Powered By Blogger

Tuesday, 16 September 2014

வேய்கூரை தார்மீகம்!!!







கூக்குரல் கேட்டது

கூப்பிடும் தூரத்தில் 
கூர்செவி மடுத்தேன் - ஆங்கே 
கூர்மதி உறைந்தேன்!!


திலியாய் நிற்கும் 
எவனோ ஒருவனின் 
ஏக்கப் பெருமூச்சு - கணையாய் 
எட்டியது செவியில்!!
 
 

 


 
னிந்த சோதனை 
எனக்கு மட்டும் வேதனை 
ஏனையோர் அனைவரும் - எனை 
ஏற்றுப்பார்க்கும் வேளையில்!!


ல்லாய் போனாயோ 
கடவுளும் நீ தானோ 
காற்றுக்கும் கேட்குமே - என் 
கதறலின் செவ்வொலி!!
 
 
 
 
ற்றே நிலை மறந்தேன் 
சாய்ந்து அமர்ந்துவிட்டேன் 
சன்னமான ஒலியதில் - நானோ 
சமைந்து சிலையாய் போனேன்!!


புத்திக்கு விளங்கவில்லை 
புரியாத ஒலிக்கூவல் 
புரிந்திட விழைகையில் - சிறு 
புன்னகை தருவித்தேன்!!
 
 
 
 
சுற்றிவரும் ஆதவனும் 
சுழலுகின்ற பூமியும் 
சூழ்ந்துள்ள காற்றும் - எதுவும் 
சூதுபேதம் பார்ப்பதுண்டோ?!!


னக்கிருக்கும் இந்தநிலை 
உலகில் யாருக்கோ நேற்றைய நிலை 
உன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி 
உதயமாகும் நாளைக்கு யாருக்கோ!!
 
 
 
 
யல்பான வாழ்வதனில் 
இருள்சூழும் வேளைதனில்
இருதலைக்கொள்ளி ஆனோர் சிலர் 
இரும்பிதயம் கொண்டோர் பலர்!!


னக்கென்று வரும்போது 
தார்மீகம் படைத்திடுவார் 
தாளாத துன்பத்திலும் - இயல்பாய் 
தரணியில் வாழ்ந்திடுவார்!!
 
 
 
 
சுண்ணமிட்ட புழுவா நீ 
சுயநிலை ஏன் மறந்தாய்?!
சுன்னநிலை அடைவதற்குள் - அதற்கு 
சூத்திரம் கற்றுக்கொள்!!


வெந்து சாகிறேன் என 
வெறும்பேச்சு தனைவிடுத்து 
வெற்றிவாழ்வு தனைக்காண - உனக்கான 
வேய்கூரை அமைத்துக்கொள்!! 



அன்பன் 
மகேந்திரன்
 

40 comments:

இராஜராஜேஸ்வரி said...

வெறும்பேச்சு தனைவிடுத்து
வெற்றிவாழ்வு தனைக்காண - உனக்கான
வேய்கூரை அமைத்துக்கொள்

வெற்றி முரசு கொட்டும் ஆக்கம்..!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

குட்டிக் குட்டி தலைப்பில்
குறுகிய வரிக்கவி கண்டு மகிழ்ந்தேன்
ஒவ்வொரு வரிகளையும் இரசித்துப் படித் தேன்...
பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சாகம்பரி said...

"தனக்கென்று வரும்போது தார்மீகம் படைத்திடுவார்" தளராத நெஞ்சத்தோர்.

'வெந்து சாகிறேன் / வேய் கூரை அமைத்து', இதுதான் தீர்வு கவிதையெனும் கருத்துப்பெட்டகம். பகிர்விற்கு நன்றி.

தனிமரம் said...

வணக்கம் அண்ணாச்சி நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட காலத்தின் பின் வலையில் சந்திப்பதில் சந்தோஸ்ம்!

தனிமரம் said...

வேய்கூரை அமைத்துக்கொள்
//ம்ம் எங்கே தேடலில் தொலைப்பது அதிகம் ! கவிதை அருமை காட்சியும்கூட ! வாழ்த்துக்கள்.

kowsy said...

இத்தனை நாளும் எங்கே போனது இந்தச் செந்தமிழ் .

இளமதி said...

வணக்கம் சகோதரரே!

வெற்றி உனைச்சேர வேய்கூரை என்றனை!
பற்றிட ஊட்டிய பண்பு!

சிறந்த சிந்தனைக் கவிதை! மிக அருமை!
வாழ்த்துக்கள் சகோதரரே!

vimalanperali said...

விரக்திகள் நிரந்தரமில்லை,
வெற்றி இலக்கு மட்டுமே நிச்சயம்/

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் ரூபன்,
தங்களின் இனிமையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் மனவெளி அவர்களே,
தங்களின் இனிமையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி சாகம்பரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

அருணா செல்வம் said...

