சிந்தையின் மந்தையில்
சிறுகுடில் போட்டு
சிறியேன் எனை
சிறையிட்டு வைத்த
சிங்காரத் தமிழே!!
அகமே முகமென
அறிவில் ஏற்றி - எனை
அவையில் நிறுத்திய
அழகின் பொருளாம்
அன்புத் தமிழே!!
தவிலின் ஒலியாய்
தரணியின் மொழியாய்
தங்கும் இடமெலாம்
தனிப்புகழ் ஏற்ற
தங்கத் தமிழே!!
கவிபல இயற்றும்
கவிஞர்கள் நெஞ்சில்
கதைகள் பேசும்
கபடின் சுவடிலா
கனகத் தமிழே!!
பங்கய மலரொடு
பன்னிசை பாடிய
பட்டினப்பாலையை
பதமுடன் நல்கிய
பவளத் தமிழே!!
சலனம் கலைத்து
சதுரம் கட்டி - எனை
சதிராடச் செய்த
சத்தியம் உரைக்கும்
சந்தத் தமிழே!!
எண்ணத்தின் வண்ணத்தை
எதுகை மோனையாய்
எடுத்து உரைக்க
எம்முள் நிறைந்த
எழுச்சித் தமிழே!!
ஆழிசூழ் உலகின்
ஆகமம் உணர்த்த
ஆயிரம் படைப்பாய் - என்
ஆவியில் உறைந்த
ஆதித் தமிழே!!
இன்பத்தமிழ் சொற்களெல்லாம்
இங்கித வார்த்தைகளால்
இயைபுடனே கையாள
இன்று வரம் தந்துவிடு
இப்பிறப்பு உய்திடவே!!
தென்பொதிகை சாரலாய் - எனை
ஆளவந்த தேன்தமிழே!!
நானறிந்த எழுத்தெல்லாம்
நீ தந்த பரிசன்றோ!!
நான் பார்த்த முதல் முகத்தின்
முகவரியும் நீயன்றோ!!
எழுதுகின்ற எழுத்தெல்லாம்
ஏறுமுகம் பெற்றிடவே
என்னுயிரில் கலந்துவிடு!!!
அன்பன்
மகேந்திரன்
இங்கித வார்த்தைகளால்
இயைபுடனே கையாள
இன்று வரம் தந்துவிடு
இப்பிறப்பு உய்திடவே!!
தென்பொதிகை சாரலாய் - எனை
ஆளவந்த தேன்தமிழே!!
நானறிந்த எழுத்தெல்லாம்
நீ தந்த பரிசன்றோ!!
நான் பார்த்த முதல் முகத்தின்
முகவரியும் நீயன்றோ!!
எழுதுகின்ற எழுத்தெல்லாம்
ஏறுமுகம் பெற்றிடவே
என்னுயிரில் கலந்துவிடு!!!
அன்பன்
மகேந்திரன்
15 comments:
தமிழுக்கு அமுதென்று பேர்..
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
வாழ்த்துக்கள் மகேந்திரன்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
அழகிய தமிழ் கவிதை
தமிழுக்கே கவிதையா
உங்கள் கவிதை வளம் பெருக
வாழ்த்துக்கள்
தமிழ்தேவன்
சொற்களை கையாள
வரம் வேண்டி
செந்தமிழை பாராட்டி
அதை தங்களிடம்
உறைந்திருக்கச் சொல்லும்
கவிதையின் பாங்கு இனிமை.
வளர்க நின் புலமை.
அகிலன்
அன்பு நண்பர் ஜானகிராமன்
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.
அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி
அன்பு நண்பர் தமிழ்தேவன்
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.
அன்பு நண்பர் அகிலன்
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.
வாழ்த்துங்கள் வளர்கிறேன்.
அருமையான கவிதை...
அழகான படைப்பு...
வாழ்த்துக்கள்
can you come my said?
மரபுக் கவிதை போல உள்ளது. சரிதானே? படிக்கும் போது சுவை தெரிகிறது.
" பங்கய மலரொடு '.அந்த மலர் பற்றி சொல்ல முடியுமா?
அன்பு நட்பு விடிவெள்ளி அவர்களே,
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்திற்கும்
மிக்க நன்றி.
நிச்சயம் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.
அன்பு நண்பர் குணசேகரன்,
தங்களின் சுவையான கருத்திற்கு
மிக்க நன்றி.
மரபுக்கவிதை போல எழுத முயற்சித்திருக்கிறேன்.
பங்கயம் என்பது தாமரை மலரைக்
குறிக்கும் சொல்.
// பங்கயம் அமர்ந்த செல்வாம்பிகையே//
என மகாலட்சுமியை பெரியோர் போற்ற
நாம் கேட்டிருக்கலாம்.
அன்பன்
மகேந்திரன்
என்னுயிரில் கலந்து விடு: தமிழை உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலக்கச் சொல்லி வேண்டுதல் செய்யும் கவிஞனின் உள்ளத்து உணர்வாக சந்தம் கலந்து வந்திருக்கிறது.
அருமையான கவிதை சகோ.
அன்பு நண்பர் நிரூபன்
தெளிவான கருத்துரைத்தமைக்கு
மிக்க நன்றி.
அன்பு நண்பரே! தங்களின் தமிழ் பற்றை என்னவென்று சொல்வது கலக்கறீங்க போங்க! வாழ்த்துக்கள்.
Post a Comment