Powered By Blogger

Thursday 11 August 2011

நெஞ்சிலே உரமிருக்கு!!






நித்தமும் துளிரும்
நம்பிக்கைத் துளிகள்
நீர்த்துப் போகவில்லை!
நாளும் விடிகையிலே
நேர்மைப் பாதையில்
நற்பொழுதாய் மாற்றிடவே
நெஞ்சிலே உரமிருக்கு!!

ஏடெடுத்து படிச்சிடத்தான்
ஏக்கமா இருக்குதையா! - நான்
ஏழுதெரு சுத்துவது
ஏற்றிருக்கும் வேடமய்யா!
ஏச்சுப் பிழைக்கவில்லை
எகத்தாளம் பேசவில்லை!
எட்டூரு போனாலும்
ஏமாத்த தெரியவில்லை!!




மண்ணிலே விளஞ்சதெல்லாம்
மாங்காட்டு சந்தையில
மூணுகாலு வண்டியில
மூச்சுவாங்க எடுத்துவந்தேன்!
மதப்பான காய்கறிய
மொத்தமாக வித்துபுட்டு
மொரப்பநாடு போகவேணும்!

தெருவெல்லாம் அலைந்தாலும்
தொண்டதண்ணி வத்தவில்லை!
கொண்டுவந்த பொருளெல்லாம்
கொஞ்சம்கூட இல்லாம
வித்துபுட்டு போனாத்தான்
குடிக்கும்கஞ்சி வயித்துக்குள்ள
குளுகுளுன்னு போகுமய்யா!!




வெயிலென்ன மழையென்ன
குளிரென்ன காற்றென்ன!
சூழ்நிலைகள் மாறினாலும்
சூசகமாய் என்வாழ்வில்
சூட்சுமம் என்பதெல்லாம்
சுத்தமான வெள்ளைப்பணம்
சூதின்றி சேர்ப்பதுதான்!!




குடலெல்லாம் காஞ்சாலும்
குற்றம் செய்ய மனசில்ல!
கூசாம ஊர்பணத்த
கூறுபோட்டு தின்பதற்கு
குருதியில எண்ணமில்ல!
கூவிக்கூவி வித்தாலும்
கிடைச்சதிங்கே போதுமின்னு
கௌரவமா வாழ்ந்திடுவேன்!!


அன்பன்
மகேந்திரன் 

29 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

இதற்குப் பெயர்தான் வெள்ளைப் பணமா..?

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதைக்கு ஏற்ற தலைப்பு.

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதைக்கு ஏற்ற தலைப்பு.

சக்தி கல்வி மையம் said...

தெருவெல்லாம் அலைந்தாலும்
தொண்டதண்ணி வத்தவில்லை!
கொண்டுவந்த பொருளெல்லாம்
கொஞ்சம்கூட இல்லாம
வித்துபுட்டு போனாத்தான்
குடிக்கும்கஞ்சி வயித்துக்குள்ள
குளுகுளுன்னு போகுமய்யா!!///
ஏழ்மையை அருமையாக படம் பிடித்து காட்டுகின்றன இந்த வரிகள்..

சக்தி கல்வி மையம் said...

தெருவெல்லாம் அலைந்தாலும்
தொண்டதண்ணி வத்தவில்லை!
கொண்டுவந்த பொருளெல்லாம்
கொஞ்சம்கூட இல்லாம
வித்துபுட்டு போனாத்தான்
குடிக்கும்கஞ்சி வயித்துக்குள்ள
குளுகுளுன்னு போகுமய்யா!!///
ஏழ்மையை அருமையாக படம் பிடித்து காட்டுகின்றன இந்த வரிகள்..

மாய உலகம் said...

//குடலெல்லாம் காஞ்சாலும்
குற்றம் செய்ய மனசில்ல!
கூசாம ஊர்பணத்த
கூறுபோட்டு தின்பதற்கு
குருதியில எண்ணமில்ல!
கூவிக்கூவி வித்தாலும்
கிடைச்சதிங்கே போதுமின்னு
கௌரவமா வாழ்ந்திடுவேன்!!//

ஆஹா சூப்பர்... உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு நண்பா

M.R said...

தமிழ் மணம் ஒன்று

M.R said...

நேர்மையாய் பிழைப்பு நடத்தும் ஓர் உயர்ந்த உள்ளம் .

