பாய்ந்தோடும் குதிரைமேல
பக்கத்தில ராணியோட
பார்முழுதும் சுத்திவரும்
வருசநாட்டு வேந்தன் - நானும்
வருசநாட்டு வேந்தன்!!
தொந்தி வயிற்றோனை
தெண்டனிட்டு வணக்கிபுட்டு
பரியேறும் மன்னவன் நான்
தென்காசிச் சீமை - ஆமா
தென்காசிச் சீமை!!
சிவகிரி சின்னமாமன்
செல்லமாக பெத்தபுள்ள
என்னோட ராணியாக
அரசாள வந்தா - இப்போ
அரசாள வந்தா!!
காத்திருக்கும் ராசாத்தியை
ரோசா போல கூட்டிக்கிட்டு
ஊர்வலந்தான் போகப்போறோம்
நெல்விளையும் சீமை - ஆமா
நெல்விளையும் சீமை!!
திற்பரப்பு அருவியிலே
தீர்த்தமாடி வந்தபின்னே
தம்பதியா போகப்போறோம்
திருவையாறு பூமி - வாங்க
திருவையாறு பூமி!!
கால்களில் கட்டைகட்டி
விடமுள்ள பூச்சிகளை
அழிக்கப் பிறந்ததுதான்
மரக்காலாடல் ஆட்டம் - ஆமா
மரக்காலாடல் ஆட்டம்!!
புராணத்தில் இருந்துவந்த
இந்தவகை ஆட்டமதை
பொய்க்காலு குதிரையாக்கி
தந்தவர்தான் ஐயா - திருவையாறு
இராமகிருட்டிணன் ஐயா!!
குதிரை வடிவுடைய
கூடு ஒன்னு கட்டிக்கிட்டு
மரக்காலில் ஆடிவந்த
ஆட்டமிந்த ஆட்டம் - இது
பொய்க்கால்குதிரை ஆட்டம்!!
சாக்கு பிரம்புக்கம்பு
இரும்புத்தகடு கொண்டு
புளியங்கொட்டை பசையெடுத்து
ஒட்டி செஞ்ச குதிரை - இந்த
ராசாராணி குதிரை!!
பொய்க்காலு என்பதிங்கே
மாமரக் கட்டையப்பா
ஒன்னரை அடியளவு
பொய்க்காலுக் கம்பு - இது
பொய்க்காலு கம்பு!!பொய்க்காலு இல்லாம
காலிலே சலங்கை காட்டி
ஆடுகின்ற ஆட்டமது
பொய்க்குதிரை ஆட்டம் - ஐயா
பொய்க்குதிரை ஆட்டம்!!
குதிரைக் கூடெடுத்து
தோளிலேதான் தொங்கவிட்டு
நையாண்டி மேளத்தோட
ஆடிவந்தோம் நாங்க - ஆமா
ஆடிவந்தோம் நாங்க!!
பம்பை கிடுகிட்டி
தவிலோடு கோந்தளமும்
அடவுகள் பலகட்டி
குதிரையோட்டி வந்தோம் - நாங்க
குதிரையோட்டி வந்தோம்!!
தேசமில்லா அரசன் நானோ
அரசியோடு கூத்துகட்டி
ஊரெல்லாம் சுத்திவந்து
கலைய வளர்த்துவந்தோம் - ஆமா
கலைய வளர்த்து வந்தோம்!!
குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே - ஆமா
போன இடம் எங்கே?!!
அன்பன்
மகேந்திரன்
73 comments:
அருமையான கிராமியக் கலைகள் பல இன்று போன இடம் எங்கே எங்கே என்று மனம் வலிக்கத் தேட வேண்டியதாகத் தான் இருக்கிறது. உங்களின் சொல்லாடல் அருமை மகேன். பிரமாதம்...
''..குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே?...''
மிக சுவாரசியமாக, விவரமாக, அழகிய படங்களுடன் அருமைக் கவிதை மகேந்திரன். சொல்லாடலும் சிறப்பு...சிறப்பு. இறுதிக் கேள்வியும் நியாயமானதே. கண் விழிக்கட்டும் பார்ப்பவர்கள். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
இங்கே நாகரீகம்-
எனும் பேரில் எத்தனையோ
போய் விட்டது!
