வாயுதிரும் வார்த்தைகள்
வாழ்வினில் ஏராளம்!
வெளிவந்த வேகத்தில்
வேற்றுமை இல்லையெனில்
விவகாரம் அங்கில்லை!!
என்னால் எதுவும்
எளிதாக இயலுமென
எக்காள சொற்களால்
எரிவார்த்தை தவிர்த்திட்டால்
எதிர்வரும் நலமே!!
சோம்பலின் போர்வைக்குள்
சொகுசாய் உறங்கியபின்
சுற்றிவரும் வினைவிளைகள்
சாதகமாய் வேண்டுமென
சத்தமிட்டு என்னபயன்?!!
நாடிவரும் சந்தர்ப்பத்தை
சொகுசாய் உறங்கியபின்
சுற்றிவரும் வினைவிளைகள்
சாதகமாய் வேண்டுமென
சத்தமிட்டு என்னபயன்?!!
நாடிவரும் சந்தர்ப்பத்தை
நாழிகைகள் கடத்தி
நாசூக்காய் ஒதுக்கியபின் - அட
நமக்குத் தெரியாமல் போயிற்றேவென
நாடகமாடி என்னபயன்?!!
எட்டிவிட்டால் தொட்டுவிடும்
எள்முனைத் தொலைவில்
ஏதுவாயிருந்த வாகையை
ஏளனமாய் உதறிவிட்டு - பின்னர்
ஏங்குவதால் என்னபயன்?!!
தன்னை உயர்வாய் எண்ணி
தற்பெருமை அரக்கனுக்கு
தங்குமிடம் தானளித்து
தகைமை நெறி தவறி - ஆங்கே
தரமுனக்கு தேடுவதில் பயனென்ன?!!
எல்லாம் தெரியுமென
ஏகமாய் வார்த்தையாடி
எரிமலைக் குழம்பையும்
எளிதென எண்ணிவிட்டு - பின்னே
எரிகிறதென்றால் விலகிடுமோ?!!
நூதனப் போக்கறியாது
நுண்ணறிவு கைவிடுத்து
நுனிப்புல் மேய்ந்துவிட்டு
நுகர்ந்திட கிடைக்காது - போகையில்
நெற்றிசுருக்கி என்னபயன்?!!
இயல்பறிவு இல்லாததை
இசைவோடு ஏற்காது
இயலாமையை மறைத்திட
இதற்குமுன் அறிந்திருந்தால்
இசைவோடு ஏற்காது
இயலாமையை மறைத்திட
இதற்குமுன் அறிந்திருந்தால்
இமயம் எட்டியிருப்பேன் - என
இறுமாப்பு பேசுவதில் என்னபயன்?!!
பிறக்கையிலே யாரும்
பிறவி அறிஞன் அல்ல!
புரியாத கருக்களையும்
புரிந்துகொள்ள விழையும்
பித்தனாக மாறிவிடு!!
நமக்குத் தெரியாமல் போனதே -என
நமட்டு வார்த்தை பேசாது
நான் தெரிந்துகொள்ளாது போனேனே - என
நல்லெண்ணம் விதைத்திடு
நாளும் நாளும் விளைந்துவரும்
நற்புது விளைவுகளை
நாகரீகமாய் கற்றுக்கொள்!!
போனது போகட்டும்
புதுமையாய் வருவதை
புழக்கடையில் போடாது
புத்தியில் போட்டுவை!!
மேவிடு அவனியில்
மேதாவி நானென - இனியும்
மேம்போக்கு பேசாது
மெல்லவரும் மாற்றங்களை
மென்று விழுங்க பழகிக்கொள் - அன்றுபார்
மேதாவி நீதான் என உலகம்
மெச்சி உனைப் புகழ்ந்திடும்!!!!
அன்பன்
மகேந்திரன்
57 comments:
சரியா சொன்னீங்க!
புரியும்படி சொன்னீங்க!
மேதாவி நான்தானென மேம்போக்காய் பேசுபவர்கள் வளர்ந்திட இயலாது. எதையும் நழுவ விட்டபின் புலம்பி என்ன பயன்? அருமையான கருத்துக்களை அழகிய தமிழீல் எளிமையாகச் சொல்லி அசத்திட்டீங்க மகேன்.
