Powered By Blogger

Wednesday 23 November 2011

அடையாளம் இழந்தது ஏன்??!!






கத்திரிப்பூ பூத்ததுபோல
காலைப்பொழுது பூத்ததய்யா!
அவசரத்தில் பூபாளம்
எட்டுமணிக்கு பாடியபின்!
அலுவலகம் போகையிலே
கண்ணில்பட்ட காட்சியெல்லாம்
கோடிக்கதை சொல்லுதய்யா!!




இரண்டுசக்கர வண்டிமேல
இலந்தைமர துண்டுபோல
ஒய்யாரமா இருந்தவன
கண்கொண்டு பார்பதற்குள்
காத்துபோல பறந்துட்டான்யா!
சித்ததூரம் போனபின்னே
வாகனத்தை நிறுத்திபுட்டு
புகைவண்டி ஒட்டுறான்யா!! 





பத்தடிக்கு பக்கத்தில
பம்மாத்து செய்வதற்கு
பதறி அடிச்சி போவதுபோல
பாய்ஞ்சு இங்கே போவது ஏன்?!
கேள்வியிதை கேட்டுபுட்டா
கேட்டவன் என்னையோ
வேற்றுக்கிரகவாசி போல
மேலும்கீழும் பார்க்குறான்யா!!




ஒத்தைவீடு காணவில்லை
ஓட்டுவீடு பார்க்கவில்லை!
புள்ளிவைச்சு கோலம்போட்ட
வீட்டுமுத்தம் எங்குமில்லை!
பக்கத்து வீட்டிலோ
பூட்டியுள்ள வாசக்கதவு
வைகுண்ட வாசத்து
தெற்கு வாசல்போல
ஏகாதசிக்கு திறக்குதய்யா!!




மனம்விட்டு கதைபேச
மக்கமாரு யாருமில்லை!
வேலையும் பார்த்துகிட்டு
விடுகதையும் போட்டிருந்த
காலமெல்லாம் இங்கே
கானல்நீரா போச்சுதய்யா!
கொஞ்சநேரம் கிடைச்சிபுட்டா
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளே
தஞ்சமுன்னு போயிடுறான்யா!!





பதட்டமான வாழ்க்கையூடே
பக்தியின்னு வந்தவுடன்
கோவிலுக்கு போனாலோ
பளிங்கு மண்டபத்தில்
பொருட்காட்சி வைச்சதுபோல்
சாமியத்தான் வைச்சிருக்கான்!
சுண்ணாம்பு கல்லாலும்
களி மண்ணாலும் 
நம்மகூட வாழ்வதுபோல்
செய்வித்த சாமியெல்லாம்
கண்ணாரக் காணவில்லை!!


ரொம்ப நாளாச்சு
ஆளையே பார்க்கலைன்னு
மெத்துக்கு சொல்வாங்க!
இவனைப் பார்த்து
நமக்கென்ன ஆகுமின்னு
மனசுக்குள்ளே மெல்லுவாங்க!
நாலுநாள் அசலூரு
போய்வந்த பின்னால
என்ராசா வந்திட்டான்னு
ஆரத்தி எடுத்ததெல்லாம்
கற்பூரம் ஆச்சுதய்யா!!




பொதுநலமின்னு  சொல்லி
சுயநல போர்வைபோட்டு
நீதிமன்ற வாசலிலே
முட்டிக்கொண்டு நிற்பதை
நான்காணும் போதெல்லாம்
எங்கவூரு மந்தையிலே
ஆட்டுக்கிடா சண்டைய
குத்தவைச்சு உட்கார்ந்து
பார்த்ததெல்லாம் மனசுக்குள்ள
படமாக ஓடுதய்யா!!




ஷாப்பிங் போகப்போறேன்
பிஸா வாங்கி சாப்பிட்டுட்டு
டிஸ்கொதே ஆடப்போறேன்னு
ஆட்டுக்கூட்டம் போல
அரைகுறை ஆடையிலே
சாரையாக போவதை
நான்பார்த்து நோகையிலே!!




