Powered By Blogger

Thursday, 15 September 2011

செவிமடுத்து கேட்டுவிடு!!


கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக அதை கைவிடவேண்டி இடிந்தகரை எனும் ஊரில் இன்று 5-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். நம் நண்பர் பதிவர் கூடல்பாலவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
அவர்களின் கோரிக்கைகள் இந்த அரசின் காதில் ஏற்றவேண்டும்..
கூடிநிற்போம் தோழர்களே....
அணுசக்தியை கூண்டோடு அழிக்கும் வரை..

இங்கே வலைப்பதிவுகளில் நம் நண்பர்கள் பதிந்துவரும் வலைப்பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...

கூடும் குலம் 

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி 15,000 பேர் உண்ணாவிரதம்-போராட்டம் தீவிரமடைகிறது

ஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் முன்னேயாவது...

இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?
இமயமே செவிமடு!
இன்றோர் இடிந்தகரை
இன்சொல்லால் இதுவரை
இயம்பியும் பார்த்தோமே!
இம்மட்டும் உன்செவியில்
இறங்காமல் போனதுவோ?!!!

தொழில்நுட்பம் என்பதெல்லாம்
தொந்தரவு செய்வதற்கா?
தொழில்நுட்பம் படைத்துவிட்டு
தொள்ளாயிரம் காததூரம்
சுடுகாடு பார்ப்பாயோ?
தொலைநோக்கு பார்வையென்ன
தொய்விழந்து போச்சிதோ??

உலகிலே அதிகமாம்
அணுஉலைகள் ஆயிரமாம்
தொழில்நுட்பம் என்பதைத்தன்
புறவீட்டின் கொல்லையிலே
வைத்திருந்த ஜப்பானே!!
இயற்கையின் சீற்றத்தால்
இன்னவென செய்வதறியா
அணுவுலைகளின் கதிர்வீச்சை
கட்டுக்கடங்கா அதன் வெப்பத்தை
குளிர்வித்துக் கொண்டிருப்பதுவோ
உன் செவியில் ஏறலியோ???

தன்னாட்டு  வல்லறிஞர்
பற்பல வைத்திருந்தும்
பாதுகாப்பின் புலன்மீது
நம்பிக்கை இல்லாது
அணுவுலைகள் மூடிடவே
யத்தனம் செய்ததுவே!
அயல்நாட்டு அறிஞர்களின்
மூளைவைத்து செயலாற்றும்
உன்மூளைக்கது ஏறலியா?
பாதுகாப்பு என்பதென்ன
பக்கம்வந்து பகன்றுவிடு!!

ஆயிரம் வழி உண்டப்பா
அணுவின் வழி கைவிடு
எம் சந்ததி உயிர்வாழ
எம்மக்கள் இன்றோடு
ஐந்தாம் நாளாய்
சாகும் வரை உணவறுத்து
போராட்டம் செய்வதது
உன்காதில் ஏறலியோ??

செவிமடு செவிமடு
செவியற்றுப் போனாயோ!!
நம்மினம் அழித்துவிட
வாய்பிளந்து நிற்கும்
அணுவெனும் சாத்தானை
கைகழுவி விட்டுவிடு
செந்தமிழர் வாழ்வுதனில்
செம்மைவந்து சேர்ந்துவிட
செவிமடுத்து கேட்டுவிடு!!


அன்பன்
மகேந்திரன் 

55 comments:

SURYAJEEVA said...

வலை பதிவில் நன்றாக நீள்கிறது ஆதரவு கரம்..

சக்தி கல்வி மையம் said...

ஆயிரம் வழி உண்டப்பா
அணுவின் வழி கைவிடு
எம் சந்ததி உயிர்வாழ
எம்மக்கள் இன்றோடு
ஐந்தாம் நாளாய்
சாகும் வரை உணவறுத்து
போராட்டம் செய்வதது
உன்காதில் ஏறலியோ??//


போராட்டம் வெற்றி பெறட்டும்.,

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

போராட்டம் வெற்றி வாழ்த்துகள் .

Unknown said...

சவுக்கடி மகேந்திரன்....

இன்றில்லாவிடினும் என்றேனும் ஒரு நாள் அவர்கள் காதில் விழும் அதுவரை தொடருவோம் போராட்டம்...

Anonymous said...

ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்ப்பட்டத்தை கூட படிப்பினையாக ஏற்க்க மறுக்கிறார்களே ((

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஜீவா
இன்னும் குரல் உயர வேண்டும்
விண்ணைமுட்ட........

மகேந்திரன் said...

போராட்டம் வெற்றிபெற
உள்ளம்நிறைந்த வாழ்த்துக்கள்
நண்பர் கருன்.

மகேந்திரன் said...

