Powered By Blogger

Friday, 19 August 2011

ஆத்திரம் அழித்துவிடு!!




வீறுகொண்டு எழுவாயே
விளைநிலம் உனக்கேது?!
காட்டாறு உனக்கிங்கே
கடிவாளம் போடுவது யார்?!!

காட்டேரி போலிங்கே
கபாலத்தில் ஏறியதேன்?!
சிரமேறி நின்றாயே - நான்
செய்த குற்றமென்ன ?!!




என்னுள்ளே நீ வரவே
என்னகத்தோர் மிரண்டனரே!
வாசல் திறந்ததென்று
வாகாக நுழைந்தாயோ?!!

நீ வந்த போதெல்லாம்
நானாக நானில்லை!
மாபாவி நீ தீண்ட
மாதவம் செய்தேனோ?!!




உரிமையாக வந்தாயே - எனை
உன்னுடைமையென நினைத்தாயோ?!
ஆட்கொள்ள வந்த நீ
அரவமின்றி ஓடிவிடு!!

வசைபாட வந்த நீ
வந்தவழி சென்றுவிடு!
மதியிளகச் செய்த நீ
மாயமாய் மறைந்துவிடு!!






ஆத்திரப் பேயே!
அவனியைக் கடந்துவிடு
அவகாசம் சிறிதின்றி!!

சாத்திரம் பேசி நீ
சாகசம் காட்டாதே!
சட்டென்று ஓடிவிடு!!

சாத்தானின் மறுவுருவே
சன்னமாய் மறைந்துவிடு
சரித்திரப் பக்கங்களில்
சாதனை ஏற்றியபின்
சவமாய் போகும் வரை!!

அன்பன்
மகேந்திரன்

36 comments:

M.R said...

தமிழ் மணம் 1

கோகுல் said...

நீ வந்த போதெல்லாம்
நானாக நானில்லை!


உண்மை நண்பரே!
ஆத்திரமடையும் தருணத்தில் சிந்தையிழக்க நேரிடுமென்பதை நறுக்கென்று சுட்டிக்காட்டியுள்ளீர்கள்!
பாராட்டுக்கள்!

M.R said...

ஆத்திரம் வேண்டாம் என்பதை அழகாய் சொல்லியுள்ளீர்கள் .

ஆம் ஆத்திரத்தால் உறவும் கெடும் ,வாழ்வும் கெடும் .

ஆத்திரம் கண்ணை மறைக்கும் ,சிந்தையை சிதரச்செய்யும்.

அனைவரின் மனதிலும் எழவேண்டிய எண்ணத்தை பகிர்ந்துள்ளீர்கள் .

நன்றி நண்பரே

Anonymous said...

பாரதியைப்போல் ஆத்திரத்தையே வந்து பார் என்கிறீர்கள்... உங்களைப்பார்த்தால்...உங்கள் இரு செல்வங்களைப்பார்த்தால் அப்படித்தெரிய வில்லையே ... தூத்துக்குடிக்காரரல்லவா...நம்பித்தான்தொலைக்கவேண்டியுள்ளது...

சாந்தம் நிலைக்கட்டும்.... மகேந்திரன்...

Anonymous said...

''....காட்டாறு உனக்கிங்கே
கடிவாளம் போடுவது யார்?!!''...

நாங்கள் தான் கடிவாளம் போடவேண்டும்.
வேதா. இலங்காதிலகம்.

மாய உலகம் said...

ஆத்திரம் ஒரு தரித்திரம் அதை மறித்தால் அடைவாய் சரித்திரம் என்பதை கவிதையில் நச்சென்று சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் நண்பா

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
இக் கால இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தேவையான நல்லதோர் விழிப்புணர்வுக் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

ஆத்திரம் கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும், நாம் பொறுமையினைக் கடைப்பிடிப்பதால் நிகழும் நன்மைகளையும் உங்கள் கவிதை அழகு தமிழில் சொல்லி நிற்கிறது.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
குழந்தைகளின் கோபம் சீக்கிரத்தில் மறைந்துவிடும்.
கோபம் வராதவர்கள் உலகத்தில் உண்டா?
எனக்கும் வரும்......கோபம்.....
அதை துரத்தியடிக்கவே விழைகிறேன்
என் மீதான நம்பிக்கைக்கும்
ஊர் மீதான நம்பிக்கைக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

மாய உலக நண்பர் ராஜேஷ்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.
தத்துவங்கள் பொழிகிறீர்கள் பதிவுகளில் வாழ்த்துக்கள்

Unknown said...