ரொம்ம்ம்மப காலம் கழிச்சி வந்திருக்கிறீர்கள்....????!!!
நலமாக இருக்கிறீர்களா?
அருமையான கருத்துப் பொதிந்த பாடல் மகி அண்ணா.
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் தனிமரம் நேசன்,
கொஞ்சம் அதீத பணிச்சுமை...
காலம் சற்று தடைபோட்டுவிட்டது..
தொடர்கிறேன் இனி தடையில்லாது...
===
தேடல்களில் அதிகம் தொலைத்த பின்னர் '
மிஞ்சிருக்கும் நம்பிக்கையுடன்
தொடர்நடை போடுதல் அவசியம் தானே....

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி சந்திரகௌரி..

கொஞ்சம் அதீத பணிச்சுமை...
காலம் சற்று தடைபோட்டுவிட்டது..
தொடர்கிறேன் இனி தடையில்லாது...
எம் இன்பத்தமிழுக்கு தடையற தொண்டு செய்தலே
எம் விருப்பமும் சகோதரி...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இளமதி,
அழகுற பாமாலை தொடுத்து சிறந்த
கருத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் விமலன்,
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
தங்களின் இனிமையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை அருணா செல்வம்,
நலம் நலமே.... நீங்களும் நலம் தானே...
சற்று அதீத பணிச்சுமை... காலம் கொஞ்சம்
தடைபோட்டுவிட்டது...
இனிமேல் தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன்..
தங்களின் அன்பான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

பார்வதி இராமச்சந்திரன். said...

///உனக்கிருக்கும் இந்தநிலை
உலகில் யாருக்கோ நேற்றைய நிலை
உன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி
உதயமாகும் நாளைக்கு யாருக்கோ!!///

ரொம்ப அருமையான, ஆழமான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை. பாராட்டுகள் மகேந்திரன்.

கீதமஞ்சரி said...

பிறர் பிரச்சனை கண்டு உச்சுக் கொட்டிப் போகும் உலகில் அவர்தம் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லிப் போனது மனம் ஈர்க்கிறது. வழக்கம்போல தமிழின் ஆளுமை அசத்துகிறது. பாராட்டுகள் மகேந்திரன்.

சக்தி கல்வி மையம் said...

அருமையான கவிதை. பாராட்டுகள்..

KILLERGEE Devakottai said...

அருமையான கவி நண்பரே... தங்களை இன்றுமுதல் தொடர ஆவல் கொண்டு இணைத்துக்கொண்டேன், வசந்த மண்டபம் கண்டேன் அகமகிழ்ந்து நின்றேன் நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தர அழைக்கின்றேன் கவிஞரை....
அன்புடன்
கில்லர்ஜி
அபுதாபி.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரா !

வெற்றி பெற்றே வாழ்வு சிறக்க உற்ற துணையான வரிகள் !
அருமை ! வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே !

கரந்தை ஜெயக்குமார் said...

கவி அருமை ஐயா
நீண்ட நாட்க-ளுக்குப் பின் தங்களின் பதிவினைக் காண்கிறேன்
நன்றி

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி பார்வதி இராமச்சந்திரன்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி கீதமஞ்சரி..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் கருண்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் கில்லர்ஜி..
வருக வருக..
வசந்த மண்டபம் உங்களை வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது...
நிச்சயம் வருகிறேன் உங்கள் தளத்துக்கு..
தங்களின் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

sury siva said...

பிரச்னைகளை வாய்ப்பாக கருதி, தனக்குள் இருக்கும் சக்தியை வெளிக்கொணர முயலவேண்டும் என
சொல்லாமல் சொல்லுகின்ற கவிதை இது.

தொய்ந்து போகாதே.
துணிந்து எழுந்து வா என்கிறீர்கள்.

சரியே.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சுப்பு தாத்தா...
மிகச் சரியாக சொன்னீர்கள்...
ஆழ்ந்துணர்ந்த தங்களது கருத்துக்கு
என் மனம்கனிந்த நன்றிகள்..

த முத்துகிருஷ்ணன் said...

நண்பரே, அருமை...

மகிழ்நிறை said...

புத்துணர்வூட்டும் புதுக்கவிதை! அருமை அண்ணா!

சிவகுமாரன் said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்

kupps said...

"நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது " என்ற கருத்தை மிகவும் சிறப்பாக சொல்லும் கவிதை அருமை.

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

உனக்கிருக்கும் இந்தநிலை
உலகில் யாருக்கோ நேற்றைய நிலை
உன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி
உதயமாகும் நாளைக்கு யாருக்கோ!!

இவ்வடிகள் என்னை மிகவும் ஈர்த்தன.

வெற்றிவேல் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா.

சிறப்பான கவிதை!

Post a Comment