ம்...மகி எப்பவும்போல நல்லதைச் சொல்கிறது கவிதை.எல்லாமே எனக்குத் தரியும் என்கிற அகம்பாவம்.....நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொண்டு தெரியாத விஷயங்களை அறிந்துகொண்டு நல்லவனாய் வாழ்வதே சிறப்பு !
மேவிடு அவனியில்
மேதாவி நானென - இனியும்
மேம்போக்கு பேசாது
மெல்லவரும் மாற்றங்களை
மென்று விழுங்க பழகிக்கொள் - அன்றுபார்
மேதாவி நீதான் என உலகம்
மெச்சி உனைப் புகழ்ந்திடும்!!!!// மிகவும் சிறப்பான ஆக்கம் இன்றய நிலையை அழகாக பாம் பிடித்து கட்டியுள்ளமை சிறப்பு சின்ஹிக்க வேண்டிய சிந்தனைத் துளிகள் .... தொடர்க
நமக்குத் தெரியாமல் போனதே -என
நமட்டு வார்த்தை பேசாது
நான் தெரிந்துகொள்ளாது போனேனே - என
நல்லெண்ணம் விதைத்திடு
நாளும் நாளும் விளைந்துவரும்
நற்புது விளைவுகளை
நாகரீகமாய் கற்றுக்கொள்!!
mmmmmmmmmm supper uncle
arumai....
“நாடிவரும் சந்தர்ப்பத்தை
நாழிகைகள் கடத்தி
நாசூக்காய் ஒதுக்கியபின் - அட
நமக்குத் தெரியாமல் போயிற்றேவென
நாடகமாடி என்னபயன்?!!“
யதார்த்தம் பேசியிருக்கிறது.
அருமைங்க நண்பரே...
தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல் முயற்சியும் முனைப்புமின்றி இருந்துவிட்டு, அடுத்தவர் வளர்ச்சி காணாது, வாய்ச்சவடாலாலும், வயிற்றெரிச்சலாலும் வார்த்தைகளை வரையறையின்றி வெளியிடும் வாய்களைக் கட்டுப்படுத்தும் நல்லதொரு கவிதை. எப்போதும் போலவே வாழ்வியலை அழகாய்ச் சொல்லி மனங்கவர்ந்துவிட்டீர்கள். பாராட்டுகள் மகேந்திரன்.
மெல்லவரும் மாற்றங்களை
மென்று விழுங்க பழகிக்கொள் - அன்றுபார்
மேதாவி நீதான் என உலகம்
மெச்சி உனைப் புகழ்ந்திடும்//
அழகுக்கவிதை சகோதரரே...
ஆனாலும் இந்தக்காலத்தில் உண்மையிலையே அடுத்தவரை மனதார புகழ்வோர் வெகு சிலரே...
அழுத்த வாதம் மட்டும் பத்தாது...குரலும் உயர வேண்டும் போல தன்னை முட்டாள் என்று மற்றவர் உதாசீனப்படுத்தாமல் இருக்க...
எட்டிவிட்டால் தொட்டுவிடும்
எள்முனைத் தொலைவில்
ஏதுவாயிருந்த வாகையை
ஏளனமாய் உதறிவிட்டு - பின்னர்
ஏங்குவதால் என்னபயன்?!!
அழகாகச் சொன்னீர்கள் நண்பரே..
ஒவ்வொரு சிந்தனைகளுமே மனதில் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதிமொழிகளாகவே உள்ளன..
எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து, காலமறிந்து செயல்பட்டால் வெற்றி என்றும் நம் கையிலிருக்கும் என்பதை மிக அழகாக உணர்தியிருக்கிறீர்கள்.
நன்று.
மிக அருமையாகச் சொல்லி இருக்கீங்க நண்பரே.... ஒவ்வொரு சிந்தனையும் அருமை, ஒன்றுக்கொன்று போட்டி போடும் சிந்தனை....
போனது போகட்டும்
புதுமையாய் வருவதை
புழக்கடையில் போடாது
புத்தியில் போட்டுவை!!// வம்பு பேசி நான் இப்படி அப்படி இருந்தேன் என்று வீணே காலம் கழிப்பவருக்கு சரியான சவுக்கடி வார்த்தைகள் அருமை அண்ணா .
