Powered By Blogger

Friday, 11 November 2011

ஆளுமைக்கு அழகே!!


வரலாற்று நாயகர்கள்
சரித்திரம் படிக்கையில்
மனதில் ஒட்டிக்கொண்ட
அழுத்தமான வார்த்தை
ஆளுமை என்பது!

உச்சரிக்கும் இச்சொல்லின்
உள்ளூறும் கம்பீரம்
பச்சை குத்தியதுபோல்
நெஞ்சில் பதிந்தது!!

முடியாண்ட மூவேந்தர்
செறுபுகழை கேட்கையிலே
ஆளுமையின் பொருளுக்கு
பதம்காண முயற்சித்தேன்!!
நல்லபல செயல்களை
நடத்தையிலே காண்பித்து
நாடுபோற்ற அரசாலும்
நற்குணங்களின் கூடலே
ஆளுமை என்பதென
பூந்தமிழ் சொன்னதுவே!!

பலமணம் கொண்ட
பூக்களின் சரம்போல
பலநிற நூல்கொண்டு
நெய்யப்பட்ட ஆடைபோல
நற்குணம் பலகொண்டு
உருவெடுத்த மானிடற்கே
ஆளுமை ஏகிடுமாம்!!
முதற்குணம் என்னவென்று
உற்று நோக்கிடவே
பளிச்சென்று பட்டது
பணிவென்னும் நற்குணமே!

தன்னுரு மறந்து
தன்னிலை ஏதாகினும்
அதை மறந்து
தன்னிகரில்லா பணிவை
தன்னகத்தே கொண்டவன்
ஆளுமையில் சிறந்தவனாம்!!
போகின்ற போக்கில்
செல்ல விடாது
மந்திபோல தாவும்
மனதை கட்டுப்படுத்தி
கடிவாளம் போட்டு
ஒருநிலைப் படுத்துபவனே
ஆளுமையில் சிறந்தவனாம்!!

மணிமகுடம் சூட்டிவைத்து
இவனால் செழித்திடுவோம்
இவனால் உய்திடுவோம் - என
மனக்கோட்டை கட்டியோரின்
மாநிலத்து மக்களின்
மனநிலை அறிந்து
நற்செயல் ஆற்றுவது
ஆளுமையின் மறுகுணமே!!தான்கொண்ட கொள்கையில்
உறுதியாக இருந்து
எடுத்த செயலை
அடுத்தநிமிடம் செய்வேனென
அடம் பிடிக்காது
தீர்க்கமாக ஆராய்ந்து
திடமான நம்பிக்கையுடன்
நிதானத்துடன் செயல்படுதல்
ஆளுமையின் ஒர்குணமாம்!!

மன்னவனும் இவனோ
இவனைப் பெற்றிட
என்ன தவம் செய்தோமென
மக்கள் போற்றிட!
பொதுநல வாழ்வில்
சுயநலம் வேரறுத்து
பொது வினையை
தம்வினையாய் தலைமேற்கொண்டு
செங்கோல் ஏற்றுவதே
ஆளுமையின் பொற்குணமாம்!!
குரலில் கம்பீரம்
பிழையற்றுப் பேசுதல்
தகுந்த இடத்தில்
தகுந்த மொழிபேசி
தாய்மொழியை என்றும்
தலைநிமிரச் செய்தல்!
கலங்காதே கண்மணியே - என
வாயாரச் சொல்லிவைத்து
கண்ணுறங்கச் செல்லாது
கண்விழித்து விழிபூத்து
மக்கட் துன்பம் போகும்வரை
காவல் நிற்பவனே
ஆளுமையில் சிறந்தவனாம்!!

ஆக்கம்தரும் பணிகளை
ஊக்குவிக்கும் தரம்கொண்டு!
குற்றத்தின் கருப்பொருளாய்
சட்டத்தின் முன் நிற்காது
குற்றத்தின் கருவறுக்கும்
நீதியைக் கைக்கொண்டு!!
பொற்காலம் இதுவென
பொன் மன்னவன் இவனென
பூவுலகு புகழ்ந்திட வாழ்ந்திடுதல்
ஆளுமைக்கு அழகே!!அன்பன்
மகேந்திரன் 

80 comments:

சக்தி கல்வி மையம் said...

