Powered By Blogger

Monday 28 October 2013

தெருக்கூத்து தெம்மாங்கு!!!

ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம்.
உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த 
தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த 
இடம் உண்டு. அப்படி பெருமை வாய்ந்த கலையின் 
முன்னோடியாம்  தெருக்கூத்து கலை பற்றி இங்கே கவிதையாக 
தருவதற்கு முயற்சிக்கிறேன். சேகரித்த செய்திகளை 
நல்வண்ணம் கொடுத்திட எத்தனிக்கிறேன். பிழைகள் ஏதும் 
இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள் என்னைத் 
திருத்திக்கொள்கிறேன். அழகான கலை இது சரியான முறையில் 
பிழை இல்லாமல் பின்வரும் சந்ததிகளுக்கு சென்று சேரவேண்டும்.

விளக்கமாக சொல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே 
ஒரே பதிவில் சொன்னால் மிகவும் நீளமாக ஆகிவிடும் என்ற 
காரணத்தால் தொடர் கவிதையாகத் தருகிறேன், அதையும் என் குரலில் 
பாடி ஒலிப்பேழையாக தருகிறேன். 

நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் ... இதோ பாடல்.....




த்தங்கரை மேலிருக்கும் 
அழகுப் பிள்ளையாரே! ஆனை முகத்தோனே 
அரிதாரம் பூசிவந்தேன் 
ஆனை முகத்தோனே!!


ரணியெங்கும் புகழ்கொண்ட 
தங்கத் தமிழ்த்தாயே! எங்க தங்கத் தமிழ்த்தாயே 
முன்னிருந்து காக்கவேணும் 
மூத்தகுடித் தாயே!!


ங்களுக்கு இந்த கலைய 
கத்துதந்த சாமி! ஐயா கத்துதந்த சாமி 
குருபாதம் தொழுகின்றோம் 
ஆசி வேணுமய்யா!!


ன்னனன்னே தானேனன்னே 
தானேனன்னே தானே தன தானேனன்ன நானே 
தன்னான தானேனன்னே  
தானேனன்னே தானே!!


ந்திருக்கும் பெரியோரே 
ஆசி வேணுமய்யா! உங்க ஆசி வேணுமய்யா!
உயிராக சுமக்கும் கலைய 
காக்க வேணுமய்யா!!


முக்கனிபோல் சுவையான 
தெருக்கூத்து கட்ட! அந்த நல்லகூத்து கட்ட!
முத்தமிழை கூட்டிவந்தோம் 
நாடோடி நாங்க!!


தெவிட்டாத தேன்தமிழில் 
பாடிவந்தோமய்யா! அழகா பாடிவந்தோமய்யா!
தெருக்கூத்து எனும் கலைய 
ஆடிவந்தோம் ஐயா!!


நாடகத்தின் முன்னோடி 
எங்க கலை ஐயா! இந்த தங்க கலை ஐயா!
கலையின் வடிவமைப்பை 
சொல்ல வந்தேனய்யா!!


தினாறு கலைஞரோட 
வாத்தியாரும் இருக்கார்! நம்ம வாத்தியாரும் இருக்கார் 
அழகான இந்த குழுவுக்கு 
சமா என்று பேரு!!


பேர்பெற்ற எங்க கலை 
தெருக்கூத்து தானே! இந்த நல்ல கூத்துதானே!
அழகான மறுபெயராம் 
கட்டைக் கூத்து தானே!!


டக்கு தெற்கு என 
வண்ணம் கொண்டோமய்யா! நல்ல வண்ணம் கொண்டோமய்யா!
அண்ணாமலை தீரம்விட்டு 
ஆடி வந்தோமய்யா!!



........ தொடர்ந்து கூத்து கட்டுவோம்......









அன்பன் 
மகேந்திரன்

69 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல முயற்சி மகேந்திரன். பாராட்டுக்கள். தெருகூத்து கலையை பற்றி இன்றைய நகர்புற இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. அதை பதிவு செய்வதற்கு நன்றி. தொடரட்டும் வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல முயற்சி மகேந்திரன். பாராட்டுக்கள். தெருகூத்து கலையை பற்றி இன்றைய நகர்புற இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. அதை பதிவு செய்வதற்கு நன்றி. தொடரட்டும் வாழ்த்துக்கள்

Anonymous said...