// ஆத்திரப் பேயே!
அவனியைக் கடந்துவிடு
அவகாசம் சிறிதின்றி//

ஆத்திரம் அறிவிற்கு சத்துரு
என்பதை எடுத்துக்காட்ட இயற்றி
உள்ள இக் கவிதை மிகவும் அருமை நண்பரே
எடுப்பும், தொடுப்பும்,முடிப்பும்
பாராட்டத் தக்கது!
வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் சகோ..

தமிழ்மணம் ஏழு,
தமில்டென் பத்து...

பாராட்டுகள்..

மகேந்திரன் said...

அன்பு சகோ நிரூபன்,
தங்களின் விரிவான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஐயா ரத்னவேல்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நண்டு @நொரண்டு
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

புலவர் ஐயா
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துரைக்கும்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்
தங்களின் கருத்துக்கும் ஒட்டிடமைக்கும்
என் பணிவான வணக்கங்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..

தங்கள் பதிவுகளில் நான் தங்கள் எழுத்துக்களைவிட தாங்கள் அதற்காகத் தேர்வு செய்யும் நிழற்படங்களை பெரிதும் பார்த்து மகிழ்கிறேன்.

தங்கள் கருத்தை தாங்கள் தேர்வு செய்யும் நிழற்படங்களே பெரிதும் வெளிப்படுத்துகின்றன.

மிக அழகாகன வெளிப்பாடு.

தொடர்க வாழ்த்துக்கள்!!

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..

தங்கள் பதிவுகளில் நான் தங்கள் எழுத்துக்களைவிட தாங்கள் அதற்காகத் தேர்வு செய்யும் நிழற்படங்களை பெரிதும் பார்த்து மகிழ்கிறேன்.

தங்கள் கருத்தை தாங்கள் தேர்வு செய்யும் நிழற்படங்களே பெரிதும் வெளிப்படுத்துகின்றன.

மிக அழகாகன வெளிப்பாடு.

தொடர்க வாழ்த்துக்கள்!!

மாலதி said...

என்னுள்ளே நீ வரவே
என்னகத்தோர் மிரண்டனரே!
வாசல் திறந்ததென்று
வாகாக நுழைந்தாயோ?!!

நீ வந்த போதெல்லாம்
நானாக நானில்லை!
மாபாவி நீ தீண்ட
மாதவம் செய்தேனோ?!!//நச்சென்று சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் ....

மகேந்திரன் said...

முனைவரே
தங்களின் மேன்மையான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி மாலதி
தங்களின் மேலான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

குணசேகரன்... said...

very attractive lines with cute stills..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன்
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

vidivelli said...

ஆத்திரம் கொள்வது பற்றி அழகாக படங்களுடன் தந்துள்ளீர்கள்..
அருமையான கருத்துடன் அழகான கவிதை..
அன்புடன் பாராட்டுகள்..

இராஜராஜேஸ்வரி said...

சாத்தானின் மறுவுருவே
சன்னமாய் மறைந்துவிடு//

படங்கள் பகிர்வுக்கு வலு சேர்க்கின்றன.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி செம்பகம்
தங்களின் மேலான கருத்துக்கு
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

kunthavai said...

அதிக பயனுள்ள கவிதை...மிக ரம்மியமான படங்களுடன். .
வாழ்த்துகள் தோழரே...

- அனு.

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு
தங்களின் மேலான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

அம்பாளடியாள் said...

வசைபாட வந்த நீ
வந்தவழி சென்றுவிடு!
மதியிளகச் செய்த நீ
மாயமாய் மறைந்துவிடு!!

உண்மைதான் சகோ .
இதுகூட இருந்தால் எல்லோருக்கும்
ஆகாது .அருமையான கவிதைவரிகள் .
பாராட்டுக்கள் சகோ .....

அம்பாளடியாள் said...

ஓட்டுப் போட்டாச்சு சகோ .......

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் மேலான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

Post a Comment