Powered By Blogger

Friday 29 July 2011

நிமிடங்களின் இணைப்பில்!!






பிறப்பின் நாழிகைக்கும்
இறப்பின் மணித்துளிக்கும்
இடைவெளி சிறிதே
மரணத் தருவாயில்
மனம் மல்காது
முந்தைய பொழுதுகளை
உந்து கோலாக்கி
உய்வின் வழிதேடு!!

கையிலே கிடைத்துவிட்டால்
சதிராட்டம் போடாது
வறுமை உனைத்தொடுமுன்
செல்வோம் எனும் செல்வத்தை
சேமிக்கப் பழகிகொள்
இன்றோடு தொலையாதே
நாளை என்றொரு நாளிருக்கு!!







தன்னை அறிந்துகொள்
தன்னிலை அறிந்துகொள்
உன்னைவிட சிறந்தோர்
பலருண்டு புரிந்துகொள்
உன்னை உணர்த்தி
தனித்தன்மை காட்டிவிட
தற்பெருமை அழித்துவிடு!!

உயிரின் செல்களில்
வேதியியல் கூறுகளாய்
ஒழுக்கத்தை விதைத்துவிடு!
வைரத்தின் மாற்றுருவாம்
வைராக்கியம் வளர்த்துவிடு! - உன்
தகுதியை தகர்த்தெறியும்
தாழ்வெண்ணம் தவிர்த்துவிடு!!




முன்னிலை உள்ளவரின்
பின்புலம் அறிந்துகொள்
தானென்று எண்ணாதே
தன்னடக்க நிழல் நாடு!
துடுக்கை அழித்து
வாழ்க்கைப் படகின்
துடுப்பைத் தேடு!!

அன்பின் வலிமையுடன்
பண்பின் துணைகொள்!
ஏற்றமது ஏறுகையில்
குற்றம் புரியாது
பணிவைப் பற்றிக்கொள்!
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதுரியம் கற்றுக்கொள்!!







நிறம்மாறி உருமாறி
தன்னிலை தடம்மாறி
கூதிர்காலம் முன்னே
நிலத்தை முத்தமிடும்
இலைகளின் பருவத்தில்!
இலையுதிர் காலமென்றும்
நிலைக்கும் நிரந்தரமல்ல!!

மொட்டவிழ்ந்து விரிந்து
மகரந்த மகசூலை
மடைமீறும் நதியாய்
வனமெங்கும் தூவச்செய்து
கனி குவியச் செய்யும்
வசந்த காலமிங்கே -இதோ
நிமிடங்களின் இணைப்பில்!!


அன்பன்
மகேந்திரன்

31 comments:

M.R said...

தன்னை அறிந்துகொள்
தன்னிலை அறிந்துகொள்
உன்னைவிட சிறந்தோர்
பலருண்டு புரிந்துகொள்
உன்னை உணர்த்தி
தனித்தன்மை காட்டிவிட
தற்பெருமை அழித்துவிடு!!



தலைகனம் தகர்ந்திட

தன்னிலை உணர்ந்திட

நல்லதொரு வரிகள்

அருமை

கூடல் பாலா said...

நல் வாழ்க்கைக்கு இதுதான் வழி.ரொம்ப அருமை அண்ணே !

மாய உலகம் said...

//இன்றோடு தொலையாதே
நாளை என்றொரு நாளிருக்கு!!//

நண்பரே... தேவையான வரி...வாழ்த்துக்கள் நன்றி

மாய உலகம் said...

//வைராக்கியம் வளர்த்துவிடு! - உன்
தகுதியை தகர்த்தெறியும்
தாழ்வெண்ணம் தவிர்த்துவிடு!!//

உத்வேகம் அதிகரிக்கும் வரிகள்... சூப்பர் நண்பா

மாய உலகம் said...

