Sunday, 1 January 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-3)


ன்புநிறை தோழமைகளே 
 
அனைவருக்கும் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்று புதிதாய் பிறந்த இப்புத்தாண்டில் எல்லா வளமும் இனிதே
பெற்றிட மனமார வேண்டுகிறேன். 
 
இவ்வாண்டின் முதல் பதிவாக விடுகதைக் கவிதை ஒன்றை
பதிவு செய்கிறேன்.
 
இதோ விடுகதைக் கவிதை,
 

 


ந்தெழுத்தை தன்பால்
அழகாய் கொண்டது!
கணித சூத்திரமல்ல
புனித சூத்திரம்!!
 
ந்தும் தனித்து நின்றால்
சொல்லும் சொல்லின்
எண்ணும் எண்ணத்தின்
திண்மையை உரைத்து நிற்கும்!!

ந்தும் தனித்து நின்று
இடையெழுத்து திரிந்து
"இ" கரமாய் இருப்பது "ஆ" காரமாய்
மாறி நின்றால்
கார்மேகம் கூடி நிற்கும்
இருண்ட மங்கலான சூழலை
சொல்லி நிற்கும்!!!
 
முதலெழுத்து திரிந்து
"த" கர "அ" கரமாய்
மாறி நின்றால்
சூசகமாய் செயலை
கையாளும் முறையினை
பகன்று நிற்கும்!!
 
 
டையெழுத்து திரிந்து
"ச" கர "ஆ" காரமாய்
மாறி நின்று
கடையிரண்டு எழுத்துக்களுடன்
சேர்ந்து நின்றால்
சொல்லப்படும் வாக்கியத்தின்
மையப் பொருளை
கூறி நிற்கும்!!!

 
முதலும் மூன்றும்
தனித்து நின்றால்
முப்பொருள் படும்!
ஒன்றோ
வளர்ந்து தேயும்
தவழ் பொருளை
உணர்த்தி நிற்கும்!
மற்றொன்றோ
சீரிய நுட்பமான
நுண்ணறிவை சுட்டும்!
மூன்றாமதோ
பொருட்சொல்லல்ல வினைச்சொல் 
கட்டுப்பாட்டுடன் கண்ணியமாய் 
நடந்துகொள் என உச்சரிக்கும்!!
 
முதல் மூன்றும் 
தனித்து நின்றும்
அதில் முதலெழுத்து திரிந்து
"அ" கரமாய் நின்றால்
நாளொன்றின் பொழுதுகளில்
ஒருபோழுதின்
பெயர் சொல்லும்!!

னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.அன்பன்
மகேந்திரன்

52 comments:

Anonymous said...

குட் பிரைன் கேம் ....
வெண் / மதி , நமசிவாய , சந்தி
தமிழ் எண்கள் ?? ௧௨௩௪௫
விவ[ சா ]ரணை ...தந்திரம்
சாரி நாட் இன் ஆர்டர் .. plz adjust ...
இவ்ளோ தான் இப்போ தெரியுது ...
கரெக்டா சொன்னா மார்க் போடுங்க சார் ...

SURYAJEEVA said...

மன்னிக்கவும் தோழரே,
எனக்கு அந்தளவுக்கு அறிவு இல்லை, நாளை வந்து பதில் தெரிந்து கொள்கிறேன்...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

ஹேமா said...

யோசிக்க நேரமில்லை இண்ணைக்கு.திரும்பவும் வருவேன் !

வெங்கட் நாகராஜ் said...

நாளை மாலை வரை காத்திருக்கிறேன் நண்பரே.... :)

Unknown said...

1 மந்திரம்
2 மதி-நிலா,நூட்பம், மதித்து நட
3மந்தாரம்
4அந்தி
5தந்திரம்

இனிய ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

ஐந்தெழுத்து மந்திரத்தினை உச்சரிக்கைக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

Unknown said...

புலவர் அய்யா முந்தி விட்டார் முடிச்சை விடுவிக்க!

முடிச்சுகள் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டிருந்தன! பிரமாதம்!

ஆனாலும் இந்த தடவை சூத்திரத்திலேயே முடிச்சு விடுபட்டுவிட்டது!

சுதா SJ said...

அண்ணா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுதா SJ said...

அண்ணா எனக்கு இதை கண்டு புடிக்கும் அளவுக்கு அறிவு பத்தாது. அவ்வ்... புலவர் சொன்னது சரியா என்று பார்க்க உங்கள் விடைக்காக பிறகு வாறன்....

கீதமஞ்சரி said...

அடடா, தாமதமாய் வந்துவிட்டேனே... அழகாய் சிந்தித்து விடுகவிதை பகன்ற தங்களுக்கும் விடுவித்த புலவர் ஐயாவுக்கும் என் பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

நன்றாக மூளைக்கும் அதே சமயம்
மொழிப் பயிற்சிக்கும் பொறுமைக்கும் பயிற்சி தருகிறீர்கள்
அருமையான முயற்சி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7

குறையொன்றுமில்லை. said...

புலவர் அய்யா முந்தி விட்டார் முடிச்சை விடுவிக்க!

சசிகலா said...

அண்ணா பதில் சரியாய் சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு இல்ல
நீங்களே வந்து சொல்ற வரை காத்திருக்கிறேன் .

சத்ரியன் said...