போராட்டம் வெற்றிபெற
உள்ளம்நிறைந்த வாழ்த்துக்கள்
நண்பர் ராஜசேகர்.

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பர் ரமேஷ்பாபு
செவியேறும் வரை
குரல் தளர்த்தோம்

மகேந்திரன் said...

நண்பர் கதசாமி
அவர்கள் அப்படித்தான்
வரும்போது வரட்டும் என்பார்கள்
வந்த பின்னர்
வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வார்கள்.


உலகிலேயே அதிக அளவு நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய
அளவுக்கு (6 .5 ரிக்டர் ) ஜப்பானில் தான் அணுவுலைகள் உள்ளன.
ஆனால் அப்படிப்பட்ட ஜப்பானே இன்று கதிகலங்கிக்கொண்டிருக்கையில்,
நாமெல்லாம் எம்மாத்திரம்...
மறு ஆய்வு செய்ய வேண்டும்
உத்திரமான பதில் வேண்டும்
அணுசக்தியை பொசுக்க வேண்டும்.....

Unknown said...

உண்ணா விரதம் இருப்பதென்ன
உடலை வருத்தி கொள்வதற்கா
அண்ணா வழியில் ஆள்வோரே
அலச்சியம் வேண்டாம் மாள்வாரே
கண்ணா மூச்சி விளையாட்டா
காண்பீர் உடனே களையாட்டா
மண்ணே ஆகும் சுடுகாடே
மக்கள் திரண்டால் வரும்கேடே

புலவர் சா இராமாநுசம்

M.R said...

அவர்கள் போராட்டம் வெற்றிபெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகச் சொன்னீர்கள் நண்பா..

எல்லோருக்குள்ளும் இந்த விழிப்புணர்வு தீப்பொறியாய் பற்றி வருகிறது..

முனைவர் இரா.குணசீலன் said...

ஆயிரம் வழி உண்டப்பா
அணுவின் வழி கைவிடு
எம் சந்ததி உயிர்வாழ..

இந்த ஏக்கம் தான் ஒவ்வொருவருக்குள்ளும் இப்போது பிரதிபலிக்கிறது.

சென்னை பித்தன் said...

சங்கு முழங்குவோம்.செவிட்டுக் காதுகள் திறக்கட்டும்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஷ்
தங்களின் இனிய கருத்துக்கு நன்றி.
வெற்றி பெற பிரார்த்திப்போம்.

K said...

வணக்கம் நண்பரே!

உணர்வும், உறுதியும் மிக்க கவிதை! விரைவில் தீர்வு வேண்டும்!

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் புலவரே,
மண்முழுதும் சுடுகாடாய் போகுமுன் .
ஆள்வோர் விழிக்கட்டும்....

மகேந்திரன் said...

ஆம் முனைவரே
இச்செய்தி காட்டுத்தீ போல பரவேண்டும்
நீரோ மன்னர்களின் கையிலுள்ள பிடில்களை
தகர்த்தெறிய வேண்டும்.

மகேந்திரன் said...

முழங்குவோம் சென்னைப்பித்தன் ஐயா
செவியேறும் வரை.....

மகேந்திரன் said...

நண்பர் ஐடியா மணி
தீர்வு விரைவில் வரவேண்டும்
முயற்சியைக் கைவிடோம்.....

Anonymous said...

தீப்பொறி கவிதை சகோதரா...


போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்...நாம் நினைத்தால் முடியாதது இல்லை...நன்றி நண்பரே...

Rathnavel Natarajan said...

நல்ல சொல்வளம்.
அருமையான கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

விழிப்புணர்வு ஊட்டும் கவிதை...

வாழ்த்துகள்...

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,

அணு உலைகளினால் ஏற்படும் விளைவுகளை உள்ளடக்கி, அரசின் செவிகளில் உணர்வினை ஏறப்டுத்தவல்ல நல்ல கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

இப் போராட்டம் முடிவுக்கு வரும் வகையில் நல்லதோர் தீர்வு கிடைக்க வேண்டும்.

Unknown said...

அணுஉலையின் ஆபத்துகளை பற்றி விவரித்து தங்கள் வலைதளத்தில் எழுதியதற்க்கு எனது கோடான கோடி நன்றி நண்பரே

Unknown said...

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

மாய உலகம் said...

போராட்டம் விரைவில் வெற்றி பெற்று நமது உறவுகளின் முகம் மலரட்டும்

கோகுல் said...

மிக்க மகிழ்ச்சி!நண்பரே!
ஆதரவுக்கரங்களை தங்கள் பதிவில் மூள பலப்படுத்தியதற்க்கு!

kupps said...

அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவிக்கும் மிகவும் சிறப்பான கவிதை.தக்க சமயத்தில் போடப்பட்ட இடுகை.போராட்டம் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே
உங்கள் கவிதை படித்தேன்
அழகு அழகு

போராட்டம் வெற்றி பெறட்டும்.....

