Monday, 8 August 2011

பதினொன் ஆடற்கலைகள்!!!


தமிழின் ஒவ்வொரு வளர்ச்சிக் காலங்களிலும் எழுத்துக்களின் பரிமாண மாற்றமும் பண்பாடு மற்றும் கலாச்சார மாற்றங்களும் ஏற்பட்டிருந்தன. உணவு முறைகள், பொழுதுபோக்கு ஆகியவைகளில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. இன்றும் அப்படித் தானே?!! பத்து வருடங்களுக்கு முன் பார்த்து மகிழ்ந்த ஆடல்கள் இன்று நிறைய மாற்றங்கள் பெற்றிருப்பதை, நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.


தமிழின் வளர்ச்சிக் காலங்களில் சங்க காலம், சங்கம் மருவிய காலம் எனத் தொடங்கி முதற்ச் சங்கம் முதல் கடைச் சங்கம் வரை அத்துணை காலங்களிலும் ஆடல்களின் பரிணாமங்கள் வியப்பூட்டுவையாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. இதில் சங்கம் மருவிய காலத்திற்கு பின்னர் தோன்றி இன்று முழுமையாகவும் சற்று மாறுபாட்டுடனும் விளங்கும் ஆடல்கள் பற்றி இதோ இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.....


ஆடல்களின் வகைகள்:

1.கொடுகொட்டி
2.பாண்டரங்கம்
3.அல்லியத்தொகுதி
4.மல்லாடல்
5.துடியாடல்
6.குடையாடல்
7.குடக்கூத்து
8.பேடியாடல்
9.மரக்கால் ஆடல்
10.பாவை ஆடல்
11.கடையம்

கொடுங்குற்றம் புரிவோர்
கொடுந்தலை கொய்து
நிறை வெற்றி ஏற்றபின்!!
கொடுங்கோபம் தணிய
கொடுகொட்டி பறைதட்டி
இருகரம் அசைத்து
கும்மியொலி எழுப்பி
பெருமித மிதப்பில்
வெகுளி நகையுடன்
ஆடுதலே கொடுகொட்டி ஆட்டமாம்!!


வெஞ்சமர் புரிந்து
பகைவனை அழிக்க
தேரேறும்  முன்னர்
காஞ்சிமாலை அணிந்து
தன்பின் நிற்கும்
முப்படை சார்பில்
வீர உரையாற்றிடையில்
திண்தோள் வீரரெல்லாம்
அவையமெலாம் அசைத்து
கோபக் கனல்தெறிக்க
ஆடுதலே பாண்டுரங்கம் ஆட்டமாம்!!


செங்குருதி ஆரோடும்
போர்க்களப் பரப்பினிலே
நிராயுதம் கொண்டபின்
நெஞ்சுறுதி இழக்காது
மலைபோன்ற மதயானை
எதிர்வரும் போதினிலே - அதன்
கொம்பொடித்து தரைசாயத்து
வாகை மாலை சூடுகையில்
வெற்றிக் களிப்பினில்
வீறுகொண்டு உடல்புடைக்க
ஆடுதலே அல்லியத்தொகுதி ஆட்டமாம்!!

ஆயுதம் ஒன்றன்றி
தேகமே ஆயுதமாய்
போர்க்களத்தில் சதிராடி
உடல்களை மலைகளாய்
உருமாறச் செய்த
மல்லனின் வீரத்தை
காலில் சதங்கையிட்டு
பேரொலி எழுப்பி
ஆவேச அங்கமாய்
ஆடுதலே மல்லாடல் ஆட்டமாம்!!

எதிர்சமர் புரியும் முன்னே
பகைவனின் ஆற்றலறிய
புரிசமர் புரியச் சொல்லி
ஆற்றலறிந்த பின்
மறுசமர் எதிர்நோக்கி
இடுப்பெலும்பை ஒடித்தெடுத்து
வெற்றி நடை போடுகையில்
இடுப்பை அசைத்து
ஆரவார கூத்தாடி
ஆடுதலே துடியாடல் ஆட்டமாம்!!

குடையொன்று கையெடுத்து
மாறுபட்ட கோணங்களில்
வேறுபட்ட ஆடல்களை
குடையால் திரையிட்டு
வாழ்வெனும் பயணத்திலே
இருவேறு கோணங்களும்
ஒருசேர்ந்து இருக்குமென
ஒய்யார நடையழகில்
மனமதனை மதிமயக்க
ஆடுதலே குடையாடல் ஆட்டமாம்!!


