Powered By Blogger

Friday, 13 January 2012

பொங்கட்டும் புதுப்பொங்கல்!!

தவனே! ஆண்டவனே!
அகிலத்தின் முதல்வோனே!
அழகாக பொங்கல் வைத்தோம்
மனமிறங்கி வாருமய்யா!!

பொங்குகிற பொங்கலைப்போல்
மகிழ்விங்கே பொங்கவேணும்!
தைமகளின் கரம்கோர்த்து
எங்களுக்கு அருளுமய்யா!!

முக்கோண பொங்கல் கட்டி
முப்புறமும் தான்வைத்து
மூலவன வேண்டிவந்தோம்
குலம்காக்க வேணுமய்யா!!

வாழையையும் மஞ்சளையும்
குலைகுலையா கட்டிவைச்சு!
மங்கள வடிவோனை
மண்டியிட்டு வணங்கிவந்தோம்!!

நாற்புறமும் கரும்பாலே
பந்தலொன்னு போட்டுவைச்சு!
நடுவாலே பொங்கவைச்சோம்
நல்வரமும் தாருமய்யா!!

னைவெல்லம் பச்சரிசி
பக்குவமா கலந்துவைச்சி!
சர்க்கரை பொங்கல் வைச்சோம்
சந்ததிய காத்திடய்யா!!

ண்மணக்கும் மண்பானை
பொங்கவைக்கும் பொங்கப்பானை!
பொங்கி வருகையிலே
குலவையிட்டு ஆர்பரித்தோம்!!

வாழையிலை விரிச்சிவைச்சு
படிநெல்ல தான்பரப்பி!
விளைஞ்சிருந்த வெள்ளாமைய
உனக்காக படைச்சிபுட்டோம்!!

ந்துமுக விளக்கேற்றி
அன்புடனே தொழுதுவந்தோம்!
ஆறுமுக விளக்கேற்றி
திருவடிய நாடிவந்தோம்!!

ந்திருந்த காலமெல்லாம்
நான்பட்ட துன்பம் போதும்!
இனிவரும் காலத்துல
உழவுத் தொழில் வளரவேணும்!!

தாவி வா தைமகளே
எம்குலத்து திருமகளே!
என்வீட்டு முற்றத்தில
தவழ்ந்திட வா பொன்மகளே!!

ந்தப் பாடலை நானும் என் மனைவியும் சேர்ந்து பாடி இங்கே
வெளியிட்டிருக்கிறேன். இது என் முதல் முயற்சி.

ங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்பன்
மகேந்திரன்

73 comments:

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் அண்ணா,

இவ் வரிகள்
//முக்கோண பொங்ககட்டி
//

பொங்கல் கட்டி என்று வந்தால் சிறப்பாக இருக்குமே.

கடம்பவன குயில் said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ.

கடம்பவன குயில் said...

ஆடியோரெக்கார்டிங் பின்புலத்தில் மழலைகள் சப்தங்களும் பாட்டினை மெருகூட்டியது. நல்ல முயற்சி. பாராட்டுக்கள் சகோ

நிரூபன் said...

தன்னானன் நானே நன்னே தனனானே...தனனானே.....
என அழகிய கிராமியச் சந்த நடையில் கவிதை இனிமையாக, தைத் திருநாளில் பொங்கல் விழா இடம் பெறும் நிகழ்வினைச் சிறப்புறச் சொல்லுகிறது. பாடல் முழுதாக கேட்க முடியலையே அண்ணா.

நிரூபன் said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

துரைடேனியல் said...

Arumaiyana paadal Sir! Thangalukkum Tmt. Mahenran- kum matrum thangal kudumpaththaar anaivarukkum en ithaya poorva Pongal Vaalthukkal!

TM 5.

துரைடேனியல் said...

Pongalukku Namma oorukku varaliya enga oorkarare? (ingaya angaya Sir?)

vetha (kovaikkavi) said...

நல்ல முயற்சி சகோதரா. முழுப்பாடலும் வரவில்லை. வாழ்த்துகள். அத்துடன் இனிய பொங்கல் வாழத்துகள் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும். பாடல் குரல்கள் நன்றாக இருந்தன.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Anonymous said...

வாவ் , மகி அண்ணா & பொங்கல் புதுவரவு அண்ணி.
நமஸ்காரம் , வருக!
தங்கள் கிராமிய பாடலும் , புதிய முயற்சியான குரல் ஒலிப்பதிவும்
அனிதா & குப்புசாமி ஜோடியை மிஞ்சி விட்டது போங்கள்.
அற்புதமா வந்திருக்கு !
வாழ்த்துக்கள் !

நிரூபன் said...

வித்தியாசமான முயற்சியாக ஒலி வடிவில், கிராமிய மணங் கமழும் சந்த நடையில் அழகிய பாடலைக் கொடுத்த இருவருக்கும் பாராட்டுக்கள்!

