Powered By Blogger

Friday 1 June 2012

சிரித்திருக்கும் சிந்துமணி !!!







ன்னேனன்னே நானேனன்னே 
தானேனன்னே நானேனன்னே
தன்னேனன்னே நானேனன்னே - தானே
தானேனன்னே நானேனன்னே!!

ண்ணன்மாரே தம்பிமாரே
அருமையுள்ள அக்காமாரே!
கூடியிங்கே வந்திடுங்க - நாம
கூட்டா சேர்ந்து பேசிடலாம்!!
 
தென்னங்கீற்று ஒலைவைச்சி 
எங்க அப்பன் போட்ட வீடு!
திண்ணை ரெண்டு இங்கிருக்கு - வாங்க
கூடி நாமும் பேசிடலாம்!!
 

 


டபடன்னு பறந்துபோகும்
பாசமான தட்டாம்பூச்சி!
பறக்கும் ரெக்கை இறக்கி வைச்சி - உள்ளே  
பழக்கம் பேச வந்திடிங்கே!!
 
ங்கப்பன் ஆண்டிமுத்து
ஏவுவேலை  வேலைக்காரன்!
சொன்னவேலை செஞ்சிபுட்டு - இப்போ
சோமப்பொடி வாங்கிவாறார்!! 
 
ங்காத்தா பொன்னுத்தாயி 
இலந்தமல போயிருக்கா!
விறகுவெட்டி சுமந்துவந்து - நல்லா
கஞ்சிவச்சி தந்திடுவா!!
 
 
ரெண்டு நாளு கழிஞ்சபின்னே 
பள்ளிக்கூடம் போகவேணும்!
போட்டுபோக ஆடையில்ல - இப்போ 
அப்பன்கிட்ட கேட்டிடனும்!!
 
ன்னத்த நீ சாப்பிட்டடா
ஏப்பமிடும் ஏழுமல!
உங்க அப்பனாத்தா தேடுவாக - வெரசா
வீட்டுக்கு நீ போயிடடா!!
 
சித்தமாக பேசுறியே
சிவப்புசட்ட சின்னத்தாயி!
எங்க அப்பனாத்தா வந்திடத்தான் - இன்னும்
சித்த நேரம் ஆகவேணும்!!
 
 
ட்டுவூறு பேசுறியே
ஏத்தமுள்ள ஏழுமல!
அப்பனாத்தா போனயிடம் - உனக்கு
தெரியுமான்னு சொல்லிடடா!!
 
ழைபெஞ்சு ஒஞ்சதுபோல்
ஊரெல்லாம் கழிவுத்தண்ணி!
என்னப்பனான காத்தமுத்து - அங்கே
சுத்தஞ்செய்ய போயிருக்கார்!!
 
சொந்த வயல் இல்லேன்னாலும்
சொக்காரன் வயலினிலே!
களையெடுக்க போயிருக்கா - அங்கே
எங்காத்தா தங்கமணி!!
 
 
க்கனையா பேசுவியே
வாயாடி வைரக்கண்ணு!
வாடிப்போன பயிரைப்போல - நீயோ
வாயடைச்சி போனதேய்யா!!
 
சின்னமணி பொன்னுமணி 
எங்கவூரு சிந்தாமணி!
சில்லறைய போட்டதுபோல் - இங்கே
சிரித்திருக்கும் சிந்துமணி!!
 
மாட்டுவண்டி கட்டிக்கிட்டு
மந்தையூரு  சரக்கு ஏத்தி
மதுரைச்சீமை போயிருக்கார் - ஆமா
மாயாண்டி எங்க அப்பன்!!
 
 
லையும் காயும் கலந்திருக்கும்
சென்னா இலை வாங்கிவர!
செம்புக்குடோன் போயிருக்கா - ஆமா
எங்க ஆத்தா கனகவல்லி!!
 
ரெட்டைச்சடை போட்டுக்கிட்டு 
ஒத்தரோசா வைச்சிகிட்டு!
ஓரமாக இருப்பவளே - இங்கே 
முன்னேவாடி மாரிக்கனி!!
 
