ஆந்தைக் கண்ண உருட்டிகிட்டு
ஆலவட்டம் போட்டுக்கிட்டு!
அசையாத எம்மனச - கட்டிக் கரும்பே
உலையரிசி ஆக்கிபுட்ட - சுட்டிக் குறும்பே!!
செப்புக்குடம் செஞ்சதுபோல்
செம்மாந்த இடுப்பழகி!
குலுக்கி நீயும் நடக்கையில - பச்சைக் கிளியே
எம்மனசு உடைஞ்சுதடி - இச்சைக் கிளியே!!
வந்தவாசி சந்தையிலே
வாங்கிவந்த விதைகளெல்லாம்!
விதைச்சிபுட்டு வந்தவரே - கட்டிக் கரும்பே
சித்தநேரம் உட்காரய்யா - சுட்டிக் குறும்பே!!
விதைநெல்லு விதைச்சபின்னே
மனசிங்கே குமுறுதடி!
மழை தண்ணி இருந்தாத்தானே - பச்சைக் கிளியே
மாபோகம் கிடைக்குமடி - இச்சைக் கிளியே!!
கருத்தமேகம் கூடிருச்சு
கூராப்பு போட்டிருச்சு!
சிலுசிலுன்னு காத்தடிக்க - கட்டிக் கரும்பே
கிளுகிளுப்பா ஆனதய்யா - சுட்டிக் குறும்பே!!
பூந்தூறல் போடுதடி
மண்வாசம் வீசுதடி!
இதுக்காகத் தானே நானும் - பச்சைக் கிளியே
காத்து காத்து பூத்திருந்தேன் - இச்சைக் கிளியே!! பூத்திருக்கும் விழிய நானும்
கொஞ்சிப்பேச நேரமில்ல
நித்தமும் தான் பார்த்திருக்கேன்
கொழிஞ்சிப்பூ மூக்கழகா - கட்டிக் கரும்பே
கொஞ்சிப்பேச வந்திடய்யா - சுட்டிக் குறும்பே!!
கொஞ்சிப்பேச நேரமில்ல
மஞ்சப்பூச்சு முகத்தழகி!
வயலுக்கு போயிவாறேன் - பச்சைக் கிளியே
சாயங்காலம் பேசிடுவோம் - இச்சைக் கிளியே!!
கம்பம் புல்லு குத்திவைச்சு
கஞ்சிபோட்டு வைச்சிருக்கேன்!
பொழுதடைஞ்சி போனபின்னே - கட்டிக் கரும்பே
மழுப்பாம வந்திடய்யா - சுட்டிக் குறும்பே!!
மழைநல்லா பெஞ்சுதடி
வரப்பெல்லாம் நிறைஞ்சுதடி!
ஓடைத்தண்ணி ஓடையில - பச்சைக் கிளியே
ஒடம்விட தோணுச்சடி - இச்சைக் கிளியே!!
கம்பங்கஞ்சி கொண்டுவாரேன்
கடகடன்னு குடிச்சிடய்யா!
விதைச்ச நெல்லு மளமளன்னு - கட்டிக் கரும்பே
விளஞ்சிநிக்கும் நேரம்வரும் - சுட்டிக் குறும்பே!!
அந்தநாள பார்க்கத்தானே
அங்கமெல்லாம் காத்திருக்கு !
அறுவடையின் நேரம்பார்த்து - பச்சைக் கிளியே
மழைபெய்யக் கூடாதடி - இச்சைக் கிளியே!!
நம்கையில் எதுமில்ல
நல்லமனசு கொண்டவரே!
நல்லதையே நினைச்சிருப்போம் - கட்டிக் கரும்பே
நல்விளச்சல் கிடைக்குமய்யா - சுட்டிக் குறும்பே!!
விளஞ்சிவந்த பின்னாலேயும்
கட்டிவச்ச நெல்களையெல்லாம்!
சந்தைக்கு கொண்டுபோனா - பச்சைக் கிளியே
நல்லவிலைக்கு போகணுமே - இச்சைக் கிளியே!!
அரசாங்கம் செய்யனுமய்யா
அதற்கான ஏற்பாடெல்லாம்!