Tha.ma.6
//போனது போகட்டும்
புதுமையாய் வருவதை
புழக்கடையில் போடாது
புத்தியில் போட்டுவை!!//
அருமைi
புத்தியில் போட்டுவை !அருமையான ஆலோசனைக்கவிதை மகேந்திரன் அண்ணா!
கவிக் கருத்துக்கள் அத்தனையும் அருமை!நடைமுறை வாழ்க்கையில் விட்டதைப் பிடிப்பது சுலபமல்ல என்று சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்!
பழமை விரும்பிகளை கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்! கவிதை நன்று! வாழ்த்துக்கள்!
பிறக்கையிலே யாரும்
பிறவி அறிஞன் அல்ல!
புரியாத கருக்களையும்
புரிந்துகொள்ள விழையும்
பித்தனாக மாறிவிடு!!
ஃஃஃஃஃஃ
அருமை ரசித்தேன் சொந்தமே..
''...பிறக்கையிலே யாரும்
பிறவி அறிஞன் அல்ல!
புரியாத கருக்களையும்
புரிந்துகொள்ள விழையும்
பித்தனாக மாறிவிடு!!...
அத்தனை கருத்தும் அருமை. வாழ்க! வளர்க!.நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
//வாயுதிரும் வார்த்தைகள்
வாழ்வினில் ஏராளம்!
வெளிவந்த வேகத்தில்
வேற்றுமை இல்லையெனில்
விவகாரம் அங்கில்லை!!//
முத்தெனவே ஒன்று
அத்தனையும் நன்று!
புலவர் சா இராமாநுசம்
அழகிய, அருமை வரிகள் ! வாழ்த்துக்கள் !
மிக மிக அருமை தோழரே
சொல்லும் பொருளும்
நல் சிந்தனைத் துளிகள்
என்னால் எதுவும்
எளிதாக இயலுமென
எக்காள சொற்களால்
எரிவார்த்தை தவிர்த்திட்டால்
எதிர்வரும் நலமே!!
நீண்ட நாளைக்குப் பிறகு உங்களுடைய தளத்திற்கு வந்துள்ளேன் அருமையாக சொல்லியுள்ளீர்கள்..ஆனாலும் ஒரு சந்தேகம்
//புழக்கடையில்// இதுதான் சரியான தமிழ் சொல்லோ...?
நாடிவரும் சந்தர்ப்பத்தை
நாழிகைகள் கடத்தி
நாசூக்காய் ஒதுக்கியபின் - அட
நமக்குத் தெரியாமல் போயிற்றேவென
நாடகமாடி என்னபயன்?!//
சில வேலைகளில் எனக்கும் பொருந்தும்
ஆழமான கவிதை. இதுதான் உலகில் இன்று ஏராளம். தோல்வியை ஒத்துக்கொள்ள மறுப்பதும். இயலாமையை விட்டுகொடுக்காமையும் உயர்வுக்கு முட்டுக்கட்டை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும்கவிதை .ஒவ்வொன்றும் நெத்தியடி கொடுப்பதை அமைகின்றது . தொடருங்கள் மகேந்திரன். வாழ்த்துகள்
மாப்ள நச்!
தமது சோம்பேறித்தனம்,அலட்சியம் மற்றும் இயலாமையை மறைக்க பெரும்பாலானோர் பயன் படுத்துவது (வெறும்) 'வாய்ச்சவடால்'.இதனால் அவர்தம் முன்னேற்றத்திற்கான முயற்சியும் தடைபடுகிறது.அனைவருக்கும் அறிவுரையூட்டும் அற்புதமான கவிதை.
பிறக்கையிலே யாரும்
பிறவி அறிஞன் அல்ல!
புரியாத கருக்களையும்
புரிந்துகொள்ள விழையும்
பித்தனாக மாறிவிடு!!
ஒவ்வொரு பத்தியும் வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொடுக்கிறது. மேலே குறிப்பிட்டது மிகவும் நான் ரசித்தது.
சோம்பலின் போர்வைக்குள்
சொகுசாய் உறங்கியபின்
சுற்றிவரும் வினைவிளைகள்
சாதகமாய் வேண்டுமென
சத்தமிட்டு என்னபயன்?!!
