Powered By Blogger

Sunday 27 May 2012

சக்கர வியூகம் அமைத்திடுக!!







தியென்று எனக்கு இல்லை
வந்தவழி தெரியாது!
இயன்றவரை மனிதனுக்கு
நற்பலனை கொடுப்பேனே!!
 
முக்கனியாய் பிரித்தபோதும்
முதல் கனி நானென்று!
முன்னோர்கள் அன்றுதொட்டு
முத்தாய்ப்பாய் வகுத்தனரே!!

கண்ட காவிரியின்
அகந்தையை ஒழித்திட்ட
அகத்திய முனிவனும் 
அரக்கன் வாதாபியை
அழித்ததும் எனைக்கொண்டே!!
 

 


ஞாலம் எங்கிலும் 
ஞான ஊற்றெடுக்க 
ஞான முனிவனால் 
ஞானப்பழம் என்ற 
ஞானப்பெயர் பெற்றேனே!! 
 
ஞானப்பழம் என்றபெயர்
தமிழெனக்கு சூட்டியது!
அறிவினைப் பெருக்கும்
பொட்டாசியம் உள்ளதால்
ஞானப்பழமென்று ஆனாய் என
வேதியியல் விளம்பிற்று!!
 
ன்னை ஊட்டும்
அமுதுக்கு இணையாய்
அகப்பொருள் கொண்டேனென
அழகாய் புகழ்ந்தனரே
அறமறிந்த சான்றோரே!!
 
 
தொல்லையென நினைத்து
தொலைவெறியும் என்னுடைய 
தோலதுவை உட்கொண்டால்   
தோல்வியாதி நீக்குவேனேன
தெளிவாக சித்தம் கொள்க!!
 
புட்டுபோல என்னுள்ளே 
புடம்போட்டு நான்வைத்த 
பூப்போன்ற சதையதை
பூரிப்பாய் உட்கொண்டால் 
புற்றுநோய் போக்கிடுவேன்!!
 
ருத்தாக எனக்குள்ளே 
கவனமாக சேர்த்துவைத்த 
கணச்செறிவு சத்தாலே 
கண்பார்வை பெருகிடுமே 
கவளமாக எனைக்கொண்டால்!!
 
 
பாங்காக ஊட்டமதை
பாருக்கு கொடுத்ததினால் 
புசித்த மானுடரால்
பழங்களின் அரசனென
பட்டமதை பெற்றேனே!!
 
முன்னோர் காலத்தில்
மலர்விட்டு காயாகி
மரத்திலேயே தொங்கினாற்போல்
மணம்வீசி பழுத்திருந்தேன்!!
 
காலம் மாறிப்போனது
களைந்தனர் எனை
கருவோடு பிஞ்சிலே!
கார்பைடு கல் வைத்து
கடும்வெப்பம் வேகவைத்து
கனியாக மாற்றினரே!!
 
 
கால்சியம் கார்பைடெனும்
கருங்காலி அரக்கனவன்
காற்றின் ஈரப்பதம் கொண்டு
கிராதகன் அசெட்டிலீனை
கண்கசக்க என்மீது
கனமாக பாச்சினரே!!
 
ழமாக மாறிடவோர்
பத்துநாட்கள் எடுக்குமெனை
பத்துமணி நேரத்தில்
பழுத்துக் கனிந்திட
புறச்செயல் செய்தனரே!!
 
செயற்கையாக பழுத்த நானோ
செருக்காக சந்தையேறி 
செய்முறை அறியாத
செங்குற்றம் புரியாத
நுகர்வோர் அகம் புகுந்தேனே!!
 
 
னியுனை புசித்தாலே
கண்டபிணி தீருமென
கூறிவந்த அனைவருமே!
கடுகேனும் ருசித்திட்டால்
கடும்பிணி வருமென்ற
கடுஞ்சொல் வீச நானும்
கூனிக்குறுகிப் போனேனே!!
 