அத்திப்பூ முகத்தழகா - கட்டிக் கரும்பே
அதுவரைக்கும் பொருத்திருங்க - சுட்டிக் குறும்பே!!
வேய்ந்தகூரை பிஞ்சிப்போச்சு
வெட்டவெளி ஆகிப்போச்சி!
காரவீடு கட்டனமின்னு - பச்சைக் கிளியே
பாவிமனசு துடிக்குதடி - இச்சைக் கிளியே!!
இந்தபோகம் விளைஞ்சிவரும்
எருக்கம்பூ மூக்கழகா!
அந்த பணத்த வைச்சி நாமும் - கட்டிக் கரும்பே
அழகாக கட்டிடுவோம் - சுட்டிக் குறும்பே!!
அன்பன்
மகேந்திரன்
55 comments:
இது
நாட்டுபுற பாடல் அல்ல
மண்ணாம்
தாய் மார்பில்
நீரூட்டி குளிரவைத்து
தொழியடித்தி நெற்மணி விதைத்து
ஊருக்கு உணவுப் படியளக்கும்
உழைப்பில் மாணிக்கமான
உழவனின் மனப்பாட்டு
மண்வாசனை கவிதைக்கு நன்றிகள் கோடி
மனம் மகிழ வைத்த மண் வாசனை
படைப்பாளிக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
கிராமத்து அழகை உங்கள் எழுத்துக்களில் பச்சைப் பசேலெனப் பார்க்கிறேன்.கொடுத்து வைத்தவர் நீங்கள் மகி.எத்தனை இயற்கையோடு சேர்ந்த அனுபவங்கள்.கம்பங்கஞ்சி வாசனை வருது !
எருக்கம்பூ மூக்கழகா...//
நல்லாதான் கூப்பிடுறீங்க...
வழமை போல் நச்சென்று ஒரு கிராமியக்கவிதை...உப்புக்காற்றை சுவாசித்து எப்படி இப்படியெல்லாம்...வெறும் கற்பனையா..?
நம்பவே முடியவில்லை சகோதரா...ஆனால் பெருமையாக உள்ளது...
அழகான மண் வாசனையுடன் கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
நாட்டுப்புற பாடல் கேட்டாலே அழகு! படித்தால் மெட்டு கட்டி பாடத்தோன்றுகின்றது.......
//வந்தவாசி சந்தையிலே
வாங்கிவந்த விதைகளெல்லாம்!
விதைச்சிபுட்டு வந்தவரே - கட்டிக் கரும்பே
சித்தநேரம் உட்காரய்யா - சுட்டிக் குறும்பே!!//
வார்த்தைகளில் புகுந்து விளையாடுரிங்க
மண்வாசனை சுகமாக இருக்கிறது நண்பரே இந்த பாடலில்!
மிக்க மகிழ்ச்சி.
மீண்டும் மற்றுமொரு இனிய கிராமியப்பாடலை தந்திருக்கிறீர்கள் மகேந்திரன். இது கிராமத்துப்பாடலா நாட்டார்பாடல் வகையை சேர்ந்ததா என்பதற்கு அப்பால் மிகவும் ரசிக்கும்படியான கிராமத்து மொழிவழமை என்னை கவர்ந்தது.
வணக்கம் அண்ணா ... எப்படி இருக்கீங்க??? நீண்ட இடைவெளிக்கு பின் வருகிறேன்.... கொஞ்சம் தனிப்பட்ட பிரச்சனைகள் அதான் ;)
அப்புறம் அண்ணா.... :)
கவிதை அவ்ளோ அழகு..... கிராமம் என்றால் உங்களுக்கு கவிதை அருவியாய் கொட்டுமே.... இங்கேயும் அதான் நடந்து இருக்கு......ஊரில் இருக்கும் பிரமையை கொடுக்குது உங்க கவிதை அண்ணா
உங்கள் கவிதைகளை விரைவில் ஈ-புக் ஆக்க வேண்டும்.... ஆக்கினால் நிறைய பேருக்கு பயன் தரும்.... இனி நாற்றில் இது பற்றி பேசுவோமே.... :)) இப்பவே என் வாழ்த்துக்கள் அண்ணா :)
அழிந்து வரும்-
கிராமங்கள்!