ராஜி said...

இந்தப் பாடலை நானும் என் மனைவியும் சேர்ந்து பாடி இங்கே
வெளியிட்டிருக்கிறேன். இது என் முதல் முயற்சி.
>>>>
முதல் முயற்சியே அருனையா இர்க்குங்க சகோ. வாண்டுகள் குரலும் கேட்கவே இனிமையா இருக்க்கு. வாண்டுகள் குரல் யதேச்சையா? அல்லடு பிளானிங்கா?

காட்டான் said...

வணக்கம் மப்பிள!
வித்தியாசமான முயற்சி பாடலும் குரல் வளமும் அருமை ஒலிப்பதிவில் இருக்கும் சில இடையூறுக்ளை களைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் புது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்..!!

Yaathoramani.blogspot.com said...

அருமையான பொங்கல் சிறப்புக் கவிதை
வரி வடிவமாகவும் ஒலி வடிவமாகவும் கொடுத்து
அசத்தியமைக்கு மனமார்ந்த நன்றி
அருமையான முயற்சி
தொடர வாழ்த்துக்கள்

தங்க்ளுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
த.ம 10

பால கணேஷ் said...

எளிமையன நடையில் அழகான பொங்கல் சிறப்புக் கவிதை! கரும்பின் இனிமையுடன், பொங்கல் சுவையுடன் அசத்தியது. புதிய முயற்சியையும் மிக ரசித்தேன். பிரமாதம் மகேன்! உங்களுக்கும் உங்கள் வீட்டினருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

பொங்கல் வாழ்த்து புதியமுறையில் சொல்லி இருக்கீங்க. படங்கள், கவிதை ஒலிவடிவம் எல்லாமே நல்லா இருக்கு. இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

இனிமையாய் இசையாய் பொங்கல்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

உழவுத் தொழில் பெருக பிரார்த்தனைகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு படமும் நன்றாக உள்ளது. பாடல்-முதல் முயற்சியே வெற்றி! பாராட்டுக்கள்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி!

Unknown said...

எளிமை!இன‍மை!பாடல்! இசை!
தெம்மாங்கு! பாடிய நயம்!
அருமை!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

புலவர் சா இராமாநுசம்

பி.அமல்ராஜ் said...

அருமையான பொங்கல் கவிதை ஒன்றை தந்திருக்கிறீங்க அண்ணா. வாழ்த்துக்கள்.
உங்களிற்கும் உங்கள் குடும்பத்தாரிற்கும் எனது அன்பான இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Rajesh babu said...

Pongal vazhuthukal.
Puthu muyarchikkum vazhutukal

மகேந்திரன் said...

வணக்கம் சகோ நிரூபன்,
உங்கள் கருத்திற்கு மதிப்பளிக்கிறேன்.
இதோ மாற்றிவிட்டேன் சகோ.

தங்களின் கருத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கடம்பவன குயில்,

பாடல் பாடும்போது என் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அந்த சத்தங்கள் தான் அங்கே கேட்கிறது.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,
பாடலை அளவு குறைக்க மென்பொருள் என்னிடத்தில் சரியாக
இல்லாததால் வந்த குறை இது. வரும் காலங்களில் இதை சரி செய்ய முயற்சிக்கிறேன்.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரை டேனியல்,
இப்போது தூத்துக்குடியில் தான் இருக்கிறேன் நண்பரே.
அபுதாபி செல்ல இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கின்றன.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,

பாடலை அளவு குறைக்க மென்பொருள் என்னிடத்தில் சரியாக
இல்லாததால் வந்த குறை இது. வரும் காலங்களில் இதை சரி செய்ய முயற்சிக்கிறேன்.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
உங்கள் வாழ்த்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
முதல் பாடலை இருவரும் சேர்ந்து பாடினால் நல்லா இருக்கும்
என்ற முயற்சியே இது. எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கொடுப்பீர்கள் என நான் நினைக்கவே இல்லை.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
குழந்தைகளின் குரல் எதேச்சையானது. பதிவு செய்துகொண்டிருக்கையில்
அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
இனிவரும் பதிவுகளில் இந்த குறைகளை சரிசெய்ய முயற்சிக்கிறேன்.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சக்திபிரபா,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ பி.அமல்ராஜ்,

தங்களை வசந்தமண்டபம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்பாபு,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

கண்ணுக்கும் கருத்தளிக்கும் கவிப்பதிவு இப்போது காதுக்கும் நிறைவாய்... சுகம்! அழகான கிராமிய நடையில் பாடலும் அதைப் பாடிய விதமும் அருமை. தங்களுக்கும் தங்கள் மனைவிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மும்தாஜ் said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!!!!