கலைகளை வளர்த்து இழந்த மனிதக் களையை
மீண்டும் பெறுவோம். வாய்க்கும் போது தொலைகாட்சி
பரவாயில்லை என்று எழுந்து செல்லாமல் இருந்து ரசித்து
அவர்களை கை தட்டி உற்சாகப்படுத்துவோம். ஆனால் இவையெல்லாம்
இங்கே குறைவு. பல முறை கடற்கரை , பூங்கா என்று அம்மா பொங்கல்
விழா கொண்டாடிய போது பார்த்தது தான்.
தொடருங்கள் ! எங்கள் கருத்து ஆதரவு என்றும் உண்டு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தெருக்கூத்து தெம்மாங்கு!!!

படங்களும் பாடல் வரிகளும் அருமை.பாராட்டுக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

தெருக்கூத்து குறித்த அழகானதொரு கவிதையால் கடந்தகாலத்துக்கு அழைத்துச்சென்ற தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...

இளமதி said...

தெருக்கூத்து தெம்மாங்கூத்து எம் நாட்டிலும்
எமக்கென சிலகாலம் அரசாண்ட எம் தலைவன்
காலத்தில் வீதிகளில் விழாக்களில் நடத்தப்பட்ட
பாரம்பரியக் கலையென சொல்லக்
கேட்டிருக்கின்றேன். நேரில் பார்த்ததில்லை. இருந்தும் அதன்
அருமை பெருமைகளை விரிவாக அறிய ஆவல்
மனதில் இருந்துகொண்டிருந்தது.

மிக அருமையாக இன்று நீங்கள் ஆரம்பித்துள்ளீர்கள்.
மிக்க நன்றி சகோ.. தொடருங்கள்...

வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

சிறப்பாக கூத்துக்கலை பற்றிய தேடல் தொடரட்டும் மேலும்.வாழ்த்துக்கள் .

அருணா செல்வம் said...

தெருக்கூத்தை நான் படங்களில் தான் பார்த்திருக்கிறேன்.
இங்கே நேராக பார்ப்பது போல் ஓர் உணர்வு.
தொடருகிறேன் மகி அண்ணா.

Anonymous said...

வணக்கம்
உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் தமிழனின் பாரம் பரிய கலைகள் பற்றிய கவித்தொகுப்பு அருமை ... வாழ்த்துக்கள்
-------------------------------------------------------------------------------------------------
உங்களின் வலைப்பக்கம் வந்து பல தடவை ஏமாந்து போனேன் ஏன் என்றால் wordpress ஆல்கருத்து போட முடியாமல் போனது.... Google Account மட்டுந்தான் முடியும்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவியாழி said...

தெருக்கூத்து பார்த்த அந்த நாட்களும் மகிழ்ச்சியானவை.இன்றும் நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி.உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

பாராட்டுதலுக்கு உரிய முயற்சி ஐயா. தெருக்கூத்து என்பதே இன்று மறந்து போன நிலையில், தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது. நன்றி ஐயா

அ.பாண்டியன் said...

சகோதரருக்கு வணக்கம்.
தெருகூத்து தெம்மாங்கு சிறப்பான முயற்சி. மறையும் கலைகளை மறவாமல் தந்திட்ட தங்கள் படைப்பிற்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே..

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல்களும் படங்களும் மிகவும் அருமை... சிறப்பான ஆரம்பம்... பாராட்டுக்கள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான முயற்சி மகேந்திரன். பாடலும் பாடல் சொல்லும் விஷயங்களும் தேர்ந்தெடுத்த படங்களும் மிக அருமை. தொடரட்டும்..... நானும் தொடர்கிறேன்.

இராஜ முகுந்தன் said...

அண்ணா மீண்டும் நாட்டுப்புற கலை. இன்னும் மறக்கவில்லை உங்கள் புலியாட்டம். தொடரட்டும் உங்கள் கலை வளர்ப்பு பணி.

ராஜி said...

சின்ன வயசுல தெருக்கூத்துலாம் பார்த்து ரசிச்சு இருக்கேன். இந்த தொல்லைக்காட்சி வந்து எல்ல்லாத்தையும் மறக்கடிச்சுட்டாங்க.

Unknown said...