ழைய இரும்பு தகரமின்னு 
மூணுகாலு வண்டியிலே!
ஊருவழியா போயிருக்கார் - ஆமா
எங்க அப்பா மாடசாமி!!
 
 
த்தையாக கழியெடுத்து
மணமணக்கும் வாசத்தோட
பத்தி செய்ய போயிருக்கா - எங்க
தங்க ஆத்தா வடிவரசி!!
 
பாண்டிக்கட்டம் போடுவோமா
பல்லாங்குழிதான் ஆடுவோமா!!
நம்ம அப்பனாத்தா வருவதற்கு - இன்னும்
கொள்ள நேரம் கிடக்குதய்யா!!
 
ண்ணாமூச்சி ஆடுவோமா
பச்சக்குதிரை தாண்டுவோமா!
கோலிக்குண்டு கொண்டுவந்து - நாம  
குழிபறிச்சி ஆடுவோமா!!
 
 
லேயப்பா ஏழுமல
வாடாப்பா வைரக்கண்ணு!
நம்ம அப்பனாத்தா வாராக - அந்த
மாரிக்கனிய கூட்டிவாங்க!!
 
லே தங்கமக்கா
நாங்க பெத்த பொன்னுமக்கா!
வீட்டுக்குள்ளே ஓடியாங்க - நாங்க
பண்டம் பல வாங்கியாந்தோம்!!
 
நாளெல்லாம் வேலைசெஞ்சி
நாடிநரம்பு அத்துப்போயி!
வீட்டைத்தேடி வந்தீகன்னா - வந்து
கொஞ்சநேரம் ஓய்வெடுங்க!!
 
 
ங்கமேல அக்கறையா 
பேசுறியே சின்னத்தாயி!
நாங்க படும் பாடுயெல்லாம் - நீங்க 
நல்லா வாழ வேணுமின்னு!! 
 
ரெல்லாம் தேடினாலும் 
உங்கபோல அப்பனாத்தா!
எங்களுக்கு கிடைக்காதய்யா - ஆமா
சத்தியமா சொல்லுறேய்யா!!
 
வேர்வையிலே முத்தெடுத்து 
விளஞ்சிவந்த சின்னப்புள்ள!
பெரிய வார்த்த பேசாதம்மா - நாங்க 
உங்களைத்தான் நம்பியுள்ளோம்!!
 
 
ரெண்டுநாளு போனபின்னே 
பள்ளிக்கூடம் போகவேணும்!
பள்ளிக்கூடம் போவதற்கு - நாங்க 
பொருளெல்லாம் வாங்கிவந்தோம்!!
 
நாங்கபடும் பாடுயெல்லாம் 
நான் பெத்த செல்லக்கிளி!
உனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ
நல்லாபடிச்சி வளரவேணும்!!
 
ப்பனுக்கு ஆசையுண்டு 
ஆத்தாளுக்கும் நிறையவுண்டு!
படிச்சவுக மெச்சிறாப்போல் - நீங்க 
நல்லநிலைக்கு வரவேணும்!!
 
 
கோவிலுக்கு போனதுண்டு 
சாமியங்கே இல்லையப்பா!
பெத்துவளர்க்கும் நீங்கதானே- ஆமா
எங்களுக்கு சாமியப்பா!!
 
னந்திறந்து சொல்லுறேய்யா 
முக்காலும் சத்தியமா!
வேறு எண்ணம் எங்களுக்கு - ஆமா
கடுகளவும் இல்லையய்யா!!
 
ல்லையொன்னு வகுத்துவைச்சி 
எதிர்நீச்சல் போட்டிடுவோம்!
எங்ககுல சாமிகளே - நாங்க 
கொண்டகொள்கை மாறமாட்டோம்!! 
 
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 

65 comments:

Seeni said...

பாடலின் வழியே-

ஏழைகளின் கனவு!
வாழ்வு-
நிராசை-
நிறைவேறும் ஆசை!

