Powered By Blogger

Friday, 2 September 2011

சந்ததிகள் வாழவேனும்!!


அன்றோ............

மந்தாரச் சோலையில 
மரிக்கொழுந்து வாசமடி!
மரிக்கொழுந்து வாசத்தில
மனசெல்லாம் குளுந்ததடி!!
வெத்தலை வேலிதாண்டி
வேப்பம்பூ வாசமது!
முல்லைப்பூ மனம்போல  
ஊரெல்லாம் மனந்ததடி!!
சித்தகத்தி பூவெல்லாம்
கொத்துகொத்தா பூத்ததடி!
சிறுபிள்ள போலநானும்
சிறகடிச்சி வந்தேனடி!!



படபடன்னு பறந்துவந்த
பட்டாம்பூச்சி பிடிக்கப்போயி
காலடியில் சானம்பட!
ஓடிவந்த ஓடையில
கால்கழுவி வந்தொமடி!!
கால்நடையா சாலையில
சாத்தூரு போனாலும்!
சுத்தமான காத்துவந்து
சந்தமெல்லாம் பாடிச்சடி!!

கமகமக்கும் காய்கறிய
சந்தையில வாங்கிவர
கோணிப்பைய எடுத்துக்கிட்டு
ஊர்வலமா போனோமடி!!

நாட்டாரு கடையினிலே
மளிகைப்பொருள் வாங்கினாலோ!
காகிதத்தில் அழகாக
பொட்டலம்தான் போட்டனரே!!


பிளாஸ்டிக் என்றசொல்லே
காதால கேட்டதில்ல
இயற்கையான பொருளெல்லாம்
புழக்கத்தில இருந்ததடி!!

இன்றுபோட்ட குப்பையெல்லாம்
நாளைபார்த்தா இருக்காதே
அத்தனையும் மக்கிபோயி - ஊரே
அழகாக இருந்ததடி!!



இன்றோ..........

இன்றுபோட்ட குப்பையது
மக்கிப்போக வேணுமின்னா
முன்னூறு வருசமாம்
முழுசா படிச்சி சொன்னாங்க!!

பிளாஸ்டிக் என்ற சொல்லோ
பிசாசு போலாச்சி
செயற்கை பொருளெல்லாம் - நம்மை
அடிமையா ஆக்கிடுச்சி!!



மளிகைக் கடையெல்லாம்
மிகப்பெரிய கடையாச்சு
பொட்டலம் போட்டதெல்லாம்
பிளாஸ்டிக் பைக்குள்ளே அடங்கிடுச்சி!!

காய்கறி வாங்கப்போனா
காத்துவாங்க போறதுபோல
கையவீசி போறாங்க
காசமட்டும் எடுத்துக்கிட்டு!!



சொகுசுக்காரை எடுத்துகிட்டு
கொஞ்சதூரம் போனாலும்
நறுமணம்தான் வீசுதைய்யா
மக்காத குப்பையெல்லாம்!!

பிளாஸ்டிக் கழிவையெல்லாம்
நீர்த்துப்போக வச்சியிங்கே
சாலைபோட போறோமின்னு
அரசாங்கம் சொன்னாலும்!
நமக்கின்னு அறிவுவேனும்
நாசப்பொருளை கைவிடனும்!!
நாம போனபின்னாலும்  - நம்ம
சந்ததிகள் வாழவேனும்!!
அன்பன்
மகேந்திரன்

51 comments:

Unknown said...

பாட்டுக்கொரு புலவங்க-அன்று
பாரதியை சொன்னாங்க
நாட்டுப்புற பாடலையே-இன்று
நாளும்தர நீங்கங்க
ஓட்டும்போட்டு விட்டேனுங்க-போக
உத்தரவு தாருங்க
தீட்டுமிந்த மிந்தமெட்டிலே-கேக்க
தேனாயினிக்கும் பாட்டிலே

கருத்தும் படமும் மிக
பொருத்தம் பொருத்தம்

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

அரசாங்கம் சொன்னாலும்!
நமக்கின்னு அறிவுவேனும்
நாசப்பொருளை கைவிடனும்!!
நாம போனபின்னாலும் - நம்ம
சந்ததிகள் வாழவேனும்!!/

பொறுப்புணர்ச்சி தரும் கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

காலத்துக்கேற்ற பதிவு..