தான்கொண்ட கொள்கையில்
உறுதியாக இருந்து
எடுத்த செயலை
அடுத்தநிமிடம் செய்வேனென
அடம் பிடிக்காது
தீர்க்கமாக ஆராய்ந்து
திடமான நம்பிக்கையுடன்
நிதானத்துடன் செயல்படுதல்
ஆளுமையின் ஒர்குணமாம்!!//
ஆளுமையின் அடையாளம்..
அசத்தல் கவிதை..

கோகுல் said...

வணக்கம் நண்பரே!

நீங்கள் சொல்வது போல

ஆளுமைக்கு குணங்கள் பல

இருந்தாலும்

பதவி ஒன்று மட்டுமே ஆளுமைக்குப்போதும்

என சிலர் நினைத்து ஆளுகிறார்கள்.
ஆனால் ஆளுமை செய்வதில்லை!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் கோகுல்,
சரிதான் நீங்கள் சொன்னது,
ஆட்சிக்கு வந்தால் போதும் என்று
ஆளக்கூடாது...
எப்போதும் குறைகுடம் கூத்தாடத்தான் செய்யும்...
பண்புகள் நிறையப்பெற்று நிறைகுடமாக
ஆட்சி செய்யட்டும் நம்மை ஆள்பவர்கள்....

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

Unknown said...

மாப்ள கவிதை நல்லா இருக்குய்யா!

arasan said...

ஆளுமையின் நிலையை , அதன் அழகை
செழிப்பான வரிகளில் சிறைபடுத்தி
நற்கவிதையாய் வழங்கிய உங்களுக்கு
வணக்கங்களும் , பெரிய வாழ்த்துக்களும்...
செந்தமிழில் சிறப்பான கவிதை ...

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

MANO நாஞ்சில் மனோ said...

முதற்குணம் என்னவென்று
உற்று நோக்கிடவே
பளிச்சென்று பட்டது
பணிவென்னும் நற்குணமே!//

பண்புதான் எல்லாவற்றிலும் சால சிறந்தது என்று தமிழ் சங்கே நீ முழங்கு, அருமையா இருக்கு மக்கா வாழ்த்துக்கள்...!!!

அம்பாளடியாள் said...

அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ .இன்றையநாள் வாழ்வில் எல்லா நலன்களையும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கட்டும் வாழ்த்துக்கள் ...........

rajamelaiyur said...

//
உச்சரிக்கும் இச்சொல்லின்
உள்ளூறும் கம்பீரம்
பச்சை குத்தியதுபோல்
நெஞ்சில் பதிந்தது
//
நல்ல வரிகள்

rajamelaiyur said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

Yaathoramani.blogspot.com said...

ஆளுமைக்கான விரிவான அசத்தலான பதிவினைத்
தந்தமைக்கு நறி தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

ராஜா MVS said...

அடிமை படுத்தும் குணத்திற்க்கும், ஆளுமை குணத்திற்க்கும் ஒருநூல் அளவு இடவெளிதான்.

தன்னை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது அடிமை படுத்தும் குணம்.
தன்னை எல்லேரும் பின்பற்றும் படி நடந்துக் கொள்வது ஆளுமையின்(தலைமைப் பண்பின்) ரகசியம்.

ராஜா MVS said...

கவிதை மிக அருமை...

வாழ்த்துகள்... நண்பா...

சாகம்பரி said...

மக்கட் துன்பம் போகும்வரை
காவல் நிற்பவனே
ஆளுமையில் சிறந்தவனாம்!!//
நல்ல கருத்து. ஆளுமை என்பதை சிறப்பாக விளக்கியிருக்கிறீர்கள்.

Unknown said...

ஆளுமையை அழகாக
அடுக்கடுக்காய் உரைத்திட்டார்
நாளுமிதைக் கடைபிடித்து
நானிலத்தீர் வாழ்வீரே

நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

அன்புடன் நான் said...

உரமானக் கவிதை வரிகள்.பாராட்டுக்கள்.

