Sunday, 1 April 2012

ஏனிந்த உவகை?!!ப்பப்பா!
எத்தனை ஆனந்தம்
உன் உவகையில்!
உலகையே புரட்டிவிட்டது போல்
எத்தனை இன்பம்
உன் களிப்பில்!!!

வெற்று வெள்ளிக் குடமதை
கவிழ்த்து வைத்து
குலுக்கியது போல
கலகலவென நகையொலியை
சிதறவிட்டதும் ஏன்தானோ?!!

காந்தள் மலர்க்
கண்களும் சிரிக்க
கைகள் கொட்டி - நீ
சிரிப்பொலி சிந்துவதன்
நற்பொருள் அறிந்திட
நாளும் விழைகின்றேன்!!
 

மின்னல் கீற்றுகளாய்
பளிச்சென்ற பால் நிலவாய்
வெட்டிவெட்டி நகைக்கும்
உன் சிரிப்பின்
பொருள் தான் என்ன?!!
 

 


ழலை உந்தன்
தோழமைக் குழாமுடன் 
மயக்கும் விழியாலே
மாயங்கள் புரிந்தது போல்
மந்திரப் புன்னகை ஏன்?!!
 
கத்திப்பூ இதழதை
அகல விரித்து
உவப்பு கொள்கையிலே
விளங்காமல் விழிக்கிறேன்
விழிநிறைய வினாக்களுடன்!!
 
 
சிந்தாமணிச் சித்திரமே
காண்டா மணிவிளக்கே!
கோலவிழிப் பார்வையில்
கேளிக்கை கண்டதுபோல்
கெக்கலிப்பு கொண்டது ஏன்?!!
 
தேன்கொண்ட விரிமலராய்
உன்னுவகை தெரிந்தாலும்
சிந்தையின் சுவருக்குள்
கண்டிராத ஓர் மாற்றம்
ஏனென்று விளங்கவில்லை!!
 
 
விதிமீறல் அறியாது
வாழ்வின் நிலைப்புக்காய்
பரபரப்பாய் ஓடியோடி
திரும்பிப் பார்க்கையில்
பாதிவாழ்க்கை தொலைத்திருந்தேன்!!

சிரிப்பென்ற பொருளுக்கு
பல சொற்கள் இருந்தாலும்
ஏதேனும் ஒருசொல்லை
ஏறெடுத்து பார்ப்பதற்குள்
முன்நெற்றி ஏற்றம் கண்டேன்!!
 
 


ட்டுமேனிப் பெட்டகமே உவகை என்பது
உனக்கு இயல்புதான்
அதைக்காணும் எனக்குத்தான்
விகற்பமாய் ஆனதிங்கே!! 

ன்ன இங்கு நடந்தாலும்

உன்னுவகை தொலைக்காதே!
அதை அரூபமாய்
மறைய வைத்து
உன்னியல்பு மாறாதே!!
 
ன் வினாக்கள் கண்டு
நெஞ்சம் புழுங்காதே!
என் நிலையை உனக்கு
எப்படி நான் சொல்ல?!
காமாலைக் கண்ணுக்கு
காண்பதெல்லாம் மஞ்சள்தானே!!
 
 
அன்பன்
மகேந்திரன்

69 comments:

கோவை நேரம் said...

அருமையா எழுதி இருக்கீங்க...

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Ramani said...

என்ன இங்கு நடந்தாலும்

உன்னுவகை தொலைக்காதே!
அதை அரூபமாய்
மறைய வைத்து
உன்னியல்பு மாறாதே!

இது குழந்தைகளுக்கு மட்டுமானதில்லை
அனைவருக்குமானதே
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி

Ramani said...

tha.ma 3

விமலன் said...

காமலை கண்ணுக்க மட்டுமல்ல.மஞ்சளாக காண முடிவெடுத்து விட்ட பின் காமாலை கண் என்ன?சாதாஅண கண் என்ன?நல்ல கவிதை.வாழ்த்துக்கள்,

koodal bala said...

