Powered By Blogger

Tuesday 4 October 2011

இதயம் இறக்கிலனே!!






பதிவுலகில் கால்பதித்து இருநூறாவது நாள், நாட்டுப்புறக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த என்னை பன்முகக் கவிதைகளை புனையவைத்த வசந்தமண்டபம் கட்டி முடித்து இன்று இருநூறாவது நாள்.

வசந்தமண்டபம் நாடிவந்து வாசமிகு மலர்கள் முகர்ந்து, அங்கே வீசும் தென்றல் காற்றின் சுகம் காண வந்தவர்கள் நூறு தோழமைகள். என்னையும் என் எழுத்துக்களையும் கருவாய் இருந்து உருவேற்றும்
அந்த நூறு அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,

இதோ அவர்களுக்காய் இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்.




மகிழம்பூ வாசமது
மாறாது மணந்திருக்கும்!
மல்லிகைப்பூ பந்தலிலே
மெல்லிசை மீட்டிவரும்!!

தென்பொதிகை தென்றலங்கே
தவழ்ந்து விளையாடும்!
சிறகடிக்கும் செவ்வண்டுகள்
சிறப்பிசை பாடிவரும்!!

சுட்டெரிக்கும் ஆதவனும்
சலனமாய் தன்கதிர்களை
சுள்ளெனப் பாய்ச்சாது
சுகராகம் பாடிவரும்!!

காலைப் பொழுதாகிடினும்
தண்ணிலவு தன்னிலை
தனக்கென வேண்டுமென
தவமாய் தவமிருக்கும்!!




நாடி வந்தவர்களை
வாசப் பன்னீர் தெளித்து
வெண்சாமரம் வீசி
வரவேற்கும் வசந்தமண்டபம்!!

வசந்த மண்டபத்தின்
வாஞ்சைமிகு தோற்றத்தை
தூண்களாய் தோளேற்றி
வடிவம் கொடுத்தோரே!!

சிறியேனின் எழுத்துக்களை
சிறகடிக்க வைத்து
புவனம் பரவச் செய்த
புண்ணிய நட்போரே!!

இருநூறு நாட்களென
எண்ணியிருந்த போது
நூறு தூண்களாய்
தூக்கி நிறுத்தியோரே!!




பின்தொடரும் நீவீரை
வசந்த மண்டபம்
வாழ்நாள் உளமட்டும்
இதயம் இறக்கிலனே!!


அன்பன்
மகேந்திரன்


83 comments:

Unknown said...

கவிதை சூப்பர் நண்பா

இருநூறாவது நாளுக்கு வாழ்த்துகள்

மாய உலகம் said...

இருநூறாவது நாளை தொட்ட நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...

தொடர்ந்து கலக்குங்க அன்பரே!.. தொடர்கிறோம்... வெற்றிகொடி நாட்டுங்கள்... வசந்த மண்டபத்தில் தினமும் இளைப்பாற வந்துகொண்டே இருப்போம்.. :-)

கடம்பவன குயில் said...

இருநூறாவது நாளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. தங்கள் நாட்டுப்புற கலைகளை சிறப்பித்துச்சொல்லும் கவிகள் அனைத்தும் அனைவராலும் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவை. நீங்கள் தேர்ந்தெடுத்து இணைத்த புகைப்படங்கள் உங்களின் உழைப்பை பறைசாற்றியவையே..

தங்கள் பதிவுகள் இன்னும் அதிகமானோரை சென்றடைய வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

200 ஆ

M.R said...

200 வது நாள் மேலும் வளர்ந்து பல ஆயிரம் நாட்கள் தொடர்ந்து கவிமழை
பொழியட்டும் தங்கள் வலை

வாழ்த்துக்கள் நண்பரே

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்...

ராஜா MVS said...

[ma]200வது நாளுக்கு வாழ்த்துக்கள்...[/ma]
நண்பரே....

சென்னை பித்தன் said...

200--இது முதல்படி!மேலும் பல படிகள் ஏறிச் சிறக்க வாழ்த்துகள்!

Unknown said...

வாழ்த்துக்கள் மகி இன்னும் சிறப்புற

Yaathoramani.blogspot.com said...

வெற்றி முரசு கொட்டும் நூறாவது நாளுக்கும்
நூறு பின் தொடர்பவர்களை மிக குறுகிய காலத்தில்
பெற்றமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 9

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு நூறு நாட்களைத் தொட்ட உங்கள் வலைப்பூ மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து பூக்கட்டும் நண்பரே.....

