Powered By Blogger

Monday, 21 October 2013

அமர காவியம்!!!!காலாற நடந்திருந்தேன் 
கடற்கரைச் சாலையில்
கசகசவென ஒலிக்கீறல்கள் 
காற்றில் மிதந்துவந்தன 
காதுகளை தீட்டிக்கொண்டேன்!!


யிலான பெண்கள் ஒருபுறம் 
ஓய்வூதியம் வாங்குவோர் ஒருபுறம் 
ஓடவேண்டுமே என்று 
ஒப்புக்கு ஓடுவோர் ஒருபுறமென 
ஓடினோர் பலரங்கே!!டல்பருமன் கனக்க 
உதிரம் கொதித்திருக்க 
ஊசிபோல ஆவோம் என 
உதித்த ஆர்வ மிகுதியால்
உக்கிபோடும் கூட்டமொருபுறம்!!


வாய்விட்டு சிரித்தால் 
வராது நோய்களென 
வராத சிரிப்புகளை 
வலுவாக இழுத்துவைத்து 
வாய்பிளந்து சிரிப்போர் ஒருபுறம்!!
ட்டழகுக் கன்னியரை 
கடைக்கண் பார்வை வீசி 
காணும் விழியாலே 
கவர்ந்திடத் துடிக்கும் 
காளையர்கள் ஒருபுறம்!!


ருக்கும் நேரம் கொஞ்சமென 
இரட்டிப்பு நடைபோட்டும் 
இரண்டு சுற்று முடிக்காத
இளைப்புடன் நடைபோடும்  
இல்லத்தரசிகள் ஒருபுறம்!!
ல்லோரும் அவரவர் பணியை 
ஏற்று பார்க்கையில் 
எங்கிருந்து வந்தது 
ஏகப்பட்ட ஒலிக்கீறல்கள் - என 
எட்டிப் பார்த்தேன்!!


ந்தாலும் போனாலும் 
வாழ்ந்த சுகம் இல்லையென 
வாய்த்த மருமக்கள் குறைபாடும் 
வயதான மனிதர்களின் 
வாஞ்சையான குமுறல்கள்!!
ள்ளி விடுமுறைக்கு 
பத்துநாட்கள் கிடைக்கும் 
பறக்கவேண்டும் அம்மா வீட்டிற்கு - என 
பிறந்தவீட்டு நிழல்தேடும் 
பிரிந்துவந்த மகள்களின் திட்டங்கள்!!


ன்றும் போகவேண்டுமா 
இன்னல்கள் தீர்ந்துவிடாதா 
இஞ்சி தின்ற மேலாளரை 
இன்றும் காணவேண்டுமா - என 
இதம்தேடும் அலுவலர்கள்!!
ன்னதான் சேர்த்தாலும் 
எள்ளளவும்  நிலுவையில்லை 
என்னடா வாழ்க்கையிது 
என்றுயரும் என் நிலைமை - என 
ஏக்கமான சாமானியரின் சலிப்புகள்!!


ன்றையொன்று உரசிக்கொண்டு 
ஓராயிரம் ஒலிக்கீறல் பாய்ந்து 
ஒட்டிக்கொண்ட தருணமதில் 
ஓர் உண்மை விளங்கியது - எனக்குள் 
ஒளிக்கீறல் பாவியது!!
ண்டாண்டு காலங்கள்
அவதியாய் உருண்டாலும்
அரும்பும் பச்சையமாய் 
அழியாச் சுவடுகளாய் - இப்புலம்பல்கள்
அமர காவியமே!!!


அன்பன்
மகேந்திரன் 

40 comments:

இராஜராஜேஸ்வரி said...


ஆண்டாண்டு காலங்கள்
அவதியாய் உருண்டாலும்
அரும்பும் பச்சையமாய்
அழியாச் சுவடுகளாய் - இப்புலம்பல்கள்
அமர காவியமே!!!

அமர காவியம் அருமை..!

ராஜி said...

புலம்பல்கள் என்று தீரும்!?

MANO நாஞ்சில் மனோ said...