மகேந்திரன் said...

கூக்குரலிடுவோம் நண்பர்
ரேவேரி
கூடங்குளம் மூடும்வரை....

மகேந்திரன் said...

தங்களின் கருத்துக்கு
மிக்க நன்றி ரத்னவேல் ஐயா

மகேந்திரன் said...

நண்பர் வெங்கட் நாகராஜ்
தங்களின் வாழ்த்துக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

ஆம் சகோ நிரூபன்
நல்ல தீர்வு ஒன்றே நம் குறிக்கோள்..

மகேந்திரன் said...

அன்பின் நண்பர் வைரை. சதீஷ்
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.....
தங்களின் வலைப்போ வந்தேன்
பதிவு நன்று.....
உங்களின் நேரடி ரிப்போர்ட் மனதுக்கு
ஆறுதல் தந்தது....

மகேந்திரன் said...

அன்ப நண்பர் ராஜேஷ்
ஆம் நண்பரே..
அந்த மலர்ந்த முகங்களை தான்
நாம் இங்கே எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
கடமையைச் செய்தேன்......
போராட்டம் வெற்றிபெறட்டும் நண்பரே...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

Anonymous said...

''..தொழில்நுட்பம் படைத்துவிட்டு
தொள்ளாயிரம் காததூரம்
சுடுகாடு பார்ப்பாயோ?
தொலைநோக்கு பார்வையென்ன
தொய்விழந்து போச்சிதோ??...''
நல்ல விளைவு எட்டட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரம் வழி உண்டப்பா
அணுவின் வழி கைவிடு
எம் சந்ததி உயிர்வாழ /

விழிப்புணர்வு தீப்பொறிக்கு வாழ்த்துக்கள்.வெல்க~~

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

சுதா SJ said...

அசத்தலான தரமான ஆதங்கம் மிக்க கவிதை இது கேக்க வேண்டியவர்கள் காதுகளில் கேக்க வேண்டும்
என்பதே என் ஆசை.

சுதா SJ said...

கவிதையின் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள் அண்ணா

சுதா SJ said...

அப்புறம்...
உங்கள் குழந்தைகள் ரெண்டு பேரும் ரெம்ப அழகா இருக்காங்க :)))))

ஜெயசீலன் said...

போராட்டம் வெல்ல எனது வாழ்த்துகள்... கவிதை மிக வளிமையான முழக்கத்தை வெளிப்படுத்துகிறது...

பெருமாள் பிரபு said...

அரசின் காதில் விழவேண்டும் இவ்வரிகள்!
உரைக்கவேண்டும் அவர்களுக்கு!!
ஜெயிக்கவேண்டும் நம் போராட்டம்!!!
கைவிடவிடவேண்டும் அணு மின்நிலையம்!!!!

மகேந்திரன் said...

ஆம் சகோதரி வேதா.இலங்காதிலகம்
நல்ல விளைவு கிடைக்கட்டும்
எல்லோரும் எதிர்பார்ப்பது அதுவே.
நன்றி சகோதரி.

மகேந்திரன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி இராஜராஜேஸ்வரி
வெற்றி பெறுவோம்.....

மகேந்திரன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் சிபி

மகேந்திரன் said...

அன்பு நண்பர் துஷ்யந்தன்
தங்களை வசந்தமண்டபதிற்கு சாமரம் வீசி வரவேற்கிறேன்...
இனிய கருத்திற்கும் என் குழந்தைகள் மீதான்
பொன்னான கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜெயசீலன்
தங்களை வசந்தமண்டபதிற்கு சாமரம் வீசி வரவேற்கிறேன்...
இனிய கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தம்பி பெருமாள் பிரபு
தங்களின் உயரிய கருத்திற்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சாகம்பரி said...

எத்தனை எதிர்ப்பு தெரிவித்தாலும் தலைக்குள் ஏறவே மாட்டேங்கிறதே. ரொம்பவும் பாதுகாப்பாக உள்ளது என்று சமாதானம் சொல்கிறார்கள். இது அந்த கிராமத்து பிரச்சினை மட்டுமல்ல என்று புரியாதா?

குறையொன்றுமில்லை. said...

ஆயிரம் வழி உண்டப்பா
அணுவின் வழி கைவிடு
எம் சந்ததி உயிர்வாழ
எம்மக்கள் இன்றோடு
ஐந்தாம் நாளாய்
சாகும் வரை உணவறுத்து
போராட்டம் செய்வதது
உன்காதில் ஏறலியோ??


யார் காதில் இந்த தகவல் சேர வேண்டுமோ அவர்களுக்கு ச்சேர்ந்தால் ஏதானும் விடிவுகாலம் பிறக்கும்.

Post a Comment