ங்கியில் பணமெடுத்து
வாங்கிவந்து உட்கொண்டால்
வாந்தி பேதியும்
வயிற்று எரிச்சலும்
வந்து துயர் பெற்றனரே!!
 
ன்னிலை உயர்வதற்கு 
என் நிலை ஏன் மாற்றுகிறாய்?
உன் குடி வாழ்வதற்கு
மாற்றான் குடி ஏன் கெடுக்கிறாய்?
உனதருமைப் பிள்ளைகளும் 
உன்னால் தருவித்த
எனைத்தான் உண்பார்களென
உனக்கேன் தெரிவதில்லை??!!
 
 
யற்கையாய் பழுக்குமெனை
தடிபோட்டு அடிக்காதே!
செயற்கைவழி கண்டறிந்து
உன்குடி தொலைக்காதே!!
 
ச்செயல் தவறென்று
இயம்பி நிற்பதற்கு
இதற்கான சட்டங்கள்
இயைபோடு இருந்தாலும்
இச்செயல் இழிசெயலென
இன்றே உரைத்திடவோர்
கடும்சட்டம் போட்டிடுக!!
 
த்தம் போடாது
சதிச்செயல் செய்வோரை
சம்மணம் போடவைத்து
சாட்டையால் அடித்திடவே
சக்கர வியூகம் அமைத்திடுக!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 
 
 
 
 

57 comments:

K said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா!

மாம்பழம் பற்றி மிக மிக அழகான கவிதை!

அறிவியல் ரீதியாகவும், மருத்துவரீதியாகவும், தத்துவவியல் ரீதியாகவும் மாம்பழத்துக்குள்ள முக்கியத்துவத்தினை மிகச் சிறப்பாக கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் அண்ணா!!

MARI The Great said...

போன மாம்பழ சீசன்ல இந்தியாவில இருந்தேன் மாம்பழத்தை ஒரு வெட்டுவெட்ட கூடிய வாய்ப்பு கிடைத்தது., இந்த தடவை வெறும் "ஏக்கம்" மட்டும்தான் .. :(

அழகான கவிதை தல ..!

இராஜ முகுந்தன் said...

அழகான அறிவியல் கலந்த கவிதை. நிதர்சனப் பொருள். வாழ்த்துக்கள் நண்பரே.

Prem S said...

பல புதிய தகவல்கள் மாம்பழத்தை பற்றி ..மாம்பலமே கூறுவதாய் உள்ள நடை சிறப்பு

Yaathoramani.blogspot.com said...

ஒரு பொருளை கருவாக எடுத்துக் கொண்டால்
அது குறித்த அனைத்து தகவல்களையும்
மிகச் சுவாரஸ்யமாக அழகாகப் பதிவிடும்
தங்க்கள் திறன் பாராட்டுகுரியது
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

ஹேமா said...

மாம்பழக்கதைதான் ஞாபகம் வருது மகி.ஒரு மாம்பழத்துக்கு இவ்வளவு செய்தி இருக்கா.இவ்வளவு விபரமாக எழுதவும் வருமான்னு இருக்கு.மாம்பழ வாசனை வாறமாதிரி இருக்கு.

அணில் கொந்தின மாம்பழத்துக்காக அடிபட்டுச் சண்டை பிடிக்க ஒரு கூடைப் பழத்தையே வச்சு ‘இண்டைக்கு முழுக்க உனக்கு இதுதான் சாப்பாடு’என்று எனக்கே மாம்பழப் படையல் செய்த காட்சியும் ஓடுது கண்ணுக்குள்ள.இப்ப ஆசைக்கு டின்னில் அடைத்த பழத்தை வாங்கிப் பழைய நினைவுகளோடு அசைப்போட்டுக்கொண்டிருக்கிறோம் இயற்கையான சுவையில்லாமல் !