வலிக்கும் படி சொல்லிடீங்க....
மகேந்திரன்,
‘பொய்க்கால் குதிரை ஆட்டம்’ பற்றிய எளிய வரலாறு மற்றும் தகவல்களுடன்
காணாமற்போகும் நம் அரிய கலைகளைப் பற்றிய ஆதங்க வெளிப்பாடும் கவிதை வடிவில் அருமையாக பதிவு செய்திருக்கின்றீர்.
பாராட்டுக்கள்.
உங்க கவிதை ஒவ்வொன்றுக்கும் இணைக்கும் படங்களை எப்பவுமே ரொம்பவும் ரசிப்பேன். எங்கிருந்து இவற்றையெல்லாம் பெறுகிறீர்கள் படங்களை தனியே அல்பமாகவே தொகுக்கலாம்
அழகிய கவிதை
சென்னை சாலிக்கிராமத்தில் முன்பொருகாலத்தில் தங்கியிருந்தபோது இதே பொய்க்கால் குதிரையாட்டக்குடும்பமொன்று எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் இருந்தார்காள். அப்பொழுது இதுபற்றி நிறைய அறிந்துகொண்டேன் இன்று உங்க கவிதைமூலமான ஞாபகமீட்டலுக்கு நன்றி.
குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே - ஆமா
போன இடம் எங்கே?!!//
கவிதையை ரசித்து படித்துவரும்போது கடைசிவரிகள் மனதை நெருடும்விதமாக இருந்தது. இவ்வாறு எமது பாரம்பரியங்களை தொலைப்பதை நிறுத்தவேமுடியாதா?
பொய்க்கால் குதிரையாட்டத்தைப் பற்றி விலா வரியாகத் தெரிந்து கொள்ள முடிந்தது ....இக்கலை அழிந்தாலும் காலத்தால் அழியாது !
பொய்க்கால் குதிரையாட்டம் சின்ன புள்ளைல பார்த்து ரசித்தது. இப்போலாம் இருக்கா? இல்லையான்னு தெரியலை. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. படங்கள் கொள்ளை அழகு.
நம்
மண்வாசனை கலைகளை
ஓசையின்றி புசித்துக்கொடிருக்கிறது
நாகரீக மிருகம்
உணர்தல் நன்று என
அழகாய் உணர்த்திய கவிதை அருமை
பாராட்டுக்கள்
பொய்க்குதிரை,பொய்க்கால் குதிரை--அழகாகச் சொன்னீர்கள்.நமது பாரம்பரியக்கலைகளின் பெருமையை அருமையான கவிதைகள் வாயிலாகத்தருகிறீர்கள்.
சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.ஈழத்தில் பொய்க்கால்குதிரையாட்டம் இருந்ததா என்றும் தெரியவில்லை.உங்கள் பதிவின் விபரம் கண்டு சந்தோஷம்
மகி !
அழகாய் பொய்க்கால் குதிரையின் காவியமாக தங்கள் வரிகள் ....
உண்மையில் உள்ளில் வலிகள்தான் இயந்திர வாழ்க்கையில் நம் கிராமியக் கலைகளை மறந்து மறுத்து மரித்து வாழ்கிறோம் ......
கிராமியக்கலையின் இன்னொரு ஆட்டம் இந்த பொய்க்கால் குதிரை ஆட்டம் நானும் பார்த்தேன் நம் தேசத்தில் ஒரு காலத்தில்.மருகிவிட்டது இப்போது மனம்கள் கனத்து அவர்களும் முகம் தொலைந்த கலைஞர்கள் அதிகம் தான்.கவிதை ரசிக்கும் போதே முடிவில் தொலைத்த நிலையை எண்ணி மனது வலிக்குது அண்ணா.
சின்னத்திரை வரவு என்று தொலைந்து போன ஆட்டம் இது பொய்க்கால் குதிரையாட்டம் ஆமா தொலைந்து போன கலைஞர்கள் தள்ளாட்டம்!
அழகான படங்களும் அருமையான கவிதையும்.
