Powered By Blogger

Wednesday 12 October 2011

தலைநிமிர்ந்து நடைபோடு!!




கொக்கரக்கோ கொக்கரக்கோ 
கொண்டச்சேவல் கொக்கரக்கோ!
கொக்கரக்கோ கொக்கரக்கோ
சேவல்சண்டை கொக்கரக்கோ!!
மல்லியப்பூ சேவல் நான்
மார்நிமித்தி வந்திருக்கேன்!
ஊரிலுள்ள சேவல்களா
சண்டைக்கு ஓடியாங்க!!


பஞ்சவர்ண கிளிபோல 
வண்ணம்பூசி வந்திருக்கேன்!
பாண்டிநாட்டு சேவலெல்லாம்
பாஞ்சியிங்கே ஓடியாங்க!!

காலில் கத்திகட்டி
பம்மாத்து செய்யாம!
வெப்போர் செய்திடவே
வெரசா ஓடியாங்க!!
வெறுங்கால் சேவலின்னு
சுளுவாக நினைக்காத!
விருமாயி வளர்த்த சேவல்  
வீராப்பா வந்துருக்கேன்!!
வேம்பாத்து சேவலய்யா
வெடப்பாக வந்துருக்கேன்!
வேற்றூறு சேவல்களா
வேகமாக ஓடியாங்க!!
நாக்குத்தண்ணி வெளியவர
நாலுநாளு நீந்திவந்தேன்!
நெஞ்சிலே தில்லிருந்தா
நேருக்குநேர் வந்திடுங்க!!
கொளுத்த ஆட்டு ஈரல்
கொத்துகொத்தா சாப்பிட்டு
கொடநாடு வந்துருக்கேன்
போர்க்கொடி ஏந்தியிங்கே!!
பல ஊரு சேவலோட
பத்துதண்ணி பார்த்துபுட்டேன்!
எகத்தாளம் செய்பவனை
எதிர்த்துநிக்க வந்துருக்கேன்!!

வேலைவெட்டி பார்க்காம
வெட்டிப்பேச்சு பார்ப்பவன!
காலிலே வேல் கட்டி
வெளுத்தெடுக்க வந்திருக்கேன்!!


சோத்தமட்டும் தின்னுபுட்டு
சோம்பித் திரிபவன
சோடியொன்னு கூட்டிவந்து
சுளுக்கெடுக்க வந்துருக்கேன்!!

போதைமட்டும் போதுமின்னு
பேத்தலாக பேசிபுட்டு
மிதப்பிலே திரிபவன
பேத்தெடுக்க வந்துருக்கேன்!!


தரணியெல்லாம் தளமிருந்தும்
விளைநிலத்த கூறுபோட்டு
கூவிகூவி விற்பவன
கொத்தியெடுக்க வந்துருக்கேன்!!

தின்னசோறு தினமுமிங்கே
திக்காம தொண்டைக்குள்ளே
திமுதிமுன்னு இறங்குமைய்யா
உழைச்சி நீயும் சாப்பிட்டா!!


என்னைப்போல யாருன்னு 
வீம்பாக பேசாம
வெற்றியின் விளைச்சலுக்கு
வித்தொன்னு போட்டிடு!!

தப்புன்னு தெரியுறத
தள்ளியங்கே வைச்சிபுட்டு
என்னைபோல நீயும்
தலைநிமிர்ந்து நடைபோடு!!



அன்பன்
மகேந்திரன்

70 comments:

shanmugavel said...

அருமையான கவிதை நண்பரே!ஓடி ஓடி சேவல் பிடித்த நினைவுகள் !

இராஜராஜேஸ்வரி said...

என்னைப்போல யாருன்னு
வீம்பாக பேசாம
வெற்றியின் விளைச்சலுக்கு
வித்தொன்னு போட்டிடு!!

தப்புன்னு தெரியுரத
தள்ளியங்கே வைச்சிபுட்டு
என்னைபோல நீயும்
தலைநிமிர்ந்து நடைபோடு!!

அருமையான வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

படங்கள் அருமை. ஆடுகளத்தை அருமையாக காட்சியாக்கியிருக்கிறது. பாராட்டுக்கள்.

Anonymous said...

கொக்கரக்கோ கொக்கரக்கோ ..

எனக்கு பிடித்த வரிகள்...
அப்படியே ஷாக் ஆயிட்டீங்களா சகோதரரே...-:)

சேவல் என்னைப்பார்த்து சொல்வதால் செய்ய முயல்கிறேன்....

கொக்கரக்கோ கொக்கரக்கோ ...

கடம்பவன குயில் said...

சேவல்கூவியாவது இந்த பாரத தேசத்து அரசியல்வாதிகளும் ஊழல்மன்னர்களும் விழிக்கிறார்களா என்று பார்ப்போம்.

நல்ல பாடல். நல்ல காட்சி

கோகுல் said...

