தனித்த அடர்காட்டில்
தனித்துயில் கொண்டாலும்!
தரணியின் மையப்புள்ளி
தானிறங்கிப் போனாலும்!
தனியாத் தாகமுள்ள
தனிப்பிறவி என்னுள்!
தப்பாது தாளமிடும்
தமிழின் சுவையே!!
நித்திரை மேவினும்
நீங்கா கனவிலும்!
நிமிடங்கள் தோறும்
நித்தமும் ஆயிரம்!
நிறுத்தம் இல்லாது
நுதலின் வழிநுழை!
நெஞ்சின் மலர்படர்
நேசத் தமிழே!!
அறிவின் பெட்டகம்
ஒளவையின் பாட்டினில்!
ஆத்திச்சூடிக் கருவென
அழகாய் விளைந்த!
அருளுரை கூறும்
பல்சுவைப் பள்ளியில்
ஒருசுவை கொணர்ந்தேன்
பொருள்பட உரைக்க!!
பதப்பொருள் படைப்பில்
மிதப்பினை விடுத்து!
வாழ்வினில் வளமையாய்
ஊழ்வினை அறுத்து!
உறவது போற்றி
திறம்பட வாழ
செவ்விய மொழியாம்
'ங' ப்போல் வளை!!
அரும்பெரும் குணங்கள்
அகத்தில் போற்றிடு!
எச்செயல் செய்யினும்
நற்செயல் ஆக்கிடு!
பட்டறை இரும்பாக
'ங' போல் எதிலும்
நயமுடன் வளைந்திடு!
சிந்தையின் செயலில்
சிறந்தவன் ஆக்கிவிடு!!
'ங' எனும் சொல்லின்
அகரமுதல் முடிவு வரை!
ஙி ஙீ ஙு’ ‘ஙூ’ எனும்
உயிர்மெய்யெழுத்து யாவுமே!
பழக்கம் மறைந்து
புழக்கம் உறைந்ததே!!
'ங' எனும் உயிர்மெய்யுடன்
‘ங்’ எனும் மெய் சேர்ந்தே!
பின்வரும் தன்னின
வழக்கொழி சொற்களை!
வேலியெனக் காப்பதுபோல்!
தனியொரு தோளாய்
உன்னினம் காத்திட
உறுதி ஏற்றிடு!!
வளைவதில் தவறில்லை
குழைவதில் தானுண்டு!
ஒரேழுத்து கருவினை
உன்னகத்தில் பதித்திடு!
புவியின் பரப்பினில்
புண்ணியம் பெற்றிட!
செப்பியதை செவிமடு
'ங' ப்போல் வாழ்ந்திடு!!
அன்பன்
மகேந்திரன்
38 comments:
தமிழ் மணம் ஒன்று
தனித்துவமான கவிதை
முறுக்கிக்கொண்டு நில்லாமல்
தேவையான இடங்களில்
தேவையான நேரங்களில்
வளைந்து கொடுத்து சென்றால்
உறவும் பலப்படும்
வாழ்வும் உன்னதாமாகும் .
" ங்கா " பிறந்த குழந்தைக்கு
சொல்லித்தரும் முதல் வார்த்தை
அதிலேயே உள்ளது " ங் "
வளைவதில் தவறில்லை
குழைவதில் தானுண்டு!
ஆமாம் உண்மையான வார்த்தைகள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
வளைவதில் தவறில்லை குழையாதே என அருமையாக சொல்லி அசத்தியுள்ளீர் அன்பரே all voted
ஆம் ஒளவை பாட்டியே சொல்லியிருக்காங்க ங போல் வளை என்று.வளைந்து வாழலாம் குழைந்து வாழ்க்கூடாது. அருமை.
நல்லாயிருக்கு.
அருமையான படைப்பு
படைப்பின் கருவும் உருவும்
தங்கள் மொழித்திறனும்
பிரமிக்கச் செய்கின்றன
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,
உங்களை இன்றைய தினம் மாலை என் பதிவில் அறிமுகப்படுத்த உள்ளேன்.
நல்ல கவிதை அண்ணா,
இதனை எப்படி விமர்சிப்பது என்று புரியவில்லை.
வாழ்வில் மேன்மையடைவதற்கான எளிய வழி முறையினை உங்கள் பதிவு "ங்” மூலம் சொல்லி நிற்கிறது.
வாழ்க்கையில் வளைந்து கொடுக்கலாம், கொண்ட கொள்கையில் வளைந்து கொடுக்க கூடாது..
Tuesday, 13 September 2011 3/3
'ங' ப்போல் வாழ்ந்திடு!!
தனித்த அடர்காட்டில்
தனித்துயில் கொண்டாலும்!
தரணியின் மையப்புள்ளி
தானிறங்கிப் போனாலும்!
தனியாத் தாகமுள்ள
தனிப்பிறவி என்னுள்!
தப்பாது தாளமிடும்
தமிழின் சுவையே!!
தங்களின் தமிழ்ப் பற்றைப்
பறைசாற்றும் அருமையான
வருகள் சகோ!
மேலும் இக் கவிதை
ஆத்திச்சூடிக்கி அணிவித்த
கவிமணி மாலை
வாழ்த்தும் நன்றியும்
உரித்தாகுக!
புலவர் சா இராமாநுசம்
கவிதை அருமை வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
ங போல வளை....
அற்புதமான கவிதை நண்பரே....
பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்களின் தமிழ்ப்புலமைக்கு ஒரு சான்று இக்கவிதை.அதில் வாழ்க்கைக்கான ஒரு நற்கருத்தை கூறியிருப்பது மேலும் சிறப்பு.வாழ்த்துக்கள்.
//நித்திரை மேவினும்
நீங்கா கனவிலும்!
நிமிடங்கள் தோறும்
நித்தமும் ஆயிரம்!
நிறுத்தம் இல்லாது
நுதலின் வழிநுழை!
நெஞ்சின் மலர்படர்
நேசத் தமிழே!!
//அருமையான வரிகள்
நல்ல கவிதை நண்பா
ங' எனும் சொல்லின்
அகரமுதல் முடிவு வரை!
ஙி ஙீ ஙு’ ‘ஙூ’ எனும்
உயிர்மெய்யெழுத்து யாவுமே!
பழக்கம் மறைந்து
புழக்கம் உறைந்ததே!!//
வித்தியாசமான சிந்தனை..
ங' எனும் சொல்லின்
அகரமுதல் முடிவு வரை!
ஙி ஙீ ஙு’ ‘ஙூ’ எனும்
உயிர்மெய்யெழுத்து யாவுமே!
பழக்கம் மறைந்து
புழக்கம் உறைந்ததே!!//
வித்தியாசமான சிந்தனை..
குட் ஷேர்
Dear Mahendran Sir, Thank you very much for visiting the site www.hellovenki.blogspot.com
Your posts are very interesting. I am very proud of that. I congratulate you very much.
Venkat
அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்
//நிறுத்தம் இல்லாது
நுதலின் வழிநுழை!
நெஞ்சின் மலர்படர்
நேசத் தமிழே!!//
அட அட!
அருமை அண்ணே!
ஒரு கோட்டை வைத்து ரோடே போட்டுட்டீங்க..மன்னிசுக்குங்க சகோதரா...நமக்குஅவ்வளவு தான் தெரியும்...
ங வை சிறப்பித்த ஒரே கவிஞர் நீங்களாகத்தான் இருக்கமுடியும்...உங்கள் தமிழ்ப்பற்றுக்கு தலை வணங்குகிறேன்...தொடருங்கள்...
வளைவதில் தவறில்லை
குழைவதில் தானுண்டு!
ஒரேழுத்து கருவினை
உன்னகத்தில் பதித்திடு!
புவியின் பரப்பினில்
புண்ணியம் பெற்றிட!
செப்பியதை செவிமடு
'ங' ப்போல் வாழ்ந்திடு!!
நல்லா சொல்லி இருக்கீங்க.
வளைவதையும்,குழைவதையும்,அழகாக வேறுபடுத்தி விட்டீர்கள்!
வணக்கம்!சார்! இன்னிக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் வர்ரேன்!
உங்க கவிதை அருமை!
அழகு தமிழில் அரிய கவிதை..! குழவி மொழியாம் "ங்ஙா ங்கா" என்றும் அழியாது ஐயனே..! ஈரேழு உலகும் ஒரு சேர அழியினும் , அண்ட சராசரங்களும் அடியோடு பொடிந்திடினும் அங்கே எம் தமிழ் மட்டும் என்றும் நிலைத்திருக்கும்..!! எண்ணங்களுக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி அய்யா!
அருமை நண்பரே!
'ங' சொல்லும்போது மட்டம் மூக்கின் வழியாக மூச்சு வாங்குவோம். மூளையின் செல்களை தூண்டும் அனுபவம் கிட்டும். அதுபோலவே உங்கள் கவிதையும் சிந்தனையை தூண்டுகிறது.
உறவது போற்றி
திறம்பட வாழ
செவ்விய மொழியாம்
'ங' ப்போல் வளை!/
பணிதல் யார்க்கும் நன்றாம் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்தது அன்றோ!
அருமையான சொல்லாட்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!
'ங' ப்போல் வளை!/
உடலை வளைத்து நல்ல தேகப்பயிற்சி செய்து வாழ் என்றும் கூறியிருக்கலாம். நல்ல முயற்சி சகோதரா! வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
நயமிக்க சிந்தனை நண்பரே..
வளைவதில் தவறில்லை
குழைவதில் தானுண்டு!
மிக அழகாகச் சொன்னீங்க நண்பா.
உயிருள்ள மொழி தமிழ்
உணர்வுள்ள மொழி தமிழ்
அதை உணர்ந்தவர் ஒருசிலர்.
அதில் தாங்களும் ஒருவர்.
அன்புநிறை தோழமைகளே
கடந்த இருதினங்களாக
விமானப் பயணத்தில் இருந்ததால்
பதில் கருத்துகள்
இடமுடியவில்லை
தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள்.
என்னை என் எழுத்தை வாழ்விப்பது
உங்களின் பொன்னான கருத்துரைகளே.
நன்றி நன்றி.
இங்கு புதிதாய் பூத்திருக்கும் "ஐடியா மணி" "தங்கம் பழனி" "கவி அழகன்"
ஆகியோரை வசந்தமண்டபதிற்கு சாமரம் வீசி வரவேற்கிறேன்.
வருக வருக
ஆதரவு தருக...
ஒவ்வொரு எழுத்தும வியர்வை சொட்டுதுங்க..
முதலாம் படம் திருடி விட்டேன்..
அன்புநிறை நண்பர் ம.தி.சுதா
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
Post a Comment