Unknown said...

ஆளுமையின் பக்கங்களை பட்டியலிட்ட விதம் அருமை

வார்த்தை விளையாட்டு நன்று

Anonymous said...

ஆளுமைக்கு குணங்கள் பல...
இருந்தாலும் இங்கு ஆளுவோருக்கு குணம் ஒன்றே...ரசித்தேன் சகோதரரே...

shanmugavel said...

கவிதை மொழியில் ஆளுமைக்கான விளக்கம் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

ஆளுமைக்கான குணங்களை விளக்கும் கவிதை அருமை நண்பரே.....

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
இக்கவியே உங்கள் மொழி ஆளுமையை காட்டுகின்றது.. வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை.வலுவான வரிகள் கவிதைக்கு அழகு சேர்க்கிரது. வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

ஆத்தாவுக்கு நேரடி கடிதமா? கலக்குங்க

சென்னை பித்தன் said...

ஆளுமை ப்ற்றி அழகிய பதிவு.

RAMA RAVI (RAMVI) said...

//தான்கொண்ட கொள்கையில்
உறுதியாக இருந்து
எடுத்த செயலை
அடுத்தநிமிடம் செய்வேனென
அடம் பிடிக்காது
தீர்க்கமாக ஆராய்ந்து
திடமான நம்பிக்கையுடன்
நிதானத்துடன் செயல்படுதல்
ஆளுமையின் ஒர்குணமாம்!!//

எனக்கு மிகப் பிடித்த வரிகள்.
இந்த நம்பிக்கை நிதானம் கட்டயம் தேவை.

அருமையான கவிதை,மகேந்திரன்.

Sakunthala said...

\\மன்னவனும் இவனோ
இவனைப் பெற்றிட
என்ன தவம் செய்தோமென
மக்கள் போற்றிட!
பொதுநல வாழ்வில்
சுயநலம் வேரறுத்து
பொது வினையை
தம்வினையாய் தலைமேற்கொண்டு
செங்கோல் ஏற்றுவதே
ஆளுமையின் பொற்குணமாம்!!//
இத்தகைய பொற்குணம் கொண்ட
தலைவர்கள் நம்நாட்டில் இல்லை என்றே சொல்லலாம்
ஆளுமையின் குணங்களை அழகாக வரிசைபடுத்தி
உள்ளீர்கள் நம் எதிர்கால சந்ததிக்காவது இத்தகைய குணங்கள் கொண்ட
ஒரு தலைவர் கிடைக்கப்பெற்றால் மகிழ்ச்சியே..........

M.R said...

நீங்க இப்பிடி சொல்றீங்க ,ஆனா அவங்க அடுத்தவர்களை அடக்கி ஆள்வதே ஆளுமை என்று நினைக்கிறார்களே நண்பரே .

நல்ல கருத்து சொல்லியுள்ளீர்கள் நண்பரே

vetha (kovaikkavi) said...

ஆளுகை கொண்ட ஆளுமை பற்றிக்
கேளுமே என்று கூறினீர் நன்று.
நாளுமே உமது முயற்சி நீளட்டுமே
மிகக் கனதியான இடுகையிது.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ஷைலஜா said...

கவிதை மனசை ஆளுமை செய்துவிட்டது...நல்ல சிந்தனை உங்களூக்கு,

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
அருமை.
வாழ்த்துக்கள்.

F.NIHAZA said...

ஆளுமையினை அடையாளப்படுத்திய இக்கவிதை வரிகள் அருமை சகோ.....

சிறப்பாக அருந்தது...
பாராட்டுக்கள்

kupps said...

ஒரு தலைவரின் ஆளுமைக்கான இலக்கணம்
கவிஞரின் கவிதை ஆளுமையில் மிக நன்றாகவே வெளிப்படுகிறது.
வாழ்த்துக்கள் கவிஞரே!

தனிமரம் said...