மகேந்திரன் அண்ணே,

அருமையான கவிதைப்புதிர். என்ன ஒன்னு, என் அறிவுக்கு தக்கின கேள்விகளா இல்ல.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Shakthiprabha said...

ஹிஹி விடை சொல்லிட்டாங்க.... இல்லாட்டியும் நான்........ சொல்லியிருக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன்:D

MANO நாஞ்சில் மனோ said...

நமக்கு இம்புட்டு அறிவு இல்லீங்க கவிஞரே....!!!

Anonymous said...

௧. மந்திரம்
௨. ..........
௩. மந்தாரம்
௪. தந்திரம்
௫. சாரம்
௬. மதி
௭. அந்தி

ஞா கலையரசி said...

சிந்திக்க வைக்கக் கூடிய நல்லதொரு விடுகவிதையைப் புத்தாண்டின் முதற் பதிப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். உங்களது இந்த அரிய முயற்சி தொடர வாழ்த்துகிறேன்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து!

சென்னை பித்தன் said...

நன்று.

த.ம.9

நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

Anonymous said...

௨. மறம் - என்பது ஒருவேளை விடையாக இருக்கலாம் என நினைக்கிறேன் மகி அண்ணா .
ஏனெனில் திரிபுக் குறிப்புக் காணப்படவில்லையே ......

kowsy said...

மந்திரம் அல்லது சிவாயநம
மந்தாரம்
தந்திரம்
சாரம்
மதி நுட்பம்
அந்தி

நல்லா மூளைக்கு வேலை கொடுக்கின்றீர்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை தோழமைகளே,
இதோ விடை சொல்லும் நேரம் வந்துவிட்டது.


மந்திரம் என்பது தான் விடைமந்திரம்
மந்தாரம்
தந்திரம்
சாரம்
மதி
அந்தி

அழகாய் விடை அளித்தவர்களுக்கும்
முயற்சி செய்தவர்களுக்கும் நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,

தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
இரு விடைகள் சரியாக சொல்லியிருகீங்க சகோதரி.

முயற்சி செய்தமைக்கும் இனிய கருத்திட்டமைக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
வாங்க சகோதரி நாளை மாலை.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்,

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்.,
வாங்க நண்பரே நாளை மாலை.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்,

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,

அழகாக விடை சொல்லிய தங்கள் தமிழ்ப் பாதங்களுக்கு
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
பூடகமாய் பதில் கூறி சென்றிருக்கிறீர்கள்.
தங்களின் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வேங்கடபதி,

புலவரய்யா தங்களை முந்திவிட்டார்.
முயற்சி செய்தமைக்கும் ஆழ்ந்த அழகிய கருத்திட்டமைக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத்தம்பி துஷி,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புலவரய்யா சொன்னது மிகச் சரியான விடை..
முயற்சி செய்தமைக்கும் அழகிய கருத்திட்டமைக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
தாமதமென்றாலும் சரியான விடையை முன்மொழிந்திருக்கிரீர்கள்.
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனம்கனித நன்றிகள்.

சிவகுமாரன் said...

Too late to tell the answer.
இன்னும் நிறைய இது மாதிரி சொல்லுங்கள்.
இப்படியாவது தமிழ் வளரட்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனம்கனித நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா.,
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை சசிகலா.,
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சத்ரியன்.,

தங்களின் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
ஆஹா அவங்களா நீங்க???//
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ.,
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

சபாஷ் சகோதரி ஸ்ரவாணி,

சரியான பதில்கள்.
தொடர்ந்து முயற்சி செய்யும் தங்கள்
இனிய உள்ளத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கலையரசி.,

தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.

முயற்சி செய்தமைக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கும் இனிய கருத்திட்டமைக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சிற்கினிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா..,

நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பதா???
வேண்டாமய்யா
நீங்கள் என் தளம் வந்தாலே எனக்கு பேரின்பம்.

தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சிற்கினிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
முதலிரண்டு பாக்களும்
மந்திரம் என்ற சொல்லையே உச்சரிக்கின்றன.

தங்களின் தொடர் வருகைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,

அழகாக விடை சொல்லியிருக்கிறீர்கள்.
தங்களின் மேலான முயற்சிக்கும் கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா.,

தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிவகுமாரன்,
வாருங்கள் நண்பரே,
நீங்கள் கூறியதுதான் என் நோக்கமும்.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

சரியான விடைபகன்ற புலவரய்யா, சகோதரி இராஜராஜேஸ்வரி,சகோதரி ஸ்ரவாணி,
சகோதரி கீதா, சகோதரி சந்திரகெளரி ஆகியோருக்கும்
முயற்சி செய்த மற்றைய தோழமைகளுக்கும் எனது
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
கோவிச்சுக்க வேணாம்,
நேற்று மிருக காட்சி சாலைக்கு போயிட்டேன், அதான் வர முடியலை.
முதலில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...

தமிழ்க் கவியில் அழகு தமிழில் விடுகதை போட்டிருக்கிறீங்க அண்ணா. அடியேனின் சிற்றறிவுக்கு ஏதும் புலப்படவில்லை, மன்னிக்கவும்.

Kanchana Radhakrishnan said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்ள்!

vetha (kovaikkavi) said...

விடுகதையை விட்டிட்டு பின்னால் வருகிறேன் தொடருங்கள் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Post a comment