/// திருவையாறு
இராமகிருட்டிணன் ஐயா!////
முக்கியமான நபர் ஒருவரை அறியப்படுத்தியமைக்கு நன்றி சகோ...
அருமையான பதிவு
புகைப்படங்கள் பளிச் பளிச் ரகம்
வாழ்த்துகள் நண்பரே
நீண்ட நாட்களாக ஒரு ஆசை கிராமிய கலைஞர்களின் வறுமையை அவர்களின் வாழ்நிலை சூழல்களை ஆய்வு செய்து எழுத வேண்டும் என்று ம்ம் பார்ப்போம்
குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே - ஆமா
போன இடம் எங்கே?!!
ஆமா
போன இடம் எங்கே?!!
நாட்டுக்குள்ளே காணாமல் போனப் பொய்க்கால் குதிரை ஆட்டம் இங்கே
ஏட்டுக்குள்ளே குறையைச் சொல்லி மிளிர்கிறது.
மண்வாசம் நுகர்ந்தேன் நண்பரே..
தொடர்க தங்கள் கலைப்பணி..
நல்ல கலை நியாபகப்படுத்தியமைக்கு நன்றி
குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே - ஆமா
போன இடம் எங்கே?!!
//
எல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் நம் கைவிட்டு போவது பழகிவிட்டது சகோதரரே...படங்கள் அழகு...கவிதை மிக அழகு...
போன இடம் எங்கேன்னுதான் தெரியலை :-(
கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுக்கிட்டு வரும் கலையை ஞாபகப்படுத்தியது ரசிக்க வைத்தது.. நன்றிகள்..
Mahendran Sir!
Veliyoorla irukurathale netru vara mudiyala. Sorry for delay. I have written this comment through mobile.
Arumaiyana Paadal. Naattup pura kalaigal azhinthu varuvathu vedhanai than.
குதிரையாட்டமெல்லாம் எங்க ஊரில் இடம் பெறுவதில்லை ஏதெரியவில்லை ஆனால் தென்னிந்திய கலைகள் பாரம்பரியமிக்கவை அதில் ஒன்று இந்த குதிரையாட்டம் என்பது என் வராற்று பாடத்தில் நான் கற்றுள்ளேன. அருமையான கவிதை
//குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே - ஆமா
போன இடம் எங்கே?!!//
ஆமாம் நண்பரே... நிறைய கிராமத்துக் கலைகளை இழந்து கொண்டே வருகிறோம்.... :(
நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
அருமை.
வாழ்த்துகள் மகேந்திரன்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
ஓடோடி வந்து கருத்தீடமைக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
நாகரிக மோகத்தாலும் ஊடகங்களின் மெத்தனமான
போக்கினாலும், நம் கலைஞர்களின் காலத்துக்கேற்ற
மாற்றங்கள் இல்லாததாலும் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக
அழிந்து கொண்டிருக்கின்றன..
நம்மால் முடிந்த அளவு அதனை காத்டுவைத்திட முயல்வோம்.
அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
நமக்கான அடையாளங்களை அருமையாகச் சொல்லும்
கலைகள் செழித்தோங்க வேண்டும்..
இந்தப் பதிவால் யாரேனும் ஒருவர் இந்த மாதிரி ஒரு
கலையை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே..
அதற்கான வெற்றி.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சீனி,
சரியாகச் சொன்னீர்கள்..
நாகரிக விழுங்கல்களில் இந்தக் கலையும் ஒன்று.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சத்ரியன்,
காணாமல் போனவைகளை கண்டு எடுத்திடுவோம்.
தங்களின் இனிய கருத்துக்கும் பாராட்டுக்கும் என்
உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
படங்களை இணையத்தில் இருந்துதான் எடுக்கிறேன் ஐயா.
இன்று கலைகளின் வடிவங்களும், அவைகளின் முறைகளும்
தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு. ஆட்டக் கலைஞர்களே அவற்றின் பால் ஒரு வெறுப்போடு.. அங்கீகாரம் கிடைக்காததால் வேறு பணிகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
வழி இருக்கிறது ஐயா.. அதற்கு முதன்முறையாக ஊடகங்கள் தான் முன் மொழிய வேண்டும்.. அதை ஓரளவு விஜய் தொலைக் காட்சியும் மக்கள் தொலைக்காட்சியும் செய்கிறது..
