Powered By Blogger

Wednesday, 31 August 2011

ஏற்பது யாது??!!


வாழ்க்கைத் தேடலில்
செல்கின்ற வழியினில் 
தோல்வியும் வெற்றியும் 
தோளில் மாலையாய்  
மாறிமாறி விழுகையில்
சிந்தையில் ஊறிய
சிறுகேள்விதான் இது?!!

ஏற்பது யாது?
ஏற்பது யாது?
தமிழின் கருவூலத்தில்
ஏற்பதின் பொருள்
என்பது யாது??

மொழியில் சிறந்ததாம்
தங்கத் தமிழை
ஆனை முகனுக்கு
நாற்பொருள் கொடுத்து
தன்னகத்தே ஏற்றிய
ஔவைத் தாயின்
அருள்மொழி கேட்டேன்!

ஏற்பது இகழ்ச்சி
ஏற்பது இகழ்ச்சி!!வாழ்க்கை சுழற்சியில்
ஏழ்மை ஏகினும்
உடைக்கு மாற்றுடை
இல்லாது போகினும்
வயிறு காய்ந்து
வெம்பசி ஏற்றிடினும்
உன்னுயிர் வளர்க்க
பிறரின் முன்
கையேந்தி நிற்காதே!
ஏற்பது தவறு!
ஏற்பது தவறு!!!கிட்டிய விடையால்
கேள்வியின் சுவடு
நெஞ்சினின்று மறைந்து
வாழ்வின் வில்லினின்று
அடுத்த அம்பை
எதிர்நோக்கி நடக்கையில்
கண்முன்  நடந்த
பெரியவர் சொன்னார்!!

ஏற்பது பழகு
ஏற்பது பழகு!!
சற்றே தலைசுற்றி
குழப்பம் அரங்கேற
நீர்த்துப்போன விடைதனை
மீண்டும் வினவிக்கொள்ள
பெரியவரை நாடினேன்!

ஏற்பது இகழ்ச்சி
ஏற்பது இகழ்ச்சி - என
ஒளவையின் அமுதமொழியால்
இன்புற்றிருந்த எனை
குழப்பியது ஏன்???குழப்பம் வேண்டாம்
குழப்பம் வேண்டாம்!
கூறுவது கேளீரோ?
ஏற்பது இகழ்ச்சி - என
ஒளவை கூற்றை
பழிக்கவில்லை யான்
ஏற்பது பழகு!
என்பதெல்லாம்!!!

மாற்றங்கள் பெருகிவரும்
மாசுபடிந்த இப்புவியில்
துணிந்து நீ செயல்பட
தூரத்து வானத்தை
இருவிரலில் பிடித்திட!
பட்டுத் தெரிந்த
அனுபவப் பெரியோர்
கூறும் அறிவுரை
ஏற்பது பழகு
ஏற்பது பழகு!!

மனமும் தெளிய
குணமும் தெளிய
இருபெரும் பொருளை
எண்ணியெண்ணி வியந்தேன்!!

ஏற்பது இகழ்ச்சி!!
ஏற்பது இகழ்ச்சி!!
ஏற்பது பழகு!!
ஏற்பது பழகு!!

அன்பன்
மகேந்திரன்

43 comments:

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,

தங்களின் வழமையான கவிதைப் பாணியிலிருந்து சற்று வித்தியாசமாக இன்று மொழியோடு விளையாடியிருக்கிறீங்க.

நிரூபன் said...

ஏற்பது பற்றிய மொழிப் புரிதல்கள் நிறைந்த எளிமையான கவிதை அண்ணா.

மாய உலகம் said...

மொழி புரிதல்கள் ஏற்பது பழகு ..அழகான கவிதையில் வழக்கம் போல் கலக்கிவிட்டீர்கள் நண்பரே....

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

தமிழ் மணம் 2

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .வாழ்த்துக்கள் .

ராஜா MVS said...

அருமை வாழ்த்துகள்..நண்பரே..

கூடல் பாலா said...

பெரியவுங்க சொல்றீங்க ......ஏத்துக்கிறோம்

M.R said...

tamil manam 7

M.R said...

ஏற்பது இகழ்ச்சி!!
ஏற்பது பழகு!!

இரண்டும் வேண்டும் என்பது யதார்த்தம்

அழகான வார்த்தைகளில் அருமையான கவிதை ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

முனைவர் இரா.குணசீலன் said...

மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பரே.

சென்னை பித்தன் said...

அருமையாகச் சொன்னீர்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

ஏற்பது பழகு
ஏற்பது பழகு!!

தேவையான வாழ்வியல் தத்துவம்.

செவி வாயாக
நெஞ்சு களனாக!!

முனைவர் இரா.குணசீலன் said...

எப்போதும் போல படங்கள் ரசனைக்குரியன!!

முனைவர் இரா.குணசீலன் said...

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை.

http://gunathamizh.blogspot.com/2009/04/blog-post_2788.html

என்னும் இடுகையை வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் நண்பா.

Unknown said...

பாடலும் அழகு
படமும் அழகு
அருமை அன்பரே!

புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

அழகாகச் சொல்லியிருக்கீங்க...
மகேந்திரன்...
அருமையான கவிதை...
இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

கடம்பவன குயில் said...

இனிமையான கவிதை இயல்பான நடையில் .

Anonymous said...

வித்தியாசமான பாதையில்
ஏற்பது இகழ்ச்சி,
ஏற்பது பழகு. எல்லாம் சிந்தனைகள் தானே. படிப்போம், புரிவோம் பாராட்டுகள் சகோதரா!
வேதா. இலங்காதிலகம்.

கோகுல் said...

புதுமையானதொரு நடையில் இயல்பான சொல்லோடல்களோடு அழகியகிய கவிதை!ஏற்பது பழகுவோம்!

அம்பாளடியாள் said...

தீயனவற்றை ஏற்பது இகழ்ச்சி
நல்லனவற்றை ஏற்பது அழகு
இடம் ,பொருள் ,ஏவல் அறிந்து நாம்
இவைகளைத் தேர்வு செய்யக் கற்றுக் கொண்டால் நன்மை உண்டாகும் .அவ்வகையில்
அவ்வையின் அழகிய கருத்தோடு
மேலும் ஓர் புதிய செய்தியினைக்
கவிதை வரிகளாய்த் தந்த அன்பு சகோதரருக்கும் என் வாழ்த்துக்கள் .
நன்றி பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

அனைத்து ஓடுகளும் போட்டுவிட்டேன் சகோ .......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களின் பாணியில் அசத்தல் கவிதை

மகேந்திரன் said...

அன்புநிறை அண்ணாச்சி
நிரூபன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜேஷ்
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Unknown said...

கல்க்கல்ய்யா மாப்ள!

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜசேகர்
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜா
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் பாலா
உங்களைப்போல பெரியவர்களிடம் நிறைய
கற்றுக்கொண்டேன் நண்பரே.
தங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஸ்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

//செவி வாயாக
நெஞ்சு களனாக!!//அன்புநிறை முனைவரே

அழகு விளக்கம் கொடுத்தீர்கள்.
உங்களின் விரிவான கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நிச்சயம் உங்கள் பதிவை பார்க்கிறேன் முனைவரே.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் அழகிய கருத்துரைக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா.
தங்களின் மகிழ்வான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
தங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கடம்பவன குயில்
தங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை மாம்ஸ் விக்கி
தங்களின் இனிய கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.

rajamelaiyur said...

அருமையான கவிதை

rajamelaiyur said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜபாட்டை ராஜா தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Post a Comment