கண்ணான கருகுமணி
காணாத பொன்னுமணி
செல்ல செப்புமணி
நீ சிரிச்சா முத்துமணி!!
எட்டு வருஷமா
செய்யாத தவமில்ல
ஏங்கி தவிச்ச நான்
வேண்டாத சாமியில்ல!!
குறிஞ்சி மலர்போல
குலசாமி அருளால
நீ எனக்கு பிறந்திடவே
என்ன பாடு பட்டேனைய்யா!!
தவழும் போது முயல்போல
நடக்கையில மயில்போல
ஓடும்போது மான்போல
மகராசா நீ இருந்த!!
எடுப்பான மீசை வைச்சு
துடுக்கோடு நடக்கையில
என்ராசா மகராசா
எட்டு ஊரு மதிச்சதைய்யா!!
உன்புள்ள அருமைபுள்ள
ஊதாரியா திரிஞ்சிகிட்டு
போதையில் கிடக்கிறான்னு
ஊராரு பேசயில
பாழாப்போன ஊரு
பம்மாத்து பேசுதுன்னு
பதுசாக இருந்துபுட்டேன்!!
கண்ணுக்குள்ள உன்ன வைச்சு
பொத்திவைச்ச பூவப்போல
திறக்காத திரவியமா
நல்லாத்தான் நான் வளர்த்தேன்!!
வாய்க்கால் வரப்புல
சீராட்டி வளர்த்த புள்ள
சீமைசரக்கு குடிச்சிபுட்டு
வாய்பொளந்து கிடக்கிறான்னு
போறவங்க சொல்லையில
உன்ன சுமந்த வயித்த
செருப்பால அடிச்சிகிட்டேன்!!
என்பால குடிச்சிபுட்டு
கண்மூடி தூங்கினியே - இப்போ
மதுப்பால குடிக்கிறியே
மதிகெட்ட மகராசா!!
மதிய மயக்கும் - மாய
மதுவ குடிச்சிபுட்டு
கண்மூடி தூங்கிவிடு
எப்போதும் திறக்காதே!!
கண்ணுமண்ணு தெரியாம
கலம் கலமா குடிச்சிபுட்டு
காரோடும் ரோடெல்லாம்
காலால அளப்பவனே
கண்கெட்ட மகராசா!!
குடிகாரன் என்மகன்னு
கருவுல நீ இருக்கையில
பாவி எனக்கு தெரிஞ்சிருந்தா
அப்போதே அழிச்சிருப்பேன்!!
அன்பன்
மகேந்திரன்
13 comments:
பெற்றவளின் மனக்குமுறலை மிக அழகாகக்கூறியுள்ளீர்கள்.
நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள்.........
பல தாய் மார்களின் புலம்பல் .....கவிதை நடை அருமை .
அருமை ...அருமை ... பாடல் போல நயமாக உள்ளது..
ஒட்டு மொத்த வலிகளையும் இங்கு காண்கிறேன் ..
வரிகளின் நடை சிறப்பு ..
அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.
அன்பு நண்பர் குணசேகரன்
தங்களின் மென்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.
அன்பு நண்பர் அரசன்
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.
தாயின்மடி
தூக்குகயிராகும்
தனயனே நீ
தவறான பாதை சென்றால்
சொன்ன பேச்சு கேட்டுவிடு
சொர்க்கத்தை பார்த்துவிடு
கவிதை அருமை
சொல்ல வார்த்தைகள் இல்லை
தமிழ்தேவன்
அருமையான புனைவு
உணர்ச்சிக்கவிதை.
நன்று.
வழிப்போக்கன்
அருமையான புனைவு
உணர்ச்சிக்கவிதை.
நன்று.
வழிப்போக்கன்
அன்பு நண்பர் தமிழ்தேவன்
இனிய விளக்கக் கருத்துக்கு
மிக்க நன்றி.
செல்லும் வழி வந்து சென்ற
அன்பர் வழிப்போக்கன் அவர்களே
தங்களின் வரவுக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.
Post a Comment