வணக்கம் நண்பரே! சிறிது ஓய்வுக்கு பின் தலைப்பைப்போலவே தலை நிமிர்ந்து நடை போட்டு வந்துள்ளீர்கள்!

சேவல் மூலம் சேதி புதுமையாவும்,அருமையாவும் இருக்குங்க!

மதுரை சரவணன் said...

arumaiyaana kokkorokko kavithai..vaalththukkal

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்
தங்களின் அழகிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் பாராட்டுக்கும், அழகிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஆஹா
உடனே சேவல் போல மாறிட்டீங்களா
சரிதான்...

நண்பர் ரேவேரி தங்களின் இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

நண்பர் கடம்பவனக் குயில்

தேசத்தின் விடியலுக்காய்
கூவும் இந்த சேவலின் கொக்கரக்கோ
கூறாக பாயவேண்டும் அவர்கள் காதில்
என்பதே என் மாறாத எண்ணம்.
தங்களின் அழகிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
ஓய்வு சற்று அதிகமாக எடுத்துவிட்டேன்..

தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மதுரை சரவணன்
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

சேவலைப் போல வார்த்தைகளும்
படைப்பில் சீறிப் பாய்கின்றன
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 7

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை...அருமை...

கூடல் பாலா said...

ரொம்ப வீரமான சேவல்தான் !

Sakunthala said...

சேவலை கொண்டு சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தவறுகளையும்
சாடியிருப்பது மிகவும் அருமை

Unknown said...

மாப்ள அருமைய்யா!

குறையொன்றுமில்லை. said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி.

வித்தியாசமான கற்பனையில் ஒரு கவிதை தந்திருக்கிறீங்க.

சேவற் சண்டையினூடாக ஊழைத்து வாழ்வதன் முக்கியத்துவத்தை உறைக்கும் படி சொல்லியிருக்கிறீங்க.

SURYAJEEVA said...

//கொளுத்த ஆட்டு ஈரல்
கொத்துகொத்தா சாப்பிட்டு
கொடநாடு வந்துருக்கேன்
போர்க்கொடி ஏந்தியிங்கே!!//

//போதைமட்டும் போதுமின்னு
பேத்தலாக பேசிபுட்டு
மிதப்பிலே திரிபவன
பேத்தெடுக்க வந்துருக்கேன்!!//

அம்மாவ தான சொல்றீங்க, கரெக்டா கண்டு பிடிச்சுட்டேனா?

Unknown said...

// தரணியெல்லாம் தளமிருந்தும்
விளைநிலத்த கூறுபோட்டு
கூவிகூவி விற்பவன
கொத்தியெடுக்க வந்துருக்கேன்!!//

சேவல் சண்டைதன்னை
செம்மையான கவியாக்கி
தேவையான அறிவுரையை
தேடியிங்கே தந்தீங்க
கூவிகூவி விளைநிலத்த
கூறுபோட்டு விற்பவன
தாவிதாவி கொத்துமென
தடுக்கவழி சொன்னீங்க

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

சேவல் சொல்லும் அறிவுரை அருமை நண்பரே

rajamelaiyur said...

அருமை அருமை அருமை அருமை

rajamelaiyur said...

இன்று என் வலையில் ...

பாவம் நடிகர் விஜய்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

முனைவர் இரா.குணசீலன் said...

மண்ணின் மரபையும்
மனித வாழ்வியலையும்

தாங்கள் சொன்னவிதம் பாராட்டுதலுக்குரியது..

தூங்கும் மாக்களையும்
விழித்தெழச்செய்வது போல உள்ளது தங்கள் கவிதை..

முனைவர் இரா.குணசீலன் said...

வேலைவெட்டி பார்க்காம
வெட்டிப்பேச்சு பார்ப்பவன!
காலிலே வேல் கட்டி
வெளுத்தெடுக்க வந்திருக்கேன்!!

நல்லாக் கேட்டீங்க நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

சோத்தமட்டும் தின்னுபுட்டு
சோம்பித் திரிபவன
சோடியொன்னு கூட்டிவந்து
சுளுக்கெடுக்க வந்துருக்கேன்!!


சுளுக்கெடுத்த வலியோடு
சுருக்குன்னு கேட்டீங்க..

ராஜா MVS said...

நல்ல ஒரு அருமையான நினைவூட்டல்... நண்பரே...

ராஜா MVS said...

ரொம்ப தாமதமாக வந்துவிட்டேனோ???

MANO நாஞ்சில் மனோ said...

நாட்டுப்புற சொல் வழக்குல கவிதை சூப்பரா இருக்கு மகேந்திரன்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கும்மியடிச்சு சத்தமா பாடனும் போல இருக்கு மக்கா...!!!

சக்தி கல்வி மையம் said...

அருமையான வரிகள்,
அசத்தலான கவிதை.

சாகம்பரி said...