உண்மியில் சொல்லப்போனால் தாங்கள் எனக்கே சொன்னது போல உணர்கிறேன். முன்னேற்றத்திற்கு அருமையான அறிவுரைகள்.
//என்னால் எதுவும்
எளிதாக இயலுமென
எக்காள சொற்களால்
எரிவார்த்தை தவிர்த்திட்டால்
எதிர்வரும் நலமே!!//உண்மை அன்பரே சாதிப்பவர்கள் அதிகம் அலட்டி கொள்வதில்லை
அன்புநிறை நண்பர் சீனி,
முதன்மையாக ஓடிவந்து
நற்கருத்து உரைத்தமைக்கு நன்றிகள் பல.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
அழகுநிறை கருத்தால் என் மனம் நிறைத்த உங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
சரியாச் சொன்னீங்க
முதலில் எதிர் நிற்பவரின் கருத்தை
உள்வாங்கிக் கொள்ள பழகி விட்டாலே
மற்றவை தானாக வந்துவிடும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..
அன்புநிறை சகோதரி மாலதி,
சிந்தையைத் தூண்டிய அழகிய கருத்து
கொடுத்தமைக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி எஸ்தர் சபி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும்
ஊக்கப்படுத்து மென்மேலும் எழுதத் தூண்டும்
ஆர்வத்தை வளர்க்கிறது.
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..
அன்புநிறை சகோதரர் ரெவெரி,
சரியாகச் சொன்னிர்கள் சகோதரரே
அடுத்தவரை வாயாரப் புகழ்ந்தாலும்
மனதாரப் புகழ்வது
மிகவும் அரிதே
சில நேரங்களின் குரல் உயர்த்தியே
ஆகவேண்டும் ..
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை முனைவரே,
தங்களின் கருத்துக்கள் என்
கவிக் கருவறையை வளர்ச்சியுறச்
செய்கிறது.
சிந்தனை கைகொண்டு இடம் பொருள்
அறிந்து செய்யப்படும் செயல்கள்
மேலோங்கச் செய்யம்...
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சசிகலா,
தங்களின் அழகான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.
வணக்கம் சகோதரர் நேசன்,
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனமுவந்த நன்றிகள்.
வணக்கம் யோகா ஐயா,
ஓடுகின்ற வாழ்க்கையில்
விட்டதைப் பிடிப்பது அத்தனை
சுலபமல்ல என்ற உங்கள் கருத்து
நிதர்சனமானது ஐயா.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமேஷ் வேங்கடபதி,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி அதிசயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரிவேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் இனிமையான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் செய்தாலி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரர் சிட்டுக்குருவி மூஸா,
தங்களின் மீள்வருகைக்கு எனது நன்றிகள்.
புழக்கடை என்பது தற்போது வழக்கத்தில் இல்லாத
அருமையான தமிழ்ச் சொல்லே...
அனைத்து வரிகளும் எல்லோருக்கும் ஏதாவது
ஒருவகையில் பொருந்தும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுப்பது
அடுத்தடுத்த ஏக தோல்விகளுக்கு ஏதுவாகிவிடும்.
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான
கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் நறுக்கென்ற கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் குப்புசாமி,
வழக்கு மொழியில் வாய்ச்சவடால்
என்று நாம் சொல்லும் வார்த்தை தான்
இதற்கான பொதுக்கரு..
ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துரைத்த தங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஆதிரா,
பொதுவாக இங்கு சொன்ன
ஒவ்வொன்றும் எல்லோருக்கும் '
வாழ்வின் ஏதாவது அத்தியாத்திற்கு
ஒத்துப்போகவே செய்யும்...
தங்களின் ஆழ்ந்துணர்ந்த விரிவான
கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் பிரேம்,
உண்மைதான் நண்பரே...
சாதிப்பவர்கள் சவடால் பேசுவது கிடையாது...
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
நமக்குத் தெரியாமல் போனதே -என நமட்டு வார்த்தை பேசாது நான் தெரிந்துகொள்ளாது போனேனே - என நல்லெண்ணம் விதைத்திடு நாளும் நாளும் விளைந்துவரும் நற்புது விளைவுகளை நாகரீகமாய் கற்றுக்கொள்!! mmmmmmmmmm supper uncle arumai....
Post a Comment