ஆளுமை என்பதே அரசியல் தலைமத்துவம் என்றே பலர் என்னுகின்றார்கள் குடியை நற்பண்புகளுடன் ஆள வேண்டும் என்பதை பாடும் அழகு கவிதை.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS
அடிமைத்தனத்திற்கும்
ஆளுமைக் குணத்திற்கும் உள்ள சிறு இடைவெளியை அழகாக
விளக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.கருணாகரசு,

தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது,

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அவ்வ்வ்வ்........
ஏன்??? இப்படி....

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர் சூர்யஜீவா..

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி சகுந்தலா,
சரியாச் சொன்னீங்க.. இப்படிப்பட்ட குணங்கள் உள்ள
தலைவர்கள் இருந்தார்கள்..
இப்போது நிகழ்காலத்தில் அப்படி ஒருவரை கனவே முடியாது
என்பது நிதர்சனமான உண்மை..
அப்படி ஒருவரை இச்சமுதாயம் சமைக்க வேண்டும்.
வருவார் என்ற நம்பிக்கையுடன்...

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,

சரியாச் சொன்னீங்க, அப்படித்தான் நினைக்கிறாங்க இன்றைய ஆளுநர்கள்...
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி நிஹஷா,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனிமரம்,
தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

ஹேமா said...

உங்கள் கவிதை நம் தேசியத் தலைவரை ஞாபகப்படுத்துகிறது !

இராஜராஜேஸ்வரி said...

மந்திபோல தாவும்
மனதை கட்டுப்படுத்தி
கடிவாளம் போட்டு
ஒருநிலைப் படுத்துபவனே
ஆளுமையில் சிறந்தவனாம்!!


ஆளுமை நிறைந்த
அருமையான கவிதை
ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய குழந்தைகள்
தின நல்வாழ்த்துக்கள்!

அ. வேல்முருகன் said...

ஆண்டவர்களின்
ஆளுமை கூறி
அனைவரின் உள்ளம் கவர்ந்தீர்

வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

நல்ல தலைவனுக்கு உரிய இலக்கணங்கள் அனைத்தும் இந்தக் கவிதையில். அருமை சகோதரா

நம்பிக்கைபாண்டியன் said...

ஒவ்வொரு வரிகளிலும் ஆளுகிறது உங்களின் தத்துவார்தமான கவிதைநயம்!

முதற்குணம் என்னவென்று
உற்று நோக்கிடவே
பளிச்சென்று பட்டது
பணிவென்னும் நற்குணமே!

மிக அழகான வரிகள்!

RAMA RAVI (RAMVI) said...

ஆளுமையை பற்றிய தங்களதும் இந்தப்பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

முனைவர் இரா.குணசீலன் said...

ஆழமான
ஆளுமை மிக்க எழுத்துக்கள் வழியே
வாழ்வியல் நுட்பத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

"பதவி வரும் போது பணிவு வர
வேண்டும்; துணிவும் வர வேண்டும் தோழா'

என்ற கவிஞரின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

குரலில் கம்பீரம்
பிழையற்றுப் பேசுதல்
தகுந்த இடத்தில்
தகுந்த மொழிபேசி
தாய்மொழியை என்றும்
தலைநிமிரச் செய்தல்!
கலங்காதே கண்மணியே - என
வாயாரச் சொல்லிவைத்து
கண்ணுறங்கச் செல்லாது
கண்விழித்து விழிபூத்து
மக்கட் துன்பம் போகும்வரை
காவல் நிற்பவனே
ஆளுமையில் சிறந்தவனாம்!!


இந்த வரிகளை
மீண்டும்
மீண்டும்
படித்தேன் நண்பரே..

அருமை.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

இனிய குழந்தைகள்
தின நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அ. வேல்முருகன்,

தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது,

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிவகுமாரன்,

தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது,

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,

தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ராம்வி,
வலைச்சரம் எனும் பேரவையில்
என் கவியை தேர்ந்தெடுத்து அங்கே
ஆன்றோர்கள் சபையில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் கருத்துகள் எனை மேலும்
பட்டை தீட்டுகின்றன..
மேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த
நன்றிகள்.

மாய உலகம் said...

ஆளுமையைப் பற்றி ஆழமான கருத்துடன் கலக்கலாக கவிதையில் சொல்லிட்டீங்க நண்பா... வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

Post a Comment