ஆனால் முழு மூச்சில் அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும்..
மற்றும், நம் கையிலும் இருக்கிறது.. நம்முடைய வீட்டு விழாக்களில் இது போன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளின் உன்னதங்களை நம்மவர்களுக்கு முதலில் புரிய வைக்கவேண்டும்.
தங்களின் மேன்மையான, என்னைப் பட்டை தீட்டும் கருத்துகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜபாட்டை ராஜா,
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் பாலா,
காலத்தின் ஏட்டில் கரைக்க முடியா
பக்கங்களை பெற வேண்டும் நம் கலைகள்.....
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராஜி,
இன்னும் இருக்கிறது சகோதரி.. தென்மாவட்டங்களில்
இத்தகைய கலைஞர்கள் இன்னும் வறுமையை தோளில் சுமந்துகொண்டு, கலையையும் மறக்க முடியாமல் வயிற்ருக்கும் பாடு இல்லாமல் இருக்கத்தான் செய்கிறார்கள்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் செய்தாலி,
ஆம் நண்பரே,
நாகரிக மோகத்தால் நாம் தொலைத்த உன்னதமான கலைகளுள்
இதுவும் ஒன்று.
தங்களின் மேன்மையான கருத்துக்கும் பாராட்டுக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அண்ணா அழிந்து வரும் கிராமிய நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும் பதிவு . படங்களும் பதிவும் சிறு வயதிற்கு அழைத்துச் செல்கிறது .
வணக்கம் அண்ணா,
நல்லா இருக்கீங்களா?’
தமிழர்களின் பாரம்பரிய கலையானது அழிவுறா வண்ணம் பேணிப் பாதுகாக்க வேணும் எனும் நோக்கோடு அருமையான கவிதை மூலம் பொய்க் கால் குதிரை ஆட்டத்தின் அருமை - பெருமைகளை அழகு தமிழில் சொல்லியிருக்கிறீங்க.
நல்லதோர் முயற்சி!
அழகான கவிதை ! சிறப்பான பதிவு ! நன்றி நண்பரே !
வணக்கம் மாப்பிள.!
பொய்கால் அழிந்து வரும் கிராமிய கலைகள் பற்றி அருமையான கவிதை பகிர்வு. அம்பலத்தார் சொல்வதை போல நீங்கள் தேர்தெடுக்கும் படங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.!!
இரண்டு நாட்களா தங்கள் வலைமட்டுமல்ல பலரது வலையும்
என்வலையும் கூட திறக்கவில்லை
இன்னும் சரியாகவில்லை!
யாராவது சரிசெய்து கொடுத்தால் உதவியாக இருக்கும்
வலையைப்படிக்கவோ மறுமொழி இடவோ இயலவில்லை!
கவிதை நன்று!
சா இராமாநுசம்
poi kaal ellaam paarththu pala varudam aaki vittathu...
குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே - ஆமா
போன இடம் எங்கே?!!//
அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தை
மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளீர்கள்
படங்களுடன் பகிர்வு அருமை
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 33
அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
கவியை நன்கு உணர்ந்து படித்து
கருத்தளித்தமைக்கு நன்றிகள் பல ஐயா.
அன்புநிறை சகோதரி ஹேமா,
ஆமா சகோதரி.. அதுவும் பழைய திரைப்படங்களில் தான்
இந்தக் கலையைக் கண்டிருக்க முடியும்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் தினேஷ்குமார்,
ஆமா நண்பரே.. கலைகளை பற்றி நாம் கொள்ளும் வலிகளை விட
கலைஞர்களின் வலிகள் மிகவும் கொடியது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் நேசன்,
சில தொலைக்காட்சிகள் இன்னும் இந்த கலைகளின் பெருமைகளை
கூறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் அதெயெல்லாம்
பார்ப்பது இல்லை.
ஊடகங்களில் மிகப்பெரியதான சினிமா கூட நாட்டுப்புறக் கலைகளையும்
பாடல்களையும் குடித்து கும்மாளம் அடிப்பதற்கு மட்டுமே
பயன்படுத்துகிறார்கள்.
