நிறமும் மனமும் இல்லாத
நிறைவாய் இவ்வுலகில்
நிரல்நிறை அமுதமாய்
நிறைந்திருக்கும் மந்திரமே!!
இச்சக பரப்பளவில்
இருவேறு வாயுக்களை
இறுக பிணைத்துவைத்த
இயற்கையின் மகவே!!
வாழ்வாங்கு வாழ்ந்திட
வந்த மனிதனின்
வாழ்வின் ஆதாரமாம்
வையகத்து நித்திலமே!!
தன்வண்ணம் தவறிடினும்
தான் ஏற்கும் வண்ணங்களை
தனிவட்டி வண்ணங்களுடன்
தகைவாய் அளிக்கும் பேரழகே!!
நாகரீகம் என்பதெல்லாம்
நீ தவழும் நதிக்கரையில் தான்
நீட்சியாய் வளர்ந்ததென
நன் சரித்திரம் கொண்டாயே!!
திட திரவ வாயுவென
தீர்க்கமாய் முந்நிலையில்
திரவியமென எமக்காய்
தோன்றிட்ட தேனமுதே!!
முந்நிலையில் எந்நிலையாய்
முகமங்கே கொண்டாலும்
முற்றிலும் தன்னிலையை
முழுதாய்க் கொண்ட ஆரமுதே!!
வெப்பம் காற்று என
வெளிதொடு தூண்டுதல்
வெம்மையாய் வந்திடினும்
முந்நிலைக்குள் தன்னிலையை
மாற்றிக்கொள்ளும் மாதவமே!!
எத்துன்பம் வந்திடினும்
எண்ணிய செயல்முடிக்க
எடுத்துவிடு அவதாரமென
எனக்குரைத்த கருப்பொருளே!!
ஏற்றதை ஏதுவாய் முடித்திடவே
எந்நிலை மாறினாலும்
உன்னிலை தவறாதே என
உட்கருத்து போதித்த மறைபொருளே!!
அன்பன்
மகேந்திரன்
50 comments:
நீராகாரம்... ஸாரி. நீராதாரம் இல்லையேல் மனித வாழ்வு ஏது? மறைபொருளாய் வந்த கவிதையின் நயம் பிரமிக்க வைக்கிறது மகேன். சூப்பர்ப்.
"தண்ணீர்" நான் கிராமத்தில்தான் இருக்கிறேன். சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடே வந்ததில்லை. ஆனால் நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது. அப்படியெனில் இன்னும் பத்துவருடம் கழித்து?.......
தண்ணீரின், இயற்கையின் அவசியத்தை உணர்ந்தாலன்றி வேறு வழியில்லை.
தங்களின் கவிதை அதை உணர்த்துகிறது.
எத்துன்பம் வந்திடினும்
எண்ணிய செயல்முடிக்க
எடுத்துவிடு அவதாரமென
எனக்குரைத்த கருப்பொருளே!!
ஏற்றதை ஏதுவாய் முடித்திடவே
எந்நிலை மாறினாலும்
உன்னிலை தவறாதே என
உட்கருத்து போதித்த மறைபொருளே!!//
அண்ணே வணக்கம் ...
கடைசி வரிகள் அப்படியே நெஞ்சுக்குள் ஒட்டிக்கொண்டது ...
மிகவும் ரசித்தேன் ... என் வாழ்த்துக்கள்
தண்ணீரை பற்றிய தரமான கவிதை அன்பரே தொடருங்கள்
நிறமும் மனமும் இல்லாத
நிறைவாய் இவ்வுலகில்
நிரல்நிறை அமுதமாய்
நிறைந்திருக்கும் மந்திரமே!!
இச்சக பரப்பளவில்
இருவேறு வாயுக்களை
இறுக பிணைத்துவைத்த
இயற்கையின் மகவே!!
அடடடடடா....
நண்பரே.. எப்படிங்க உங்களுக்கு இப்படியெல்லாம் வார்த்தை ஜாலங்கள் வருகிறது...
தொடக்க இரு கண்ணியை விட்டே என்னால் அகல முடியவில்லை... மீதியை சொல்ல வார்த்தையைத் தேடிக்கொண்டே இருக்கிறேன் நண்பரே. அருமைங்க.
அமுது.
உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய பிரச்சனையை கவிதை மூலம் அழகு பட சொல்லி விட்டீர்கள் சார்...
நன்றி. வாழ்த்துக்கள் (த.ம. 4)
இச்சக பரப்பளவில்
இருவேறு வாயுக்களை
இறுக பிணைத்துவைத்த
இயற்கையின் மகவே!!ஃஃஃஃஃஃஃஃ
தங்கள் வரிகளில் அறிவியலும் அழகாய் ஒட்டிக்கொள்கிறது.நீண்ட நாட்டகளின் பின் இங்கு சந்திப்பது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் சொந்தமே!
இச்சக பரப்பளவில்
இருவேறு வாயுக்களை
இறுக பிணைத்துவைத்த
இயற்கையின் மகவே!!ஃஃஃஃஃஃஃஃ
தங்கள் வரிகளில் அறிவியலும் அழகாய் ஒட்டிக்கொள்கிறது.நீண்ட நாட்டகளின் பின் இங்கு சந்திப்பது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் சொந்தமே!
உயிர் வளர்க்க மட்டும் அல்ல
மனிதனை விலங்குகளிடமிருந்து
வித்தியாசப்படுத்திக்காட்டும் நாகரீகம் வளரக் கூட
நதி தீரங்கள் தானே முல காரணம் என்பதை
மிக அழகாக விவரித்துப் போகும்
பதிவு அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அழகு சொட்டும் கவிதை.. படங்களைப்போலவே..
அருமையான கவிதை! (TM 6)
ஆஹா தண்ணீரின் அருமை நிறைவான கவிதையாக அருமை அருமை மக்கா....! வசந்தம்...!
//வெப்பம் காற்று என
வெளிதொடு தூண்டுதல்
வெம்மையாய் வந்திடினும்
முந்நிலைக்குள் தன்னிலையை
மாற்றிக்கொள்ளும் மாதவமே!!//
அருமையான சிந்தனை.பாராட்டுக்கள் சகோதரா.
உயிரின் மூலமே நீர் தானே.
அதன் சிறப்பை அருமையாய் சொன்னீர் நண்பரே.
கடந்து பிறவியில் நீர் புலவராய்ப் பிறந்தீரோ! வரிகள் அத்தனையும் அருமை. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்
அழகு..நாகரீகங்கள் நாகரிக்க தொடங்கியது நதி நிலங்களில் தானே...
ரசிக்கக் கூடியது
நிரல்நிறை அமுது, நிறைக்கிறது மனது. நீரில்தான் அத்தனையும் அடக்கம். இங்கே அதன் புகழ்பாடும் கவிதைக்குள் அழகிய தமிழோடு, வேதியியல், இயற்பியல், சரித்திரம், பூகோளம் இவற்றுடன் வாழ்வியலும் கலந்து வகையாய் மனம் வசீகரிக்கிறது. மிக மிக அருமை. பாராட்டுகிறேன் மகேந்திரன்.
அறிவியலை அழாகக் கலந்து தண்ணீர்க் கவிதை கொடுத்திருக்கிறீர்கள்.அருமை.
நீங்க ஆசிரியர் என்று நினைக்கிறேன்.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வே.சுப்பிரமணியன்,
இன்றைய உலகில் பெரும்பாலானோர்
நீரின் அவசியத்தை உணர்ந்துவிட்டார்கள்...
ஆயினும் நீர் நமக்கு உரைக்கும் வாழ்வியல் தத்துவத்தை
உரைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மகிழ்கிறேன்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..
அன்புநிறை நண்பர் பிரேம்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..
அன்புநிறை சகோதரர் அரசன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்..
அன்புநிறை நண்பர் அருணா செல்வம்,
ஆழ்ந்துணர்ந்து கருத்தளித்த தங்களுக்கு
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்..
அன்புநிறை நண்பர் இராஜசேகர்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்..
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்..
azhakiya padangal!
azhakiya varikal!
akalavillai-
en ennangal!
அருமை.
வாழ்த்துகள்.
நீரைப்பற்றி அழகிய சொற்களை செதுக்கி சிரப்பான கவிதை படைத்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள் சகோ.
நீர் இல்லயேல்..இவ்வுயிர் இல்லை...அதன் கடமையய் அது சரியாகத்தான் செய்து வருகிறது...அதை உணர்த்திய உம் கவிதை அருமை...மாப்ளே
நீரைப்பற்றியான அற்புதமான கவிதை...
நீரின்றி அமையாது உலகு....
அன்புத் தங்கை அதிசயா,
தங்களின் புரிதலுக்கும் மேலான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
ஆழ்ந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அமைதிச் சாரல்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வரலாற்று சுவடுகள்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புத் தங்கை சித்தாரா மகேஷ்,
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சத்ரியன்,
தங்களின் அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
சென்ற பிறவி அல்ல சகோதரி இனி எப்பிறவி எடுத்தாலும்
தேன்தமிழ் தாயின் அடியினில் மகவாய் பிறக்கவே ஆசை...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ மூஸா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த புரிதலுக்கும் அழகிய கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் முரளிதரன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு முதலில் என்
மனமார்ந்த நன்றிகள்.
நான் ஆசிரியர் அல்ல நண்பரே..
வேதியியல் படித்த தொழிற்சாலையில் பணிபுரியும்
தொழிலாளன்.
அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சாதிகா,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது,
தங்களின் மேலான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சங்கவி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
நாகரீகம் என்பதெல்லாம்
நீ தவழும் நதிக்கரையில் தான்
நீட்சியாய் வளர்ந்ததென
நன் சரித்திரம் கொண்டாயே!!
எனக்குப் பிடித்த அழகிய வரிகள் அங்கிள்...........
Post a Comment