Powered By Blogger

Sunday 14 August 2011

பூக்களின் ஒன்பது நிலைகள்!!






'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடியிலோ, கொடியிலோ அல்லது மரத்திலோ எங்கெங்கு பூப்பினும் அதன் பூக்கும் பருவங்கள் ஒவ்வொன்றும் தனி அழகு.

நம் மொழியில் பூக்களை பற்றி பாடாத காவியங்களோ இலக்கியங்களோ இல்லை எனலாம்.





''கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
  காமம் செப்பாது கண்டது மொழிமோ
  பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
  செறிஎயிற்று அரிவை கூந்தலின்
  நறியவும் உளவோ நீ அறியும் பூவே''.     - குறுந்தொகை

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! தேனுண்ட மயக்கத்தினால் பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ  அறிந்த பூக்களில்.'

என்று பெரிய பட்டிமன்றம் நடத்தக்கூடிய அளவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தியது இந்த பூக்கள்.

பூக்கள் உருவாவதற்கு முன்னர் அதற்கு வெவ்வேறு பருவங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட  ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது. இதோ விளக்க முயல்கிறேன்.......




மகரந்த சேர்க்கையிலே
மகிழ்வோடு உதிக்கும் நான்
மதிபோல என் முகத்தை
முகப்பிலே காட்டும் நிலை
மொக்கு எனும் நிலை!!

மொக்கில் தவமிருந்து
இதழ்கள் தருவித்து
இறுக்கமாய் மூட்டுடன்
குவிந்த நிலை
மொட்டு எனும் நிலை!!




மொட்டில் மருவித்து
அகத்தில் இதழ்விரிய 
ஆரம்ப சூழ்நிலையே
அரும்பு எனும் நிலை!!

அரும்பிய நிலைமாறி
விரியும் இதழ்கள்
மேடிட்ட பரப்பாய்
பொங்கி வருதலே
முகிழ் எனும் நிலை!!




முகிழ்ந்து எழுந்து
விரிந்த இதழ்கள்
மணம் பரப்ப
எத்தனிக்கும் நிலையே
மூகை எனும் நிலை!!

மூகையின் வகையாலே
காற்றெனும் ஊடகத்தில்
மலர்ந்து மணம்
கமழும் நிலையே
மலர் எனும் நிலை!!




மலரென பெயர்கொண்டு
சந்தைக்கு வந்தபின்
தானிருக்கும் நிலைகாட்ட
நன்கு மலரும் நிலையே
அலர் எனும் நிலை!!

அலர்ந்து அகன்றபின்
காம்பினின்று கழன்று
வீழும் நிலையே
வீ எனும் நிலை!!





வீ என அலறி
வீழ்ந்து பின்னர்
தன்னிலை துறந்து
வாடி வதங்கிய நிலையே
செம்மல் எனும் நிலை!!







இதுவே மலரின் ஒன்பது நிலைகளாம். மேலும் சிலவற்றின் பருவங்களின் பெயர்களை வருகின்ற பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்.


அன்பன்
மகேந்திரன்

31 comments:

கூடல் பாலா said...

மலரைப் பற்றிய தகவல்கள் மனதை மயக்கும் கவிதை வடிவில் ....கிரேட் !

மாய உலகம் said...

த ம 2

மாய உலகம் said...

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன - முதல் படம்

மாய உலகம் said...

மொட்டு அரும்பு மலர் மட்டுமே பாடல்களில் சொல்லி வருகின்றனர்.... நீங்கள் அரும்பு, முகிழ், மூகை, மலர், அலர், வீ,செம்மல் என பூக்களின் ஒவ்வொரு நிலைகளையும் அழகான கவிதை நடையில் அசத்தியுள்ளீர்கள் நண்பா

மாய உலகம் said...

உ2 த 10 8

இராஜராஜேஸ்வரி said...

மலராய் மலர்ந்து மணம் வீசும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

மலர்பற்றிய கூற்றெல்லாம்
மணக்கின்ற பூச்செண்டே
தளர்வற்று தருகின்றீர்
தண்டமிழின் சொல்கொண்டே
உளமுற்ற மகிழ்வோடே
உருவான பாவோடே
நலமுற்று நீர்வாழ்க!
நற்றமிழின் சுவைசூழ்க!

புலவர் சா இராமாநுசம்
எம் வலைப் பக்கம் வருகை தருக

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் இனிய வரவுக்கும்
மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு மாய உலக நண்பரே,
தங்களின் விரிவான கருத்துரைக்கும்
இணைப்புகளில் ஓட்டளித்தமைக்கும்
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஐயா புலவர்.சா.இராமாநுசம்

தங்களின் பொன்னான பொற்பாதங்களை
இங்கு வசந்தமண்டபத்தில் பதித்தமைக்கும்
எம்முயிர்த்தமிழில் இனிய கவிதை இயற்றி
வாழ்த்தியமைக்கும்
நான் என்ன தவம் செய்தேன்.
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

நிச்சயம் தங்களின் வலைப்பக்கம் வருகிறேன்,

M.R said...

தமில் மணம் மூனு

M.R said...

பூக்களின் ஒன்பது நிலை அறிந்தேன் நான் இது வரை மொட்டு ,அரும்பு,மொக்கு இவை மூன்றும் ஒரே நிலை என்றிருந்தேன். தங்களின் பதிவை கண்டதுமே வெவ்வேறு என்றரிந்தேன். பகிர்வால் உணர வைத்ததற்க்கு நன்றி நண்பரே.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புதிய விஷயம்.....

அசத்தலான பதிவு..

சுதந்திரதின வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.
தங்களின் இனிய கருத்துரைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

M.R said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

சாகம்பரி said...

அழகு தமிழ் விளக்கம். முகையின் நிலையில் வரும் மணம்தான் எண்திசையும் பரவும் வலுவான உண்மையான மணம். மற்றவற்றையும் விளக்குங்கள். தூய தமிழ் பேச எழுத படிக்க அழகுதான்.

Anonymous said...

கலக்கல் கவிமாலை... மகேந்திரன்...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி சாகம்பரி...
நிச்சயம் அடுத்தடுத்த பதிவுகளில் இயன்ற அளவுக்கு
சமர்பிக்கிறேன்.
அழகு தமிழ் நம் நாவில் குடியிருப்பதே
நாம் செய்த புண்ணியம்..
தங்களின் இனிய கருத்துரைக்கு என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
தங்களின் மேலான கருத்துரைக்கு
என் உள்ளன்பான நன்றிகள்.
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாவ்.. மலரின் ஒன்பது பரிணாமங்களை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....

கவிதையில் மணம் வீசுகிறது.. வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஷீ.நிசி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாச் சொன்னீங்க நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

http://gunathamizh.blogspot.com/2010/01/blog-post_24.html

தொடர்புடைய இவ்விடுகையையும் பாருங்கள் நண்பா.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் முனைவர்.இரா.குணசீலன்

தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களின் பதிவைக்கண்டேன்,
மனதைக்கொள்ளை கொண்டது.

அம்பாளடியாள் said...

சிந்தனை கவிதை அருவியாகக் கொட்டுதே சகோ
இது எப்புடி?....அருமை வாழ்த்துக்கள்.....
இன்றும் ஒரு வித்தியாசமான ஆக்கம் என் தளத்தில்
உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
நிச்சயம் தங்களின் வலைப்பக்கம் வருகிறேன்.

அம்பாளடியாள் said...

ஓட்டுப் போட்டாச்சு ........

Anonymous said...

நிறைய தெரிந்து கொண்டேன்.
பகிர்விற்கு நன்றி.

Unknown said...

Super

Post a Comment