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாங்கனி போல மிகவும் ருசியான பகிர்வு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

//உன்னிலை உயர்வதற்கு
என் நிலை ஏன் மாற்றுகிறாய்?
உன் குடி வாழ்வதற்கு
மாற்றான் குடி ஏன் கெடுக்கிறாய்?
உனதருமைப் பிள்ளைகளும்
உன்னால் தருவித்த
எனைத்தான் உண்பார்களென
உனக்கேன் தெரிவதில்லை??!!//

அருமையான வரிகள்.

கவி அழகன் said...

Nalla aruvusaar kavithai

Unknown said...

இயற்கை ஆர்வலர்கள் பலராலும் தடுத்தும் உணவுப் பொருளில் நஞ்சு கலப்பது நிற்பதில்லை மிகப் பெரிய வணிக நிறுவனங்களே இது போன்ற ஈனத்தனமான செயலை செய்கின்றனர்! அரசு இவர்களுக்கு கடுமையான ஆயுள் தண்டனை வரை தரவேண்டும்!

குறையொன்றுமில்லை. said...

மாம்பழம் பற்றிய நல்ல கவிதைக்கு நன்றி

செய்தாலி said...

தோழரே அருமையான் அற்புதான கவிதை
மாம்பழம் பற்றி நிறை தெரிந்துகொண்டேன்

எழுத்து அகரக் கோர்ப்பு வித்தை
இன்னும் அழகா இருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

பிரமாதமான கவிதை சார் ! வாழ்த்துக்கள் !

சசிகலா said...

மாம்பழக் கவிதையும் அதனுள் அடங்கிய விளக்கமும் அழகாக அருமையாக உங்களால் மட்டுமே சொல்ல முடியும் அண்ணா . இனி மாம்பழக் குவியல் பார்க்கும் போதெல்லாம் தங்கள் நினைவே வரும் .

Seeni said...

சார்!

முன்னே சொன்னது-
மாம்பழமாக இனித்தது!

பின்னே சொன்னது-
நெருப்பாக சுட்டது!


அழகாக சொன்னீங்க!

Anonymous said...

மாம்பழம் மாம்பழம்...மகா பெரிய விடய தானம் மிக சிறப்பு மகேந்திரன் நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா!
மாம்பழத்தின் அருமையும் அதன் சிறப்பும் சொல்லி அதனை வியாபார உலகம் செய்யும் மோசடியை  சுடும் வண்ணம் சொல்லிய கவிதை சிறப்பே வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

அன்பிற்கினிய சகோ மணி,

பாய்ந்தோடி வந்து முதற்கருத்து அளித்தமைக்கும்

மனம் நிறைந்த வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரலாற்று சுவடுகள்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வருக வருக நண்பர் முகுந்தன் ராஜதுரை,
வசந்தமண்டபம் தங்களை வாசப் பன்னீர்
தெளித்து வரவேற்கிறது..
இனிய வாழ்த்துக்கும் கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரேம்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
என்னால் இயன்ற அளவுக்கு தகவல்களை
சேகரித்து கவிதையாக்க முயல்கிறேன் நண்பரே..
தங்களின் கருத்து என்னை ஊக்குவிக்கிறது..
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
அணில் கடித்த மாமபழமும்
குருவி கொத்திய கொய்யாப்பழமும்
கொடுக்கின்ற சுவைக்கு ஈடு இணையே கிடையாது..
இன்று பழங்கள் மட்டுமல்ல
ஏறத்தாழ அனைத்து உணவுப் பொருட்களுமே
கொள்கலனில் அடைத்து வரலாயிற்று..
காலத்தின் கோலம் தான்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை வை.கோ ஐயா,
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த
கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் யதன் ராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சுரேஷ்குமார்,
சரியாகச் சொன்னீர்கள்,
கலப்படம் பற்றிய விழிப்புணர்வு இருந்தும்
அதற்கான போராட்டங்கள் பல இடங்களில் நடந்தாலும்
அதற்கான சட்டங்கள் இருந்தாலும் வியாபாரிகள்
பணமெடுக்கும் பொருட்டு கையூட்டைக் கொடுத்துவிட்டு
இன்னும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...