படிக்கும்போதே குரலும் உச்சரிப்பும் வீறு கொள்கிறது. அருமை.

அம்பாளடியாள் said...

கவிதை வரிகள் அருமை சகோ .வாழ்த்துக்கள் .

M.R said...

கவிதை அருமை நண்பரே

vimalanperali said...

ஆகா,,,,அருமையான படங்களின் பதிவு.வரிசையான ரசனைமிக்க உயிர்பதிவு.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நண்டு ராஜசேகர்
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கூடல்பாலா
தங்களின் அழகிய இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி சகுந்தலா
தங்களின் மேன்மையான இனிய
கருத்துரைக்கு என் நெஞ்சார்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி
தங்களின் அழகிய இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரூபன்
தங்களின் மேன்மையான இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா

ஆஹா ,,, கோர்த்து விடாதீங்க சாமி.....

போதையில் போக்கத்துபோய்
தறிகெட்டு திரியும் அனைவரையும் தான்
இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்...

தங்களின் இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே.

கவியுரைத்து எம் கவியை
பட்டைதீட்டினீர்..
மெருகும் கூடிட்ற்று
அழகும் கூடிட்ற்று


தங்களின் இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு
தங்களின் அழகிய இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே
தங்களின் இனிய அழகிய
விரிவான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜாMVS,

தாமதம் இல்லை நண்பரே,
தங்களின் நேரத்தை பொறுத்து
எப்போது வேண்டுமானாலும் வந்து
படியுங்கள். தங்களின் கருத்துகளுக்காய்
எப்போதும் காத்திருப்பேன்.

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ

வாங்க மக்களே...
ஒரு கும்மியாட்டம்
போடுவோம்..

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி..

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள் ..

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ் ..

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் விமலன் ..

தங்களை வசந்தமண்டபம்
வாசப்பன்னீர் தெளித்து
வரவேற்கிறது....

தொடர்ந்து வாருங்கள்..

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

சென்னை பித்தன் said...

கவிதை அருமை.

மாய உலகம் said...

சேவலைப்பற்றிய கலக்கலான கவிதை நண்பரே.. சூப்பர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சேவல்களின் படங்கள் அருமை. நேரில் பார்ப்பது போலவே இருக்கின்றன.

கவிதை வெகு அழகாக உள்ளது.
படிக்கும் போது சலங்கை ஒலியுடன் கூடிய இரட்டை மாட்டு வண்டியில் கிராமத்து சாலையில், இருபுறமும்பசுமையான வயல்களைப் பார்த்தபடி பயணிப்பது போன்ற ஒரு சுகமான உணர்வு ஏற்பட்டது.

//தப்புன்னு தெரியுறத
தள்ளியங்கே வைச்சிபுட்டு
என்னைபோல நீயும்
தலைநிமிர்ந்து நடைபோடு!!//

சேவல் போலவே தலைநிமிர்ந்து நிற்கும் வரிகள். பாராட்டுக்கள்.
105 ஆவது Follower ஆகியுள்ளேன்.
அன்புடன் vgk

[Indli 8 to 9]

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ் ..

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை கோபாலகிருஷ்ணன் ஐயா

தங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.

கவிதையை நன்கு வாசித்து அழகுற கருத்து சொன்னமைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நீங்கள் என் வலைப்பூவை தொடர்வதற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

//தரணியெல்லாம் தளமிருந்தும்
விளைநிலத்த கூறுபோட்டு
கூவிகூவி விற்பவன
கொத்தியெடுக்க வந்துருக்கேன்!!//

சரியாகச் சொல்லி இருக்கீங்க நண்பரே.. விளைநிலங்கள் எல்லாம் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டி விட்டால் இருக்க இடம் இருந்தாலும் உண்ண உணவிருக்காது....

vetha (kovaikkavi) said...

வீரம், முயற்சி, தலை நிமிர்வு அத்தனையும் வீரமாகக் கூறியுள்ளீர்கள் வாழ்த்துகள். அருமை சகோதரா!
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்.

தங்களின் இனிய அழகிய
கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

காட்டான் said...

படங்களும் கவிதையும் அருமை நான் சொல்வது சரிதான்னு நிரூபிக்கிறது உங்கள் ஆக்கங்கள் எல்லா ஆக்க்கங்களையும் தயவு கூர்ந்து சேமித்து வையுங்கள் இன்னும் சொல்லப்போனால் பின்நாளில் ஒரு புத்தகமாய் வெளியிட்டுங்கள் நான் அதற்கு ராமருக்கு அணில் செய்ததைபோலவாவுதல் உதவி செய்ய காத்திருக்கிறேன்..

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா
சேமித்து வைத்துவிட்டேன்
நிச்சயம் புத்தகம் வெளியிடுவேன்.
உங்களைப்போன்றோர் உதவியுடன்...
மலை எனக்கு மடுதான் மாமா......

Post a Comment