அழகா படம் பிடித்து-
விட்டது உங்கள்-
எழுத்துக்கள்!
படங்களும்
பாடலும்-
குளிர்ச்சி!
பாடல்களும் படங்களும் கண்களுக்கு அழகு! நெஞ்சுக்கு இதம்!
கோடைமழைக்கு தப்பியது எங்கள் பகுதி வயல்கள்..அறுவடை முடிந்தது! நெல்லைக் கேட்போர் யாருமில்லை! அரசாங்க லெவி ஒருநாளைக்கு ரூ2 லட்சம் வரைதானாம்! வெளிசந்தையில் கிலோ நெல் ரூ2வரை தள்ளிக் கேட்கிறார்கள்! கொள்ளை! கேட்டால் அரிசிஆலைகளுக்கு மின் தடை என்கின்றனர்! வெளிசந்தையில் நல்ல சாப்பாட்டு அரிசி கிலோரூ 35 - 40 வரை விற்கிறார்கள்!
பாரட்ட வார்த்தைகள் இல்லை
வாழ்த்த வயதும் இல்லை
இருந்தாலும் வாழ்த்துக்கள்
கண்முன்னே எங்கள் கிராமும்
உங்கள் புகைபடத்தில்
அருமை
அழகான படங்களுடன் கவிதையும் அழகு
அவளும் அவனும் மண் வாசனை
மிக்க கிராமிய மொழியில் பேசும் பாடல் ஏற்றபடம் அருமை!
புலவர் சா இராமாநுசம்
வந்தவாசி சந்தையிலே
வாங்கிவந்த விதைகளெல்லாம்!///
அண்ணா எங்க ஊர் வந்தவாசி மிகவும் மகிழ்ச்சி அண்ணா இந்த வரிகளையே திரும்ப திரும்ப படித்து மகிழ்ந்தேன் .
ஒரு குட்டி சிறுகதை எழுதிருக்கேன் அண்ணா நேரம் இருப்பின் வாங்க .
அன்புநிறை நண்பர் செய்தாலி,
உணவு படைக்கும் உழவனுக்கு
நற்பாடல் புனைந்த மகிழ்ச்சியில்..
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனசாட்சி,
மண்வாசனை நுகர்ந்ததற்கும்
இனிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
பார்த்தறிந்த அனுபவங்கள் தான் இங்கே பாடலாய்..
தங்களின் வலையில் எனக்கு விருது கொடுத்ததை
பார்த்தேன்.. மிகுந்த மகிழ்ச்சி சகோதரி..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் ரெவெரி,
பிறந்ததும் வளர்ந்ததும் நகரப் பகுதியை இருந்தாலும்..
உப்புக்காற்றை நாள் முழுதும் சுவாசித்திருந்தாலும்..
சற்று சுற்றி உள்ள வயல்வெளிகளை கண்டு கண்டு
ரசித்திருக்கிறேன்..
அதன் சிறுவிளைவு தான் இந்த கவிதை சகோதரரே..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
கிராமியத்தென்றல் வந்து வீசிச்சென்றது! மீண்டும் வயலுக்குப் போன நாட்கள் !வந்தாவாசியும் வந்து பார்த்தேன்!
பிற்காலத்தில் !
எல்லாம் அரசின் செயலில் இருக்கு அடுத்த திட்டம் விவசாயின் முன்னேற்றம் தேவை அவசரம்!
அழகிய் பட்ங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! ம்ம்ம் தொலைந்த வாழ்வாகிப்போய்விட்டது!
நல்ல படங்களுடன் நல்ல கவிதை ! சூப்பருங்க.....
நல்ல நாட்டுப்புறக் கவிதை
அழகு கவிதை. வாழ்த்துகள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
ஆகா என் அருமை மகேநடதழரன் அங்கிள். கிராமத்து மண் வாசனையை நுகர்ந்தேன் உங்கள் கவிதை மூலம்
கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
கிளிகொஞ்சும் பேச்சுக்களுடன்
கட்டிக்கரும்பாய் இனிக்கும் கவிதை.