என்னதான் சேர்த்தாலும்
எள்ளளவும் நிலுவையில்லை
என்னடா வாழ்க்கையிது
என்றுயரும் என் நிலைமை - என
ஏக்கமான சாமானியரின் சலிப்புகள்!!//

அசல் புலம்பல் வரிகள்....எல்லாருக்கும் எல்லாம் நன்மையாக திகழவேண்டும் ஆண்டவா....

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை விதமான மனிதர்கள் - உங்களின் பார்வையில்... அருமையாகவும் முடித்துள்ளீர்கள்... உண்மை...

வாழ்த்துக்கள்...

வெற்றிவேல் said...

எத்தனை வித்தியாசமான மனிதர்கள் அண்ணா... அழகான பாடல்...

அமரக் காவியம் : புலம்பல்கள்

தம: 4

வெற்றிவேல் said...

அண்ணா, இளம் காதலர்கள் பண்ணற சேட்டைய விட்டுட்டீங்களே!!! ஹ ஹா...

அம்பாளடியாள் said...

அமரகாவியம் அழகுற்றது பொருள் நிறைந்த நற்
கவிதையினால் ! வாழ்த்துக்கள் சகோதரா .எல்லோருக்கும்
எல்லா மகிழ்வும் கிட்டிட வேண்டும் இறைவன் அருளாலே .

Yaathoramani.blogspot.com said...

ஆம் அவையெல்லாம்
அமரகாவியம்தான்
அதை ஆழக்கவனித்து
அருமையான கவிதைக் காவியமாக்கியமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 6

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அழியாச் சுவடுகளாய் - இப்புலம்பல்கள்
அமர காவியமே!!!//

அமர காவியம் அருமை..!

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோததரே!
அமர காவியம் அருமை. மனிதர்கள் பல விதம். ஒவ்வொருவரும் ஒரு விதம். அவர்களின் எண்ணங்களும் பலவிதம் என்பதை கவிதையில் வடித்துள்ளீர்கள். படங்கள் அனைத்தும் அருமை பகிர்வுக்கு நன்றி.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

விதம் விதமான மனிதர்களுக்கு அமரகாவியம் பாடிவிட்டீர்கள் அருமை! உங்கள் தளத்தின் வடிவமைப்பு அசரடிக்கிறதே! எப்படிங்க? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லித்தரலாம்ல? இன்றுமுதல் உங்கள் வலைப்பககத்தைத் தொடர்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

அமர காவியம் அருமை...
வாழ்த்துக்கள் அண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அருமையான காவியம். நானும் கடற்கரை பெஞ்சில் அமர்ந்திருக்கும்போது இத்தனை மனித மனக்களின் புலம்பல்களைக் கேட்டிருக்கிறேன். அத்துடன் கலக்கும் சிறார்களின் மகிழ்ச்சிக் கூத்தாடல். அருமை மகேந்திரன்.
கடலையும் கரையையும் வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆண்டுகள் ஆயிரம்
கடந்தாலும்
புலம்பல்கள் மட்டுமே
நிரந்தரம்
அருமை ஐயா
இன்றைய யதார்த்தம்

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி..
தங்களின் இனிமையான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ராஜி...தீராத காவியமே இப்புலம்பல்கள் சகோதரி..
தங்களின் மேலான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் மனோ...
இதையே நானும் வேண்டுகிறேன்
எமையாளும் இறைவனிடம்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்..
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தம்பி வெற்றிவேல்,
இன்னுமின்னும் நிறைய மனிதர்களை
சுமந்திருக்கிறது கடற்கரை சமவெளிகள்..
தங்களின் இனிமையான கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்...
இறைவனிடம் எனது பிரார்த்தனைகளும் அதுவே.
எல்லோரும் நலம் வாழ..
தங்களின் இனிமையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் ரமணி ஐயா..
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் வைகோ ஐயா..
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் அ.பாண்டியன்,
வருக வருக
வசந்தமண்டபம் உங்களை வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கவிஞர் முத்துநிலவன் ஐயா..
வருக வருக
வசந்தமண்டபம் உங்களை வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
உங்கள் வருகையால் என் தளம் சிறப்புற்றது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் சே.குமார்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வல்லிம்மா...
கெக்கலிப்பு சிரிப்புகளுடன் விளையாடும்
குழந்தைகள் சிரிப்பொலியை மறந்தே போனேன் அம்மா..
ஆழகடலில் இருக்கும் நான்
கடற்கரைக்கு சற்று நேரம் மனதார பயணித்துப் பார்த்ததன்
விளைவே இது அம்மா..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள் அம்மா/..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா..
தங்களின் அன்பார்ந்த கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா..