களையப்பட வேண்டிய ஒன்று
அதீத விழிப்புணர்வு தேவை.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செய்தாலி,
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் செறிவு நிறைந்த
கருத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் சீனி,
தங்களின் அழகான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் நேசன்,
சட்டங்கள் சுடவில்லை என்றாலும்
நம் விழிப்புணர்வு அவர்களை சுடவேண்டும் என்பதே
எனது எண்ணம்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

இயற்கையாய் பழுக்குமெனை
தடிபோட்டு அடிக்காதே!
செயற்கைவழி கண்டறிந்து
உன்குடி தொலைக்காதே!!

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

Aathira mullai said...

//உன்னிலை உயர்வதற்கு
என் நிலை ஏன் மாற்றுகிறாய்?
உன் குடி வாழ்வதற்கு
மாற்றான் குடி ஏன் கெடுக்கிறாய்?//

மனிதர்களால் மன்றாடும் மாம்பழம்.. சுயநலம் பிடித்த மனிதர்கள் எதனை விட்டு வைத்தார்கள். அருமையாக எழுதியுள்ளீர்கள். சமுதாய அக்கறையுள்ள கவிதை.


அன்பான நலம் விசாரிப்பிற்கு நன்றி. நான் நலம். நெடுநாட்களாக வலைத்தரிசனம் காண இயலவில்லை. பணிச்சுமை. நீங்கள் நலமா?

அருணா செல்வம் said...

முக்கனிகளின் சுவையையும் ஒரே கவிதையில் கொடுத்து விட்டீர்கள்.

அருமைங்க நண்பரே!

சத்ரியன் said...

என்ன செய்ய நண்பா,

உணவே மருந்து என்றிருந்த காலம் போய்
மருந்தே உணவு என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

நன்மை, தீமை அனைத்தையும் அனுபவித்தே ஆகவேண்டும்.

மனோ சாமிநாதன் said...

மாம்பழத்துக்கு இத்தனை பெரிய கவிதை யாருமே படைத்ததில்லை என்று நினைக்கிறேன். கவிதை மிக அருமை!

பால கணேஷ் said...

மகேன்... இவ்வளவு தாமதமாக வந்து விட்டேனே என்று வருத்தமாக இருக்கிறது, சிறுவயதில் தேவகோட்டையில் இருந்தபோது மரத்திலிருந்து தானாய் பழுத்து விழும் கனியை உண்பதற்கு நானும் என் உறவுகளும் போட்டி போடுவோம். அது நினைவுக்கு வந்தது. கனியின் மகத்துவத்தைக் குலைத்து அதை செயற்கையாய் பழுக்கச் செய்யும் பாதகரை எவ்வளவு தண்டித்தாலும் தகும். இப்படி ஒரு கருப்பொருளில் அருமையான கவிதை வழங்க உன்னால் மட்டுமே முடியும் நண்பா...

Anonymous said...

நலமா சகோதரா?

இது என்ன புதிதாய் வைரமுத்துக்கு போட்டியாய்...

இதுவும் நல்லாத்தான் இருக்கு..

இப்படியும் எழுதுங்கள்...

சென்னை பித்தன் said...

மாம்பழத்தின் சிறப்பைச் சொல்லிப் பின் கல் வைத்துப்பழுக்க வைக்கும் அவலத்தைச் சாடி நிற்கிறது அருமையான கவிதை

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோ மாங்கனியின் மக்கத்துவத்தையும் அதன் அருமை பெருமைகளையும் இன்றைய
சமூகத்தினரால் விளைவிக்கப்படும் கெடுதலையும் மிக அழகாக அறிவுபூர்வமான கவிதை உருவில்
தந்தமை மனதை வியக்க வைத்தது அருமை!!......வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .

ஞா கலையரசி said...

மாங்கனிகளைப் பற்றி அருமையான ஒரு கவிதை. புகைப்படங்கள் வாயில் எச்சில் ஊற வைக்கின்றன.

மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்று சொல்வார்கள். வடு, மாங்காய், மாம்பழம் என இவை இயற்கையாக கிடைத்த காலத்தில் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ள வேறு கறி தேவை யில்லை சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்ட காலம் நினைவுக்கு வருகிறது..

ஆனால் இன்றோ எல்லாமே வணிகமயமாகி விட்டது. எங்கும் எதிலும் அவசரம்!

கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கும் பிரச்சினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதைக்குப் பாராட்டுக்கள்!

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் மேலான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஆதிரா,
நலம் நலமே
அதுவே நாடலும்..
சுயநலம் என்பது அடுத்தவரை பாதிப்படையாதபடி
இருந்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியது.
ஆனால் இப்படி உணவுப் பொருட்களில் கலப்படம் கலந்து
உயிருக்கு உலை வைப்பவர்களை
கூண்டினில் ஏற்ற வேண்டும்.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சத்ரியன்,
சரியாகச் சொன்னீர்கள்.
மருந்தே உணவாகிப் போனது.
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை மனோ அம்மா,
தங்களின் வார்த்தைகள் எனக்கு
மிகுந்த உற்சாகம் உண்டாக்குகிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் உங்கள்
நண்பன் தளத்திற்கு.
மரத்திலிருந்து பழுத்த மாங்கனிகளை பறித்து உண்பதில்
இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
நலம் நலமே சகோதரா
என் நாடலும் அதுவே..

இவ்வளவு பெரிய பட்டமா எனக்கு
என் தகுதியை உங்கள் பட்டத்திற்கு இணங்க
வளர்த்துக் கொள்கிறேன்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் அன்பு சகோதரி அம்பாளடியாள்,
வருக வருக
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தரிசனம்.
நலம் தானே..
மேன்மையுற உரைத்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கலையரசி,

மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும் என்பதன் மூலம்
நம்மவர்கள் மாங்கனியை எவ்வளவு உயரத்தில் வைத்திருந்தார்கள் என்பது
விளங்கும்.
அவசர உலகத்தில் எல்லாம் உடனடி ஆகிவிட்டது சகோதரி..

தங்களின் அழகான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்.

Unknown said...

வசந்த மண்டபத்தில் வாழை இலை
போட்டு வைத்த விருந்தில் மாங்கனி
சுவையே தனிதான்
அருமை மகி!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

எங்க ஊரு அதாங்க யாழ்ப்பாணத்தில பனை, தென்னைக்கு அடுத்த படியாக உள்ள மரம் மா மரம்தான.

எனக்கு றொம்பவே பிடிக்கும் அங்கிள்
கல்சியம் காபனேற் பயன்படுத்தி பழுக்க வைக்கும் முறை புதிது அங்கிள் சூப்பர்...

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
மாங்கனி விருந்துண்டு
எமை வாழ்த்தியமைக்கு
எம் கோடானுகோடி நன்றிகள் ஐயா..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி எஸ்தர் சபி,
கல் வைத்து கனியாக்கும் கொடுமை
கடந்த இருபது வருட காலமாக நடக்கிறது.
இன்றைய சூழலில் அதிகம்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

kupps said...

"உன் குடி வாழ்வதற்கு
மாற்றான் குடி ஏன் கெடுக்கிறாய்"
மாம்பழமே சொல்வதுபோல் அமைந்த சீசனுக்கேற்ற கவிதை மிக மிக அருமை.அழகான படங்கள் நாவினில் உமிழ்நீரை சுரக்கவைக்கின்றது.வாழ்த்துக்கள்.

Post a Comment