Powered By Blogger

Tuesday 10 April 2012

பின்னோக்கி ஓர் பயணம்!!


மிடுக்காக மின்னணுவியல்
மிளிர்ந்திருக்கும் போதிலும்!
தொய்வில்லா தொலைத்தொடர்பு
உச்சமிருக்கும் போதிலும்!
கற்காலம் தேடியிங்கே
பின்னோக்கி ஓர் பயணம்!!
 
யன்பாடுகள் பெருகுகையில்
உற்பத்தியே! நீ மிகைந்தால்!
நாகரீகப் பாதையில்
நானும் வளர்வேன் என
நாசூக்காய் சொல்லிக்கொண்டு
தட்டுப்பாடும் வளருதிங்கே!!
 

 


ன்று வாங்கினால்
ஒன்று இலவசமென!
பழையது கொடுத்து  
புதிதாய் பெற்றதென!  
வாங்கிவைத்த பொருளெல்லாம்
சிலந்தி வலைகளுக்கு  
தாக்கமாய் நின்றதிங்கே!!
 
காய்ந்த மரம் வெட்டி
விறகுக் குச்சியாக்கி
அடுப்பெரித்து வாழ்ந்தோரை!
காலத்தின் தன்மைக்கு
மாறிட அறிவுறுத்தி
இயற்கைவாயு தந்து எனை
இன்புறச் செய்தது ஓர் காலம்!!
 
 
நான்கு தூக்கு விறகுவாங்கி
வெயில்கண்டு உலரவைத்து!
எரிகையில் எரிச்சலூட்டும்
புகைச்சலின் பால்கொண்ட
வெறுப்பின் காரணமாய்!
மலர்ந்த முகத்தோடு
நானும் அதை ஏற்றுக்கொண்டேன்!!  




விழ்ந்து போன காலச்சூழலில்
பதிவு செய்திடுகவென  
தொலைபேசி விடுத்தாலோ!
இயற்கை வாயு வருவதற்கு
இன்னும் மூன்று மாதமென
புதிய கணக்கு சொல்கையிலே!
சுற்றிவந்தால் வட்டமென
இன்றுதான் புரிகிறது!!
 
 


சிறுதடியின் முகப்பில் 
மல்லுத்துணி கட்டி
சிக்கிமுக்கி கல் தேய்த்து
வந்த நெருப்பினால்
எரிய வைத்தும்!
மின்மினிப் பூச்சிகளை 
கண்ணாடிக் குடுவைக்குள் 
அடைத்து வைத்தும்  
வெளிச்சம் கொண்டு வந்தோம்
அதுவும் ஓர் காலம்!!
 
 
சிறிதாக அகல்விளக்கும்
பெரிதாக அரிக்கேனுமென 
எரியும் எண்ணெய் கொண்டு
விளக்குத் திரியேற்றி
உரசிப் பற்றவைக்கும்
தீப்பெட்டி துணைகொண்டு
வெளிச்சம் கொண்டு வந்தோம்
பின்னர் ஓர் காலம்!!
 
 
றிவியல் வளர்ந்ததப்பா
விட்டிற் பூச்சியாய்
வீட்டிற்குள் அடங்காது
புறம் வந்து பார்த்திடப்பா! - என
கண்ணுக்கு தெரியாது
கம்பிக்குள் சக்தியை
சந்துக்குள் கொண்டுவந்து
பளபளப்பாய் வெளிச்சம் காட்டி
திகைக்க வைத்ததோர் காலம்!!
 
 
கல் விளக்கை புறம் எறிந்து
மின்சக்தி அகம் கொணர்ந்து
சொகுசான வாழ்க்கைக்கு
அடித்தளம் போட்டுவைத்தேன்!
குலவி நின்று உரல் ஆடுவதை
வாங்கி வைத்து
உரல் நின்று குலவி ஆடியதை
தொலைவில் எறிந்தேன்!!
 
டம் புரண்ட காலம்
கதையிங்கே சொல்கிறது!
காணமுடியா மின்சக்தி 
கண்மறைந்து போனதாம்!
பெருகிவரும் மக்கட்தொகையால் 
உற்பத்தி போதாது 
தட்டுப்பாடு வந்ததாம்!!
 
 
தொலைவெறிந்த அகல்விளக்கு 
இன்றோ! அகத்தில் 
மறுபுகுத்தலாய் மாடத்தில்!
கைதேர்ந்த சிற்பிகளோ 
அரைக்கும் அம்மிக்கல்லையும் 
ஆட்டும் ஆட்டு உரலையும் 
நுணுக்கமாய்  செதுக்கி
கலைவண்ணம் செய்துவரும்
காலமிது இக்காலம்!!
 