கையிலொரு குடமிருக்க
குவியதர ஓரத்தில்
மசப்பான நகையிருக்க!
கண்கள் காணொளிகாட்ட
குடமோ இடையோவென!!
கூடிநின்றோர் வாய்திறக்க
ஒயிலான இடையழகில்
காதலுடன் கதைபேசி
தந்திரமாய் காரியங்கள்
தன்பக்கம் சாய்ப்பதற்காய்
ஆடுதலே குடக்கூத்து ஆட்டமாம்!!தூயவளோ!! மாயவளோ!!
தும்பைமலர் மொட்டாலே
பல்வரிசை கொண்டவளோ!!
வானவரும் ஏங்கிவரும்
வனப்பான தாரகையோ!! - என
விழிகளிலே வியப்பேற்ற
விரிதோள் ஆடவரெலாம்
திருநங்கை வேடமிட்டு
தப்பாமல் தாளத்திற்கு
ஆடுதலே பேடியாடல் ஆட்டமாம்!!

சீறிவரும் பாம்பைப்போல் 
உடலெல்லாம் நஞ்சிருக்கும்
கொடுநாக்கை கொடுக்காக்கி
தீவினைகள் விதைத்துவிடும்
வஞ்சகர்கள் சுற்றிருக்க!!
வீறுகொண்ட எம்குலமாதர்
மரத்தால் காலணிந்து
ஆவேச நடனமிட்டு -காலடியில்
வஞ்சகரை நசுக்கிப்போட்டு
ஆடுதலே மரக்கால் ஆடல் ஆட்டமாம்!!

ஆயிரம் அபிநயத்தால்
அண்டங்கள் மயங்கிவிட
செஞ்சிலம்பு கொஞ்சிவர
கயல்விழியும் தாளமிட
பிஞ்சு விரல்கலெலாம்
முத்திரைகள் பதித்துவிட
செங்கமல உறையமர்
திருமகள் ஆடியதே
பாவையாடல் ஆட்டமாம்!!

பொதுவில் கடையமெனில்
கடைநிலை என அறிவோம்!!
இறுதிநிலைக்கு இன்பமேற்றிட
இந்திராணியால் இயைபாக
வயல்நின்று ஆடியதே
கடையமெனும் ஆட்டமாம்!!

இப்பதினொரு ஆட்டங்களில் பாவையாட்டம் சற்று உருமாறி பரதமென நிலைத்திருக்கிறது. கடையமெனும் ஆட்டம் இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்து பின்னர் சிலபல நாட்டுப்புற நையாண்டி கலந்து விட்டது. மற்ற ஆட்டங்கள் இல்லாமல் போனாலும் அதை தெரிந்துகொள்வதில் ஒரு இன்பம் தானே!!??


அன்பன்
மகேந்திரன்


37 comments:

Priya said...

நல்ல தகவல்
இந்திய கலாச்சாரம் வளரும்
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
வார இறுதி நாட்களில் ஆணி அதிகம் என்பதால், பதிவுகளை மட்டும் போட்டேன், பல நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் பின்னூட்ட மிட முடியவில்லை. மன்னிக்கவும்.

நிரூபன் said...

ஆடற்கலை பற்றிய விளக்கப் பகிர்வினைக் கவிதையோடு இணைத்துத் தந்திருக்கிறீங்க.
இப் 18 கலைகளில் நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் 11 வகைப்பாடுகளில் பல எனக்குப் புதியனவாக இருக்கின்றன.

M.R said...

ஆஹா ஆடல்களில் இத்தனை ரகமா

அதனை ஒவ்வொன்றைப் பற்றியும் கவிதை நடையில் விளக்கம்

அறிந்தேன் அத்துனையும்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

koodal bala said...

என்ன ஒரு அருமையான விளக்கங்கள் .......தொலைகாட்சிகள் பெருகியதால் தற்போது மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிடுகிறார்கள் .இதன் மூலம் அரிய கலைகள் அழிவுப் பாதையில் செல்கின்றன ....

மகேந்திரன் said...

அன்புத் தோழி ப்ரியா
தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில் பதித்தமைக்கு
மிக்க நன்றி.
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

kavithai said...

சகோதரா! மகேந்திரா! அருமையான ஆக்கம், பல தகவல்கள் மிக்க நன்றி. எனது கருத்தின் படி இதை நான் செய்வதானால் கடைசி இரண்டு அங்கமாகவாவது பிரித்திருப்பேன். அளவோடு சிறு சிறு பிரிவாகக் கொடுக்கும் போது அதன் செயற்பாடே தனி என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஆக்கம் நீண்டு விட்டதோ! மற்றும் படி நமக்குத் தெரியாத பல தகவல்கள். பிரமாதம்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மகேந்திரன் said...