அழகிய படங்கள்!
அழகான வார்த்தைகள்!

அருமையான-
கவிதை!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கருத்துக்கள் கொண்ட வரிகள் ! வாழ்த்துக்கள் சார் !

Unknown said...

கிராமத்து வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவருகிறது இப்பாடல்! அருமை! வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

கோவிலுக்கு போனதுண்டு
சாமியங்கே இல்லையப்பா!
பெத்துவளர்க்கும் நீங்கதானே- ஆமா
எங்களுக்கு சாமியப்பா!!

அருமை அருமை..
கிராமத்து வாசம் நுகர்ந்தேன் அன்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

நாங்கபடும் பாடுயெல்லாம்
நான் பெத்த செல்லக்கிளி!
உனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ
நல்லாபடிச்சி வளரவேணும்!!


பள்ளியிலும், கல்லூரிகளிலும் பெற்றோர் தம் பிள்ளைகளைச் சேர்க்கப்படும பாடு இருக்கிறதே..


தனியார் நடத்தவேண்டிய மதுவை அரசுநடத்துவதாலும்
அரசுநடத்தவேண்டிய கல்வியை தனியார் நடத்துவதாலும்

ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு இது இதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர, வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்பவர்கள் தான்.

அதிலும் படிப்பறிவில்லாமல் கிராமத்திலிருந்து முதலாவது தலைமுறைக்குழந்தையைக் கூட்டிக்கொண்டு கல்விநிலையங்களை நோக்கிப் படையெடுக்கும் கிராமத்து மக்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.

பல்வேறு சமூக அவலங்களையும், அதிலும் எதிர்நீச்சல்போடும் மக்களையும் அசைபோடவைத்தது தங்கள் கவிதை..

நன்று.

குறையொன்றுமில்லை. said...

அழகான வரிகளில் நல்ல கவிதை. வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கோவிலுக்கு போனதுண்டு
சாமியங்கே இல்லையப்பா!
பெத்துவளர்க்கும் நீங்கதானே- ஆமா
எங்களுக்கு சாமியப்பா!!//

சிரித்திருக்கும் சிந்துமணி !!!

சிந்திக்க வைத்த சிந்தாமணி ! ;)

பாராட்டுக்கள்.

Unknown said...

கவிதை நல்லா இருக்கு மாப்ள...

Unknown said...

உழைக்கும் சமுதாயத்தின்....கிளைகள் வேர்விட்டு வளர ஒரு நாட்டுபுற பாட்டு எழுதியிருக்கிறீர்கள்......ஒவ்வோரு எழுத்திலும் கிராமிய வாசம்!!

Unknown said...

கள்ளிகாட்டு இதிகாசம் கவிதை போல
நயமாய் இருக்கிறது அண்ணா
பாரட்ட வார்த்தைகள் இல்லை

Unknown said...

அந்த முதல் புகைப்படமே ஒரு கவிதை
அண்ணா

பால கணேஷ் said...

குழந்தைகளின் பாசமும். பெற்றோரின் கனவுகளும் இயல்பான வரிகளில் அழகிய கவிதையாக. பிரமிக்க வைத்து விட்டீர்கள் மகேன். சிந்தாமணி மனதைக் கொள்ளை கொண்டு விட்டாள்.

Unknown said...

கவிதைகளை ரசிச்சுப் படிக்கற எனக்கு சிம்பிளான அழகான கிராமிய நடையில் நீங்க எழுதியிருக்கற கவிதை ரொம்பப் பிடிச்சதுண்ணா... சூப்பராச் சொல்லியிருக்கீங்க. இப்படி பெற்றோர் அன்பு காட்டற பிள்ளைங்க நல்லாவே படிப்பாங்க.

ஹேமா said...

ஏழைகள் வீட்டில்தானாம் வறுமையும்,நல்லெண்ணங்களும்,பயமும்,பக்தியும் குடியிருக்கும் என்பார்கள்.அதை அப்பிடியே சொல்லி வச்சிருக்கீங்க மகி.உங்கள் நடையில் அற்புதம் !