இளமதி said...

அமரகாவியம்.. படைத்த அருமைக்கவியே..

உங்கள் காணுகையும் காட்சிப் பதிவுகளும் அருமை!

கவிவரியில் எல்லோரிமும் ஏதோ ஒரு தேடல் தெரிந்தது...
அழகுற அதை இலைமறை காயாகக் காட்டிச் சென்றீர்கள்..

ரசித்தேன்! வாழ்த்துக்கள் சகோ!

arasiarangam said...

உங்கள் வரிகளில் அழைத்து சென்று விட்டீர்கள் என்னையும் கடற்கரைக்கு....புலம்பல்கள் என் காதிலும் விழுந்தன....அருமையான சொல்லாடலுடன் நிதர்சனத்தை உரைத்து சென்ற உங்கள் வரிகளுக்கு நிகர் ஏது...???

வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் எழுத்துக்களுக்கு....!!!

பாகிஸ்தானைத் தொட்ட அதிரா:) said...

அமரகாவியம் சூப்பர்ர்... ஒரு கதையை உள்ளடக்குவது போல் எப்பவும் அமைகிறது உங்கள் கவிதை தொகுப்பு... நீங்கள் ஏன் இடைக்கிடை ஒரு, குறுங்கதை எழுதக்கூடாது?????

தனிமரம் said...

இப்புலம்பல்கள்
அமர காவியமே!!!//அருமையானநிதர்சன உண்மைக்கவிதை!ம்ம் என்ன சொல்லவது சாமானியர்களின் புலம்பல் ரசித்தேன் நானும்!

டிபிஆர்.ஜோசப் said...

அருமை மகேந்திரன் அவர்களே.

என்னுடைய பக்கத்தில் உங்களுடைய கருத்துரையை பார்த்துவிட்டு இங்கு வந்தேன்.....

அழகான கவிதை ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்வேன்.

vetha (kovaikkavi) said...

''..அழியாச் சுவடுகளாய் - இப்புலம்பல்கள்

அமர காவியமே!!!...''' சரியாகவே பாடினீர்கள் சகோதரா!
இனிய மொழியமைப்பு!
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

எத்தனை விதங்களில் மனிதர்கள்.....

Unknown said...

வணக்கம் திரு மகேந்திரன். இப்போதுதான் தங்களின் பக்கத்துக்கு வருகிறேன். நிறைய எழுதுகிறீர்கள். சிறப்பாகவும் இருக்கிறது. தொடர்ந்து பார்க்கிறேன் நண்பரே. இணைந்திருப்போம். :)

மகிழ்நிறை said...

மெரினா கடற்கரையில் நடந்துவிட்டு வந்த அனுபவம் ஏற்பட்டு விட்டது .அருமையான காலையும் கவிதையும்

Unknown said...

ஆண்டாண்டு காலங்கள்
அவதியாய் உருண்டாலும்
அரும்பும் பச்சையமாய்
அழியாச் சுவடுகளாய் - இப்புலம்பல்கள்
அமர காவியமே!!!//

கடற்கரை ஒலிகளே காவியமாகியது!

kupps said...

"மாற்ற இயலா வாழ்க்கைச்சூழலில் இருந்து விடுபட நினைக்கும் பலதரப்பட்ட மனித மனங்களின் புலம்பல்கள் கவிஞரின் அழகான கவிதை வரிகளில் அமர காவியமாய் " அருமை மகேந்திரன் வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

அமர காவியம்!!!!
ஆம், அமர காவியம் தான்.
நண்பர் திரு மகேந்திரன் நடைப்பயிற்சியில் நம்மையும் உடன் அழைத்துச் செல்கிறார். எத்தனை விதமான மனிதர்கள், எண்ண அலைகள், எண்ண குமுறல்கள்.

எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு மகேந்திரன்.

Post a Comment