Rathnavel Natarajan said...

அருமையான பொங்கல் கவிதை.
நீங்கள் பாடியது நாங்கள் கேட்டோம்; ரசித்தோம்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் மகேந்திரன்,

பொங்கல் நன்றாகவே பொங்குகிறது கவிதை வரிகளில்....

அழகிய படங்களும், மனதை நிறைக்கும் உற்சாகமுமாக கவிதை சிறப்பாக இருக்கிறதுப்பா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல்நல்வாழ்த்துகள் மகேந்திரன்..

கதம்ப உணர்வுகள் said...

தன்னானே தன்னானனே அருமையான குரல் மகேந்திரன்....

ஆண்குரல் கண்டிப்பாக உங்களுடையது தான்.....

அடுத்த குரல் யாருடையது தெரியவில்லையே...

அருமையாக பாட்டிசைத்து பாடிய கவிதை வரிகள் பகிர்வுக்கும் சிறப்பு வாழ்த்துகள்பா...

பி.அமல்ராஜ் said...

//தங்களை வசந்தமண்டபம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.//
மிக்க நன்றி அண்ணா.. இனி தொடர்ந்து வருவேன்.

Anonymous said...

அழகிய படங்களும்...மனதை நிறைக்கும் கவிதையும் அருமையாக இருக்கிறது...பொங்கலைப்போல...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரா
...

ஹேமா said...

வீட்டு ஞாபகம் வந்துபோகுது படங்களைப் பார்க்க.இனிய பொங்கல்நாள் வாழ்த்துகள் !

அன்புடன் நான் said...

எழுத்தும் குரலும் சிறப்பு.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Advocate P.R.Jayarajan said...

எளிமையான வரிகள்..
நிறைய முயற்சி...
நல்ல பதிவு..
வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்கள் அருமை குடும்பத்தினருக்கும்
எங்கள் பொங்கல் நன்னாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

http://chitramey.blogspot.com/2012/01/blog-post_14.html
இத் தையில் அத்தை மகள் !

Subramanian said...

தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்களது அன்பு உறவுகளுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை அக்கா மஞ்சுபாஷிணி,
நலமா?

நானும் என் மனைவியும் சேர்ந்து தான் இந்தப் பாடலை பாடினோம்.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ பி.அமல்ராஜ்,

மிக்க மகிழ்ச்சி.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ ரெவெரி,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.கருணாகரசு,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வழக்கறிஞர்.பி.ஆர்.ஜயராஜன்,

தங்களை வசந்தமண்டபம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வே.சுப்ரமணியன்,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

ஆஹா! மிகவும் அற்புதக் கவிதையை எழுதி அதையே அருமையாக உங்களின் மனையாளோடு சேர்ந்தே எங்களுக்கு விருந்தளித்து இருக்கிறீர்கள்... அருமை! அருமை!! அருமை!!!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்கள் யாவருக்கும் எங்களது பொங்கல் வாழ்த்துகள் கவிஞரே!

மாலதி said...

இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் . இடுகைக்கு பாராட்டுகள் .

இராஜராஜேஸ்வரி said...

இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

இந்தப் பாடலை நானும் என் மனைவியும் சேர்ந்து பாடி இங்கே
வெளியிட்டிருக்கிறேன். இது என் முதல் முயற்சி

அருமையான இனிய பாடல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

சுதா SJ said...

மகேந்திரன் அண்ணா...
சூப்பர் வ்வ்.......

உங்க கவிதை மட்டும் அல்ல குரலும் மிக இனிமை :)

உங்க ஜோடி பாடலை கேட்க்கும் போது குப்புசாமி-அனிதா ஜோடி கண் முன் வருவதை தவிர்க்க முடியவில்லை :)

RAMA RAVI (RAMVI) said...

அருமை.உங்க பாட்டு அதை கிராமிய இசையில் மனைவியோடு சேர்ந்து பாடியது எல்லாமே சிறப்பாக இருக்கு,மகேந்திரன்.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஹேமா said...

உங்களுகேற்ற துணை.படங்களும் கவிதையும் உங்களிருவரின் குரலும் சேர்ந்து பொங்கலை மனதில் பொங்கவைத்துவிட்டது.அன்புப் பொங்கல் வாழ்த்துகள் !

மகேந்திரன் said...

அன்புநிறை தமிழ் விரும்பி ஐயா,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தம்பி துஷி,

தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,

வெற்றிவேல் said...

அண்ணா... உங்கள் குரலும் அக்காவின் குரலும் அழகாக பொருந்தியுள்ளது. கேட்க்க இனிமையாக உள்ளது. நான் பதிவிறக்கம் செய்துகொண்டேன்... சூப்பர் அண்ணா...

Post a Comment