காலை வணக்கம்,மகி!நலமா?///எங்கள் பழம் பெரும் மொழியாம்,தமிழ் மொழியில் நாட்டுப் புறப் பாட்டு தனிப் பெருமை வாய்ந்தது!மாறி வரும் நாகரிக உலகில்,பழம் பெரும் கலையாம் நாட்டுப் புறப் பாடல்களை,மீளவும் நம் சந்ததி போற்ற வேண்டும்/தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு தலை சாய்த்து வணக்கம்,தொடருங்கள் மகி!

அம்பாளடியாள் said...

மனதோடு ஒட்டிக் கொண்டது தெருக் கூத்துப் பாடல் .
வாழ்த்துக்கள் சகோதரா மேலும் தொடர வேண்டும்
தங்களின் சிறந்த படைப்புக்கள் .

sury siva said...

தெருக்கூத்து களை கட்டி விட்டதே

அபாரம்.

அந்த ஒலிச்சுட்டி ஏனோ ஒர்க் ஆகவில்லை.

எனக்கு பொறுமை இல்லை.

நானே பாடி விட்டேன்.

சுப்பு தாத்தா.

Anonymous said...

மிக நல்ல முயற்சி.
முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்து.
எனக்கு பாடல் வேலை செய்யவில்லை.
குரல் கேட்க முடியவில்லை.
வேதா. இலங்காதிலகம்.

பார்வதி இராமச்சந்திரன். said...

அற்புதமான கலை 'தெருக்கூத்து'.

மிக அருமையான, போற்றத்தகுந்த முயற்சி.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

சின்ன வயதில் கூத்துப் பார்த்த நாட்கள் நினைவில் எழுந்தன. கூத்துக் கலைஞர்களின் தொழில் பக்தியும், தெய்வ பக்தியும் இணையில்லாதது.

தெய்வப் பாத்திரங்களில் நடிப்பவரும், அவருக்கு அலங்காரம் செய்பவரும் விரதம் இருப்பார்கள். எங்களூர் வெயிலுவந்தம்மன் திருவிழாவில் கூத்து முடிந்ததும், சப்பரத்தில் இருக்கும் அம்மனை, ஊர் வாழ்த்துப் பாடியபடி கோயிலுக்குச் சுமந்து சென்று சேர்ப்பதும் இந்தக் கலைஞர்களே. வருடாவருடம் இவர்கள் பாடும் பாட்டாலேயே மழை பொழிந்து ஊர் சுபிட்சமாக இருந்தது என்றும்..இப்போது இது மாறிவிட்டதாலேயே மழை தவறுகிறது என்றும் கூறுகிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி..

வெற்றிவேல் said...

வணக்கம் அண்ணா...

சிறப்பான முயற்சி... அழகான குரல் அண்ணா, தங்களுக்கு...
தங்கள் குரலில் பாடலைக் கேட்பது இனிமையாக உள்ளது...

வாழ்த்துகள் அண்ணா... நல்ல முயற்சி...

த.ம: +

சசிகலா said...

அண்ணா அற்புதம் சேகரித்த செய்திகளை கவிதையாகவும் பாடலாகவும் தந்த விதம் அருமை அருமை அண்ணா. தொடருங்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

என்னுடைய மாணவ பருவத்தில் சென்னையிலும் இத்தகைய தெருக் கூத்துகளை பார்க்க முடிந்தது. விடிய விடிய நடக்கும். அதிலுள்ள சுவையும் சுவாரஸ்யமும் வேறு எதிலும் கிடைப்பதில்லை. நல்ல கலை ஒன்று அழிந்து வரும் வேளையில் அதை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக கவிதையாய் வடித்த விதம் மிகவும் அழகு. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

பேர்பெற்ற எங்க கலை
தெருக்கூத்து தானே! இந்த நல்ல கூத்துதானே!
அழகான மறுபெயராம்
கட்டைக் கூத்து தானே!!

வண்ணம் விளங்கும் அழகான பாடல்..
பாராட்டுக்கள்..!

இராய செல்லப்பா said...

கர்நாடகத்தில் பல ஆண்டுகள் இருக்க நேர்ந்தபோது 'யக்ஷகானம்' என்ற தெருக்கூத்து நடக்கும். அதே போன்ற சுவையை உங்கள் படைப்பில் காண்கிறேன். வாழ்த்துக்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

மகிழ்நிறை said...

திருவிழா பார்த்த உணர்வு .கவிதையும் பாடலும் மிக அருமை. கலாச்சாரத்தை மீட்டுக்க மிக சரியான .அருமையான வழி சார்.