ADMIN said...

ஆஹா அருமை.. உணர்வுவெள்ளங்களின் தொகுப்பாய் உங்கள் கவிதை.. முனைவர் குணசீலன் அவர்கள் கூறிய கூறிய கருத்து முத்தாய்ப்பாக இருக்கிறது. அதையே நானும் கூறுகிறேன்.

K said...

மகேந்திரன் அண்ணாவிடம் இருந்து மிகவும் வித்தியாசமான கவிதை ஒன்று! கவிதை அழகு என்றால், அதற்குச் சேர்க்கப் பட்டுள்ள ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கவிதையாகும்!

ஊரெல்லாம் தேடினாலும்
உங்கபோல அப்பனாத்தா!
எங்களுக்கு கிடைக்காதய்யா - ஆமா
சத்தியமா சொல்லுறேய்யா!! ///////

அழகான வரிகள்! வாழ்த்துக்கள் அண்ணா!

ரிஷபன் said...

நாங்கபடும் பாடுயெல்லாம்
நான் பெத்த செல்லக்கிளி!
உனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ
நல்லாபடிச்சி வளரவேணும்!!


இப்பாடல்! அருமை! வாழ்த்துகள்!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,
ஏழ்மை நிலையில் இருக்கும் அனைத்து பெற்றோரின்
மனநிலையும் இதுதான் நண்பரே..
நான் படும்பாடு என் பிள்ளைகள் படக் கூடாது என்பது.
தங்களின் விரைந்தோடி வந்த கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் என் தந்தையாரும்
தாயாரும் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றதுதான் எனக்கு
நினைவுக்கு வருகிறது.
அன்றைய எனது மன ஓட்டங்களும் எனது தாய் தந்தையரின்
எண்ணங்களும் தான் இதற்கு கரு.

ஆனால் பாருங்கள் இன்றும் இந்த நிலைமை பல குழந்தைகளுக்கு
இருக்கின்றது. கல்வியறிவு பெருக வேண்டும்.

நமக்கு கிடைத்த அறிவை பாமரர்களுக்கு பயனுற தரவேண்டும்.

தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் பாராட்டுக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

அருணா செல்வம் said...

வணக்கம் நண்பரே...

உங்கள் கவிதை யதார்த்தத்தைப் பிரதிபளிக்கிறது.
வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

நேற்றிலிருந்தே எதிர்பார்த்திருந்தேன்...நல்லா வந்திருக்கு பாடல்...மெட்டுப்போட்டு பாட்டிசைத்தால் இன்னும் இனிமையாக இருக்கும் சகோதரா..

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

Anonymous said...

அண்ணா சுப்ப்பேரா இருக்கு ....


இந்த தரம் எளிமையா புரியுது ..

முதல் படம் ரொம்ப அழகு அண்ணா

Unknown said...

ம்ம்ம்ம் அழகான கவி அங்கிள்.

கொத்துக் கொத்தாய் எமக்கு கோர்த்து தந்துள்ளீர்கள்

மின அருமை..

வெங்கட் நாகராஜ் said...

//நாங்கபடும் பாடுயெல்லாம்
நான் பெத்த செல்லக்கிளி!
உனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ
நல்லாபடிச்சி வளரவேணும்!!//

அருமையான பாடல். தம் குழந்தைகளாவது நன்றாக இருக்க எத்தனை பாடுபடுகிறார்கள் இவர்கள் என்பதை அழகாய்ச் சொன்ன பாடல். வாழ்த்துகள் நண்பரே.

தனிமரம் said...

சாமானியர்களின் கனவையும் ஆசையையும் கல்வியின் எதிர்பார்ப்பையும் எடுத்து இயம்பும் கவிதை அருமை!

சாந்தி மாரியப்பன் said...

