Powered By Blogger

Sunday, 21 September 2014

பிறந்தநாள் பரிசு!!


டந்த ஓராண்டு காலமாக இணையப்பக்கம் வருவதற்கு காலம் ஒத்துழைக்காததால் பதிவுகள் இடவில்லை என்றாலும். என்னையும் என் எழுத்துக்களையும் அங்கீகரித்து கிடைத்த பரிசு. அதுவும் இன்றைய வலைப்பதிவர்களில் நவீன ஒளவையாக நான் போற்றும் சீர்மிகு எழுத்தாளர் திருமதி.வேதா இலங்காதிலகம் அம்மா அவர்களின் பொற்கரங்களால் இந்த விருதினை பெற்றிருக்கிறேன் என்றெண்ணும் போது மனம் குதூகலிக்கிறது.
எனது பிறந்த தினமாம் புரட்டாசித் திங்கள் ஐந்தாம் நாளில் இந்த விருதினை பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தீந்தமிழ் சொற்களால் 
      பூந்தளிர் கவிபடைக்கும் 
செந்தமிழ் நாயகியே! - உம் 
      மாந்தளிர் கரங்களால் 
ஈந்த இப்பெரும் விருது 
      சேர்ந்தது என் நெஞ்சினிலே!!

மதிப்பிற்குரிய வேதாம்மா என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிகளுடன் பெற்றுக்கொள்கிறேன் விருதினை மட்டற்ற மகிழ்ச்சியோடு.

1) விருதினை என்னுடன் பகிர்ந்த வலைப்பதிவரின் தளமுகவரி...

சிலபத்து அடிகளில் 
        சிறுகாவியம் படைத்திடும் 
சீர்மிகு எழுத்தாளர் 
        சிறப்பான கவியாளர்!!

ன்றே முக்கால் அடியால் 
        ஓங்கி ஒலித்திட்டார் வள்ளுவர் அன்றே!
ஒன்றிரண்டு கூட்டி 
        ஓவியம் படைத்திட்டார் வேதாம்மா இன்றே!!

கவின்மிகு சொற்களால் காவியம் படைக்கும் திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் வலைத்தளத்தை  இங்கே காணுங்கள்.

2) என்னைப் பற்றி ...

நான்மாடக் கூடலே 
      நான் பிறந்த ஊராம்!
நாட்கள் கரைசேர்த்ததோ 
      திருமந்திர நகராம்!

ணியின் நிமித்தமாய் 
      அமீரகம் நுழைந்து 
அங்குமிங்கும் பறந்தோடும் 
      விக்கிரமாதித்தன் நானே!

தாய் தந்த மொழியினுக்கு 
      அணில் போல தொண்டாற்றிட 
விரல்வழி ஊறும் எழுத்துக்களை 
       தூரிகையில் சமைக்கிறேன்!

நாட்டுப்புறக் கலைகளை 
       நயமாய்ச் சொல்லிடவே 
நாள்தோறும் எத்தனிக்கிறேன் 
       காலம் கைகூடட்டும்!!

3) எனக்குக் கிடைத்த விருதினை நான் பகிர்ந்துகொள்ள நினைக்கும் பதிவர்கள்....


என்னைத் தொடரும் அனைத்து பதிவர்களுடனும், இனி தொடரவிருக்கும் புதிய பதிவர்களுடனும் இந்த விருதினை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..


இன்னொருபுறம் என் பிறந்தநாள் பரிசாக தனி பதிவே இயற்றி இருக்கிறார் என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதரர் தனிமரம் நேசன் அவர்கள். உங்களின் அன்பிற்கு என்றென்றும் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரரே. பதிவினை இங்கே காணுங்கள்.


அன்பன் 
மகேந்திரன் 

35 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருது பெற்றுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

Anonymous said...

அன்பு மகேந்திரன் இப் பிறந்த நாளில் மேலும் சீரும் சிறப்புடன் குடும்பத்துடன் குதூகலமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
சரியான நபருக்குப் பரிசு வந்தது. மகிழ்வு.
வேதா.இலங்காதிலகம்.

அருணா செல்வம் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகி அண்ணா.

விருது பெற்றமைக்கும் நல்வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரா !

இன்று போல் இன்பம்
என்றுமே தழைத்தோங்க
அன்பினால் உகந்தேன் இனிய நல் வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க எல்லா நலனும் வளமும் பெற்று !
பரிசு மழை பொழியட்டும் சகோதரா
பரந்தாமன் அருளாலே !

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வை.கோ. ஐயா..
முதன்முதலாய் ஓடிவந்து என்னை
வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல ஐயா..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வேதாம்மா..
தங்களின் வாழ்த்துக்கும், விருதுக்கும்
அன்பான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை அருணா செல்வம்,
வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்..
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

பார்வதி இராமச்சந்திரன். said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!.... இன்னும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற்று, பல்லாண்டுகள் நலமோடு வாழ வேண்டுகிறேன்!..

கரந்தை ஜெயக்குமார் said...

பிறந்த நாளில் ஒரு பொன்னான பரிசு
வாழ்த்துக்கள் ஐயா

வெங்கட் நாகராஜ் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே.

Unknown said...

வாழ்த்துகள் மகி! இன்று பிறந்த நாள் காணும் நீங்கள் வாழ்வாங்கு வாழவேண்டும்!

இராஜராஜேஸ்வரி said...

பிறந்த தினமாம் புரட்டாசித் திங்கள் ஐந்தாம் நாளில் விருதினை பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

வசந்த மண்டபமாய் சந்தங்கள் சிந்து பாட
வருக்கைக்கு வாழ்த்துகள்.!

இளமதி said...

வணக்கம் சகோதரரே!

இனிய நல் வாழ்த்துக்கள்! இரட்டிப்பு மகிழ்ச்சி!
மிக அருமை! தொடரட்டும் உங்கள் பணி!..

வலிப்போக்கன் said...

விருது பெற்றமைக்கும் என் தளத்திற்கு வருகை புரிந்தமைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

பிறந்தநாள் வாழ்த்துக்களும், விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களும் நண்பரே,,,

kowsy said...

பிறந்தநாளில் பரிசு பெறுவது என்றால் ரெட்டிப்பு மகிழ்ச்சி தான். இது உங்கள் திறமைக்குக் கிடைத்த விருது. கவியால் எமை சொக்க வைக்கும் கவிகுக் கிடைத்த விருது. தொடரும் காலங்களில் மேலும் பல விருதுகள் உங்களை நாடி வரும். வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல வெற்றிகள் வந்தடையட்டும்.

நன்றி
அன்புடன்
ரூபன்

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி பார்வதி இராமச்சந்திரன்...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் புலவர் பெருந்தகையே...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இளமதி..
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம்நண்பர் வலிப்போக்கன் ...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம்நண்பர் கில்லர்ஜி...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி சந்திரகௌரி..
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் ரூபன்...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரத்னவேல் ஐயா...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

தனிமரம் said...

விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

unmaiyanavan said...

இந்த பிறந்த நாள் உங்களுக்கு இனிய மறக்க முடியாத பிறந்த நாளாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இரட்டை வாழ்த்துக்கள் நண்பரே.

Iniya said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...! பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.....!எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வெற்றிவேல் said...

வணக்கம் அண்ணா.

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் அண்ணா.

நிறைய கவிதைகளையும், பாடல்களையும் இன்னும் எழுத வாழ்த்துக்கள்..

உங்களுடன் நானும் வேதாம்மாவிடமிருந்து விருது பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி அண்ணா!

Unknown said...

Oceny przedstawionych kasyn z prawdziwymi opiniami https://top10casino.pl/live-casino/

Post a Comment