பசுமைநிற விரல்களிலே
பனித்துளி நகங்களோ?!
புற்களின் நுனியீன்ற
கண்ணாடிக் குமிழ்களோ?!!
பனித்துளி நகங்களோ?!
புற்களின் நுனியீன்ற
கண்ணாடிக் குமிழ்களோ?!!
ஒளியொன்றை உள்வாங்கி
உன்னகப் பரப்பளவில்
எதிரொலித்து ஆங்கே
பலவண்ணம் காட்டும்
மாயநீர்க் கோளமே!!
எந்தவொரு நொடியிலும்
தன்னுருவை இழக்கும்
அற்பாயுள் வாழ்வெனினும்
உன் புறத்தில்
என்முகம் காட்டி
இன்புறுவாய் நகைத்து நிற்கும்
நீயோ
வைரமணிப் பெட்டகமே....!!
அன்பன்
மகேந்திரன்
30 comments:
ஆம்..அது மாய நீர்க்கோளம் தான்.
ஆம்..அது மாய நீர்க்கோளம் தான்.
மயக்கும் நீர்க் கோளம்!
மாய நீர்க் கோளம்!
அழகு மொழிஜாலம்!
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
Alakiya kavithai nanpare
வானம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ
பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ
கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ
அழகிய சிந்தனை வாழ்த்துக்கள் சகோ .
அருமை நண்பரே (TM 4)
கண்ணாடிக் குமிழ்... வைரமணிப் பெட்டகம்... என்னமாய் வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள் மகேன். பிரமிப்புடன் உம் கவித்திறனை வியக்கிறேன் நான். அருமைங்க நண்பா...!
அருமையான வித்தியாசமான
ஆழமான பார்வை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பசுமைநிற விரல்களிலே
பனித்துளி நகங்களோ?!
புற்களின் நுனியீன்ற
கண்ணாடிக் குமிழ்களோ?!//
கவிதையும், அதற்கு பொருத்தமான படமும் அருமை.
வைரமணிப் பெட்டகமே அருமையான காட்சி !!
நீர்க்கோலம் மாயம் என்றாலும் வைரமணிப் பெட்டகமே! அருமை கவிதை!
வித்தியாசமான கவிதைக்கு நன்றி நண்பரே ! (த.ம. 9)
பனித்துளிக்கு புதுமையான உவமைகள்.
நல்ல கற்பனை
pani kolathil oru-
kavi kolamaa....!!
பசுமைநிற விரல்களிலே
பனித்துளி நகங்களோ?!
புற்களின் நுனியீன்ற
கண்ணாடிக் குமிழ்களோ?
அருமையான சிந்தனை நண்பரே.
அபாரம்..!
வேறென்ன சொல்ல!
நன்று..வாழ்த்துக்கள்!
சின்ன பிள்ளையா இருக்கும்போது புல், செடி மேல இருக்கும் பனித்துளியை பார்த்து ரசிச்சு பார்ப்போம். காயத்து மேல எடுத்து டடவிக்கிட்டா குணமாகும்ன்னு சொன்னதால எடுத்து தடவிக்குவோம். வெயில் வந்தப்பின் காணாம போகும் அதிசய்ம் என்னன்னு புரியாம முழிச்ச காலம்லாம் உண்டு. இப்போ பனித்துளியை கண்ணால் பார்ப்பதே அரிதா இருக்கு. படங்களும், கவிதையும் அருமை. பகிர்வுக்கு நன்றி அண்ணா.
மனிதனின் வாழ்கையும் பனித்துளி போன்றுதான் இல்லையா...? காய்ந்து போகும் அந்த பொழுதுக்குள் மனிதன்தான் ஆடும் ஆட்டமென்ன பாட்டமென்ன....!
பனித்துளியும் ஞானம் சொல்கிறது.நாம் தான் எதையும் புரிந்துகொள்வதில்லை.அருமை சொந்தமே!
புல் நுனியின் பனித்துளிக்கும் ஓர் கவிதை எழுதி அதை முத்தாக்க மகிக்கு மட்டுமே முடிகிறது.அழகான கவிதை வாழ்த்துகள் !
பனித்துளி நகங்கள்///
உண்மையில் நகங்களைப் போன்ற தோற்றம்தான் அதிகாலைப் பணித்துளிக்கு...
அழகான கற்பனை சார்...
அதிகாலை பனித்துளி கூட்டங்களின் அழகு அழகோ அழகு......
// ஒளியொன்றை உள்வாங்கி
உன்னகப் பரப்பளவில்
எதிரொலித்து ஆங்கே
பலவண்ணம் காட்டும்
மாயநீர்க் கோளமே!!//
அருமையான வரிகள்...
புற்களின் நுனியீன்ற
கண்ணாடிக் குமிழ்களோ?!!
என்ன ஓர் அழகான வர்ணனை!!!
சூப்பர்ங்க நண்பரே.
ந்நிர் குமிழைப்பற்றி நீரோட்டமாக மனதை வருடுது கவிதை
இன்னும் சில திங்களில் நம்மை பனித்துளி வந்து சிலரை மகிழவைக்கும் சிலரை மலரவைக்கும் சிறந்த ஆக்கம் பாராட்டுகள்
வைர பெட்டகம் தான் அண்ணே .. அருமையான சொல்லாக்கம் என் நன்றிகள்
ரசிக்கும் மனம் அமைவது ஒரு வரம் எனில் ரசித்தவற்றை பிறரும் ரசிக்கும் வகையில் அழகிய கவிதையாக்குவது இன்னுமொரு வரம். இரண்டும் அழகாய் கைவரப்பெற்றிருக்கிறது உங்களிடம். பாராட்டுகள் மகேந்திரன்.
இனிய கருத்துகள் பகிர்ந்த
அனைத்து தோழமைகளுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
///ஒளியொன்றை உள்வாங்கி
உன்னகப் பரப்பளவில்
எதிரொலித்து ஆங்கே
பலவண்ணம் காட்டும்
மாயநீர்க் கோளமே!!//
பிரமாதம். அருமையான கோர்வை.
Post a Comment