Powered By Blogger

Tuesday, 6 September 2011

அகமழித்து மீண்டுவா!!


உயரத்தெரியும் நிலவது
உறுதியுடன் நீ இருந்தால்
உன் உள்ளங்கையில்
உறவாட விளையுமெனில்
உவகையின் சுவடுடன்
தூக்கம் தொலைத்து
சிட்டுக் குருவியாய்
சிறகடித்து பறந்து வா!!

நிஜங்களின் நிந்தனைக்காய்
நிவர்த்தி தேடுகையில்
நிழல்களின் ஆதிக்கம்
நீண்டு தடையிடும்!
நீரோட்டப் பாதைக்கு
தடைபோட முடியாதே!
நிஜங்களை வசப்படுத்த
நிமிடங்கள் தேடிவா!!
திசைகள் எட்டும்
திறந்தது உனக்காக!
தணலாய் தகிக்கும்
திறமையை சாவியாய்
திடமென தோளேற்றி
திட்டம் தீட்டியதும்
திண்ணிய மனதுடன்
தீப்பந்தம் ஏந்திவா!!

ஆயிரம் தொல்லைகள்
அரங்கேறி நின்றாலும்!
ஆக்கும் செயல்கள்
அரியணை ஏற்றிடு!
அவனியின் சுழலில்
அன்றுள்ள பிழைகளை
அடியோடு களைந்து
அகமழித்து மீண்டுவா!!


பார்முழுதும் என்றேனும்
பனிப்புயல் வீசினாலும்!
போகின்ற வழிக்கு
பாதையற்றுப் போனாலும்!
பூமியது தன்னச்சு
புரண்டு சுற்றிடினும்!
போர்சூழ்ந்த மேகமதை
போராடி வென்றுவா!!

முன்னிருக்கும் ஒருவரையும்
முட்டாளென எண்ணாதே!
முண்டியடித்து முன்செல்ல
முயற்சியது கைகொடுக்கும்!
முடியாது என்றசொல்லோ
முட்டுக்கட்டை இட்டுவிடும்!
முரண்பாட்டு வாழ்வுதனில்
முன்னேறிச் சென்றிடவே
முழுமூச்சாய் இறங்கிவிடு!!கடந்துவந்த பாதையது
கரடுமுரடாய் தெரிந்தாலும்!
கொட்டிக்கிடக்கும் ஆசைகளை
சட்டென முடித்துவிட
சட்டமதை முறித்துவிட்டு
சறுக்கி வீழ்ந்து போகாதே!
விழிகளை விரித்துப்பார்
வியாபித்திருக்கும் இப்புவியில்
நேரான பாதையிலே
நேர்மைபட வாழ்ந்துவிடு!!

அன்பன்
மகேந்திரன்

45 comments:

கூடல் பாலா said...

\\\சட்டென முடித்துவிட
சட்டமதை முறித்துவிட்டு
சறுக்கி வீழ்ந்து போகாதே!
விழிகளை விரித்துப்பார்
வியாபித்திருக்கும் இப்புவியில்
நேரான பாதையிலே
நேர்மைபட வாழ்ந்துவிடு!!\\\

மிகச் சரியான கருத்து !

சக்தி கல்வி மையம் said...

ஆயிரம் தொல்லைகள்
அரங்கேறி நின்றாலும்!
ஆக்கும் செயல்கள்
அரியணை ஏற்றிடு!//
உணர்வுகளைத் தூண்டும் வரிகள்..

பாராட்டுகள்..

Anonymous said...

''.....முண்டியடித்து முன்செல்ல
முயற்சியது கைகொடுக்கும்!
முடியாது என்றசொல்லோ
முட்டுக்கட்டை இட்டுவிடும்!
முரண்பாட்டு வாழ்வுதனில்
முன்னேறிச் சென்றிடவே
முழுமூச்சாய் இறங்கிவிடு!!...''
அருமை...அருமை...நல் முயற்சி!.....வாழ்த்துகள்....
வேதா. இலங்காதிலகம்.

M.R said...

தன்னம்பிக்கையை ஊட்டி

முயற்ச்சி திருவினையாக்கும் என சொல்லி ,எண்ணியதை முடிக்க நல்வழியை மட்டும் தேர்ந்தெடு ,தீய வழியில் செல்லாதே என்று பலவற்றையும் எடுத்துறைக்கும் தங்கள் கவிதை வரிகளுக்கு நன்றி நண்பரே

M.R said...

tamil manam 4

கடம்பவன குயில் said...

அகமழித்து முயற்சித்தால் நிலவும் உன் கையில் என்ற தன்னம்பிக்கை ஊட்டும் உங்கள் பாடல் வாசிக்கும்போதே ஒரு கம்பீரத்ததைத் தருகிறது நண்பரே. வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

நல்ல ரசனையுள்ள கவிதை நல்லா இருக்கு.

Nirosh said...

சுவையூட்டும் கவிதைகள் நன்றாக நானும் சுவைத்தேன்...!

மகேந்திரன் said...

அன்பு நண்பர் பாலா தங்களின் மேலான
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ரமேஷ்
தங்களின் ஆழ்ந்த கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை கடம்பவனக்குயில்
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரோஷ்
தங்களின் சுவையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

ராஜா MVS said...

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்..