இன்று எனது பக்கத்தில் சூரியனார் கோவில்..... முடிந்தால் பாருங்களேன்....

கோகுல் said...

நாட்கள் இரு நூறு,
பின் தொடர்வோர் ஒரு நூறு.

வாழ்த்துக்கள் நண்பரே!
மேலும் இந்தப்பதிவுலகில்
பல நூறுகள் படைக்க!

Anonymous said...

இன்னும் பல நூறு நாட்கள் வரவேணும் என் சகோதரனின் பதிவுகள்...

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,

நன்றி மறவாப் பெருந் தன்மையோடு நல்லதோர் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

பதிவுலகில் தொடர்ந்தும் பல படைப்புக்களால் எம்மை அசத்துங்கள்.

உங்களின் நல் மனசிற்குச் சான்றாக இக் கவிதை அமைகின்றது, பதிவுலகில் கவிதைகளாலும், காத்திரமான படைப்புக்களாலும் இன்னும் பல அன்பு உள்ளங்களைக் கொள்ளை கொள்ள என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Unknown said...

இருநூறு நாட்களய்யா-என்
இதயமிதை வாழ்த்துதய்யா
கருவாகி வந்ததய்யா-நல்ல
கவிதைகளை தந்ததய்யா
திருவாக வசந்தமெனும்-மண்டப
திருப்பெயரும் பெற்றதய்யா
உருவாகி உயர்ந்தய்யா-வளர
உம்பெயரும் வாழ்கய்யா

புலவர் சா இராமாநுசம்

பெருமாள் பிரபு said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா!! தொடரட்டும் நற்பணிகள்!!!

மும்தாஜ் said...

இருநூறாவது நாளை தொட்ட நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்...

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

காந்தி பனங்கூர் said...

சதத்துக்கும், இரட்டை சதத்துக்கும் வாழ்த்துக்கள். தங்களின் நன்றியுரைக் கவிதையும் அருமை நண்பரே.

K said...

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா! கவிதை அருமை!

இராஜராஜேஸ்வரி said...

வசந்தமண்டபம் கட்டி முடித்து இருநூறாவது நாள்..

வாழ்த்துகள்

பாராட்டுக்கள்..

வாழக வளமுடன்.. வளர்க நலமுடன்

Unknown said...

வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பா..

வசந்த மண்டபம் இன்னும் பல்லாண்டுகள் அழகுடன் திகழவேண்டும்..

என்னைப் போன்ற பல்லாயிரம் பார்வையாளர்கள் வருகை தந்து மண்ணின் மரபுகளை உணரவேண்டும் என்பதே என் ஆவல்..

வாழ்க வளமுடன்!!

குறையொன்றுமில்லை. said...

200- வது நாளைத்தொட்டதுக்கு வாழ்த்துக்கள். வசந்தமண்டபம் இன்னும் பல படிகளை வெற்றியுடன் தொட வாழ்த்துக்கள். 101- வது ஃபாலோவராக இணைந்துளேன்

Sakunthala said...

200 நாட்களை தொட்டதற்கு நன்றி உரைக்கும் விதமாக தாங்கள்
படைத்துள்ள கவிதை மிக அருமை
தங்களிடம் இன்னும் பல பயனுள்ள படைப்புகளை
எதிர் பார்க்கிறோம்
வாழ்த்துக்கள் தோழரே

F.NIHAZA said...

வாழ்த்துக்கள் சகோ....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் வைரை சதிஷ்
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜேஷ்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கடம்பவன குயில்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சூர்யஜீவா
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஷ்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜா MVS
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமணி
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் வெங்கட் நாகராஜ்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரெவெரி
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

rajeshbabu said...

Vazhukkal ethupol pala eranuru kana vazhuthukerom

rajeshbabu said...

Vazhukkal ethupol pala eranuru kana vazhuthukerom

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு புலவர் ஐயா
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு தம்பி பெருமாள் பிரபு
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு தோழி மும்தாஜ்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு ரத்னவேல் ஐயா
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் காந்தி பனங்கூர்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் Powder Star - Dr. ஐடியாமணி
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் விக்கி மாம்ஸ்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நண்டு ராஜசேகர்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் முனைவர்.இரா.குணசீலன்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி சகுந்தலா
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி.
நிச்சயம் என்னால் முடிந்த அளவு படைப்புகள் தரமானதாக
கொடுக்க முயல்கிறேன்.
நன்றி,

மகேந்திரன் said...