//அன்பின் வலிமையுடன்
பண்பின் துணைகொள்!
ஏற்றமது ஏறுகையில்
குற்றம் புரியாது
பணிவைப் பற்றிக்கொள்!
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதுரியம் கற்றுக்கொள்!!//

உந்துசக்தி வரிகள்... நன்றியுடன் வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

எனது வலைப்பதிவில்….

முருகப்பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் )
http://maayaulagam4u.blogspot.com/2011/07/blog-post_29.html

சுற்றி நடந்த காதல் கதை
http://maayaulagam-4u.blogspot.com/2011/07/blog-post_2389.html
நண்பர்களே வந்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்

Anonymous said...

தன்னம்பிக்கையை தட்டியெழுப்பும் வரிகள்.. வாழ்த்துக்கள் நண்பரே!

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ.......

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்


நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

kupps said...

மிகவும் அருமையான தன்னடக்க,தன்னம்பிக்கை கவிதை.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் மேன்மையான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

மாயுலகத்தின் நண்பரே,

தங்களின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி.
இதோ உங்கள் தளம் தேடி ஓடி வருகிறேன்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஷீ-நிஷி

தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
தங்களின் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

vetha (kovaikkavi) said...

I love these lines..''..உயிரின் செல்களில்
வேதியியல் கூறுகளாய்
ஒழுக்கத்தை விதைத்துவிடு!...''
எல்லாமே பிடித்த வரிகளாக உள்ளன...
எல்லாமே பிடித்த வரிகளாக உள்ளன...etha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிலிர்க்க வைக்கும் கவிதை...
வாழ்த்துக்கள்..

ஹேமா said...

மீண்டுமொரு அற்புதமான வரிகளோடு கவிதை.சோர்ந்த மனதை தட்டியெழுப்புகிறது.சந்தோஷம் மகேந்திரன் !

Rathnavel Natarajan said...

பணிவைப் பற்றிக்கொள்!
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதுரியம் கற்றுக்கொள்!

அருமையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வணக்கம் சகோ, எம் வாழ்வில் நாம் எவற்றினத் துறந்து, எவற்றினைக் கடைப் பிடித்து, எம் ஒவ்வோர் அடிகளையும் எவ்வாறு முன்னகர்த்தினால் விடியல் பிறக்கும் என்பதனை விளக்கும் வகையில், நம்பிக்கையொளி மனதினுள் ஏற்றி வைக்கும் நோக்கில் அற்புதமான தத்துவக் கவிதையினைத் தந்திருக்கிறீங்க, ஒவ்வோர் வரிகளும் தத்துவ முத்துக்களை உதிர்த்திருக்கின்றன.

vidivelli said...

aakaa!! ellaamE arputhamaana varikal..
manithan eppadiyellaam vaalavendumenpathai arumaiyaay solliyirukkiRinkal,,,
anaiththum alakaana aalam niraintha muththaana varikal,,
paaraaddukkal...

vidivelli said...

பிறப்பின் நாழிகைக்கும்
இறப்பின் மணித்துளிக்கும்
இடைவெளி சிறிதே
மரணத் தருவாயில்
மனம் மல்காது
முந்தைய பொழுதுகளை
உந்து கோலாக்கி
உய்வின் வழிதேடு!!

wonderful...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்,
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி ஹேமா
தங்களின் உற்சாகமான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

ரத்னவேல் ஐயா
தங்களின் வரவுக்கும்
மேன்மையான கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோ நிரூபன்,
தங்களின் விரிவான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி
தங்களின் வாழ்த்துரைக்கும்
மேலான கருத்துக்கும் மிக்க நன்றி.

மாலதி said...

மொட்டவிழ்ந்து விரிந்து
மகரந்த மகசூலை
மடைமீறும் நதியாய்
வனமெங்கும் தூவச்செய்து
கனி குவியச் செய்யும்
வசந்த காலமிங்கே -இதோ
நிமிடங்களின் இணைப்பில்!!//அருமையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி மாலதி
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment