Powered By Blogger

Tuesday, 20 March 2012

நதிக்கரை தாகங்கள்!!!தேடல்களின் நிமித்தம்
நொடிகள் தோறும்
தவிப்பின் தடங்களில்
சுவடுகளை பதித்துச் சென்ற
தவிப்படங்கா தாகங்கள்
கூம்புக் குவியலாய்
குழுமிக் கிடக்கின்றன!!வழ் பருவந்தொட்டு
உமிழ் நீருக்குள்
குமிழிகளாய் அடக்கி
விழுங்கிக் கொண்டு
குவளையில் போட்டுவைத்த
பவளக் கனவுகள் - இங்கே
தீர்க்கப்படாத தாகங்களாய்!!
தூக்கம் களைந்து மீண்டும்
தூளிக்குள் அடங்குமுன்
சிறுதுளி இதயத்துள்
பல உளி குத்தல்களை
உள்வாங்கிப் போட்டுவிட்டு
கழைக் கூத்தாடிபோல்
மணித்துளி நகர்த்துகிறேன்!!
வாழ்வின் பயணத்தில்
வடித்து வைத்த 
புத்தகப் பக்கங்களின்
எத்தனையோ புரட்டல்களில்
நிறைவேறா தாகங்களாய்
ஏக்கங்கள் மட்டுமே
மிஞ்சிக் கிடக்கின்றன!!புழுதி பறக்கும்
பாலை நிலத்தில் அல்ல
இந்த தாகங்கள்
நதிக்கரை ஓரத்து
சோலை வனங்களின்
எட்டாக் கனியாக
கிட்டாத ஏக்கங்கள்!!
சிட்டுக்குருவி போல்
சிறகடித்துப் பறக்கையில்
பனித்துளி ஆசைகளால்
படலம் போட்டுவைத்து
பனியுருகிப் போனதால்
உடல்குறுகி உன்மத்தமாய்
சிறுமூளைக்குள் பதுக்கிவைத்த
தாகங்கள் கோடியுண்டு!!செய்தொழிலில் பக்தி இருந்தும்
கொண்ட கல்விமேல் பிடிப்பிருந்தும்
இன்றிருக்கும் இதுவா
நான் நினைத்த நிலை??
இன்று செய்யும் இத்தொழிலா
எம் மனம்கொண்ட தொழில்??
இயைபை இழந்துவிட்டு
இன்முகம் காட்டிவரும்
கண்காட்சிப் பொம்மையாம் நான்
இன்னும் தீராத தாகங்களுடன்!!

ணமிங்கு தாகமல்ல
நதியலைகளைப் போல்
சிறுவடிவில் எழுந்து
அங்கேயே சில காரணங்களால்
தகனம் செய்யப்பட
மனக் குமுறல்களே!
தவித்திருக்கும் தாகங்களாய்!!


ன்னை நானே வினவினேன்
ஆசைகள் என்ன தாகங்களா??
ஆசைகள் நிராசைகள்
ஆகிடுகையில் தாகங்களே!!
அள்ளிக்குடிக்க நீரில்லையெனில்
அங்கே வார்த்தைகள் இல்லை
அபரிமிதமாய் நீரிருந்தும்
அள்ளிக்குடிக்கும் கைகள்
கட்டப்பட்டவையே இங்கே
தாகங்களாய்  உருமாற்றம்!!

வைகள் என்றும்
தீர்க்கமுடியா தாகங்கள் அல்ல!
காலம் காலமாய்
தீர்க்கப்படாத தாகங்கள்
ஆம்!!
நதிக்கரை தாகங்கள்!!அன்பன்
மகேந்திரன் 

77 comments:

Anonymous said...

சுப்பரா இருக்கு அண்ணா ..

எப்புடி அன்ன இப்புடிலாம் எழுதுறிங்க ...

சான்ஸ் எ இல்லை அண்ணா ..கலக்கல்

KANA VARO said...

அண்ணே! இப்ப அடிக்கடி காணாமல் போறீங்க.. பிஸியோ?

Yaathoramani.blogspot.com said...

தாகம் தீராதன் காரணம் நீர் கிடைக்காமை இல்லை
நம் கைகளை நாமே கட்டிக் கொண்டுத் திரிவதே
தங்க்கள் சிந்தனையின் வேகமும் வீச்சும் பிரமிக்க வைக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பால கணேஷ் said...

தீர்க்க முடியா தாகங்கள் இல்லை, தீர்க்கப்படாத தாகங்கள்தான்! -அருமையான வரிகள், வலிமையான வரிகள்!உங்கள் கவிதைகளின் எல்லையும், விஸ்தீரணமும் வளர்ந்து கொண்டே வருவது பிரமிப்பையும் மகிழ்வையும் தருகிறது. வாழ்த்துக்கள் மகேன்!

Unknown said...

அருமை
தாகம் தீர்வது இல்லைதான்

Unknown said...

சுப்பரா இருக்கு அண்ணா ..

எப்புடி அன்ன இப்புடிலாம் எழுதுறிங்க ...//kirrrr

வெங்கட் நாகராஜ் said...

அருமை நண்பரே....

Prem S said...

ஆசைகள் என்ன தாகங்களா??
ஆசைகள் நிராசைகள்
ஆகிடுகையில் தாகங்களே!!//உண்மை உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர் சார் ! நன்றி !

Unknown said...

ஒன்றை அடைந்ததும் அடங்கிவிட்டால்
அதன் பெயர் தாகமில்லை!

கவிதையும் கருத்தும் மிக்க நன்று!

MANO நாஞ்சில் மனோ said...

புழுதி பறக்கும்
பாலை நிலத்தில் அல்ல
இந்த தாகங்கள்
நதிக்கரை ஓரத்து
சோலை வனங்களின்
எட்டாக் கனியாக
கிட்டாத ஏக்கங்கள்!!//

ஓ அருமையான ஏக்கமான வரிகள் சூப்பர் மக்கா வாழ்த்துக்கள்....!

குறையொன்றுமில்லை. said...

இவைகள் என்றும்
தீர்க்கமுடியா தாகங்கள் அல்ல!
காலம் காலமாய்
தீர்க்கப்படாத தாகங்கள்
ஆம்!!
நதிக்கரை தாகங்கள்!!

மிகவும் அருமையான வரிகள். வாழ்த்துகள்.

ஷைலஜா said...

முதலில் கவிதைதலைப்புக்கு ஒரு பாராட்டு! அடுத்து கவிதை அமைத்தவிதமும் வார்த்தைப்பிரயோகங்களும் கருத்தும் மனதை கவர்ந்துவிட்டதால் மகேந்திரனுக்கு ஏதும் பட்டம் தர வேண்டும் போல உள்ளதே! வாழ்த்துகள் மட்டும் இப்போதைக்கு மனம் நிறைய!

மும்தாஜ் said...

ஏக்கத்தை வெளிபடுத்திய கவிதை வரிகள் அருமை..
வாழ்த்துக்கள் நண்பா!!!!

மகேந்திரன் said...

முதலில் வந்து வாழ்த்து சொன்ன
தங்கை கலைக்கு,
ஒரு பூங்கொத்து.

அன்பான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் வரோதயன்,
இருவார காலமாக என்னால் வலைப்பக்கம் வர முடியவில்லை.
இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் ஒவ்வொரு கருத்தும் எனக்கு உற்சாக மருந்து.
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை
கவிதையாக்குகையில் இல்லாத சந்தோசம்
தங்களின் கருத்தால் எனக்கு விளைகிறது.
நன்றிகள் பல நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிவசங்கர்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வேங்கடபதி,
தாகங்கள் என்றும் அடங்குவதில்லை
என்பது சத்தியமான வார்த்தை...
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,
தங்களின் வாழ்த்துக்களே எனக்குக் கிடைத்த
மாபெரும் பரிசு.
மனமார ஏற்றுக்கொண்டு என் பணிய
சிரமேல் பணியாகத் தொடர்கிறேன்...

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்.

சசிகலா said...

