Wednesday, 11 January 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-4)


ன்புநிறை தோழமைகளே,

விளையாட்டுக்கள் பலவிதம். அதிலொரு விதம் விடுகதை
விளையாட்டு. விடுகதையை கவிதை வடிவில் கொடுக்கும்
விடுகதைக்கவிதையின் அடுத்த பகுதி இது. நான் நினைத்த
ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய ஒரு விடுகதைக் கவிதை
இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

இதோ விடுகதைக் கவிதை........

ந்தெழுத்தை தன்னுள்
அழகாய் கொண்ட
அற்புதச் சொல்லிது!!

ந்து எழுத்தும்
தனித்து நின்றால்
இருபொருள் படும்
ஒன்றோ
கரிய பெரிய விலங்கினத்தின்
பெயரை உச்சரிக்கும்
மற்றொன்றோ
அழகாய் உயர்ந்து வளரும்
பெயரில் கம்பீரம் கொண்ட
மரம் ஒன்றின் பெயரை
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ச" கர "ஊ" காராமாய்
மாறி நின்று
இரண்டு, நான்கு மற்றும்
ஐந்தாம் எழுத்துடன்
இணைந்து நான்கெழுத்து
சொல்லாய் நின்றால்
சிறு கிணறு என்ற
பொருளை உரைத்து நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ப"கர "அ" கரமாய் 
மாறி நின்று
கடைசி மூன்று எழுத்துக்களுடன்
கூடி நான்கெழுத்தாய் நின்றால்
செய்யும் செயலின்
கேடு விளைவை
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ஆ" என மாறி நின்றால்
ஏக்கம் கலந்த
கவலை உணர்வின்
பெயர் ஒன்றை
கூறி நிற்கும்!!
முதலெழுத்து திரிந்து
"ப" கர "ஓ" காரமாய்
மாறி நின்று
இரண்டு நான்கு மற்றும்
ஐந்தாம் எழுத்துக்களுடன்
கூடி நான்கெழுத்தாய் நின்றால்
இருபொருள் படும்
ஒன்றோ
யானையின் இளங்கன்றின்
பெயரைச் சொல்லும்
மற்றொன்றோ
பிறருக்கு நல்ல அறிவினை
எடுத்துச் சொல்லும்!!

னதருமை நண்பர்காள்!


இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்


44 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த அற்புதம்....


விடைக்காக காத்திருக்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கொஞ்சம் முயன்றேன் முடியவில்லை...

பார்ப்போம் என்னவென்று...

Anonymous said...

௧. .....
௨. ......
௩. பாதகம்
௪. ஆதங்கம்
௫. போதகம்
அண்ணா , இதற்கு மட்டும் கமெண்ட் moderation வைத்தால்
விடை மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லையே .

K.s.s.Rajh said...

வணக்கம் நண்பரே விடுகதையை கவிதையாக்கித் தந்திருக்கும் விதம் அருமை நானும் யோசித்துப்பார்த்தேன் என்னால் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை விடையை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்

Admin said...

முயற்சிக்கிறேன் தோழர்..முடியாவிட்டால் நாளை தெரிந்து கொள்கிறேன்..

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
கொஞ்சம் பிசி,
ஆதலால் என் பங்களிப்பினை மட்டும் செலுத்தி விட்டுச் செல்கிறேன். மன்னிக்கவும்.

கடம்பவன குயில் said...

எவ்வளவோ முயற்சித்தும் முடியவி்ல்லை. அறிவு சம்பந்தப்பட்டதை நான் முயற்சித்தால் எப்படி??? யாராவது அறிவாளிகள் கண்டுபிடிச்ச சொல்வதை வந்து பார்த்து தெரிந்துகொள்கிறேன்.

kunthavai said...

1. மாதங்கம்
2. சூதகம் - சிறு கிணறு
3. பங்கம் - கேடு விளைவு
4. ஆதங்கம் - ஏக்கம் கலந்த கவலை
5. போதகம் - யானையின் இளங்கன்று,
மற்றும் போதிப்பது.