 
பாமரப் பருவம்விட்டு
படித்தறிந்த பின்னும்
தட்டுப்பாடு பெருகிடவே!
விஞஞான கால்ம்விட்டு
மெதுவாய் கால்பரப்பி
பின்னோக்கி செல்கிறேன்
கற்காலம் நோக்கி!!
 
 
ட்டுப்பாடு இங்கே
தானாக வந்ததோ?
ஆளும் வர்க்கத்தோர்
தனித் திறம் காட்டி 
தரம் உயர்த்தத் தவறிவிட்டு  
பசப்பு வார்த்தைகள் பேசி 
செய்த தவறுகளை
தவளை உருவாக்கி
கிணற்றில் அடைக்கின்றனரே!!
 
 
ளர்ச்சிப் பாதையில்
தட்டுப்பாடெனும் அரக்கன்
நுழைந்திட காரணம் யார்??!!
மக்கட் தொகை பெருக்கமோ??
ஆக்க வழிகளில் 
அழிவின் சக்தியைக் கொணர
ஆள்வோர் நடத்தும் நாடகமோ??
விழிப்புணர்வு இன்றி
வீணாக பயன்படுத்தி 
இன்று விழிபிதுங்கும்
நுகர்வோரின் குற்றமோ??!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 
 

65 comments:

Anonymous said...

அழிவின் சக்தியைக் கொணர
ஆள்வோர் நடத்தும் நாடகமோ??

இது தான் உண்மை சகோதரா...

Anonymous said...

உங்களது இந்தக் கவிதையில் புலவர் அய்யா சாயல் சற்றே தூக்கலாக...

அது வளர்ச்சியின் அறிகுறி...என் வாழ்த்துக்களைப் பிடியுங்கள்...

சென்னை பித்தன் said...

சிந்திக்க வைக்கிறீர்கள்.அருமை.

குறையொன்றுமில்லை. said...

வளர்ச்சிப் பாதையில்
தட்டுப்பாடெனும் அரக்கன்
நுழைந்திட காரணம் யார்??!!
மக்கட் தொகை பெருக்கமோ??
ஆக்க வழிகளில்
அழிவின் சக்தியைக் கொணர
ஆள்வோர் நடத்தும் நாடகமோ??
விழிப்புணர்வு இன்றி
வீணாக பயன்படுத்தி
இன்று விழிபிதுங்கும்
நுகர்வோரின் குற்றமோ??!!
சிந்திக்கவைத்தவரிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனை.... நல்ல கவிதை நண்பரே.... வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

கடந்த காலத்துக்கு என்னை அழைத்துச் சென்ற பதிவு நன்று அன்பரே..

Anonymous said...

super annaa

ராஜி said...

மின்சார தடையினால ரொம்ப நொந்து போய் இருக்கீங்கன்னு நல்லா தெரியுது உங்க கவிதை மூலம்.

தனிமரம் said...

இன்றைய பவர் கட்டை மையமாக்கி வ்ந்திருக்கும் கவிதை ரசித்தேன் அண்ணா! அந்த் அரிக்கன் லாம்பு 10 படம் தமிழக்கத்தில் எப்படி அழைப்பார்கள் கொஞ்சம் சொல்லுங்கோ அணணா! பிளீஸ்!!!

அருணா செல்வம் said...

“யார் காரணம்?“

யோசிக்கத் துர்ண்டிய கவிதை!!
அருமை.

Anonymous said...

சிந்தனைக் கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

சாந்தி மாரியப்பன் said...

அந்தக்கால இந்தக்கால ஒப்பீடுகள் அருமையா இருக்கு..

ஹேமா said...

வீட்டு ஞாபகம் வருது மகி.மண்சட்டியில்தான் அசைவம் சமைப்போம்.கூரையால் வேய்ந்த சாணகத்தல் மெழுகின ஒரு சின்னவீடு.இன்னும் இன்னும் இயற்கையோடு கதை பேசி வாழ்ந்த வாழ்வை நினைத்து ஏங்க விட்டுவிட்டீர்களே !

பால கணேஷ் said...

குழவி நின்று உரல் ஆடுவதை |வாங்கி வைத்து | உரல் நின்று குழவி ஆடியதை | தொலைவில் எறிந்தேன்!
-இந்த வரிகளைப் படித்ததும் சிரித்து விட்டேன் மகேன். கவிதையை முழுவதும் படித்து முடித்ததும் சிந்தனைக்கு வித்திட்டது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் தமிழன் சந்தோஷமாய் இருப்பான் என்பதும் ஆள்வோரின் எண்ணம் போலும்! அருமை!

Unknown said...