என்னை நானே வினவினேன்
ஆசைகள் என்ன தாகங்களா??//
அருமையான வரிகள் அண்ணா என்னையும் கேட்டுக்கொள்கிறேன் ஆசைகள் தாகங்களா ?

ராஜி said...

நதிக்கரை தாகங்கள்!!
>>>
நதிக்கரை தாகங்கள். இதுவரை கேள்விப்படாத ஆனால் அர்த்தங்கள் பல பொதிந்த வரிகள் அண்ண. பகிர்வுக்கு நன்றி

Unknown said...

தீராத் தாகங்கள்!
வாழுநாள் முழுவதும்
தொடர்ந்து வரும் சோகங்கள்!
அருமை மகி!

சா இராமாநுசம்

arasan said...

வரிகள் உணர்த்தும் உண்மைகள் ஏராளம் அண்ணா ..
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ..
கவிதைக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
வித்தியாசமான தலைப்பில் அருமையான கவிதை. நதிக்கரையில் தாகமென்றால்,,,?????????????

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

ஆசைகள் நிராசைகள்
ஆகிடுகையில் தாகங்களே!!

ஆழ்ந்த உண்மை நண்பரே
அழகாகச் சொன்னீர்கள் நன்று.

Anonymous said...

தேகம் நிறைந்த தாகம்.
மோகம் இளமை வரை
பாகமிடும் தாகம்.
பல தாகங்கள் எழுதிய
கவிதைக் கட்டு மிக அருமை.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

நதிக்கரைத் தாகங்கள் தீர்க்கப்படாத சோகங்கள் தான்! அருமையான தலைப்பு!

ஹேமா said...

கவிதையின் தலைப்பே வாசிக்க உள் இழுக்கிறது.அருமையான் சிந்தனை ஓட்டம்.எத்தனை தீர்க்கபடாத தாகங்கள்.சிலசமயம் தீராமலேயே வாழ்வும் முடிந்துகொள்கிறது !

அருணா செல்வம் said...

தாகத்திற்கு உங்கள் கவிதை ஒரு தேன் துளி ஐயா!

Anonymous said...

இந்த தாகங்கள் கானல் நீரால் தனிய வைக்கப்பட்டே வந்தனவோ சகோதரா ...
நல்லாயிருக்கு...

பெருமாள் பிரபு said...

செய்தொழிலில் பக்தி இருந்தும்
கொண்ட கல்விமேல் பிடிப்பிருந்தும்
இன்றிருக்கும் இதுவா
நான் நினைத்த நிலை??
இன்று செய்யும் இத்தொழிலா
எம் மனம்கொண்ட தொழில்??
இயைபை இழந்துவிட்டு
இன்முகம் காட்டிவரும்
கண்காட்சிப் பொம்மையாம் நான்
இன்னும் தீராத தாகங்களுடன்!!

என் இனிய அண்ணா மேலே உள்ள வரி நிறைய பேருக்கு இங்கு தீராத தாகம்தான் பலரின் மனதில் இருப்பதை எடுத்துரைதீர் மிக்க நன்றாக உள்ளது!!! மிக்க நன்றி

துரைடேனியல் said...

//பணமிங்கு தாகமல்ல
நதியலைகளைப் போல்
சிறுவடிவில் எழுந்து
அங்கேயே சில காரணங்களால்
தகனம் செய்யப்பட
மனக் குமுறல்களே!
தவித்திருக்கும் தாகங்களாய்!!//

- அருமையான வரிகள். அத்தனையுமே நச் பாராக்கள்.

கடந்த 15 நாட்களுக்குப் பின் தங்கள் தளம் வருகிறேன். கடுமையான பணிப்பளு காரணமாக வலைப்பூக்கள் பக்கமே வர இயலவில்லை மகேந்திரன் சார். இனி வரலாம் என கருதுகிறேன். பார்க்கலாம். உங்கள் பதிவு சூப்பர். தொடருங்கள்!

துரைடேனியல் said...

தமஓ 15.

Rajeshbabu said...

அள்ளிக்குடிக்க நீரில்லையெனில்
அங்கே வார்த்தைகள் இல்லை
அபரிமிதமாய் நீரிருந்தும்
அள்ளிக்குடிக்கும் கைகள்
கட்டப்பட்டவையே இங்கே
தாகங்களாய் உருமாற்றம்!

kowsy said...