முனைவர் இரா.குணசீலன் said...

இன்றுபோட்ட குப்பையது
மக்கிப்போக வேணுமின்னா
முன்னூறு வருசமாம்
முழுசா படிச்சி சொன்னாங்க!!

மனதில் பதியும் விதமாக அழாகச் சொல்லிட்டீங்க நண்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

நமக்கின்னு அறிவுவேனும்
நாசப்பொருளை கைவிடனும்!!
நாம போனபின்னாலும் - நம்ம
சந்ததிகள் வாழவேனும்!!


இது ஒவ்வொருவருக்கும் புரியவேண்டும்.

சாகம்பரி said...

எனக்கும் இதுதான் வேண்டும். ம்.... இன்னும் கொஞ்சம் குரல் கூட்ட வேண்டுமோ?. நாட்டுப்புற கவிதை அருமை.

rajamelaiyur said...

//
நாட்டாரு கடையினிலே
மளிகைப்பொருள் வாங்கினாலோ!
காகிதத்தில் அழகாக
பொட்டலம்தான் போட்டனரே!!


/

அது அந்த காலம்

rajamelaiyur said...

//
மளிகைக் கடையெல்லாம்
மிகப்பெரிய கடையாச்சு
பொட்டலம் போட்டதெல்லாம்
பிளாஸ்டிக் பைக்குள்ளே அடங்கிடுச்சி!!
//

ரொம்ப உண்மை

கூடல் பாலா said...

பிளாஸ்டிக் விழிப்புணர்வு மக்களுக்கும், அரசுக்கும் அவசியம் ......தங்கள் கருத்துக்கள் அருமை !

kowsy said...

நாட்டுப்புறப்பாடல் பாங்கில் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை அள்ளித் தந்திருக்கின்றீர்கள். அனைவரையும் போய்ச் சேரும். உங்கள் எண்ணமும் ஈடேறும். வாழ்த்துகள்

சென்னை பித்தன் said...

தமிழ்மணம் 7!

சென்னை பித்தன் said...

தேவையான கருத்தொன்றைக் கவிதையாக்கித் தந்தமைக்கு நன்றி

Unknown said...

நச் கவிதை மாப்ள!

Anonymous said...

அழகாக ஒப்பிட்டு கவிதயாக்கியுள்ளீர்கள்..பிளாஸ்டிக்கின் அதிகரித்த பாவனை எம் எதிர்கால சந்ததிக்கு தான் ஆபத்தை கொடுக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை!

test said...

காலத்துக்கேற்ப நச் கவிதை!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

M.R said...

ஆரம்பத்திலே பால்ய நினைவுகளில் ஆரம்பித்து தொடர்ந்து முடிக்கையிலே

நச்சுக்கழிவாம் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் வேண்டாம் என்ற நல்ல கருத்துடன் முடித்திருப்பது அருமை .

பகிர்வுக்கு நன்றி நண்பரே

மகேந்திரன் said...

அன்புநிறைப் புலவர் ஐயா

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதுபோல்
என் உள்ளம் பூரிக்கிறது ஐயா...
என்றும் தொடர்கிறேன் பணிவன்புடன் என் பணியை...

Anonymous said...

அயல் நாடுகளில் உள்ள நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று...இந்தியா எப்பம்...?
நல்ல விழிப்புணர்வு ஆக்கம்...நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் பொன்னான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் விரிவான கருத்துரைக்கு
என் பணிவான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி காதம்பரி

ஆம் சகோதரி இன்னும் குரல் கூட்டத்தான் வேண்டும்,
ஓங்கி ஒலிக்க வேண்டும்
விழிப்புணர்வு பெருகட்டும்.
வருகின்ற படைப்புகளில்
இன்னும் அழுத்தமாக கூற முயற்சிக்கிறேன்.
நன்றி சகோதரி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர்
ராஜபாட்டை ராஜா
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பர் பாலா
மக்களுக்கும் அரசுக்கும் இன்னும் விழிப்புணர்வு பெருக வேண்டும்
கருத்துரைக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சந்திரகெளரி
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.
நிச்சயம் எல்லோருக்கும் போய் சேர வேண்டும், குறைந்தபட்சம் சிலராவது
பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தட்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அழகிய நறுக் கருத்துக்கு மிக்க நன்றி விக்கி மாம்ஸ்....

