Powered By Blogger

Thursday, 21 July 2011

பனங்காட்டு சடுகுடு!!






சடுகுடுகுடு குடுகுடு
சாத்தானுக்கு அடிகுடு
சடுகுடுகுடு குடுகுடு
சன்மானத்த எடுத்திடு!!

மரம் மரமாம் பனைமரம்
மந்தியில்லா பனைமரம்
பதநீர குடிச்சிபுட்டு
பாஞ்சி பாஞ்சி அடிச்சிடு
சடுகுடுகுடு குடுகுடு!
பனங்காட்டு சடுகுடு!!

இலையிலையாம் வேப்பிலை
கசப்பான வேப்பிலை
வேப்பிலையை கையிலேந்தி
வேதாளத்த ஒட்டிடு!
சடுகுடுகுடு குடுகுடு
வேட்டைக்காரன் சடுகுடு!!




பூ பூவா பூத்திருக்கு
பூவரச மரத்தில
புள்ளையார கும்பிட்டுட்டு
புரட்டி புரட்டி எடுத்திடு
சடுகுடுகுடு குடுகுடு!
பூந்தோட்ட சடுகுடு!!

போவோமா சந்தைக்கு
சமுதாய சந்தைக்கு!
சகலரைப் போல் இல்லாத
போக்கத்த பயலுகள
புரட்டி புரட்டி எடுத்திட!!
போவோமா சந்தைக்கு
சடுகுடுகுடு குடுகுடு!
தண்டாசுரன் சடுகுடு!!




கூழைக்கும்பிடு போட்டுபோட்டு
அதிகாரத்த பிடிச்சபின்னே
ஊர்ப்பணத்த ஏப்பமிட்டு
உயிர்வளர்க்கும் சாத்தான
பிடிச்சி இங்கே போட்டிடு
கும்மாங்குத்து குத்திடு
சடுகுடுகுடு குடுகுடு
சாட்டையெடுத்து  அடிகுடு!!

பெண்களெல்லாம் இளப்பமின்னு
மனுசரா பார்க்காம
காமப்பசிக்கு தீனியாக்கும்
கயவாளிப் பயலுகள
தூக்கியிங்கே வந்திடு
துண்டுதுண்டா நறுக்கிடு
சடுகுடுகுடு குடுகுடு
தூக்கிலவனைப் போட்டிடு!!

செய்யும் வேலை தெய்வமின்னு
மனசால நினைக்காம
செய்யுகிற வேலைக்கெல்லாம்
மனசாட்சி இல்லாம
கையூட்டு கேட்பவன
இழுத்து இங்கே வந்திடு
கைகால ஒடிச்சிடு!
சடுகுடுகுடு குடுகுடு
முடமாக்கிப் போட்டிடு!!




திடமான உடம்பிருக்க
உழைச்சி இங்கே திங்காம!
அடுத்த மனுஷன் வீட்டுல
பாடுபட்டு சேர்த்த பணத்த
திருடிக்கிட்டு போறவன!
பிடிச்சி இங்கே வந்திடு
குரல்வளையை பிடுங்கிடு!
சடுகுடுகுடு குடுகுடு
சாணம்வர உதைத்திடு!!

ஊரெல்லாம் போவோமய்யா
உளவு அங்கே பார்ப்போமய்யா!
சின்னதப்பு நடந்தாலும்
சித்ரவதை செய்வோமய்யா!!
தப்ப எல்லாம் திருத்திக்கோ
தண்டனையில் விலகிக்கோ!!
நல்லவனா வாழ்வதென்ன
இவ்வுலகில் சிரமமாய்யா??!!
சடுகுடுகுடு குடுகுடு
நல்லவனா வாழ்ந்திடு!!

 
அன்பன்
மகேந்திரன்

29 comments:

கூடல் பாலா said...

சடுகுடு ஆட்டத்திலேயே எல்லா ஆட்டக்காரங்களையும் பின்னி எடுத்திட்டீங்களே.....சூப்பர்!

M.R said...

அருமையான சவுக்கடி

சடுகுடு ஆட்டத்திலே

தப்புசெய்யும் எல்லோருக்கும்

அருமையான சவுக்கடி

பத்தலேனா எல்லாரையும்

கல்மீன கட்டிக்க தான்

அனுமதியும் குடுத்திடுங்க

கல்மீன தெரியலேனா

என்னோட பதிவுக்கு

வந்திடுங்க .

திருந்திடுங்க எல்லோரும்

இல்லையின்னா

கிடைத்திடும் இதுபோன்ற

சவுக்கடி .

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அற்புதம் நண்பரே..

இதுபோல நீதிகளையும் கூட
சடுகுடு ஆட்டத்தில் கலந்து நம் முன்னோர்கள் ஆடியிருக்கிறார்கள்
என்று நினைத்தால்..

THEY ARE GREAT... இல்லையா ?

சமுதாய சந்தையிலே
ஊர்ப்பணத்தை ஏப்பம் விட்டவனை
கும்மாங்குத்து குத்திடும்

உங்கள் கருத்து அருமை..
நண்பரே.

வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

விறுவிறுப்பான சடுகுடு ஆட்டத்தை கண்முன் நிறுத்திய அருமையான படங்களுக்கும், பாடலுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

வடிவேல் விளையாடிய கபடிய கேள்வி பட்டிருக்கேன்...(எவ அவ...எவ அவ )


ஆனால் இது ஹீரோயிசமான சடுகுடு பாடல்...
பிரபலாமாகக்கூடிய பாடல் வரிகள்...முதல் முறையா கபடியில வீரத்தையும், நல் உள்ளத்தையும் கலந்து அடித்த பாடல்.... வெறிகளை ஊட்டக்கூடிய வரிகள்.... வாழ்த்துக்கள்

PUTHIYATHENRAL said...

கபாடியா எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு பதிவுக்கு நன்றி!

PUTHIYATHENRAL said...

கபாடியா எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு! கபடியில் பாடும் பாடல்களை ரொம்ப நாளாச்சி பாடி உங்கள் பதிவை பார்த்ததும் மலரும் நினைவுகள் போல் ஒரு முறை பாடிபார்த்தேன். நன்றி மகேந்திரன் சார்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பழைய நினைவுகளுக்கு மனம் பறக்கிறது...

rajamelaiyur said...

இப்பலாம் யாரு இத விளையாடுறா ?

rajamelaiyur said...

உண்மையான கிராமத்து ஆட்டம்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா

தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.

உங்கள் கல்மீன் பற்றிய பதிவு கண்டேன்
அற்புதம், வியப்பாக இருந்தது.

சரியாகச் சொன்னீர்கள் தவறிழைப்போருக்கு
இனி சவுக்கடிதான் .....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன்

உண்மையிலேயே நம் முன்னவர்கள்
விளையாட்டுகள் மூலம்
நிறைய நல்ல செய்திகளை பரப்பியிருக்கிறார்கள்.
நான் படித்தறிந்த வரையில்
சிலம்பாட்டம் மூலம் அவர்கள் சொல்லிய கருத்துக்களே
அதிகம்.

தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்
மேலும் மென்மையான கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

மாய உலகத்தினின்று
இங்கு தரித்து அழகு வார்த்தைகளால்
விரிவான கருத்துரைத்த
அன்பு நண்பரே
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் புதியதென்றல்

தங்களின் பழைய பால்ய என்னத்தை
கிளற எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு
அந்த இறைவனுக்கு நன்றி.
தங்களின் கருத்துரை கண்டு
மகிழ்ச்சி கொண்டேன்,

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்,

இதுதான் நம் பாரம்பரிய
விளையாட்டுகளுக்கு உண்டான
மகத்துவம்.
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜபாட்டை ராஜா

தங்களின் பொற்பாதத்தை இங்கு
வசந்தமண்டபத்தில் பதித்தமைக்கு
மிக்க நன்றி.
சரியாகச் சொன்னீர்கள் தோழரே,
சில கிராமங்களில் மட்டுமே இந்த
மாதிரியான விளையாட்டுகளை
பார்க்கமுடிகிறது.
வளர்க்க வேண்டும் நண்பரே....
குறைந்தபட்சம் நம் குழந்தைகளுக்கு
இப்படி ஒரு விளையாட்டு இருப்பது
தெரியாமல் அழிந்துவிடக்கூடாது.

நன்றி.
தொடர்ந்து வாருங்கள்.

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்..

நண்பரே.,,

மகேந்திரன் said...

அன்பு நண்பர் வேடந்தாங்கல் கருண்

தங்களின் வாழ்த்துகளுக்கு
மிக்க நன்றி.

Riyas said...

நல்லாயிருக்குங்க பதிவு

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரியாஸ்

தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் இனிய கருத்தளித்தமைக்கும்
மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

vidivelli said...

very very wonderful your poem..
congratulation"

vidivelli said...

very very wonderful your poem..
congratulation"

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

நிரூபன் said...

உழைப்பின் உன்னதத்தையும், வாழ்வில் நாம் முன்னேறத் தேவையான நம்பிக்கை வரிகளையும் சடுகுடுகுடு எனும் விளையாட்டினை உவமித்துக் கவிதையாக்கி மனதிற்குத் தெம்பூட்டும் வண்ணம் படைத்திருக்கிறீங்க. அருமை சகோ.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
தங்களின் இனிமையான கருத்துரைக்கு
மிக்க நன்றி.

அம்பாளடியாள் said...

ஆடுகின்றார் ஆட்டம் ஆனந்தமாய் இங்கே
நீதி சொல்லும் வகையும் நிமிர்ந்து நிற்கும் தரமும்
அந்தப் போதிமரத்துக்கிணையான புத்திசொல்லும் விளையாட்டுக்
கவிதை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ.....

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்

நெஞ்சம் நெகிழ்ந்தேன் உங்கள் கருத்துரை படித்து.
என் சிரம் தாழ்ந்த நன்றிகள் உங்களுக்கு.

Post a Comment