வாழ்த்துகள் நண்பரே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்க்கையில் எத்தனையோ சிந்தனைகள் நாம் எதிர்க் கொள்கிறோம்

ஆனால் தமக்கு தன்னம்மிக்கை தருகின்ற நிமிடங்கள்தான் நம்மை வழிநடத்துகிறது....

நேர்மையோடு நேர்வழியில் சென்றால் வெற்றி நமதே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய சிந்தனையை சொல்லும் அர்த்தமுள்ள கவிதை

Unknown said...

கவிதை நல்லா இருக்குய்யா மாப்ள!

கதம்ப உணர்வுகள் said...

வரிக்கு வரி வரிக்கு வரி நம்பிக்கையை ஊட்டும் நல் முத்துக்களான வார்த்தைகள்...

நேர்மையை கண்ணாய் மதிக்கச்சொல்லி செல்லும் வரிகள்.....

அழகு கவிதையுடன் பொருத்தமான படமும் இட்டு அசத்திய மகேந்திரனுக்கு என் அன்பு வாழ்த்துகள்....

அன்பு வணக்கங்கள்பா....

இன்னைக்கு தான் உங்க தளம் வந்து பார்க்க முடிந்தது...

மிக அருமையாக இருக்கிறதுப்பா...

கோகுல் said...

படிப்போர் அனைவருக்கும் தன்னம்பிக்கையின் வேர் விட வைக்கும் வரிகள்!tm 11

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

நிழல்களின் ஆதிக்கம்
நீண்டு தடையிடும்!
நீரோட்டப் பாதைக்கு
தடைபோட முடியாதே!
நிஜங்களை வசப்படுத்த
நிமிடங்கள் தேடிவா!!//


நிழல்களின் ஆதிக்கத்திற்கு பயந்து நிஜங்களை தேட மறந்து விடுகிறோம்... முன்னேற தடைகளை தூக்கி எறி என்பதை அற்புதமாய் அசத்தியுள்ளீர்கள்... நண்பா

மாய உலகம் said...

நேரான பாதையிலே
நேர்மைபட வாழ்ந்துவிடு!!//

உண்மை தான் நேர்மையான பாதையில் செல்பவனே வெற்றிபெற்று காலத்திற்கும் பேசப்படுவான்... சூப்பர் நண்பரே

மாய உலகம் said...

உங்களது கவிதைகள் நாகரீகமாக தெளிவாக உபயோகமுள்ளதாக சமூக சிந்தனையுள்ளதாக பதிவுலகில் மாறுபட்ட கோணத்தில் அசத்தி வருகிறீர்கள்... நண்பா... பதிவுலகில் முன்னனிக்கு வந்து காலும் முழுவதும் பேசப்படுவீர்கள்.... வாழ்த்துக்கள் நண்பரே

சென்னை பித்தன் said...

/அகமழித்து மீண்டு வா!/
முடியுமா அகமழிக்க?
//நேரான பாதையிலே
நேர்மை பட வாழ்ந்து விடு //

அருமை!

Unknown said...

பார்முழுதும் என்றேனும்
பனிப்புயல் வீசினாலும்!
போகின்ற வழிக்கு
பாதையற்றுப் போனாலும்!
பூமியது தன்னச்சு
புரண்டு சுற்றிடினும்!
போர்சூழ்ந்த மேகமதை
போராடி வென்றுவா!!

தன் நம்பிகைகுத் தாலாட்டு பாடி
வாழும் வழி காட்டும் உன்னத
பதிவு வாழ்த்துகள்

புலவர் சா இராமாநுசம்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜா
தங்களின் இனிய கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் ஆழ்ந்த கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்
தங்களின் இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மஞ்சுபாஷினி
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
என் பதிவுகள் மீதான தங்களின் கருத்துக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
தங்களின் மேலான
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மாய உலகம் ராஜேஷ்

பதிவின் மீதான தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு
நான் தலைவணங்குகிறேன். எனக்கு உங்கள் வார்த்தைகளே
விருது கிடைத்தது போல இருக்கிறது.
காலம் கடந்து நம் நட்பு தொடரட்டும்.
நன்றிகள் பல,,,

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னை பித்தன் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,

//முயற்சியது கைகொடுக்கும்!
முடியாது என்றசொல்லோ //

வாழ்வில் முன்னேற வேண்டும் எனும் கொள்கை உடையோருக்கு,
தடைகளைத் தாண்டி வாழ்க்கையில் மேம்பட வேண்டும் எனும் நெஞ்சுரத்தினை உங்களின் இக் கவிதை நிச்சயம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Unknown said...

அற்புதமான வரிகள் அண்ணா

Anonymous said...

அழகு கவிதை...நல்லாயிருந்தது...
வாழ்த்துகள் நண்பரே..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
தங்களின் ஆழ்ந்த கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் புங்கையூர் பூவதி
தங்களின் சுவையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அம்பாளடியாள் said...

முன்னிருக்கும் ஒருவரையும்
முட்டாளென எண்ணாதே!
முண்டியடித்து முன்செல்ல
முயற்சியது கைகொடுக்கும்!
முடியாது என்றசொல்லோ
முட்டுக்கட்டை இட்டுவிடும்!
முரண்பாட்டு வாழ்வுதனில்
முன்னேறிச் சென்றிடவே
முழுமூச்சாய் இறங்கிவிடு!!

அருமையான கவிதைவரிகள்
வாழ்த்துக்கள் சகோ ......

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் ஆழ்ந்த கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (1/11/11 -செவ்வாய் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

Post a Comment