வணக்கம் சகோ நிரூபன்,
செய்யும் தொழிலே முதல் தெய்வம்,
நீங்கள் ஓய்வில் இருக்கும் போது வந்து படித்து
கருத்துகொடுங்கள். நீங்கள் வந்து படிப்பதையே நான் பெருமையாகக்
கருதுபவன்.
மேலும் ஒரு சிறிய மாற்றம்,
தலைப்பு பதினெண் அல்ல பதினொன்
இவ்வளவு பெரிய தவறுக்கு என்னை மன்னிக்கவும்...

அன்பன்
மகேந்திரன்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.
தங்களின் மேன்மையான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பர் கூடல்பாலா
நம்மவர்களை தட்டி எழுப்பி நம் கலாச்சார மேடைகளை
அறிமுகப்படுத்துவோம்.
சிறிதேனும்!!!!

தங்களின் இனிமையான கருத்துக்கு என் உளம்கனிந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
உங்கள் கருத்தை என் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
நிச்சயம் அடுத்த நீண்ட பதிவுகளில்
பிரித்தளிக்கிறேன்...
தங்களின் இனிய கருத்துரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Rathnavel said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

சுவாரஸ்யமான தகவலுடன்
தகவல்கள்..
கவிதை...
மற்றும் அனைத்தும் அழகு...

மகேந்திரன் said...

ரத்னவேல் ஐயா
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் அழகிய கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

Chitra said...

நல்ல ஆய்வு கட்டுரை. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.

Anonymous said...

ரசித்தேன்..மகேந்திரன்...
கட்டுரை..கவிதை...மெருகேறிக்கொண்டே போகிறது...

மாய உலகம் said...

ஆட்டத்தில் இத்தனை ரகமா...ஆஹா இன்று தான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்... தரமாக கலைக்கட்டுகிறது நண்பா... ஆட்டம் போடுங்கள் பார்த்து ரசிக்கிறோம்

அம்பாளடியாள் said...

ஆடல் கலைகள் பதினெட்டையும் அளாகாய் விளக்கிய
அன்புச் சகோதரருக்கு என் நன்றிகலந்த வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்......

vidivelli said...

ஆடற்கலைகள் எல்லாம் அருமையாய் தந்திருக்கிறீங்க...
அறிந்துகொண்டேன் அறியாதவற்றை...
பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

kavithai said...

Sakothara! I saw this heading...in Thamil 10 early morning...
மிக ஆர்வமாக இருந்தது வாசிக்க. பின் உங்கள் கருத்தையும் என் வலையில் பார்த்ததும் தாமதிக்காது வந்து வாசித்தேன் . நீங்கள் ஏமாற்றவில்லை. மறுபடியும் நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பல அறிய தகவல்கள் ஆடற்கலைகள் பற்றி தெரிந்து கொண்டேன்..
பகிர்வுக்கு நன்றி,,

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பல அறிய தகவல்கள் ஆடற்கலைகள் பற்றி தெரிந்து கொண்டேன்..
பகிர்வுக்கு நன்றி,,

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சித்ரா
தங்களின் இனிய கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
தங்களின் இனிய கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு மாய உலக நண்பரே..
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி
தங்களின் மேலான கருத்துரைக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
தங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உங்கள் பாமாலைகளுக்கு
நான் அடிமை..
வந்தவுடன் படித்துவிடுவேன்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்
தங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி.

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லதோர் விளக்கம்.

தேவையான பகிர்வு.

vidivelli said...

உங்கள் வலைப்பூ அறிமுகத்திற்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!!!

மகேந்திரன் said...

அன்பு நண்பர் முனைவர்.இரா.குணசீலன்.

தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில் பதித்தமைக்கும்
பொன்னான கருத்திட்டமைக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து வாருங்கள்.

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி
தங்களின் வாழ்த்துக்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஹேமா said...

நிறைவான தெரியாத தகவல்கலைப் பகிர்ந்துகொண்டீர்கள்.நன்றி !

மகேந்திரன் said...

அன்புத் தோழி ஹேமா
தங்களின் மேலான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA coaching | ACCA Exam Coaching Classes | ACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA courses Chennai | ACCA Training institutes Chennai | ACCA Qualifications and Courses | Diploma in International Financial Reporting | Best ACCA training institutes | CBE Centres in Chennai | DIPIFR exam coaching center | ACCA Approved Learning Partners | Diploma in IFRS Chennai | ACCA Diploma in IFRS | ACCA Approved Learning Providers | ACCA Approved Learning Partner Programme | ACCA Coaching India

Post a Comment