பாராட்டுக்கள்.
“நம்கையில் எதுமில்ல
நல்லமனசு கொண்டவரே!
நல்லதையே நினைச்சிருப்போம் - கட்டிக் கரும்பே
நல்விளச்சல் கிடைக்குமய்யா - சுட்டிக் குறும்பே!!“
அருமையான படைப்பு! எந்த இடத்தைச் சுட்டிக்காட்டுவது என்றே தெரியவில்லை.
வாழ்த்துக்கள் ஐயா.
அருமை!
அன்புநிறை நண்பர் சுரேஷ் குமார்,
அப்படி பாட்டு பாடின அதன் ஒரு படிமத்தை எனக்கு
அனுப்பிடணும் சரியா....
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜபாட்டை ராஜா,
தங்களின் மேலான கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
இது பொதுவாக கிராமியப் பாடல் வைகையிலே வருகிறது..
கேலியும் கூத்துமாய் கணவனும் மனைவியும்
தங்கள் அன்பை ஒருவர் மாற்றி ஒருவர்
சொல்லால் மொழியால் வெளிக்காட்டி
அன்றைய வாழ்க்கை நிகழ்வையும்
ஆளுக்காளு மாற்றி மாற்றி தோள் தட்டிக்கொள்வதையும்
நாட்டுப்புறப் பாடலில்தான் காணமுடியும்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புத் தம்பி துஷி,
நீண்ட நாட்கள் இடைவெளி ...
இருப்பினும் மனம் சாந்தம் தான் முக்கியம்.
விரைவில் மனம் சாந்தி பெற்று
எழுத்துலகில் கால்பதிக்க இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்..
தம்பி..
நாற்றுக் குழுமம் என் மீது வைத்திருக்கும்
நம்பிக்கைக்கு நான் எப்போதும் தலை வணங்குகிறேன்..
ஆவன செய்வோம்..
அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் அழகிய கருத்துரை என் மனதை
குளிர்வித்தது..
நன்றிகள் பல..
அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
நீங்கள் கூறியதுதான் இன்றைய விவசாயியின்
நிலைமை..மேலும் தஞ்சை களத்து விவசாயிகள் நிலைமை இன்னும் மோசம்...
அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..
இல்லையேல் புசிப்பதற்கு எதுவும் கிடைக்காது..
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சிவசங்கர்,
வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை நண்பரே..
உங்கள் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சதீஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் அழகான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புத் தங்கை சசிகலா,
கவிதை உங்கள் மனம் தொட்டதற்கு நன்றிகள் பல.
வந்தேன் தங்கள் தளம்
கருத்தும் இட்டேன்..
அன்புநிறை சகோதரர் நேசன்,
இன்றைக்கு விவசாயிகள் வாழ்வைத்
தொலைத்தவர்களாகவே இருக்கிறார்கள்
என்பது மிகச் சரி..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் முரளிதரன்,
தங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தலித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் தொடர் ஆதரவிற்கும் என்
நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி எஸ்தர்,
தங்களின் மேலான கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கே. பி. ஜனா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
சிலுசிலுவென வயல்வெளில் வீசுகிற இளம் தென்றல் வருடிச்சென்ற உணர்வு,+நினைவுகள் நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.
இந்தபோகம் விளைஞ்சிவரும்
எருக்கம்பூ மூக்கழகா!
அந்த பணத்த வைச்சி நாமும் - கட்டிக் கரும்பே
அழகாக கட்டிடுவோம் - சுட்டிக் குறும்பே!!
>>>
நம்பிக்கைதான் வாழ்க்கை அண்ணா. உழைப்பால் சிறுக சிறுக பொருள் சேர்த்து விரைவில் ’அவங்க’வீடு கட்டிடுவாங்க அண்ணா
மண்ணின் மணம் கமழும் கவிதை
அருமை அருமை அருமை.
கவிதை கட்டிக் கரும்பு.
ஓடையிலே மட்டுமில்லை என் கண்ணிலேயும் ஓடுதையா ஓடம்..அருமையான படைப்பு
Post a Comment