Thursday, 4 August 2011

நான் இல்லாத நான்!!தருணங்களின் சாகசத்தில்
தடைபட்டு நிற்கையில்
உணர்வுகளை ஈடுவைத்து
உணர்ச்சி மேலோங்க
என்னை இழக்கையில்
நான் இல்லாத நான்!!

நிமிடங்களின் நிமித்தம்
நித்தமும் போராடும்
வாழ்க்கைப் பயணத்தில்
மனமேற்க மறுக்கும்
மலிவுச் செயல்களை
நொடிக்குநொடி காண்கையில்
நான் இல்லாத நான்!!

சாலைகளின் ஓட்டத்தில்
பயணம் செல்கையில்
விதிகளை குப்பையாய்
வீதிகளில் எறிவோர்கள்
கண்ணில் தெரிகையில்
நான் இல்லாத நான்!!


தெருவோரக் கடைகளில்
பிஞ்சுக் குழந்தைகள்
வீதி பெருக்குகையில்
பெற்றவர்களை எண்ணி
நெஞ்சம் குமுறுகையில்
நான் இல்லாத நான்!!

எலும்புகளின் பிணைப்பில்
சதைகளை போர்த்தி
உழைத்து வாழாது
திருடிப் பிழைப்போரை
விழிகள் காண்கையில்
நான் இல்லாத நான்!!

ஆணவத்தின் பிம்பமாய்
அகங்காரம் தலைக்கேறி
அதிகார ஆயுதத்தை
அவதூறு செய்பவரை
அவனியில் காண்கையில்
நான் இல்லாத நான்!!நரவலுண்ணும் பன்றிகளாய்
சிறுமியென்றும் பாராது
பாலியல் படுக்கைக்கு
பலவந்தம் செய்வோரை
பார்க்க நேர்கையில்
நான் இல்லாத நான்!!

ஆண்டவன் பெயரில்
ஆன்மீகப் போர்வையில்
போலியாய் உருத்தரித்து
களியாட்டம் போடுபவரை
கண்கொண்டு காண்கையில்
நான் இல்லாத நான்!!

உள்ளம் ஏங்கினேன்
நானாக நானிருக்க!
நாசவேலைகள் குவியலென
நலிந்திருக்கும் இப்புவியில்!
நெஞ்சம் புழுங்கினேன்
நானாக நானிருக்க!!
அன்பன்
மகேந்திரன்

41 comments:

M.R said...

தெருவோரக் கடைகளில்
பிஞ்சுக் குழந்தைகள்
வீதி பெருக்குகையில்
பெற்றவர்களை எண்ணி
நெஞ்சம் குமுறுகையில்
நான் இல்லாத நான்!!


வேதனையான விஷயம் தான் நண்பரே

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அற்புதமான கவிதை,, அதக்கேற்ற மாதிரி அசத்தும் படங்கள்..
சூப்பர் சகோ..

M.R said...

எலும்புகளின் பிணைப்பில்
சதைகளை போர்த்தி
உழைத்து வாழாது
திருடிப் பிழைப்போரை
விழிகள் காண்கையில்
நான் இல்லாத நான்!!

இதனைக்கண்டு உள்ளம் கொதிப்பவர்களில் நானும் ஒருவன்

M.R said...

நரவலுண்ணும் பன்றிகளாய்
சிறுமியென்றும் பாராது
பாலியல் படுக்கைக்கு
பலவந்தம் செய்வோரை
பார்க்க நேர்கையில்
நான் இல்லாத நான்!!

ஆண்டவன் பெயரில்
ஆன்மீகப் போர்வையில்
போலியாய் உருத்தரித்து
களியாட்டம் போடுபவரை
கண்கொண்டு காண்கையில்
நான் இல்லாத நான்!!


பசுத்தோல் போர்த்திய புலி போல்

மனித உருவில் அரக்கர்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்றைய கவிதை அர்த்தமுள்ளதாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
ஆண்டவன் பெயரில்
ஆன்மீகப் போர்வையில்
போலியாய் உருத்தரித்து
களியாட்டம் போடுபவரை
கண்கொண்டு காண்கையில்
நான் இல்லாத நான்!!////////


கவலைப்படாதீர்கள்..
இவர்களை காலம் களைந்தெடுக்கும்...

vidivelli said...

எல்லா வரிகளுமே கருத்து நிறைந்தவை எதைத்தெருவுசெய்ய முடியவில்லை...
எல்லாமே முத்துக்கள்..
அருமை....

இராஜராஜேஸ்வரி said...

விதிகளை குப்பையாய்
வீதிகளில் எறிவோர்கள்//

கனக்கவைக்கும் கவிதை.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.
தங்களின் விரிவான கருத்துரைக்கு
என் உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்
தங்களின் இனிய கருத்துரைக்கு
என் மனமுவந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் வாழ்த்துரைக்கும்
மேன்மையான கருத்துரைக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி
தங்களின் முத்தான கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேலான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன் அருணா said...

