப நீட்டம். மறுபடியும் சொல்கிறேன் ஒரு கட்டுரைக்குரிய கருத்துகள் இங்கு உள்ளது. கட்டுரையாக எழுதி, அழகான சிறு கவிதையாக முடிக்கலாம் என்பது எனது கருத்து.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

அம்பாளடியாள் said...

அழகிய படங்களுடன் கரகாட்டக் கவிதை மழை அருமை சகோ !...
வாழ்த்துக்கள் எல்லா ஓட்டும் போட்டாச்சு ............

காட்டான் said...

மாப்பிள உங்கள் பதிவுகளை ஆவணப்படுத்தி வச்சிருங்கோ.. இப்போ இருக்கும் தலை முறைகள் அதுவும் வெளிநாடுகளில் இருக்கும் எமது தலைமுறைகளுக்கு உங்கள் பதிவுகள் ஒரு வழிகாட்டி...!!!!

இது என்னுடைய வேண்டுகோள்ளய்யா...

சி.பி.செந்தில்குமார் said...

பாடல், படம் 2ம் அழகு

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் புங்கையூர் பூவதி
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி நிஹஷா
தங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜசேகர்
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
ஒவ்வொரு பதிவிலும் உங்கள் கருத்தை தேடாத நாளில்லை...
இப்போது வேலைப்பளு எப்படி இருக்கிறது.
உங்களின் கருத்தை பார்க்கும்போதே மனதில் உற்சாகம் தான்..

நன்றி நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கவி அழகன்
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ராம்வி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பரதேசித்தமிழன்
தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி,
மேன்மையான கருத்துரைத்தமைக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்
தங்களின் விரிவான ஆழ்ந்த
கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
இங்கே சொன்னதெல்லாம் நம்ம ஆட்டமுங்க,
ஆனால் அரசியல்வாதிகளின் ஆட்டம் பேயாட்டமுங்கோ......

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோபிராஜ்
தங்களை வசந்தமண்டபம் வணங்கி வரவேற்கிறது.
தங்களின் ஓட்டளிப்புக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜபாட்டை ராஜா
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

ஆமாம் புலவரே,
நாம் சொல்ல வந்த கருத்தை
சொல்லாமலேயே பிரதிபலிக்க
படங்கள் உதவும் இல்லையா
அதான் படங்களுக்கு மெனக்கிடுகிறேன்

தங்களின் கருத்துக்கு நன்றி புலவரே..

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்
தங்களை வசந்தமண்டபத்திற்கு சாமரம் வீசி வரவேற்கிறேன்.
அழகிய கருத்துரைத்தீர்கள், மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கந்தசாமி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ம.தி.சுதா.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
நான் இப்போது விடுமுறையில் இந்தியாவில் தான் இருக்கிறேன்.
வந்து ஒரு வாரம் ஆகப்போகுது....
தங்களின் அழகிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் வைரை.சதீஷ்
தங்களின் அழகிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
அடுத்த பதிவில் கட்டுரை மூலமும் கொடுக்க முயற்சிக்கிறேன்....
நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் மேலான கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா
தங்களின் கருத்தே எனக்கு கிடைத்த மாபெரும் பரிசு...
நிச்சயமாக நீங்கள் கூறியது போல ஆவணப்படுத்திவிடுகிறேன்.
அதுதான் என் நோக்கமும்.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ராஜா MVS said...

தமிழரின் பாரம்பரியம்.. தங்களின் கவிதையிலும், படத்திலும்...
வாழ்த்துகள் நண்பரே...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை நண்பரே....

அழிந்து வரும் கலையைக் காப்பாற்றத்தான் யாருமில்லை. :(

Anonymous said...

கரகாட்டம் கவியாடியது!!!!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் வெங்கட் நாகராஜ்
தங்களின் அழகிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஷீ-நிசி
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,

கிராமியக் கலைகளின் மகத்துவத்தினை அருமையாகச் சொல்லும் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

விரிவான பின்னூட்டமிட முடியவில்லை..

நிறையப் பேரின் பதிவுகளை மிஸ்ட் பண்ணிட்டேன்.

அடுத்த பதிவிலிருந்து வழமையான பின்னூட்டங்களோடு சந்திக்கிறேன்.

மன்னிக்கவும்.

Anonymous said...

பாடக் கூடிய சந்தக் கட்டு. நல்ல படங்கள் பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

காந்தி பனங்கூர் said...

