நுண்துளைக் கேணியின்
நுனிவாய் உமிழ்ந்திடும்!
நூற்றுவைத்த ராகங்கள்
நூற்றினில் அடங்கிடுமோ?!!
உயிர்சுமக்கும் உள்வெளியின்
உன்மத்த சுவாச மூச்சின்
உருமாற்ற வடிவங்கள்
உரைத்திடில் விளங்கிடுமோ?!!
மூங்கிலால் உடலெடுத்து
முரளியாய் ஆனபின்னே!
மூச்சுமுட்ட சுரங்களை
முழுவீச்சில் கொடுத்தாயே!!
மதுரத்தேன் இசையினிலே
மயங்கிய பொழுதினிலே!
மருதமாலைக் காற்றொன்று
மந்த இசை கொணர்ந்ததுவே!!
பாதாதிகேசம் அங்கே
பாடித் திளைக்கையில்!
பாதியில் தடுத்திட்ட
பாத்திறம் எதுவன்றோ?!!
துளையிட்ட குழல்களின்
துல்லிய ராகத்திலே
தவழ்ந்து கிடக்கையில்
தட்டி எழுப்பியது யாரோ?!!
யாரென்று கண்டவுடன்
வாயடைத்துப் போனேன்!
துளையில்லா குழலதுவின்
நாதத்தை கண்டேன்!!
வாய் இருக்கிறதென்று
வீண்வம்பு பேசியே
பொழுதைக் கழிக்க இயலா
சித்திரச் செல்வனவன்!!
நாவைத் துலட்டி
நன்மொழி பேசிடவே!
நித்தமும் சத்தமாய்
நம்பியவன் துடிக்கிறான்!!
துளையடைத்துப் போனதால்
முண்டியிட்ட மூச்சுகூட
களைப்படைந்து தளர்ந்து
முகாரி அங்கே பாடியதே!!
வாய்பேச முடிவோரெல்லாம்
வாய்மைதனை மறக்கையிலே!
வாஞ்சையாய் உன்குரலோ
வையமிதில் இணையாதோ?!!
பாதாதி கேசத்தை
பாதியிலே விட்டுவிட்டேன்!
கேசாதி பாதம் தொடுகிறேன்
கேட்டுக்கொள் மன்னவனே!!
பிறப்பணுவின் கோளாறோ?
பிறந்தபின் வந்ததுவோ?
பிழை எதுவாய் இருந்தாலும்
பாதகம் ஏதுமில்லை!!
கிள்ளையென அழகாய்
மொழிபேச தெரிந்திருந்தும்!
புறம்பேசி திரிவோரே
இத்தரணிதனில் ஏராளம்!!
உனக்கென இங்கே
மறுக்கப்பட்ட ஓருணர்வை
நினைத்து மருங்காதே
நிமிர்ந்து நடைபோடு!!
துளையிட்ட புல்லாங்குழலை
வாசிப்பதில் இல்லை அழகு!
துளையில்லாது அக்குழலின்
நுதல்வழி ராகம்வர
முயல்வகை செய்கிறாயே
அதுவே பேரழகு!!!
அன்பன்
மகேந்திரன்
68 comments:
அழகான கவிதை..அருமையான சிந்தனை..நன்றிகள் பல.
கவிதை வாசிக்கும்போது மனதில் ஏதோவொன்று நெருடுகிறது..
துளையிட்ட புல்லாங்குழலை
வாசிப்பதில் இல்லை அழகு!
துளையில்லாது அக்குழலின்
நுதல்வழி ராகம்வர
முயல்வகை செய்கிறாயே
அதுவே பேரழகு!!!
அழகாகச் சொன்னீர்கள்..வாழ்த்துகள்..
த.ம-2
Ithayathin aazham thodum arputha kavithai. Arumaiyana sinthanai.
TM 4.
உனக்கென இங்கே
மறுக்கப்பட்ட ஓருணர்வை
நினைத்து மருங்காதே
நிமிர்ந்து நடைபோடு!!
மிகவும் அருமையான வரிகள் அண்ணா நன்றி .