குழந்தையின் சிரிப்பு தெய்வத்தின் சிரிப்பல்லவா!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை.... குழந்தைகள் படம் ஒவ்வொன்றும் அருமை.....

ஹைதர் அலி said...

சகோதரரே இன்று தான் உங்கள் தளம் பார்க்கிறேன் உணர்வுகளை அழகாக செதுக்கி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

ஹைதர் அலி said...

தமிழ்மண ஓட்டு 6

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவி வரிகளும் படங்கள் இணைப்பும் அருமை....

காமாலை கண்ணுடன் படங்கள் தேர்வு அருமை.....

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
கவிதை அழகா படங்கள் அழகா என்று பட்டிமன்றமே வைக்கலாம்போல?

என்ன படங்களில் ஒரு இடைச்செருக்கள் இருக்குது அதுதான்யா இன்னும் அழகாய் இருக்கு.!!!

Lakshmi said...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்

ராஜி said...

படங்கள் அருமை. படத்திற்கேற்றார் போன்ற அழகிய தமிழ் கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ

kovaikkavi said...

''....காந்தள் மலர்க்
கண்களும் சிரிக்க
கைகள் கொட்டி - நீ
சிரிப்பொலி சிந்துவதன்
நற்பொருள் அறிந்திட
நாளும் விழைகின்றேன்!!..''
இது ஒரு புதையல் இன்பமல்லவோ!
சிரிப்பின் அலசல் சிறப்பு.
நல்ல வரிகள்.
தொடரட்டும். பணி.
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

புலவர் சா இராமாநுசம் said...

படம் அழகா!?
பாடல் அழகா!?
இரண்டுமே அழகு!!!

புலவர் சா இராமாநுசம்

கலை said...

உன் சிரிப்பின்
பொருள்
தான் என்ன?!!////////////

solla maattinam annaa

கலை said...

ரொம்ப ரொம்ப ரொம்ப அ அ அ அஅஅஅஅஅஅஅஅஅஅ

ச்சுப்பேரா இருக்கு படமும் கவிதையும் ...

MoneySaver said...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்


http://www.dunkindonutscoupons.com

தனிமரம் said...

குழ்ந்தையின் மன்சில் மயங்கிப்போகும் கவிதை. அழ்கு உவகை ரசித்தேன் படமும் கவிதையும்.

ரமேஷ் வெங்கடபதி said...

கவிதைகளும்,படங்களும் அருமை!

Seeni said...

படங்களும்-
கவிதைகளில் புதிய
வார்த்தைகள்!
அருமை!

சசிகலா said...

முத்தான வரிகள் அண்ணா பதிவினை படித்து முடித்த பின்னும் மனம் குழந்தையாகவே இருந்தது .

mum said...

நல்ல கவிதை..
வாழ்த்துக்கள்!!!!

அம்பலத்தார் said...

இலகு தமிழில் அழகு கவிதை படைப்பதில் நீங்க கில்லாடிதான் கவிஞரே

தனிமரம் said...

குழ்ந்தையின் மன்சில் மயங்கிப்போகும் கவிதை. அழ்கு உவகை ரசித்தேன் படமும் கவிதையும்.

1 April 2012 16:26 
//மகேந்திரன் அண்ணாவுக்கு ஒரு ஏப்ரல் பூல் ஜோக் பார்க்கவில்லைப்போல /
குழந்தையின் மனசில் மயங்கிப்போகும் கவிதை அழகு.உவகை ரசித்தேன் படமும் கவிதையும்.

கணேஷ் said...