தீராத தாகங்கள் உங்கள் வரிகளில் அற்புதம். வார்த்தைக்கு வார்த்தை ஆழ்ந்த சிந்தனைத் துளிகள் தென்படுகின்றன.

நம்பிக்கைபாண்டியன் said...

எல்லா தளங்களையும் தொட்டுச்செல்லும் தாகங்கள்!
சிறப்பான கவிதை!

மாலதி said...

இவைகள் என்றும்
தீர்க்கமுடியா தாகங்கள் அல்ல!
காலம் காலமாய்
தீர்க்கப்படாத தாகங்கள்
ஆம்!!
நதிக்கரை தாகங்கள்!!//.அருமையான் சிந்தனை ஓட்டம்தொடருங்கள்!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

///புழுதி பறக்கும்
பாலை நிலத்தில் அல்ல
இந்த தாகங்கள்
நதிக்கரை ஓரத்து
சோலை வனங்களின்
எட்டாக் கனியாக
கிட்டாத ஏக்கங்கள்!!
சிட்டுக்குருவி போல்
சிறகடித்துப் பறக்கையில்
பனித்துளி ஆசைகளால்
படலம் போட்டுவைத்து
பனியுருகிப் போனதால்
உடல்குறுகி உன்மத்தமாய்
சிறுமூளைக்குள் பதுக்கிவைத்த
தாகங்கள் கோடியுண்டு!///

இதயம் வடித்தெடுக்கும் ஏக்கக் கண்ணீர்த் துளிகள்
பெரு வெள்ளமாய் பேரலை கிளப்பி
மடை திறந்த வேகத்தே சீறிப் பாய்கிறதே!

கவிதையும் வெந்து கனன்று கொண்டிருக்கும்
கனலும் மனதிற்குள் புழுக்கத்தை அல்லவா செய்ததன..

மிகவும் அருமையானக் கவிதை.
பகிர்வுக்கு நன்றிகள் கவிஞரே!

-தமிழ் விரும்பி.

துரைடேனியல் said...

தங்களது பதிவைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். வாய்பிருந்தால் விஜயம் செய்யவும். நன்றி!

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
தங்களின் இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை ராஜி,
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் அரசன்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,

தங்களுக்கு தெரியாததா????

நதிக்கரையில் நீர் இருந்தும் அதை

அள்ளிக்குடிக்கும் கைகள் கட்டப்பட்டு

தாகங்களை தணியாமல் வைத்திருப்பதே நதிக்கரை தாகங்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ அரோனா செல்வம்,

வசந்தமண்டபம் தங்களை இனிய வணக்கத்துடன் வரவேற்கிறது.

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,

ஆம் சகோ,கானல் நீரினால் ஈர்க்கப்பட்டு

ஏமாற்றம் அடைவதும் தாகங்கள் தானே....

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தம்பி பெருமாள் பிரபு,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் நண்பரே.

வசந்தமண்டபம் உங்களுக்காக காத்திருக்கும்.

தங்களின் வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்களும்

என்னை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகளும்.

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்பாபு,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஆலாசியம் ஐயா,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Unknown said...

நல்லா இருக்குய்யா!

அனைவருக்கும் அன்பு  said...

வாழ்வின் வெளிபடுத்த இயலாத பல வலிகளை வார்த்தைகளில் வெளியிட்டு இருக்கிறீர்கள் அருமையான சொல்லாடல் ..........மனதை நெகிழ வைக்கும் உணர்வு பிம்பங்கள் ....பாராட்டுகள் மகேந்திரன்

மாலதி said...

அருமையான பகிர்வு.

இராஜராஜேஸ்வரி said...

குவளையில் போட்டுவைத்த
பவளக் கனவுகள் - இங்கே
தீர்க்கப்படாத தாகங்களாய்!

ஆதங்கமே கவிதையாய்..

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கோவை.மு.சரளா,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,

தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Anonymous said...

மிக அருமை மகே!
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Post a Comment