நிலைமை மாறும்.. காலம் கனியும்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ ம.தி.சுதா,
சிலப்பதிகாரத்தில் "மரக்காலாடல்" மற்றும் தொல்காப்பியத்தில் "மடலேறுதல்"
என்று இருந்த கலையை, அன்றைய நிலைமைக்கேற்ப மாற்றி
மக்கள் மனதில் பதிய வைத்தவர் தான் திருவையாறு.திரு.இராமகிருட்டிணன் அவர்கள்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ஹைதர் அலி,
ஆகா,
தாராளமாக, தங்களிடம் இருந்து அப்படி ஒரு ஆய்வுக் கட்டுரை வந்தாள்
மகிழ்ச்சி கொள்ளும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
அதற்கான முயற்சியில் என்னால் ஏதேனும் உதவி தேவையென்றால் செய்வதற்கு
சித்தமாக இருக்கிறேன்.
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி இராஜ்ராஜெச்வரி,
இந்தக் கேள்விக்கு காலம் தான் விடை சொல்ல வேண்டும்
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
குதிரையர்களுக்கு நிஜக்காலும்,பார்க்கிற நமக்குபொய்க்காலும் இருப்பது போலானதொரு உணர்வை ஏற்படுத்திச்சென்று விடுகிற ஆட்டம்,நல்ல பதிவு.வாழ்த்துக்கள்,
நன்றி.வணக்கம்.
மண் வாசனை மிக்க கவிதையை வழங்கியிருக்கிறீர்கள்! அருமை!!
அன்புநிறை நண்பர் செல்வம்,
இன்றைக்கு ஏட்டில் எழுதி வைப்போம்..
நாளைய சமுதாயம் படிக்க..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை முனைவரே,
தமிழே,
தமிழமுதமே...
வாழ்த்தியமைக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சதீஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் ரெவெரி,
நமக்குப் பழகியது போல்..
கலைஞர்களுக்கு மறக்கும் பழக்கம் வரும் முன்
கலையை பாதுகாக்க வேண்டுமே..
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அமைதிச்சாரல்,
கலையை உணர்ந்து ரசித்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
எங்கிருந்தாலும் எனை மறக்காது வாழ்த்தும் தங்கள்
மனதிற்காய் எப்போதும் காத்திருப்பேன் நண்பரே..
செதுக்கி வைக்க வேண்டிய கலைகள்
மறுக்கப்படுவது.. உகந்ததல்ல..
அதை உள்ளமட்டும் காத்திடுவோம்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.
அன்புத் தங்கை எஸ்தர்,
ஆம் எட்டினில் அடக்கிவிடாது
நடப்புகளில் சிறக்க வைக்க வேண்டும் என்பதே
நோக்கம்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புத் தங்கை சசிகலா,
ஆம் துள்ளித் திரிந்த காலத்தில்
அமர்ந்து ரசித்த கலைகள்..
இன்றோ.. காலமெனும் கோலம்
மறைத்துக் கொண்டிருக்கிறது..
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
வணக்கம் சகோ நிரூபன்,
நலம் நலமே..
செழிக்க வேண்டிய கலைகள்
அழிந்து போகலாமா..
அதன் தாக்கமே இந்தக் கவிதை..
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை காட்டான் மாமா,
வணக்கம்
படங்கள் எல்லாம் கூகிளில் தான் தேடுகிறேன்..
நம் பண்பாடு சொல்லும் கலைகள் அழிந்துவிடாது
எட்டிலாவது ஏறவேண்டும் என்பதே நோக்கம்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்கள் தளம் திறந்து பார்த்தேன்.
நன்றாக திறக்கிறது..
சில நேரங்களில் கூகிளன் தாண்டவம் நம்மை
வெறுப்பேற்றத்தான் செய்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மதுரை சரவணன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் விமலன்,
ஆம்..
நாகரிக பொய்க்கால் கொண்டு நாம்
இனிய கலைகளை அழித்துதான் வருகிறோம்..
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை மனோ அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
Post a Comment