வெள்ளிக் குடம் போல உன் சிரிப்பு, காண்டாமணி விளக்கைப் போல -தெறித்து விழுந்த உவமைகளை மிக ரசித்தேன் நண்பா! குழந்தைகளின் படங்களும் அழகு அவற்றுக்கு சற்றும் குறையாமல் உமது தமிழும் அழகு!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கொவைநேரம்,
தங்களின் முதல் வருகைக்கும் அழகிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்களுக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
ஆம் நண்பரே..
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் விமலன்,
பார்க்கும் பார்வையில் தான்
குற்றமும் நிறைவும் என்பதை விளக்கவே
அந்த வார்த்தைப் பிரயோகம் நண்பரே.

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஹைதர் அலி,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரகாஷ்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
சரியா கண்டுபிடிசிடீங்க..

முதல் மற்றும் கடைசிப் படம் என்
இரண்டாவது மகனுடையது. நான்கு
வருடங்களுக்கு முன்னர் எடுத்தது.

தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்களுக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,

தங்களின் பாராட்டுக்கும் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர்ப் பெருந்தகையே,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை கலை,

வாழ்வில் நாம் சந்திப்பவர்களின் பலரது
சிரிப்புக்கு பொருள் விளங்குவதே இல்லை.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ மனிசெவர்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நேசன்,
ஆஹா அது ஏமாத்து வேலையா...
நான் எழுத்துப் பிழையோன்னு நினைச்சுட்டேன்..

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சநண்பர் ரமேஷ் வேங்கடபதி,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை சசிகலா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை அம்பலத்தார் ஐயா,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,

தங்களின் அழகான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

செய்தாலி said...

மழழையின்
சித்திரமும் உயிர்பிக்கும்
தேன்தமிழ் கவிதைகளும்
கொள்ளையழகு

காந்தி பனங்கூர் said...

குழந்தையின் சிரிப்பை மிகவும் அழகாக வர்ணிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் தோழரே.

மாலதி said...

சிந்தாமணிச் சித்திரமே
காண்டா மணிவிளக்கே!
கோலவிழிப் பார்வையில்
கேளிக்கை கண்டதுபோல்
கெக்கலிப்பு கொண்டது ஏன்?!!//முத்தான வரிகள்தொடரட்டும். பணி.
பாராட்டுகள்.

ரெவெரி said...

முதலும் இறுதியும் உங்கள் செவங்கள் தானே...கொள்ளை அழகு....அற்புத கவிதை சகோதரரே..

ஹேமா said...

கள்ளமில்லாக் குழந்தைகளின் சிரிப்புக்கு ஈடு எதுவுமே இல்லை.அழகான குழந்தைகளின் படங்கள் மகி !

Esther sabi said...

வணக்கம் அண்ணா தங்களிடம் இன்றுதான் அடியெடுத்து வைத்துள்ளேன். மிக அருமையான கவிதை நான் நினைத்த வசந்த மொழிகளை ஏற்கனவே ஏராளமானோர் கூறிவிட்டனர். அதனால் இத்துடன் முடிக்கிறேன்....

”பேரொளி” எஸ்தர்

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நலமா?

அருமையான கவிதை! மழலையின் உணர்வுகளை மனக் கண் முன் கொண்டு வரும் அழகு நிறைந்த வரிகள் கவிதைக்கு அலங்காரமாய் அமைந்துள்ளது.

சென்னை பித்தன் said...

சிறப்பான படைப்பு1

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர் சார் !

AROUNA SELVAME said...

குழந்தையாகவே இருந்திருக்கலாமோ என்ற ஏக்கத்தைக் கொடுத்தது உங்கள் பாடல்களும் படங்களும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செய்தாலி,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
சரியா கண்டுபிடிசிடீங்க..

முதல் மற்றும் கடைசிப் படம் என்
இரண்டாவது மகனுடையது. நான்கு
வருடங்களுக்கு முன்னர் எடுத்தது.

தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை எஸ்தர்,

தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னை பித்தன் ஐயா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செல்வம்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

சந்திரகௌரி said...

கவிதை அற்புதம். உலகம் புரியாமையினால் உண்மை புரியாமல் சிரிக்கின்றார்கள் .

Post a Comment