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கந்தசாமி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜீ
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜசேகர்
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஸ்
தங்களின் அழகிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

நல்ல விழிப்புணர்வு கவிதை. நல்லா
இருக்கு.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கார்த்திகேயனி
தங்களின் வரவை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது..
அழகிய சுருக்க கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே....
வளர்ந்துவரும் பலநாடுகளில் இருக்கும்
இந்த விழிப்புணர்வு நம் நாட்டில்
பரவலாகப் பரவவேண்டும்
ஊடகங்களை நாம் அதற்கு பயன்படுத்த வேண்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் மேலான கருத்துரைக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மாய உலகம் said...

நல்ல விழிப்புணர்வு பதிவு... அதற்கு ஏற்றவாறு மஞ்சப்பையும், பிளாஷ்டிக் பையும் கம்பேரிசனும் சூப்பர் நண்பா... பிளாஷ்டிக்கை ஒழிக்க முயற்சிப்போம்...நம் வருங்கால சந்ததிகளை வாழவைப்போம்... பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

அருமையான விழிப்புணர்வு கவிதையாக தொகுத்தமைக்கு மீண்டும் பாராட்டுக்கள்

நிரூபன் said...

சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன், பிளாஸ்டிக்கின் மூலம் ஏற்படும் தீமைகளையும் அழகாகச் சொல்லி, நல்லதோர் விழிப்புணர்வுக் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மாய உலகம் ராஜேஷ்
தங்களின் விரிவான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

Rathnavel Natarajan said...

அருமை.
மக்கள் யோசிக்க வேண்டும்.

Venkat said...

Sir, The Post on Plastic is Very Important at this moment. Congrats Sir.

We must avoid using plastic bags.

Venkat

Please visit www.hellovenki.blogspot.com and post your valuable comments

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட்
தங்களை வசந்தமண்டப வாசல் சாமரம் வீசி வரவேற்கிறது.
நிச்சயம் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன் தோழரே.

Unknown said...

நடக்கும் பாதையெல்லாம் கால்களை சுற்றிய பாம்பைப்போல சிக்குதடி, மண் வளத்தை கெடுக்குதடி, என்ன செய்ய இந்த மூடர் அறியாமையை - மகேஷ்........
இது போன்ற நல்ல தொகுப்பிலும் கவிதை எழுதலாம் என்று எனக்கு எடுத்துக்காட்டி விட்டீர்கள் நண்பரே. எழுதுகிறேன் வந்து என் வலைக்கு தரிசனம் தாருங்கள் ...

மகேஷ் கவிதை

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மகேஸ்வரன்
தங்களை வசந்தமண்டப வாசல்
சாமரம் வீசி வரவேற்கிறது.
அருமையாக கருத்துரைத்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே

நிச்சயம் தங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.

கார்த்தி said...

'சந்ததிகள் வாழவேனும்' கவிதை கருத்துக்கு மிகவும் பொருத்தமான தளைப்பு. அருமை !

SURYAJEEVA said...

super raasaa

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் தேவையான ஒரு பகிர்வு... மஞ்சள் பை எடுத்துச் செல்ல வெட்கப்பட என்று ஆரம்பித்தானோ மனிதன், அன்றே பிரச்சனைகள் ஆரம்பித்து விட்டது...

தில்லி போன்ற பெருநகரங்களின் பெரிய அழிவே பிளாஸ்டிக் குப்பைகள் தான்....

நல்ல பகிர்வுக்கு நன்றி....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கார்த்தி
தங்களின் வரவை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது..
அழகிய சுருக்க கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சூர்யஜீவா
தங்களின் வரவை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது..
அழகிய சுருக்க கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் வெங்கட் நாகராஜ்
தங்களின் வரவை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது..
அழகிய விரிவான கருத்துக்கு
மிக்க நன்றி.

Post a Comment