அசுர வளர்ச்சியும் அரசின் தளர்ச்சியும் மின்வெட்டுக்குக் காரணம்!
அதை சுவைபடச் சொல்லிவிட்டீர்!

சா இராமாநுசம்

Unknown said...

நீர் உயர நெல் உயரும்னாங்க...இங்க மக்கள் உயர கற்காலம் வரும்னு யாரும் சொல்லி செல்ல்லியே மாப்ள...

நிற்க நீங்க சொன்னபடி...

”மகேந்திரன் said...
வணக்கம் மாம்ஸ்,
பொதுவாக வெளிநாட்டினர் நம் கலைகளை
விழிவிரியப் பார்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
நீங்கள் ஒடிசி நடனத்தை பற்றி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக
இருந்தது...

என்னிடமிருந்து தங்களிடம் ஒரு வேண்டுகோள்,,,
அப்படி அந்த விழாவினை நடத்துபவர்கள் தங்கள் நண்பர்கள் ஆயின்
நமது நாட்டுப்புறக் கலைகளை அங்கு நடத்த ஏற்பாடு செய்யலாமே..
இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.. வாய்ப்புகள்
இருக்குமாயின் முயற்சி செய்யுங்கள்.

நன்றி”

>>>>>>>>>>>>>

நீங்க சொன்னபடி முயற்சிக்கிறேன்..வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கயுடன்...

தினேஷ்குமார் said...

இன்னாளின் இருள் பேசுகின்றன ஒவ்வொரு வரியிலும் ....

செய்தாலி said...

நாகரீக
மிருகம் மௌனமாய்
புசித்துக்கொண்டு இருக்கிறது
மனித வாழ்கையை

உலகமோ
தன் அழிவை நோக்கி
மெல்ல மெல்ல ...

சிறப்பான கவிதை
சிதிக்கும்படி சொன்னீர்கள் தோழரே

கூடல் பாலா said...

அருமை...அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைக்கும் கவிதை !

சசிகலா said...

பின்னோக்கி ஒரு பயணம் உண்மையாகவே பின்னோக்கிப் போனால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் அன்பும் . அருமை அண்ணா .

Seeni said...

அய்யா!

நீங்கள் கடைசியாக-
கேட்டீங்களே கேள்வி!

நியாயத்தின்-
வேள்வி!

கீதமஞ்சரி said...

மின்சாரத்தால் இயங்கும் பொருட்கள் பார்த்து அன்று நாம் விழிவிரிந்தோம். இன்று மின்சாரம் தேவைப்படாத பழங்காலப் பொருட்களைப் புழங்குவதைப் பார்த்து பிள்ளைகள் வியக்கின்றனர். காலக்கொடுமை. எல்லாம் இருந்தும் அனுபவிக்கக் கொடுப்பினையற்றக் காலம். அற்புதமான கவிதையால் அத்தனை வலியையும் மறக்கடித்துவிட்டீர்கள். பாராட்டுகள்.

நம்பிக்கைபாண்டியன் said...

அறிவியலின் பரிணாம வளர்ச்சியையும்,
அரசின் வளர்ச்சியற்ற போக்கையும் ஒரே கவிதையில் கொண்டு வந்த விதம் அருமை!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

shanmugavel said...

சிந்திக்க வைக்கும் வரிகள்.இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

நற் சிந்தனையுள்ள நல்ல கவி uncle supperrrrrrrrrrrr

பி.அமல்ராஜ் said...

அகல் விளக்கை புறம் எறிந்து
மின்சக்தி அகம் கொணர்ந்து
சொகுசான வாழ்க்கைக்கு
அடித்தளம் போட்டுவைத்தேன்!
குலவி நின்று உரல் ஆடுவதை
வாங்கி வைத்து
உரல் நின்று குலவி ஆடியதை
தொலைவில் எறிந்தேன்!!


அருமையான கவிதை மகேந்திரன் அண்ணா

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,

அந்த உண்மை
அவர்களை சுடும் நாள் விரைவில்...