Nice one!

மகேந்திரன் said...

அன்புத் தோழி அருணா
தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் இனிய கருத்திட்டமைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.
தொடர்ந்து வாருங்கள்.

Anonymous said...

விதிகளை குப்பையாய்
வீதிகளில் எறிவோர்கள்////

நாமாக நாமிருக்க நினைத்தாலும்...இச்சமூகம் நம்மை இருக்கவிடுவதில்லை...

நல்ல கருத்தாழமிக்க கவிதை நண்பரே!

kunthavai said...

நச்சென்று ஒரு கவிதை !
கொடுமையைக் கண்டு சீற சொன்ன பாரதி இப்போது வந்தால் மறுபடி “ரெளத்திரம் பழகத்தான் சொல்லுவாரா?
அன்றி ஆத்திரம் வேண்டாமடி கிளியே என்பாரோ?

நாம் நாமாக எப்போதும் இருப்பது முடியாத உலகத்தில், தோன்றுவதைச் சொல்லவாவது ஒரு களம் இருத்தல் சுகம்.
அன்றேல் மன அழுத்தம் தான்.

மிக அருமை...
- அனு.

Anonymous said...

நான் இல்லாத நான்!!
நானாக நானிருக்க!!...

அழகிய கவிதை... வாழ்த்துக்கள்..

மாய உலகம் said...

நானாக நானிருக்க முயன்றாலும் இந்த போலி சமூகம இருக்க விடுவதில்லை என்பதை அழகாக கவிதையில் சொல்லியிருக்கும் விதம் அருமை .. உண்மையே

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஷீ.நிஷி
தங்களின் மேலான கருத்துக்கு
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு
சரியாச் சொன்னீர்கள்,
இன்று பாரதி இருந்தால் கொடும் ரௌத்திரம் பழகச் சொல்லியிருப்பான்.
அவ்வளவு விஷயங்கள் இங்கே மலிந்து இருக்கிறது விலைவாசி தவிர ......

தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

மாய உலக நண்பரே
தங்களின் தெளிவான கருத்துரைக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

Mani Bharathi said...

Nice Post

Actress

ஹேமா said...

படங்களும் வரிகளும் கலங்க வைக்கிறது தோழரே.இருந்த மனிதமும் செத்துக்கிடக்கிறது.நம் நாடுகள் முன்னேற இன்னும் நிறைய அவகாசங்கள் தேவை !

Mani Bharathi said...

submit ur post to this site

EllameyTamil.Com

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மணிபாரதி
தங்களின் பொற்பாதங்களை வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் இனிய கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.
நிச்சயம் எல்லாமே தமிழ் வலைச்சரத்தில் பதிவிடுகிறேன்.

நன்றி.நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி ஹேமா
அழகாகச் சொன்னீர்கள், மனிதம் இங்கு செத்துக்கிடக்கிறது.
நேயம் இங்கே காவுகொடுக்கப்பட்டுவிட்டது.
மீளும் நாள் வரும்........

தங்களின் இனிய கருத்துரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாலதி said...

உள்ளம் ஏங்கினேன்
நானாக நானிருக்க!
நாசவேலைகள் குவியலென
நலிந்திருக்கும் இப்புவியில்!
நெஞ்சம் புழுங்கினேன்
நானாக நானிருக்க!!//அற்புதமான கவிதை

மகேந்திரன் said...

அன்புத் தோழி மாலதி

தங்களின் இனிய கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

kavithai said...

நிறைந்த கருத்துடை கவிதை. ஒவ்வொரு வரிகளும் சிறப்புடைத்து. வாழ்க கவிஞா!
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

M.R said...

அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

சாகம்பரி said...

சிந்திக்க வைக்கும் கவிதை, மனிதத்துவத்தின் மௌனமான மரணத்தை உரத்து பேசுகிறது.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா .இலங்காதிலகம்
தங்களின் கருத்துரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்;

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சாகம்பரி
தங்களை இங்கு வசந்தபண்டபத்திற்கு
வரவேற்பதில் பெருமகிழ்ச்சி
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

முனைவர்.இரா.குணசீலன் said...

நான் இல்லாத நான் இருக்க நாளும் எண்ணிவருகிறேன்!

kupps said...

இன்றைய கால கட்டத்தில் நிகழும் அன்றாட அவலங்களை அருமையாக எடுத்துரைக்கும் கவிதை.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் முனைவர்.இரா.குணசீலன்
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Desktop Showrooms in Chennai
Printer prices in chennai
Buy Tablets online chennai
Laptop stores in chennai
Projectors price in Chennai
Buy pendrive online India
External hard disk price in Chennai
Laptop accessories online chennai
Best laptops in Chennai
Tablet showroom in Chennai
Inverters dealers in Chennai
Server dealers in Chennai

Post a Comment