பெத்தவங்களோட கனவு, பிள்ளைகளோட நிலைன்னு எல்லாத்தையும் அருமையா அழகான படங்களோட பகிர்ந்த விதம் அழகு..

அன்புடன் மலிக்கா said...

கவிதை மிக மிக அருமையாக இருக்கு சகோ.

கிராமத்து வாசமிங்கே
கண்ணுவழியே ஏறுதுங்க!
ஏழைங்க பாடெல்லாம்
எதிர்த்தாப்புல தெரியுதுங்க!
படிச்சதும் மனசுக்குள்ள
பாவப்பட தோணுதுங்க!
இப்படியொரு கருவோட
எழுதிய உங்களுக்கு!
எங்களோட வாழ்த்துகளை
மனமார சொல்லிக்கிறோம்!
இன்னுமின்னும் இதபோல
நெறைய நெறய எழுதமுன்னு!
அன்போட கட்டளையை
அழுத்தமாகவே போட்டுகிறோம்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சுரேஷ்குமார்,
கிராமிய வாசம் நுகர்ந்து சென்று
எனை வாழ்த்திய தங்களின் அருமையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் சிவ சங்கர்,
இதைவிட என் கவிதைக்கு அங்கீகாரம்
வேறு எதுவும் இல்லை.
தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கும்
கருத்துக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
கவி நாயகி சின்னத்தாயான அந்த
சிந்தாமணி தங்களின் மனத்தைக்
கொள்ளைகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி நிரஞ்சனா,
ஆமாம் பா,
பெற்றவர்களின் நிலைப்பாடு தெரிந்து
அவர்களின் மேன்மையைப் புரிந்துகொண்ட
குழந்தைகள் நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
நாமும் அந்த ஒரு சூழ்நிலையில் இருந்துதானே வந்தோம்.
மனதின் ஆழத்தில் ஓடிய கரு இது சகோதரி.
இப்போது பள்ளிக்கூடம் திறக்கும் நேரத்தில்
எல்லாக் குழந்தைகளும் நன்கு படித்து நல்ல நிலைக்கு வந்திட
இறைவனை இறைஞ்சுகிறேன்..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பழனிவேல்,
முன்மொழிந்த கருத்தினை வழிமொழிந்து
வாழ்த்துரைத்து கருத்திட்ட உங்களுக்கு என்
மனம் நிறைந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ மணி,
எண்ணத்தில் விளைந்த
கதைக்கருவின் பால் தாங்கள் கொண்ட
இயைபிற்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரிஷபன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
காத்திருந்து எம் கவியை
காணவந்த சகோதரரே ...
மெட்டிட்டு படித்திட நினைத்தேன்
ஆனால் சூழல்கள் சரியாக அமையவில்லை.
நிச்சயம் ஏதாவது ஒரு பதிவில் வரும் காலத்தில்
மெட்டிசைத்து பதிவிடுகிறேன்.
தங்களின் அன்பான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை கலை,
நலம் தானே,
மிக்க மகிழ்ச்சி பா.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி எஸ்தர் சபி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்க்கைக்கும் தன் குடும்பத்துக்குமாக
எவ்வளவு முறைகளில் தன் உழைப்பைக் கொட்டி முன்னேறுகிறார்கள்.
அத்தனையும் முக்கியமாக தான் பெற்ற பில்லைகளுக்காத் தான்...

தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,
வணக்கம்
நலம் தானே,
உழைப்பாளி வர்க்கத்தின் ஆழ்மனதில் உள்ள
அடிப்படையான சிந்தனை இது..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அமைதிச்சாரல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

கவிக் கருத்தால் எம் மனதை குளிர்வித்த சகோதரி மலிக்கா
தங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
தங்களின் அன்புக் கட்டளையை ஆண்டவன் கட்டளையாக
மனதில் கொண்டு வரும் காலங்களில்
இயற்ற முயல்கிறேன்.

கீதமஞ்சரி said...