புலவர் பெருந்தகையின் சாயல் எனக்கா...
இதை விட நான் பெருமை பெற எனக்கு பாக்கியம் உண்டா...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தளம் வந்து சிந்தனை செய்ததற்கும்
அழகிய கருத்துக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
நம் சிந்தனையும் விழிப்புணர்வும் இன்னும்
பெருகவேண்டும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
நெகிழச் செய்த தங்களின் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை கலை,
தங்களின் இனிய கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
மின்சாரத் தடை நம்மை அதன்
போக்கினால் மிகவும் பாதிப்புக்கு
உள்ளாக்குகிறது..
சிந்திக்க நேர்ந்ததால் விளைந்ததே...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோ நேசன்,
அரிக்கேன் விளக்கு என்றும் சில பகுதிகளில்
லாந்தர் விளக்கு என்றும் அழைக்கிறோம்...
ஆனால் பொதுவாக அரிக்கேன் என்று தான்
சொல் வழக்கு...
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செல்வம்,
சிந்திக்க வேண்டிய விளைவுகளை
சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்..
தங்களின் அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அமைதிசாரல்,
ஒப்பிடுகையில் தான் நாம் இன்னும் சில அடிகள் கூட
நகரவில்லை என்று விளங்குகிறது..
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
அந்த மண்தரையின் வாசமும்
மண் சட்டியில் உண்டாக்கிய உணவும்
திண்ணையில் அமர்ந்து பேசிய பேச்சுக்களும்
மனதை விட்டு அகலாதவை..
தங்களின் மேனமையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
இப்படியும் சொல்லி நம் மனதை ஆற்றிக் கொள்ளலாம்
என்று விளங்க வைத்தமைக்கும்..
அருமையான கருத்திட்டமைக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் மேலான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
அதையெல்லாம் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

என் வேண்டுகோளை ஏற்று நடைமுறைக்கு கொண்டுவர
எத்தனித்தமைக்கு நன்றிகள் பல மாம்ஸ்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தினேஷ்குமார்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செய்தாலி,
அதைக்கண்டு அனுபவித்து
மௌனமாகிப் போனோம்..
தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை சசிகலா,
தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,
ஞாயங்கள் கிடைத்திடவே
உருண்டு புரள்கிறோம்..
ஆனால் எப்போதும் நிராகரிக்கப் பட்டுக்கொண்டே
இருக்கிறோம்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
இருந்தும் இல்லாதவராக
படும் பாடு கொஞ்சமல்ல சகோதரி...
இனிக்க இனக்க இனிப்பு கொடுத்துவிட்டு
இனிமேல் உனக்கு இனிப்பே கிடையாது என்று
சொல்லாமல் சொல்கிறார்கள்..
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரதனவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை காண்பதில்
மிக்க மகிழ்ச்சி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி எஸ்தர்,
தங்களின் அருமையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் பி.அமல்ராஜ்,
தங்களின் அருமையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஞா கலையரசி said...

விளக்கு,அடுப்பு,ஆட்டுக்கல் இவற்றின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி அழகான வரிகளோடு கூடிய கவிதை.
நவீன வசதி வாய்ப்புக்களுக்குப் பழக்கப்பட்ட பிறகு மீண்டும் பின்னோக்கிய பயணம்.
போகிற போக்கைப் பார்த்தால் அரசியல் தலைவர்கள் நம்மை மீண்டும் கற்காலத்துக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
தொலைநோக்கில்லா சுயநல அரசியல் வாதிகளிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
விழிப்புணர்வு மிக்க அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

துரைடேனியல் said...

உண்மை. நுகர்வோரின் தவறுதான் இத்தனை பின்விளைவுகளுக்கும் காரணம். அருமையான படைப்பு.

வெளியே சொல்ல முடியாத மனச்சோர்வினால் கடந்த சில பதிவுகளுக்கு வரமுடியவில்லை.

சிவகுமாரன் said...

கவிதையும் படங்களும் அழகு
ஆள்வோரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்பதை நாசுக்காய் சொன்ன விதம் அருமை.

Anonymous said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

kupps said...

நாம் விரும்புகிறோமோ இல்லையோ நாம் பின்னோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம்.அதில் சில நன்மைகளும் உண்டு.நாம் விரும்பாதவைகளும் உண்டு.உங்கள் கவிதையின் பின்னோக்கிய பார்வை தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாக அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கலையரசி,
சரியாகச் சொன்னீர்கள்..
நாட்டின் வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு
பார்வையின்மையே இந்த நிலைக்கு காரணம்...
தங்களின் மேன்மையான கருத்துக்கும் பாராட்டுக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.'

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
நுகர்வோரின் கவனக் குறைவும்
ஒரு காரணமே...

மனச்சோர்வை சீக்கிரம் சரிசெய்து கொள்ளுங்கள்
நண்பரே..
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிவகுமாரன்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி,
சரியாகச் சொன்னீர்கள்..
நாம் எப்போதும் எந்த ஒரு கணத்திலும்
பின்னோக்கி பயணம் செய்ய
விரும்பாதவர்கள்.. அப்படி
விரும்பாதவரை கையை பிடித்து
அழைத்துச் செய்கிறார்கள்..
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.'

Post a Comment