நாட்டுப்புற பாடல்களையும் கரகாட்டத்தையும் விரும்பி ரசிக்கும் கிராமத்தான் நான். அழகிய தொகுப்பு.

Unknown said...

கரகாட்டத்தின் இன்றைய யதார்த்த நிலைய சொல்லி நிக்குது பதிவு!

குறையொன்றுமில்லை. said...

நல்லமனசு படைச்சவங்க
நாலுபேரு வரட்டுமய்யா!
கெட்டுப்போன இக்கலைய
நெட்டுநிமிர்த்தி பார்த்தாகன்னா!
கரகாட்டம் என்றுமிங்கே
தரம் குறைஞ்சி போகாதுய்யா!!


ஆடிமாசம் வள்ளியூர் கொடையில் இந்தக்கரகாட்டம் பாத்துட்டுவந்தேன்.

'பரிவை' சே.குமார் said...

கரகாட்டப் படங்களைப் பார்த்ததும் ஊரில் கரகாட்டம் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது... அந்த நாட்டுபுற கரகாட்டக் கவிதை அருமை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த மாதிரி பாட்டு கேட்டு ரெம்ப நாளாச்சுங்க... திருவிழாவுக்கு போயிட்டு வந்த எபக்ட் குடுத்துட்டீங்க... சூப்பர்

vidivelli said...

நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி உறவே.நலமா?
கிராமியக்கலையின் ஆட்டங்களை நினைவு படுத்தியிருக்கிறீங்க...
அருமை கவிதை வரிகள் இயல்பு நடையில் அசத்தியிருக்கிறீங்கள்..
அன்புடன் பாராட்டுக்கள்.

Anonymous said...

""சக்திகரகம் எடுத்துகிட்டு
சமுதாயம் நாடிவந்தேன்!
சந்தையில மலிஞ்சிபோன
கொடுமைகள பார்த்துபுட்டு!
சவுக்கொன்னு எடுத்துகிட்டு
சதிராட்டம் ஆடிவந்தேன்!!""

- கரக்காட்டம்
சிறு வயதில்
திருவிழாவில் பார்த்தது....
மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி சகோ...........

மாலதி said...

மிக சிறந்த நாட்டுப்புற கலைகளை உங்களுக்கே உரிய தனித் தன்மையுடன் சொல்லியுள்ள விதம் பாராட்டுகளுக்கு உரியன .உண்மையில் இந்த நாட்டுப்புற கலைகளை காக்க வேண்டியது நமது தேவையாகிறது

இராஜராஜேஸ்வரி said...

கொஞ்சும்கிளி பவளக்கிளி
கோவைப்பழம் தின்னும் கிளி!
கொஞ்சிகொஞ்சி பேசும்கிளி
கோமகளின் கையுக்கிளி!
கும்பத்தின் உச்சியில
ஒய்யாரமா அமர்ந்த கிளி!!


கண்முன் ஆடிவரும் கரகாட்டம் அருமை.

மீண்டும் செழித்து வளர பிரார்த்திப்போம்.

மகேந்திரன் said...

அன்பு சகோ நிரூபன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் மாம்ஸ் விக்கி
தங்களின் இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
வள்ளியூரில் நீங்கள் கரகாட்டம் பார்த்தது மகிழ்ச்சி.
எனக்கு கடந்த ஐந்து வருடமாக வாய்ப்பு
கிடைக்க வில்லை அம்மா.
தருணம் பார்த்திருக்கிறேன், அந்த கலையை கண்ணால் காண.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சே.குமார்
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அப்பாவி தங்கமணி
தங்களை வசந்தமண்டபத்திற்கு வரவேற்கிறேன்.
இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய சகோதரி விடிவெள்ளி செம்பகம்
நலமா?
நீண்ட நாட்களுக்கு பிறகு
தங்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சி.
வருக வருக
நிறைய படைப்புகள் தருக.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சின்னதூரல்
தங்களை இங்கே வசந்தமண்டபத்தில் வரவேற்பதில்
மிக்க மகிழ்ச்சி.
இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மாலதி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Sakunthala said...

நாட்டுப்புற கலைகள் பற்றிய
உங்கள் கவிதை அருமை.

மகேந்திரன் said...

அன்பு தோழி சகுந்தலா
தங்களை வசந்தமண்டபத்திற்கு சாமரம் வீசி வரவேற்கிறேன்.
தங்களின் இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

Post a Comment