அன்புத் தோழி நிஹசா
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜேஷ்பாபு
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

200 மேலும் 200 மடங்காக பெருக வாழ்த்துக்கள்.
எங்களுக்கான கவிதைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

மகிழம்பூ வாசமது
மாறாது மணந்திருக்கும்!
மல்லிகைப்பூ பந்தலிலே
மெல்லிசை மீட்டிவரும்!!

தென்பொதிகை தென்றலங்கே
தவழ்ந்து விளையாடும்!
சிறகடிக்கும் செவ்வண்டுகள்
சிறப்பிசை பாடிவரும்!!

ஆகா.... அருமையான சந்தக் கவி மிக்க மகிழ்வாய் உள்ளது சகோ தங்கள் கவிதைநடை பார்க்கும்போது .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டும் போட்டாச்சு ..........

சாகம்பரி said...

சற்று தாமதமான வாழ்த்துக்கள் சகோ. வசந்த மண்டபத்தின் நூறாயிரம் சங்கத்தமிழ் கவிதைகளின் அணிவகுப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

கவிதை மிக அருமை
இருநூறாவது நாளுக்கு எனது வாழ்த்துகள்.
இன்னும் பலபல கவிகள் படைத்து கண்களும் மனதும் நிறைவடைய தொடர்ந்து எழுதுங்கள்..

வசந்த மண்டபம் முழுவதும்
வசந்தங்கள் மலர்களின்
வாசங்களோடு வீசி மகிழட்டும்
வந்தோரையும் மகிழ்த்தட்டும்

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்!!!

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் கவிதை அருமை அருமை!!!! ம்ஹும் பாருங்க இன்னைக்குதான் உங்கள் பாலோவரா ஆகி இருக்கேன், நான் உங்க பாலோவர்னே நினச்சிட்டு இருந்தேன் ஸாரி....

vetha (kovaikkavi) said...

இருநூறாவது நாளுக்கு வாழ்த்துகள்

மேலும் மேலும் சிறப்படைய நல் வாழ்த்துகள்.
சிலபேருடைய தளங்களில் என்னால் கருத்திட முடியவில்லை உதாரணம் சகோதரர் இரா. குணசீலன், புலவர் ஐயா இராமானுயம் போன்றோருக்கு இடமுடியுதில்லை உடனே ஆட்டோமட்டிக்காக அழியுது. என்ன செய்வது என புரியவில்லை.
வேதா. இலங்காதிலகம்
http://www.kovaikkavi.wordpress.com

இராஜராஜேஸ்வரி said...

வசந்தமண்டபம் கட்டி முடித்து இன்று இருநூறாவது நாள்.


வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ராம்வி
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சாகம்பரி
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மலிக்கா
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சி.பி.
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மனோ
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள..
இருநூறாவது நாட்களுக்கு வாழ்த்துக்கள்.. 
நீங்கள் எங்கு சுற்றினாலும் நாட்டுப்புற கலை வடிவங்களை விடாதீர்கள்.. பதிவுலகில் நாட்டுப்புற கலை வடிவங்களை தாங்கி வரும் தலங்களில் உங்கள் தலம் முக்கியமானது..

மாலதி said...

உங்களின் எழுத்து இன்னும் பலநூறு ஆண்டுகள் மலர்ந்து மணம் வீசி உன்னத மான குமுகத்தை உண்டாக்கட்டும் சிறந்து விளங்க வேண்டுகிறேன் பாராட்டுகள் தொடருங்கள் ....

நாவலந்தீவு said...

வாழ்த்துக்கள் நண்பா...

Unknown said...

வாழ்த்துக்கள் மாப்ள!

மகேந்திரன் said...

வணக்கம் காட்டான் மாமா
நிச்சயம், முட்டையை அடைகாப்பது போல காத்து வைத்திருக்கிறேன்.
நீங்கள் என் மீது கொண்ட நம்பிக்கைக்கும் அழகிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி மாலதி
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்
அழகிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் முத்தரசு
தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
அழகிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

தங்களின் வாழ்த்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள் விக்கி மாம்ஸ்.

இராஜ முகுந்தன் said...

இலங்கட்டும் இன்னும்
இருநூறுகள் பல கண்டு.
வாழ்த்துக்கள் அண்ணா.

Post a Comment