முற்றும் அறிந்த அதிரா said...

நாட்டுப் பாடல்போல ஒரு அழகிய கவிதை/ பாடல்...

//தன்னனன்னே தானேனன்னே
தானேனன்னே தானே தன தானேனன்ன நானே
தன்னான தானேனன்னே
தானேனன்னே தானே!!/// இதை ராகம் போட்டுப் படிச்சுப் பார்த்தேன்ன் , எனக்கு ராகம் சரி வருகுதேயில்லை ஹா..ஹா..ஹா..ஹா

சென்னை பித்தன் said...

மறைந்து வரும் கலையை,கலாசாரத்தை நினைவூட்டும் அருமையான கவிதை

அம்பாளடியாள் said...

இன்பம் பொங்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரா
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் கிட்டிட வேண்டுகின்றேன் .

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் சார்...! :)

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் சார்...! :)

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் முரளிதரன்..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி..
மிகச் சரியாக சொன்னீர்கள்...
இதுவே நாம் கலைஞர்களை ஊக்குவிக்கும் முறை..

தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வைகோ ஐயா..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் முனைவரே...
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் சே.குமார்...
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இளமதி..
அன்றோ செய்திகளை மக்களிடையே கடத்துவதற்காக
இக்கலையை பயன்படுத்தினார்கள்...
தொலைத்தொடர்புக்கு வித்திட்டவர்கள் இக்கலைஞர்கள்...
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அருணா செல்வம்..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் ரூபன்..
வருக வருக
வசந்தமண்டபம் தங்களை வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது..
இனி உங்களுக்கு சிரமம் இல்லாமல் செய்துவிடுகிறேன் நண்பரே..
சிரமத்துக்கு மன்னிக்கவும்..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் பாவலர் கவியாழி...
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் அ.பாண்டியன்..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்...
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தம்பி முகுந்தன்..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ராஜி..
மிகச் சரியாக சொன்னீர்கள்..
தங்களின் இனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் யோகா ஐயா..
உங்கள் சித்தம் என் பாக்கியம்...
என்னால் இயன்ற அளவுக்கு சரியான
செய்திகளை தருகிறேன் ஐயா..
தங்களின் இனிய கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்..
நிச்சயம் தொடர்கிறேன்...
தங்களின் இனிய கருத்துக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சுப்பு ஐயா..
என் பாடலுக்கான உங்கள் குரலை கேட்க ஆவலாக உள்ளேன் ஐயா..
தங்களின் இனிய கருத்துக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வேதாம்மா..

தங்களின் இனிய கருத்துக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி பார்வதி இராமச்சந்திரன்...
மனம் இனிக்கும் கருத்துப் பகிர்வு..
மழை இல்லாத காலங்களில் தெருக்கூத்து வைப்பார்கள்
கூத்து முடியும் முன்னர் மழை கொட்டும்..
அதற்கு பெயர் விராட கூத்து என்பார்கள்..
இனிவரும் பதிவுகளில் தெரிவிக்கிறேன் சகோதரி...
தங்களின் இனிய கருத்துக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தம்பி வெற்றிவேல்..
தங்களின் இனிய கருத்துக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை சசிகலா..
தங்களின் இனிய கருத்துக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

shanmugavel said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

vimalanperali said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

Anonymous said...

தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வர்வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.

priyasaki said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Rathnavel Natarajan said...

தெருக்கூத்து தெம்மாங்கு!!!
நண்பர் திரு மகேந்திரன் அவர்களின் அற்புதமான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு மகேந்திரன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

6. அழிந்து கொண்டிருக்கும் மற்றொரு கலையான தெருக்கூத்து பற்றி வசந்த மண்டபத்தில் அன்னைத் தமிழை வணங்கி அழகான தமிழால் இயற்றி அவர்தம் குரலால் பாடியும் பதிவிட்டுள்ளார். கட்டியங்காரனைக் கோமாளி என்று மட்டுமே நினைத்திருக்கும் பலருக்கும் கூத்தில் அவருடைய முக்கியப் பங்கு வியப்பளிக்கும். //

இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் மிகச்சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

இணைப்பு:

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html

கீதமஞ்சரி said...

வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_21.html

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

பூந்தளிர் said...

தெருக்கூத்து தெம்மாங்கு அருமையான பதிர்வு நன்றி

Post a Comment