பசியறிந்த வயிறுகள் சோற்றை வீணாக்குவதில்லை. கல்வியின்மையால் கஷ்டப்படும் மக்களுக்கு கல்வியின் அருமை தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. தாம் எத்தனைக் கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவரத்துடிக்கும் வறிய மனங்களின் ஏக்கத்தை அழகாய் அற்புதமாய் மனந்தொடும் வண்ணம், கிராமிய மணத்துடன் கவி படைத்தத் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.

Anonymous said...

கவிதை நன்று, கருத்து நன்று.
சகோதரா நான் களைத்து விட்டேன். நடை பாதைப் பாய் போல எம்மாம் பெரிய நீட்டக் கவிதை!
பாதி பார்த்தேன். மீதி சுருட்டி வைத்திருக்கிறேன் இன்னோரு தடவை வாசிக்க. யாருமே இது பற்றிக் ஒரு வரி கூடக் குறிப்பிட வில்லை. ஆமாம் கருத்துகள் பார்த்தேன். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

செய்தாலி said...

எசப்பாட்டில்
மண்வாசனை
வார்த்தைகள் இல்லை தோழரே

kowsy said...

நாட்டுப்புறப் பாடல் படிக்க மகேந்தரன் பக்கம் போக வேண்டும் . அவர் நல்ல பாடல் தந்திடுவார் தேடிச்சென்று படியுங்கோ . சொல்லும் சொல்லில் பொருள் இருக்கும் . சேர்ந்த நல்ல கருத்திருக்கும் . வல்ல பல சொல்லினுள்ளே சோகம் சுகம் மகிழ்வு அத்தனையும் சேர்ந்தே வந்து கதை சொல்லும்

ANBUTHIL said...

அருமையாக விவரிதிர்கள் நன்றி நண்பா

Athisaya said...

புனைவுகளின்றி சொல்லப்படும் ஒவடவொரு படைப்புகளும் அற்புதமாயிக்கும் என்பது இந்தப் படைப்பிலிருந்து புலப்படுகிறது....!அருமை அருமை

vimalanperali said...

நல்ல நாட்டுப்புற பாடல் வரிகளை கொண்ட கவிதை.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
ஒருவேளை நான் அந்தமாதிரி ஒரு சூழ்நிலையில்
இருந்து வந்ததால் இவ்வாறு என் எண்ணம் உருவானதோ என்னவோ..
தேடலில் முதல் படம் கிடைத்தபோது
என் மனம் வந்த கருத்தை இங்கே பதிவாக்கினேன்..
உங்களின் கருத்து எனை மேலும் பட்டைத் தீட்டுகிறது சகோதரி.
எனது அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
என்னுடைய கருக்கள் அப்படிப்பட்டவை.
தனித்திருக்கும் ஒரு குழந்தை சுற்றத்தை கூட்டி
சொல்லும் விதமாக நாடகப் பாணியில்
கவியமைக்க வேண்டி இருந்ததால் இவ்வளவு நீளம்
ஆகிவிட்டது..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செய்தாலி,
மண்வாசம் நுகர்ந்து இனிய கருத்திட்டமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
ஆஹா,
என் கவிக்கான பரிசு இது சகோதரி.
தங்களின் என் மீதான நம்பிக்கைக்கும்
கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பைத் தேடி வசந்தமண்டபம் வந்த நண்பரே,
வருக வருக என வரவேற்கிறேன்.
தங்களின் இனிய கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அதிசயா,
வருக வருக வசந்தமண்டபத்திற்கு
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் விமலன்,
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

kupps said...

ஆழ்ந்த அன்பும் பாசமும் நிறைந்திருப்பது ஏழைகளின் குடும்பங்களில்தான்.இவர்கள் பணத்திற்காக ஏங்குகிறார்கள்,பணக்காரர்கள் அன்பிற்காக ஏங்குகிறார்கள்.நமது பள்ளிப்பருவத்தை நினைவூட்டும், தாய் தந்தையரின் தியாகத்தைபோற்றும் கவிதை அருமை.

Post a Comment