புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு
இதோ அண்ணன் எவ்வழி தம்பி அவ்வழி....
ஒவ்வொரு ஆண்டு ஆரம்பத்திலும் தீர்மானங்கள் பல எடுப்பதும், ஆண்டு முடிவில் தீர்மானங்கள் நிலுவையில் இருப்பதும் மாற்ற மு டியாத ஒன்றாகவே நிகழ்ந்து வருகிறது.இருப்பினும்எடுக்கும் தீர்மானங்கள் மட்டும் இன்னும் தொடர்ந்துகொண் டு தான் இருக்கின்றன.
வழங்கப்படா தீர்ப்புகளாய்
ஆயிரம் ஆயிரம் வாதங்கள்
நிலுவையில் நிற்கையிலே
இன்னும் சில வாதங்கள்
பிரதி வாதங்களை எதிர்நோக்கி
இவ்வாண்டு முழுவதும்!!
இருசக்கர வாகனத்தை
இயைபாய்த் தேடும் என் மனம்
இன்றேனும் நடக்கலாமே - என
இடிக்கும் தினமும்!
இந்த விடுமுறை நாட்களில்
இதை நான் செய்விக்க
இனிதே ஓர் தீர்மானம்!!
கருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் கொண்ட
கருத்தாழம் மிகுந்த
நாட்டுப்புறத் தொடர் ஒன்றை
கட்டிக்கரும்பென தித்திக்க
களிப்போடு கொடுத்திடவே
கருத்திலோர் தீர்மானம்!!
நாளும் பொழுதுகளும்
நயமாய் செல்கையிலே
நல்லுறவு நட்புக்களோடு
திங்களுக்கு ஒருமுறையேனும்
நான்குவார்த்தை பேசிடவே
தொலைபேசி அழைத்திடவோர்
நான் ஏற்ற தீர்மானம்!!
தீர்மானங்கள் இயற்றுவது எளிது. அதை நிறைவேற்றுவது மிகக் கடினம்
என்றாலும் முடிந்தவரை முயற்சிக்க எண்ணுகிறேன்.
ஆயத்தமாகும் தீர்மானங்கள் எல்லாம் பல கதைகள் சொல்லும்
இவ்வாண்டின் முடிவில்.
இத்தீர்மானங்களை தொடர நான் அழைக்கும் தோழமைகள் .....
(தயவு செய்து தொந்தரவு செய்கிறேன் என நினைக்கவேண்டாம்)
அருமைச் சகோதரி ஸ்ரவாணி
அருமைச் சகோதரி சந்திரகெளரி
அருமை நண்பர் கணேஷ்
நன்றிகள் பல.
அன்பன்
மகேந்திரன்