உனக்கென இங்கே
மறுக்கப்பட்ட ஓருணர்வை
நினைத்து மருங்காதே
நிமிர்ந்து நடைபோடு!!
துளையிட்ட புல்லாங்குழலை
வாசிப்பதில் இல்லை அழகு!
துளையில்லாது அக்குழலின்
நுதல்வழி ராகம்வர
முயல்வகை செய்கிறாயே
அதுவே பேரழகு!!!
kavithaiperazaku
ஆஹா... மனதை நெருடி, வருடிச் சென்றது கவிதை. பேச இயலாவிட்டால் என்ன... பேச்சைவிடச் சிறந்த ஆயுதமல்லவா மவுனம். நன்று மகேன். அதிலும்...
உயிர்சுமக்கும் உள்வெளியின்
உன்மத்த சுவாச மூச்சின்
உருமாற்ற வடிவங்கள்
உரைத்திடில் விளங்கிடுமோ?!
என்ற வரிகளை மிக ரசித்தேன்.
வணக்கம் மகேந்திரன் அண்ணா,
ஊனமுற்றோர், அல்லது வலுவிழந்தோர் எனச் சமூகத்தில் சுட்டப்படும் குழந்தைகளை, அக் குழந்தைகளின் இன்னோர் பக்கத்தினை அறியாது எம் சமூகம் ஒதுக்கி வைக்கின்றதே எனும் உண்மையினையும்,
புல்லாங்குழல் போன்று இந்த உறவுகளையும் நாம் மீட்டினால் அவர்களாலும் நிறைவாகச் செயற்பட முடியும் என்பதனையும் உணர்வைப் பெருக்கும் வரிகளினூடாகச் சொல்லியிருக்கிறீங்க.
நல்ல கவிதை அண்ணா.
இயற்கையோ செயற்கையோ
ஏதோ ஒன்றின் சோதனையில்..
அழகாக செதுக்கப்பட்ட சிலையில்
இறுதியில் கைதவறி ஏற்படும் வடுவைப்போல..
மனம்சுமக்கும் வேதனை..
முற்றுப்பெறா ஓவியங்களைக் கண்ணுறுங்கால்..
முத்திரைக் கவிதை!
//பிறப்பணுவின் கோளாறோ?
பிறந்தபின் வந்ததுவோ?
பிழை எதுவாய் இருந்தாலும்
பாதகம் ஏதுமில்லை!!
கிள்ளையென அழகாய்
மொழிபேச தெரிந்திருந்தும்!
புறம்பேசி திரிவோரே
இத்தரணிதனில் ஏராளம்!!
//
வலிமிகுந்த வரிகள்
உங்கள் துளை இல்லா புல்லாங்குழலின் மௌன ராகங்கள்
சோகமும் இனிமையும் கலந்த முகாரி தான் .
வார்த்தைக்கோவைகள் இசையாய் இழைகின்றன.
தெய்வீக கானம்!
துளையிட்ட புல்லாங்குழலை
வாசிப்பதில் இல்லை அழகு!
துளையில்லாது அக்குழலின்
நுதல்வழி ராகம்வர
முயல்வகை செய்கிறாயே
அதுவே பேரழகு!!!//
மனதை கொள்ளை கொள்ளும் வரிகள் அருமை அருமை....!!!!
ஒவ்வொரு கவிதையிலும் நீங்கள் நுழைக்கும் செய்தி பிரமிப்பு. கோடி பாராட்டுக்கள் !!
வாய்பேச முடிவோரெல்லாம்
வாய்மைதனை மறக்கையிலே!
வாஞ்சையாய் உன்குரலோ
வையமிதில் இணையாதோ?!!
>>
பொய்யுரைப்பதற்கு பதில் வாய் பேசாமல் இருப்பது எவ்வளவோ மேல்.
மாற்று திறனாளிக்களுக்கு கவி படைத்த உங்களுக்கு என் வணக்கங்கள் சகோ
பிறப்பணுவின் கோளாறோ?
பிறந்தபின் வந்ததுவோ?
பிழை எதுவாய் இருந்தாலும்
பாதகம் ஏதுமில்லை!!
தவறு எங்கிருந்தாலும் அதை
சரிசெய்ய முடியாவிட்டாலும்
அவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொணர்ந்தால்
துளையில்லா புல்லாங்குழலிலும்
மிக சிறந்த இன்னிசையை மீட்டிட முடியும்
தரமான கவிதை. வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை.
மிக மிக அருமை
படங்களுடன் பதிவைப் படிக்கையில் மனம் நெகிழ்ந்து போகிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 12
arumayana tholare
துளையிட்ட புல்லாங்குழலை
வாசிப்பதில் இல்லை அழகு!
துளையில்லாது அக்குழலின்
நுதல்வழி ராகம்வர
முயல்வகை செய்கிறாயே
அதுவே பேரழகு!!!
பேரழகுப் பெட்டகமாய் கவிதை வரிகள்.. வாழ்த்துகள்..
நல்ல சிந்தனை நண்பரே....
அன்புநிறை நண்பர் குமரன்,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் துரை டேனியல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புத் தங்கை சசிகலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
சரியாகச் சொன்னீர்கள் நண்பர் கணேஷ்,
எதைவிடவும் சிறந்த ஆயுதம் மௌனம் என்பதில் எனக்கு மிகுந்த
உடன்பாடு.
தங்களின் மேலான கருத்துக்கு என் மனம்நிறைந்த நன்றிகள்.
''உனக்கென இங்கே
மறுக்கப்பட்ட ஓருணர்வை
நினைத்து மருங்காதே
நிமிர்ந்து நடைபோடு!!..''
நிறைந்த கருத்துடைக் கவிதை.வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
புல்லாங்குழலைக்காட்டி எத்தனை பேருக்குத் தைரியம் சொல்லிவிட்டீர்கள்.அருமை !
குழல்வாய் வெளிவரும் ஓசை யாவுமே இனிய ராகமாவதில்லை. குரல்வழி வெளிவரும் வார்த்தைகள் யாவுமே நற்பயன் விளைப்பதில்லை. இங்கே துளையற்ற மூங்கிலின் முயல்வகையும் ரசிக்கப்படுகிறது. பிறப்போ, பிழையோ எதுவும் பாதகமில்லையென்றே ஆறுதல் மொழி பகன்று அளவளாவுகிறது. விழிகளிலும் விரல்களிலும் இடம்பெயர்ந்துவிட்ட நாவின் மொழியை நாவாரப் போற்றிப் பாடுகிறது. நம் உள்ளமும் அதிலே கொள்ளை போகிறது.
அற்புத சிந்தனைக்குப் பாராட்டுகள் மகேந்திரன்.
a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/
வாய் இருக்கிறதென்று
வீண்வம்பு பேசியே
பொழுதைக் கழிக்க இயலா
சித்திரச் செல்வனவன்!!
...... மிகவும் சிந்திக்க வைத்த வரிகள். அருமையான கவிதை.
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
மாற்றுத் திறனாளிகளுக்கான அழகான கவிதை.
//கிள்ளையென அழகாய்
மொழிபேச தெரிந்திருந்தும்!
புறம்பேசி திரிவோரே
இத்தரணிதனில் ஏராளம்!!//
அருமையான வரிகள்.
சவால்கள் நிறைந்த இவ்வுலகில் அதனை "நம்" முயற்சியால் நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதில்தான் உண்மையான சந்தோசம் இருக்கிறது.எல்லாம் நிறைவாக ஏற்கனவே அமையப்பெற்றவன் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது.இது தான் நான் புரிந்துகொண்டது.சரியா கவிஞரே?
கவிஞரின் சிந்தனை திறனும் கவித்திறனும் அற்புதம்.உங்கள் கவிப்பணிதொடர வாழ்த்துக்கள்.
அன்புநிறை சகோ நிரூபன்,
ஒதுக்கி வைத்தாலும் ஓய்ந்து போய்விடாது
ஓங்கி வளர வேண்டும் என்பதே இதன் உட்கருத்து.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
முற்றேன்று வைத்த முற்றுப்புள்ளி யொன்று அடுத்த முற்றி
தன்னுடன் இணைத்து தொடர் புள்ளியாய் ஆகிவர
மனம் ஏங்குகிறது நண்பரே.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
சரியாகச் சொன்னீர்கள், இக்கவியின் நினைத்து வைத்த
ராகம் முகாரி என்பது நிதர்சனமே.. ஆனாலும் அதற்கொரு
மோகனம் இசைத்து வைக்க என் மனதில் விளைந்தது இக்கவி.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராஜி,
செய்வதை நன்று செய்
நல்லதை இன்றே செய்
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
நேசத் தோழி சகுந்தலா,
சரியாகப் புரிந்துகொண்டீர்கள்.
இருக்கும் நிலை மோசமானதென்றால் அதை நாடும்
அதை மேம்படுத்தும் திணிவு வேண்டும்.
இயன்றும் இயலாது என்றறிந்தால்
அங்கே சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மோகன்திவ்யா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
சரியாக கருத்துரைத்தீர்கள்.
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
பெயரிலாது வந்து கருத்துரைத்துப் போனவருக்கு நன்றிகள் பல.
அன்புநிறை சகோதரி சித்ரா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் குப்புசாமி,
தங்களின் புரிந்துணர்தலுக்கு நன்றிகள் பல.
எல்லாம் நிறையப்பெற்றவ்ன் இங்கே
தவறிழைத்து செல்கையிலே,
இல்லையென்று நீ ஏன் கவலையுருகிறாய்.
நீ கவலையுறும் அளவுக்கு இந்த உலகில்
எதுவும் புதிதாக இல்லை. ஆகையால் உனக்குள்ள
குறைகளை மறந்து அதன் காரணத்தை தேடுவதை தவிர்த்து.
ஊக்கமுடன் நடைபோடு
புவனம் உன்னருகில் என தெரிவித்திருக்கிறேன்
இக்கவிதையில்.
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அருமை. அருமை.
வாழ்த்துகள்.
மாப்ள பல நேரங்களில் பொய்யுரைத்து பல்லிலித்து புகழ் தேடும் நம்மவர்களை விட இவர்கள் தான் டாப்பு..அருமயா சொல்லி இருக்கீங்க!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
ஊரில் சந்திக்கமுடியாமல் போனதுக்கு வருத்தப்பட்டேன்...
மற்றுமொரு தரமான உணர்ச்சிப்படைப்பு...
வாழ்த்துக்கள் சகோதரா...
வாய் இருக்கிறதென்று
வீண்வம்பு பேசியே
பொழுதைக் கழிக்க இயலா
சித்திரச் செல்வனவன்!!//
மனதை நெருடும் வரிகள்
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை விக்கி மாம்ஸ்,
சரியாகச் சொன்னீங்க....
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ ரெவெரி
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது தங்களை பார்த்து,
நலமா?
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வரோதயன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
ஆஹா! அற்புதமான கவிதை...
உணர்ச்சி பொங்கும் கவிதை...
அந்த உணர்விலே உள்ள
உயிரோட்டம் உணர வைத்த
பெரும் பொருள் அத்தனையும் அருமை...
முழுதும் படித்த பின்பு இதயம் ஏனோ? கனக்கிறது...
///உயிர்சுமக்கும் உள்வெளியின்
உன்மத்த சுவாச மூச்சின்
உருமாற்ற வடிவங்கள்
உரைத்திடில் விளங்கிடுமோ?!!////
மிகவும் அற்புதமான கருவேற்றம்...
படைப்பிற்கும் பகிர்விற்கு நன்றிகள் கவிஞரே!
//துளையிட்ட புல்லாங்குழலை
வாசிப்பதில் இல்லை அழகு!
துளையில்லாது அக்குழலின்
நுதல்வழி ராகம்வர
முயல்வகை செய்கிறாயே
அதுவே பேரழகு!!!//
மிகவும் அருமையான கவிதை அண்ணா.. மனதை நெருடுகிறது.
அழகான சொல்லாடல்.வாழ்த்துகள்
"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி
துளையில்லாப் புல்லாங்குழல்
துளைக்கிறது மனசை.
வார்த்தைகள் இல்லா நாவுக்கு
வழி சொல்கிறது கவிதை.
துளையில்ல புல்லாங்குழல் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Post a Comment