ஆனாலும் கொஞ்சம் கஷ்டம் தான் :(

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நாளை சொல்கிறேன்.

Unknown said...

நாளை சந்திக்கிறேன்!

யோசிக்க நேரமில்லை!

புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

விடையை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்...-:)

குறையொன்றுமில்லை. said...

நானும் விடை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கேன்.

துரைடேனியல் said...

I am waiting for answer.

TM 16.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

shanmugavel said...

சுவாரஸ்யமாக இருக்கிறது.தொடருங்கள் நண்பரே!விடையை யோசிக்க யோசிக்க ...பின்னர் தெரிந்து கொள்கிறேன்,ஹிஹி

சென்னை பித்தன் said...

நீங்களே சொல்லிடுங்க!

ராஜி said...

சகோ அவசரமான வேலை ஒண்ணு இருக்கு மறந்துட்டேன். போயிட்டு அப்புறமா வரேன்(விடை தெரியலைன்னு சொல்ல கூச்சமா இருக்கே)

ஹேமா said...

உண்மையா யோசிக்கக்கூட
நேரமில்லை !

கீதமஞ்சரி said...

மாதங்கமென்பதே விடையென்று நம்புகிறேன். மற்றவிவரங்களை குந்தவை கொடுத்துவிட்டார்கள். அழகாய் விடை பகன்ற அவர்களுக்கும் அருமையான விடுகதையிட்ட தங்களுக்கும் என் பாராட்டுகள்.

சென்னை பித்தன் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் பிரயத்தனப்பட்டும் என் சிற்றறிவுக்கு ஒன்றும் தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுவீங்களாம்!!

மகேந்திரன் said...

அன்புநிறை தோழமைகளே,
இதோ விடை சொல்லும் நேரம் வந்தது.

இந்த விடுகதைக்கவிதைக்கான சரியான விடை
அந்த சொல்......

மாதங்கம்....


1 , மாதங்கம்
2 , சூதகம்
3 , பங்கம்
4 , ஆதங்கம்
5 , போதகம்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,

கடைசி இரண்டு சாதகங்களுக்கான விடை
நீங்கள் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தங்களின் தொடர் ஆதரவிற்கும் இனிய கருத்துக்கும்
முயற்சிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜ்,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் முயற்சிக்கும் இனிய கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கடம்பவன குயில்,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி குந்தவை (அனு)

என் ஆழ்மனதினின்று பலமான கைதட்டல்கள்.
சரியான விடை சொல்லியிருக்கிறீர்கள்.

சிரமம் என்றாலும் கண்டுபிடித்தது எனக்கு
எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தங்களின் தொடர் ஆதரவிற்கும் முயற்சிக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னை பித்தன் ஐயா,
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

வலைச்சரத்தில் உங்கள் கையால் நான் அறிமுகப் படுத்தப்படுவது
வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம் பெற்றது போல.
மிக்க மகிழ்ச்சி ஐயா...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
நாளைக்கு கண்டிப்பா வாங்க.
தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,

மாதங்கம் என்பதுதான் சரியான விடை.
தங்களின் தொடர் முயற்சிக்கும் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,

தங்களின் முயற்சிக்கும் தொடர் ஆதரவிற்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

சரியான விடையளித்த தோழமைகளுக்கும்
முயற்சி செய்த அனைவருக்கும், என்னை தொடர்ந்து
ஊக்குவித்து வரும் அனைவருக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

vetha (kovaikkavi) said...

வந்தேன் நல்ல படங்கள் போட்டுள்ளீர்கள் எங்கே எடுத்தீர்கள்? நான் உந்த விளையாட்டுக்கு வரவில்லை என்று முன்பே கூறிவிட்டேன். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

ஷைலஜா said...

வழக்கம்போல லேட்டா வரேன். மன்னிக்க... படமும் பாட்டும் ஒன்றை ஒன்று தூக்கி சாப்பிடுகிறது. அருமை மகேந்திரன்!

Post a Comment