ஏலேலந்தம் பாடிவந்தோம்
எட்டுக் குடியோனே! எட்டுக் குடியோனே!
எங்ககுடி காக்கவேணும்
எட்டுக் குடியோனே!!
பறையடிச்சி பாடிவந்தோம்
பழங்குடியோர் நாங்க! பழங்குடியோர் நாங்க!
பறையாட்டம் கதைசொல்ல
ஓடிவந்தோம் நாங்க!!
ஆதியிலே வாழ்ந்திருந்த
எங்க குலத்தோரே! எங்க குலத்தோரே!
அழகாக வடிவமைச்ச
கலையிதுதான் ஐயா!!
காடுகளில் எங்ககுலம்
வாழ்ந்திருந்த போது! வாழ்ந்திருந்த போது!
தற்காப்புக் கலையாக
வடிவமைத்தோம் ஐயா!!
காட்டில் வாழும் கரடி புலி
கருத்த யானையெல்லாம்! கருத்த யானையெல்லாம்!
பறையடி கேட்டுச்சின்னா
பயந்து ஓடுமய்யா!!
பறையடிச்சி பாடுகையில்
கேட்டுக்குங்க சாமி! கேட்டுக்குங்க சாமி!
உடம்பெல்லாம் சிலுசிலுக்கும்
நரம்பு முறுக்கேறி!!
செத்தமாட்டுத் தோலெடுத்து
கட்டிக்காய வைச்சோம்! கட்டிக்காய வைச்சோம்!
காஞ்சபின்னே தோலெடுத்து
தீயில் வாட்டியெடுத்தோம்!!
வளையமொன்னு செஞ்சிடவே
புன்னைமரக் கம்பு! புன்னைமரக் கம்பு!
மலையனூரில் எடுத்துவந்தோம்
வட்டப்பறை செய்ய!!
வாட்டிவைச்ச தோலெடுத்து
வார்பிடிச்சு தாங்க! வார்பிடிச்சு தாங்க!
வளையத்தில் கட்டிவைச்சு
வட்டப்பறை செஞ்சோம்!!
அப்போது வீட்டிலெல்லாம்
நிகழ்ச்சியின்னு சொன்னா! நிகழ்ச்சியின்னு சொன்னா!
பறைச்சத்தம் கேட்காம
நாங்க பார்த்ததில்ல!!
திருமணம் திருவிழான்னு
பறையடிச்சி வந்தோம்! பறையடிச்சி வந்தோம்!
திரும்புன திசையெல்லாம்
பறைச்சத்தம் தாங்க!!
ஆரிய சமூகமொன்னு
அடியெடுத்து வைக்க! அடியெடுத்து வைக்க!
ஆட்டங்கண்டு போச்சுதய்யா
எங்க பறையாட்டம்!!
தமிழ்க்கலையா இருந்துவந்த
தங்க பறையாட்டம்! தங்க பறையாட்டம்!
சாதியாடும் ஆட்டமின்னு
ஒதுக்கி வைச்சாங்கய்யா!!
வேகமான ஆட்டமய்யா
எங்க பறையாட்டம்! தங்க பறையாட்டம்!
வீரியத்தை குறைச்சு அங்கே
ஆனது சதிராட்டம்!!
இன்னைக்கு தெரிவதெல்லாம்
பரதாட்டம் தாங்க! பரதாட்டம் தாங்க!
பரதத்தின் முன்னோடியாம்
பொன்னு பறையாட்டம்!!
இப்படி பெருமையான
பறையாட்டம் இப்போ! சதிராட்டம் இப்போ!
சாவுக்கு ஆடிவரும்
சாப்பறையா ஆச்சு!!
பறையடி பலவகையா
பகுத்து வைச்சாங்கய்யா! தொகுத்து வைச்சாங்கய்யா!
இன்னைக்கு இளைஞரெல்லாம்
மறந்து போனாங்கய்யா!!
இலக்கணம் இதற்குமுண்டு
இயைபாக தாங்க! இயைபாக தாங்க!
இங்கிருக்கும் இளையமக்கா
நல்லா கேட்டுக்கோங்க!!
குடிச்சிட்டு ஆடமட்டும்
கலையில்ல ஐயா! நல்ல கலையில்ல ஐயா!
உயிர்போல வளர்த்துவந்த
கலையை மதிங்க ஐயா!!
பாங்கான பறையாட்டம்
எங்க உயிரய்யா! எங்க உயிரய்யா!
குடிகார ஆட்டமாக
ஆக்காதீங்க சாமி!!
தமிழ்வளர்த்த பெருமையெல்லாம்
எங்களுக்கும் உண்டு! எங்களுக்கும் உண்டு!
கண்ணான கலையிதுவ
கசக்கிபிழிய வேணாம்!!
அன்பன்
மகேந்திரன்
66 comments:
முதல் பறை நாஞ்சில்மனோ....
வசந்தமண்டபம் "வாசனை மண்டபம்"
திரவிடனின் பெருமையெல்லாம்
பெருமையாக கூறி! பெருமையாக கூறி!
பெருமைப்பட வைத்த
உங்களுக்கு நன்றி!!
பாடல்களுடன் படங்களுடன்
பதிவு மிக மிக அருமை
வாழ்த்துக்கள்
த.ம 3
தமிழ்வளர்த்த பெருமையெல்லாம்
எங்களுக்கும் உண்டு! எங்களுக்கும் உண்டு!
கண்ணான கலையிதுவ
கசக்கிபிழிய வேணாம்!!
>>
யோசிக்க வேண்டிய விசயம்தான் சகோ. நான் ரசிக்கும் இசையை பற்றி ஒரு கவிதை. பகிர்வுக்கு நன்றி
பறை பற்றிய பல தெரியாத தகவல்களோடு தங்கள் கவிதை அருமை.
அருமை ,மகேந்திரன்.
அருமை மகேந்திரன்.
அருமையான கவிதை; நமது தமிழ் கலை தொலைவதை, சிறுமைப்படுத்தப் படுவதைப் பற்றிய ஆதங்கம்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். உங்களை நினைத்து மிகவும் பெருமப் படுகிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
பறையாட்டம் பற்றிய அரிய தகவல்கள்,அழகிய படங்கள்..அருமையான பதிவு.
பாடலும் அருமை அதற்கேற்ற
படங்களும் அருமை!
புலவர் சா இராமாநுசம்
Aha...arumai Sago. Vaalthukkal.
TM 9.
நம் வீட்டு விசேடங்களில் இது போன்ற
பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்தோம் என்றால் இக்கலைகள் அழியாமல்
நிலைபெறும்
பாடல் மிகவும் நன்றாக உள்ளது
வாழ்த்துக்கள் மகி
அருமையான கிராமத்து ராகம்..
வாக்கு (TM-10)
அன்போடு அழைக்கிறேன்..
மௌனம் விளக்கிச் சொல்லும்
வணக்கம் அண்ணாச்சி!
நலமா கொஞ்சம் தேடல் அதிகம் வரமுடியவில்லை!
பறையைப்பற்றிப் பாடி கவிதையில் இதயம் கணக்க வைத்துவிட்டீர்கள் பறை ஒரு தோல் வாத்தியம் என்பதைத் தாண்டி ஆண்டால் பாசுரத்திலும் இது அதிகம் வருவதை கானலாம் அந்த ஆசையில் ஓடிவந்தேன் அருமையான படங்களுடன் ஆட்டத்தையும் கண்டு கொண்டேன் வாழ்த்துக்கள்!
படங்கள் கூடவே கவிதைகள் ரெம்ப அருமை.... ஆனால் எனக்குத்தான் அதிகம் புரியவில்லை :(((
தமிழ் தாயின் செல்லப்பிள்ளை நீங்கள்.. உங்கள் தமிழ் பற்று பார்த்து அந்த தாயே பெருமிதம் கொள்வாள்.. நிஜமாவே பொறாமையா இருக்கு உங்கள் தமிழ் ஆளுமையை பார்த்து :)))
பழைய தமிழ் கலையாம் பறையாட்டத்தினை அதன் தன்மை மாறாமல் காப்பதின் அவசியத்தை கிராமிய மணம் கவிழ வெளிப்படுத்துகிறது கவிதை.வாழ்த்துக்கள் கவிஞரே!
முதல் பறை கொட்டி வந்த நண்பர் மனோ,
வசந்த மண்டபத்தின் வாசனையை தவறாது முகரும்
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வே.சுப்பிரமணியன்,
தங்களின் மற்றுமொரு சந்தப்பாட்டுக்
கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராஜி,
ஆம் சகோதரி யோசிக்க வேண்டும். நம் கலைகள்
பாழ்படாமல் காக்க வேண்டும். நாட்டுப்புறக் கலைகளில்
தங்களுக்கும் ஈடுபாடு இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகள்
என்னை மென்மேலும் ஊக்கப் படுத்துகின்றன.
தங்களின் தொடர் ஆதரவிற்கும், என் மேல் கொண்ட
நம்பிக்கைக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் மேலான கருத்துக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
நேசத் தோழி சகுந்தலா,
இதுதான் எமக்கு வேண்டும். இதைச் சொல்லத்தான் நான்
இவ்வளவு முயன்றேன். நேரடியாக என் கருத்தை திணிக்க
முடியாமல் தத்தளித்தேன். நாம் ஆதரவு தர வேண்டும்.
அது எந்த வகையில் இருந்தாலும் சரி.
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் இதயம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய காலை வணக்கம் அண்ணா,
கொட்டும் முரசாய்,
சாவீட்டுச் சங்கதி சொல்லும் ஓசையாய்
எம் சமூகங்களோடு ஒன்றிருத்திருக்கும் பறையினைப் பற்றிய அருமையான தாளலயக் கவி கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்!
அன்புநிறை நண்பர் தனிமரம்,
தங்கள் வரவு நல்வரவாகுக,
பறைப்பாடல் தங்களை ஈர்த்தது எனக்கு மகிழ்ச்சி.
ஆண்டாள் பாசுரத்தில் பறையை பற்றிய செய்தி
இருக்கிறதென்று சகோதரி ஷைலஜா சொல்ல
கேட்டிருக்கிறேன். நான் அறிந்ததில்லை நண்பரே.
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ துஷி,
நீங்கள் என் மீது கொண்ட அன்பிற்கு என்
அன்பான நன்றிகள்.
அன்புநிறை நண்பர் குப்புசாமி,
இன்று அதன் தன்மை மாறி கிடப்பதுதான்
மனதை வேதனைப் படுத்துகிறது.
ஆயினும் காலம் சரியாக்கும் என்ற நம்பிக்கையில்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய காலை வணக்கம் சகோ நிரூபன்,
பறை சாப்பறையாக மட்டுமே இருந்துவிடக் கூடாது
என்பதே என் எண்ணம்.
கருத்தை கச்சிதமாக உள்வாங்கி கருத்து
கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆஹா! அருமை சார்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
தமிழ்வளர்த்த பெருமையெல்லாம்
எங்களுக்கும் உண்டு! எங்களுக்கும் உண்டு!
கண்ணான கலையிதுவ
கசக்கிபிழிய வேணாம்!!
அருமை மிகவும் நன்றாக உள்ளது
தமிழ்வளர்த்த பெருமையெல்லாம்
எங்களுக்கும் உண்டு! எங்களுக்கும் உண்டு!
கண்ணான கலையிதுவ
கசக்கிபிழிய வேணாம்!!//
அருமையான வரிகள்..
அற்புதமான படைப்பு..
நேசங்கள் நிறைந்த நெகிழ்வான பதிவுங்க நண்பரே ...
தொடரட்டும் உங்களின் மணம் பரப்பும் படைப்புகள் .. வாழ்த்துக்கள்
"பறை" இன் பெருமையை கவிதையில் பறைசாற்றிய நண்பருக்கு வாழ்த்துக்கள்!!!!!!
''...ஆதியிலே வாழ்ந்திருந்த
எங்க குலத்தோரே! எங்க குலத்தோரே!
அழகாக வடிவமைச்ச
கலையிதுதான் ஐயா!!..''
அதை அழகாகக் கூறிய உமக்கு இந் நத்தார் பரபரப்பில், நத்தார் வாழ்த்துகளுடன் வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நல்ல பாடல் மற்றும் படங்கள்....
மிக அருமையான நாட்டுப்புறப் பாடல்.
கேட்கவே இனிமையாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் vgk
//மகேந்திரன் said...
ஒவ்வொருவரையும் நீங்கள் அறிமுகப் படுத்தும் விதம்
மிக அழகு.
வை.கோ. ஐயா, நண்பர் கணேஷ், ரிஷபன் ஆகியோரின் எழுத்துக்கள்
எனக்கு பரிச்சயம்...
அழகான எழுத்துச் சித்தர்கள் அவர்கள்.
//
மிக்க நன்றி, Mr மகேந்திரன் Sir.
அன்புடன் vgk [வை.கோபாலகிருஷ்ணன்]
பறை பற்றித் தெரியாத விஷயங்கள் நிறையச் சொல்லியிருக்கிறீர்கள் !
மார்கழியில் ஆண்டாள் பறை என்கிறாள் பல இடங்களில் பறைக்கு பல பொருள் சொல்வார்கள்..உங்க கவிதை வாசிக்கும் போது நம் பெருமையை பறைசாற்றுவதுபோல் சிறப்பாக உள்ளது.
வணக்கம் மாப்பிள!
பறையை பற்றிய அருமையான பதிவு.. வெளிநாடுகளில் இருக்கும் ஈழ தமிழர் போராட்டங்களில் கூட பறை அடித்து போராடி இருக்கின்றோம்..!!
பகிர்வுக்கு நன்றி..!!
அருமையான படைப்பிற்கு வாழ்த்துக்கள் சகோ .உடல்நலக் குறைபாடு அதனால்
வலைத்தளங்களுக்கு வலம்வர முடியவில்லைஇன்னும்
இரண்டு மாதங்கள் இந்நிலை தொடரும் .உங்களுக்கு கருத்திட முடியாது போனாலும் விருப்ப வாக்கு இட்டுச் செல்வேன் .என் தளத்தில் வீழ்ச்சி ஏற்படாமல் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
பழந்தமிழ்க் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்கத் தலைப்படும் எண்ணத்தின் தொடர்ச்சியாக,பறை பற்றிய பல தகவல்களை இளைய தலைமுறையும் அறிந்துகொள்ளும் வண்ணம் அழகாகவும் தெளிவாகவும் பாடலின் வடிவிலேயே தந்தது மிகவும் பாராட்டுக்குரியது மகேந்திரன்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சசிகலா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அரசன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை தோழி மும்தாஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
நத்தார் புதுவருட மற்றும் கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை வை.கோ. ஐயா,
தங்களின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் இனிய
கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஷைலஜா,
ஆண்டாள் சொல்லும் பறையின் பெருமை பற்றிய
பதிவை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வணக்கம் காட்டான் மாமா,
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காக்கும்
கலைகளை நாம் எப்போதும் நினைவு வைத்திருக்கிறோம்.
என்பதற்கான ஒரு சான்று நீங்கள் கூறியது.
நசிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி
முதலில் உடல்நலம் முக்கியம், நன்கு பார்த்துக்கொள்ளுங்கள்
என் தளம் உங்கள் கருத்துக்காக எப்போதும் காத்திருக்கும்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் இனிய
கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
மகேந்திரன். பறை அருமை. தமிழ் வளர்த்த பெருமை எங்களுடையது என்று தலைநிமிர்ந்து பெருமிதம் கொள்ளச் செய்து விட்டீர்கள். படங்களும் அருமை. இனிய பதிவுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.
பறை சொல்லும் கதையா இக் கவிதை அழகாய் அமைந்திருக்கிறது . வரலாறு காட்டி அதன் மகத்துவம் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது . ஆரியரின் வருகையை ஆட்டம் கண்ட நிலை உணர்த்தப்பட்டுள்ளது. உண்மை விளம்பியாய் இக்கவிதை உங்களிடம் இருந்து வெளிப்பட்டிருப்பது சிறப்பு மகேந்திரன். வாழ்த்துகள்
அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சந்திரகௌரி,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
பறையின் வரலாற்றை சிறப்பா பாடலாக்கி கொடுத்துறீக்கீங்க அண்ணா....
சிறப்பு...
Post a Comment