Friday, 20 April 2012

கவிதை தந்த விருது!!


நிழற்படங்கள் இரண்டினை
கருவாய்க் கொடுத்து! - எம்
மனச் சுரங்கத்தை
சொற்கோடரி  கொண்டு
துளைத்தெடுக்க வைத்து
வாரீர்! வந்து பாரீர்!
பார்த்து கவிதை படைத்து 
விருந்து தாரீர்!! - என
அழைப்பும் விடுத்து
வடித்த கவிதைக்கு
விருதும் கொடுத்த - என்
அன்பு சகோதரி ஹேமா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஹேமா அவர்களின் கவிதையில் வரும் சொல்லாடல்கள் மிகவும்
பிரமிக்க வைக்கும். வார்த்தைகளால் வண்ணமிகு தோரணம் கட்டுபவர் அவர்.
அவரின் உப்புமாட சந்தியில் கவிதை எழுத வாரீர் என அழைப்பும் விடுத்து
அங்கு எம்மால் எழுதப்பட்ட கவிதைக்கு விருதும் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் என்பது தான் தட்டிக்கொடுக்கும் ஒரு
மாபெரும் சக்தி. அத்தகைய அங்கீகாரத்தை எமக்களித்த
சகோதரி ஹேமா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

உப்புமாட சந்தியில் என் கவிதை...
ண்களை அகல விரித்தேன்
வந்த இடம் தெரியவில்லை!
செல்லும் இடம் புலப்படவில்லை!
கண்மூடி தியானித்தேன்
முன்னோக்கிப் பார்த்தால்
இருமுனைப் பாதைகள்
எம்மார்க்கம் சென்றிடினும்
அனுபவங்கள் பலவாகும்!
சற்றே பின்னோக்கினேன்!
எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!

==============================================


..நிலவே!
பால்போன்ற உன்னில்தான்
அழகின் அடைக்கலம் -என
இறுமாப்பு உனக்கு!
இதோ
அமுதூட்டும்
என் அன்னை இருக்கிறாள்!
அதோ ஒரு
கரிய மேகம் வருகிறது
ஒளிந்து கொள்!
பின்னர் ஒரு நாள்
என்னிலும் ஓர் அழகைக்
கண்டேன் என
புலம்பித் தவிக்காதே!!அன்பன்
மகேந்திரன் 

36 comments:

Anonymous said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா

Anonymous said...

விருது கொடுத்த கவிதாயினி ஹேமா akka அவர்களுக்கு மிக்கநன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் சார்....

மேலும் நிறைய படைப்புகள் படைத்தது விருதுகள் பலவும் பெற வாழ்த்துகிறேன்.

Anonymous said...

ஒளிந்து கொள்!
பின்னர் ஒரு நாள்
என்னிலும் ஓர் அழகைக்
கண்டேன் என
புலம்பித் தவிக்காதே!!///


இந்த கவி சுப்பரா இருக்கு அண்ணா

Anonymous said...

ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் என்பது தான் தட்டிக்கொடுக்கும் ஒரு
மாபெரும் சக்தி. அத்தகைய அங்கீகாரத்தை எமக்களித்த
சகோதரி ஹேமா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.////////

உண்மைதான் அண்ணா ஹேமா அக்காவோட எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு !!அவங்க கைல விருது என்பது பெருமையான விடயம் ...
ஹேமா அக்காக்கு எல்லாரின் சார்பாக்அவும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்

சாம் ஆண்டர்சன் said...

//என் அன்னை இருக்கிறாள்!//

ஒன்னாவது படிக்கும் போது எங்க அம்மாகிட்ட “ எங்க ஸ்கூல்லயே நீங்கதான் அழகு “ அப்படின்னு சொன்னது நியாபகம் வருது -- கலக்கல் கவிதை அம்மாவுக்கு நிகர் அம்மா தான்

Yoga.S.FR said...

வணக்கம் மகி சார்!"அங்கு" (ஹேமா தளத்தில்)வாழ்த்தியிருந்தாலும் மீளவும் உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு உங்கள் தளத்திலும் வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

வாழ்த்துக்கள் விருது கிடைத்ததுக்கு மகேந்திரன் அண்ணா!

தனிமரம் said...

அனுபவங்கள் பலவாகும்!
சற்றே பின்னோக்கினேன்!
எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!//


ரசித்த வரிகள் அத்துடன் அனுபவமும் கூட அண்ணா. நிஜம் இந்த வரிகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கவிதைகள்.

விருது பெற்றதற்கு என் அன்பான வாழ்த்துகள்.

ஹேமா said...

ஏற்கனவே ரசித்த கவிதைதான் என்றாலும் திரும்பவும் வாசிக்கப் புதிதாய்த் தெரிகிறது.இன்னும் விர்துகள் பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.உங்கள் சமூக அக்கறைக் கவிதைகளை என்னால் எட்டமுடியாது மகி !