நல்ல நல்ல விசயங்களை ,நல்ல எளிமையான வரிகளிலே பதிவாக தரும்
உமக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே .

படிக்க வில்லை என்றாலும் பாதை தவறி போக மாட்டேன் என்ற நெஞ்சம் கும்பிட தோன்றும் .
பகிர்வுக்கு நன்றி நண்பரே

Anonymous said...

மகேந்திரன்...அழுத்தமான வரிகள்...

உங்களைப்போல் மரபுக்கவிதை சிறு வயதில் எழுதியது...
உங்க ஊர்ல ST .Xavier 's ல தான் படிச்சேன்...

உரம்ன உடனே TAC நியாபகம் தான் வந்தது....மன உரம்...நமக்கு தான் இல்லையே...நமக்ன உடனே உப்பு தான் நியாபகம் வந்தது..உங்க ஊரு அவ்வளவு பாதிச்சுட்டு..

Anonymous said...

எல்லோரும் கவிதைக்கு ஒரு படம் போடும்போது, நீங்கள் ஒரு கவிதைக்கே பல படங்கள் இடுவது ரசிக்கவைக்கிறது...


///குடலெல்லாம் காஞ்சாலும்
குற்றம் செய்ய மனசில்ல!
கூசாம ஊர்பணத்த
கூறுபோட்டு தின்பதற்கு
குருதியில எண்ணமில்ல!
கூவிக்கூவி வித்தாலும்
கிடைச்சதிங்கே போதுமின்னு
கௌரவமா வாழ்ந்திடுவேன்!!///


வைர வரிகள்...

வாழ்த்துக்கள்

ஹேமா said...

வெள்ளைப்பணம்.ம்...நல்லாயிருக்கு படங்களும் சிந்தனை வரிகளும் !

மகேந்திரன் said...

அன்பு நண்பர் முனைவர் இரா.குணசீலன்
தங்களின் இனிய கருத்துரைக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்
தங்களின் மேலான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு மாய உலக நண்பரே,
தங்களின் என் மீதான நம்பிக்கைக்கும்
மேலான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

சரியாச் சொன்னீங்க நண்பர் ரேவேரி

இன்று மன உரம் மட்டுமல்ல
மனிதநேயங்களும் குறைந்து தான் இருக்கின்றன.
உரங்களுக்கு அடையாளமே தமிழ்நாட்டில் தூத்துக்குடி
என்ற பெயரே காணாமல் போய்விட்டது.
மீளும் காலம் வரும்....
உப்பிற்கு இருந்த இடமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டே வருகிறது...
உப்பளங்களும் குறைந்து வீட்டுமனைகளாக உருவெடுத்து வருகின்றன...
எங்குதான் போகிறதோ??? பார்ப்போம்..

தங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்,

சரியாச் சொன்னீங்க, இன்று படிக்காமல் நேர்மையாக வாழ்பவர்
நிறைய இருக்கிறார்கள். கும்பிடக்கூடியவர்கள்.....

தங்களின் வாழ்த்துக்கும் என் மீதான
தங்களின் நம்பிக்கைக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஐயா ரத்னவேல் அவர்களே,
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஷீ.நிசி
தங்களின் வாழ்த்துரைக்கும்
ரசித்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி ஹேமா
தங்களின் மேலான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

கோகுல் said...

குடலெல்லாம் காஞ்சாலும்
குற்றம் செய்ய மனசில்ல!
கூசாம ஊர்பணத்த
கூறுபோட்டு தின்பதற்கு
குருதியில எண்ணமில்ல!//

நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க இங்க இருக்குற ஊழல் பெருச்சாளிகளுக்கு.

குணசேகரன்... said...

கூசாம ஊர்பணத்த
கூறுபோட்டு தின்பதற்கு
குருதியில எண்ணமில்ல!// honest words..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லோரிடம் வெள்ளைப்பணம் சேர்க்கும் நினைப்பு வந்தால் கருப்பு பண முதலை நாம் நாட்டை விழுங்காது....

அத்தனையும் அழகு...

கூடல் பாலா said...

உண்மையான வாழ்க்கை இதுதான் .....

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில் பதித்தமைக்கும்
இனிய கருத்திட்டமைக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன்
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

நெஞ்சிலே உரமும் நேர்மைத்திறமும் அருமை.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment