தேரிக்காட்டுக்குள்ளே
தேங்கித் தேங்கி நிற்பவளே!
தேனான மொழியழகி - தங்க ரத்தினமே!
தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே!!
தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே!!
அன்னமே நான் உன்ன
அலுங்காம தாங்குறேன்டி!
ஆனிப்பொன் பேரழகே - தங்க ரத்தினமே!
அசையாம குலுங்குறேன்டி- பொன்னு ரத்தினமே!!
அசையாம குலுங்குறேன்டி- பொன்னு ரத்தினமே!!
சிங்காரப் பொன்மயிலே
சிரிச்சி என்ன கொல்லாதடி!
ஸ்ரீரங்க தேவதையே - தங்க ரத்தினமே!
சில்லாகிப் போனேனடி - பொன்னு ரத்தினமே!!
சில்லாகிப் போனேனடி - பொன்னு ரத்தினமே!!
மகுடிப் பாம்பாக
மயங்கி நானும் போனேனடி!
மந்தாரப் பூங்கொடியே - தங்க ரத்தினமே!
மாதுளங் கொடியழகே - பொன்னு ரத்தினமே!!
மாதுளங் கொடியழகே - பொன்னு ரத்தினமே!!
தாவணிப் பொன்மணியே
தாவித் தாவி செல்லாதடி!
தாங்குமா என் மனசு - தங்க ரத்தினமே!
தாமரை முகத்தழகி - பொன்னு ரத்தினமே!!
தாமரை முகத்தழகி - பொன்னு ரத்தினமே!!
ஊனுக்குள்ளே கரைஞ்சவளே
உசிருக்குள்ளே நிறைஞ்சவளே!
உம்மனசு என்னுசுரில் - தங்க ரத்தினமே!
மானே மாங்குயிலே
மலையனூரு பூமயிலே!
மச்சான் மனசுக்குள்ளே - தங்க ரத்தினமே!
மடைவெள்ளம் பாயுதடி - பொன்னு ரத்தினமே!!
மடைவெள்ளம் பாயுதடி - பொன்னு ரத்தினமே!!
உடன்குடி கருப்பட்டியே
உத்து என்ன பார்க்காதடி!
ஊரெல்லாம் பார்க்குறாக - தங்க ரத்தினமே!
உசிரெல்லாம் வேர்க்குதடி - பொன்னு ரத்தினமே!!
உசிரெல்லாம் வேர்க்குதடி - பொன்னு ரத்தினமே!!
காலம் நமக்குள்ளே
காலனாக நின்றாலும்!
கண்ணுக்குள்ளே நீதானடி - தங்க ரத்தினமே!
கணையாழிக் கண்ணழகி - பொன்னு ரத்தினமே!!
கணையாழிக் கண்ணழகி - பொன்னு ரத்தினமே!!
அன்பன்
மகேந்திரன்
28 comments:
வணக்கம்
அண்ணா.
ஒவ்வொரு வரிகளையும் இரசித்துப்படித்துன். கிராமிய இசையில் மிகச்சிறப்பாக இசையமைத்து பாடக்கூடிய வகையில் உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய கிராமத்துக் கவிதை. அருமை.
//தாவித் தாவி செல்லாதடி!
தாங்குமா என் மனசு - தங்க ரத்தினமே!
தாமரை முகத்தழகி - பொன்னு ரத்தினமே!!
ஊரெல்லாம் பார்க்குறாக - தங்க ரத்தினமே!
உசிரெல்லாம் வேர்க்குதடி - பொன்னு ரத்தினமே!!//
மிகவும் ரஸித்தேன். அழகான வரிகளுடன் அசத்தலான பாடல். பாராட்டுகள்.
ஒவ்வொரு வரியிலும் கிராமத்து மனம் வீசுகிறது. இப்பொழுதெல்லாம் தாவணியை எங்கே பார்க்க முடிகிறது.
அனுபவித்து எழுதிய மாதிரி தெரிகிறது. ரசித்து படித்தேன்.
வார்த்தைகள் தாளம் போட வைத்தன! அழகிய கிராமியப்பாடல்! வாழ்த்துக்கள்!
அருமை.
வாழ்த்துகள்.
அருமையான கிராமிய மணம் கமழும்கவிதை வரிகள். தங்கள் தளத்திற்கு இப்போது தான் முதலில் வருகிறேன். இனி தொடர்கிறேன்.நன்றி சகோதரரே.
த.ம 5.
ஊரெல்லாம் பார்க்குறாக - தங்க ரத்தினமே!