Seeni said...

உங்களுக்கு விருது-
கிடைத்தமைக்கு-
வாழ்த்துக்கள்!

நீங்கள் -
அழகா ஹேமா அவர்களுக்கு-
நன்றி சொல்லிடீங்க!

நான் எப்படி அந்த விருதை-
எடுத்து போடுவது என்பது-
தெரியாமல் தவிக்கிறேன்!

சிவகுமாரன் said...

வாழ்த்துக்கள்.
கவிதைகள் அருமை.

புலவர் சா இராமாநுசம் said...

கற்ற தமிழும் கைகொடுக்க
உற்ற கவிதையை ஓதி
பெற்ற விருது கண்டேன்
நற்றமிழ்ச் சுவை யுண்டேன்!

பாராட்டுக்கள்!

புலவர் சா இராமாநுசம்

PREM.S said...

வாழ்த்துக்கள் அன்பரே

கணேஷ் said...

மகேன்! அங்கே ஹேமாவின் தளத்திலேயே படித்திருந்த போதும் இப்போதும் அழகாய் இருக்கிறது உங்கள் கவிதை. அழகுத் தமிழ் ரசிக்க ரசிக்க சுவை குன்றாததன்றோ! ‌என் ஃப்ரெண்டிடமிருந்து விருது பெற்ற தங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

Lakshmi said...

விருது கொடுத்த ஹேமாவுக்கு பாராட்டுக்கள். விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.

palani vel said...

விருதுக்குரிய கவிதைகள்தான். தரம், தகுதி எங்கிருந்தாலும் பாராட்டும், புகழும் தேடிவரும்.

விருதுகொடுத்தவருக்கும், விருது பெற்றவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்..!! பகிர்வினுக்கு நன்றி...!!

மோ.சி. பாலன் said...

அருமை மகேந்திரன். அதானே.. மழலையை விட அந்த மதியென்ன பெரிய அழகு...?

வீடு சுரேஸ்குமார் said...

அம்மாவைவிட அழகு
இப்புவியில்
வேறு உண்டோ?
அவள் அன்புக்கு ஈடாக...
வேறு உறவும் உண்டோ?
இந்த பூமியில் சொர்க்கம்
எதுவென்றால் அம்மாவின்
மடியில் தலை வைத்து
உறங்குவது
ஒன்றே...ஒன்றே...

வாழ்த்துகள் மகேந்திரன் சார்!

தினேஷ்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே ...

தினேஷ்குமார் said...

எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!....///

பாதையறியா பயணிப்போரை வழிநடத்தும் வரிகள்....

சசிகலா said...

விருது கொடுத்த ஹேமாவுக்கு பாராட்டுக்கள். விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.

செய்தாலி said...

ம்ம்ம்ம்.... விருது விருது
வசந்த மண்டபத்திற்கு
எத்தனை விருது கொடுத்தாலும் தகும்

வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு கவிதைகளையும் ரசித்தேன் மகேந்திரன்.

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.

Rathnavel Natarajan said...

ஆஹா. அருமை.
வாழ்த்துகள்.

காட்டான் said...

வாழ்த்துக்கள் மாப்பிள..!!

guna thamizh said...

அருமை அருமை.

சந்திரகௌரி said...

கவிதைக்கு கரு அழகு கருத்தாடல் மேலும் அழகு. இரண்டுடனும் இதயத்தைத் தொடல் மேலும்சிறப்பு இவை எல்லாம் என்றுமே உங்கள் கவிதைகளில் காண்பதனால் விருதுகள் தேடிவருகின்றன . வாழ்த்துகள் மேலும் வளங்கள் சேர்க்க மேலும் வாழ்த்துகள்

துரைடேனியல் said...

ஏற்கனவே உப்புமட சந்தியில் கவிதையை வாசித்து இருந்தேன்.மறுபடியும் வாசித்தேன். அழகு. வாழ்த்துக்கள் சார்.

கலையரசி said...

"எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!"

கடவுள் பெயரால் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கும் மனிதகுலத்தை உய்விக்கக் கூடிய அருமையான வரிகள். விருது கிடைத்தது சாலப் பொருத்தம். பாராட்டுக்கள்!

Anonymous said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.
Vetha.Elangathilakam.

சென்னை பித்தன் said...

விருதுக்கன்றோ பெருமை!

மகேந்திரன் said...

அன்புநிறை தோழமைகளே,
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Esther sabi said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அங்கிள் ... அதே மன நிறைவோடு இச்சிறியவள் உங்களுக்காக பரிந்துரைத்திருக்கும் விருதையும் என் பிளாகருக்கு வந்து பெற்றுக் கொள்ளுங்கள் தயை கூர்ந்து...

Post a Comment