உசிரெல்லாம் வேர்க்குதடி - பொன்னு ரத்தினமே!! //
ஆஹா அருமை மகி வாழ்த்துக்கள்
மழைநின்ற நாழிகையின் மண்வாசம் போல
இன்னும் மாறாத கிராமத்து வாசம் அருமை
கிராமிக மனம் கமழும் கவிதை
ரசித்தேன்
நன்றி ஐயா
ஆஹா ரசித்து, ரசித்து படித்தேன் இல்லை இல்லை பாடினேன்,,, எமக்கு கிராமத்து கிளியோடு கிராமத்து கவியும் பிடிக்கும் நண்பரே,,, வாழ்த்துக்கள்.
எமது ஔவையார் Transport டில் பயணிக்க வருக நண்பரே...
வணக்கம் சகோதரரே!
எத்தனை பாடல்கள் கேட்டாலும்
இந்தக் கிராமத்துப் பாடல்களின் வசீகரமே தனிதான்!
சொக்க வைக்கும் வரிகள்! மிக அருமை!
வாழ்த்துக்கள் சகோதரரே!
கிராமிய மணம் கமழும் அழகிய கவிதை...
முகநூலில் படித்தேன்... அருமை அண்ணா...
வாழ்த்துக்கள்.
படங்களும் கவிதையும் போட்டி போட்டு அழகு சேர்கின்றன!!
கிராமியம் மணக்கிறது அண்ணா!
கிராமப் புறப் பாடல்கள் என்றுமே இனிமை....
சிறப்பான பாடல் எழுதிய உங்களுக்கு வாழ்த்துகள் மகேந்திரன்.
மகுடிப் பாம்பாக
மயங்கி நானும் போனேனடி!
மந்தாரப் பூங்கொடியே - தங்க ரத்தினமே!
மாதுளங் கொடியழகே - பொன்னு ரத்தினமே!!
மாதுளங் கொடியழகே - பொன்னு ரத்தினமே!
!ம்..ம்..ம்..
இப்பதானே புரியுது. எங்கே ஆளைக் காணோம் என்று பார்த்தால் இதுவா விடயம் ஹா ஹா நன்று நன்று ! அழகான கிராமியப் பாடல் சகோ வாழ்த்துக்கள் ...!
வணக்கம் அண்ணா...
கிராமிய மனம் கமழும் பாடல் அண்ணா... பாடிப் போட்டிருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அன்புள்ள அய்யா திரு. மகேந்திரன்.
வணக்கம். தங்கள் யெயரைக் கேட்டவுடனே இயக்குநர் ’உதிரிப்பூக்கள் மகேந்திரன்’ நினைவுக்கு வந்தார். அந்த மகேந்திரன் திரைப்படத்தில் சாதித்தார்.
இந்த மகேந்திரன் கிராமிய மற்றும் தெம்மாங்குப் பாடல் பாடி சாதிக்க என்னோட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கணையாழிக் கண்ணழகி!! - பாடல் நல்ல மெட்டில் பாடும் படியாக உள்ளது. பாராட்டுகள்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து எனது படைப்புகளைப் பார்துப் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
அருமையான பாடல் காதல் கண்ணுக்குள் நீதானடி!
அண்ணா...
அபுதாபியில்தானா? இல்லை ஊருக்குப் பொயிட்டீங்களா?
இரண்டு மூன்று நாளாக உங்கள் அலைபேசியில் கூப்பிட்டால் ஸ்விட்ச் ஆப்ன்னு சொல்லுதே????
தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ .....!
ஆகா நல்லா ராகம் போட்டுப் பாடலாம் போல் கீது..
தொடருங்கள்..
த ம ஒன்பது
நீங்க திரைப்படப் பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் மகேந்திரன். அழகு நடை, எதுகை மோனை, எளிமை எல்லாம் சொட்ட சொட்ட எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்
''...காலம் நமக்குள்ளே காலனாக நின்றாலும்! கண்ணுக்குள்ளே நீதானடி - தங்க ரத்தினமே!....
Mika arumai ...
Vetha.Langathilakam.
ஆதிரா மேடம் சொல்வது போல தாங்கள் திரைப்படத்துக்கு பாடல் எழுத முயற்சிக்கலாம். ஆதிரா அவர்களுக்கு திரைத்துறையினர் பலர் ( வைரமுத்து உட்பட) பரிச்சயம். அவர்களையே பரிந்துரைக்க அழைக்கலாம். வாழ்த்துக்கள்
அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (09/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
அன்புடையீர்,
வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/9.html
வலைச்சரத்தில் அறிமுகமானது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://www.ponnibuddha.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/
Post a Comment