புத்தாடை உடுத்திக்கொண்டு
மேளச்சத்தம் கேட்டதுமே
சப்பர பவனியங்கே
புறப்படப் போகுதுன்னு
ஒத்தையடி பாதையிலே
ஊரெல்லாம் ஒன்னுசேர்ந்து
ஊர்வலமா போனதெல்லாம்
பாவிப்பய மனசுக்குள்ள
ஊஞ்சலாடி நிற்குதய்யா!!




நாகரீகமின்னு இதை
நாசூக்காக சொல்லிபுட்டு!
தலைமுறை தலைமுறையா
புழங்கிவந்த பழக்கத்தை
பாழாக்கி போட்டுபுட்டு!
கலாச்சார பெருமையெல்லாம்
காற்றோடு பறக்கவிட்டு!
சுயமிழந்து நிற்கிறாயே
உன் தலைமுறையை
இன்றும் காட்டிநிற்கும் - அந்த
அடையாளக் குறியை - நீ
இழந்தது ஏன்??!!


அன்பன்
மகேந்திரன்

75 comments:

rajamelaiyur said...

கவிதை ...கவிதை ...

rajamelaiyur said...

கவிதை ...கவிதை ...

rajamelaiyur said...

கவிதை ...கவிதை ...

சென்னை பித்தன் said...

இன்றைய வாழ்க்கையின் யதார்த்த அவலங்களை அழகிய கவிதையாக்கி விட்டீர்கள்!நன்று.

Unknown said...

அட நல்லா இருக்குய்யா!

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் அதற்காக விளக்கமாக அமைந்த
கவிதைகள் அருமையிலும் அருமை
குறிப்பாக கடைசிப் படமும்
கடைசிக் கவிதையின் ஆதங்கமும்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 2

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னம் பாருங்கள் நண்பரே நாம் இன்னும் இருக்கும் அத்தனை அடையாளங்களையும் இழந்து விட்டு அதை பாடபுத்தகத்தில் கற்றுகொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்க போகிறோம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாம் மறந்து விட்ட தருணங்களை அழகிய கவிதை மூலம் ஞாபகம் படுத்துகிறீர்கள்...

வாழ்த்துக்கள்..

Unknown said...

படமும் பாடலும் கிராமிய மண்
மணம் அபுபடியே கமழ்கிறது மகி!
அருமை!

த ம ஓ 4

புலவர் சா இராமாநுசம்

RAMA RAVI (RAMVI) said...

//ஒத்தைவீடு காணவில்லை
ஓட்டுவீடு பார்க்கவில்லை!
புள்ளிவைச்சு கோலம்போட்ட
வீட்டுமுத்தம் எங்குமில்லை!
பக்கத்து வீட்டிலோ
பூட்டியுள்ள வாசக்கதவு
வைகுண்ட வாசத்து
தெற்கு வாசல்போல
ஏகாதசிக்கு திறக்குதய்யா!!//

அடுக்குமாடி குடியிருப்புகள்..இயந்திரதனமான வாழ்க்கை எல்லாவற்றையும் படம் பிடித்து காட்டிவிட்டீங்க உங்க கவிதையில.

நீங்க வெளியிட்டுள்ள அழகான படங்களைப்பார்க்கும் பொழுது நாம எவ்வளவு இழந்திருக்கிறோன்ம்? என்கிற எண்ணம்தான் வருகிறது.

MANO நாஞ்சில் மனோ said...

கொஞ்சநேரம் கிடைச்சிபுட்டா
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளே
தஞ்சமுன்னு போயிடுறான்யா!!//

நிதர்சனமான உண்மை, பாவம் அந்த மண் குதிரையை அனாதையாக விட்டுவிட்டார்கள்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தாளம் போட்டு பாடினாலும், மனசுக்குள்ளே நறுக் நறுக்குன்னு குத்துதுய்யா....!!!

ராஜா MVS said...

இன்று நாகரிகம் என்று சொல்லி பழைய சம்பிரதாயங்களை எல்லாம் மூட்டை கட்டி பரணியில் போட்டுவிட்டு உப்புசப்பு இல்லா இயந்திர வாழ்வை வேண்டாவெருப்பாக ருசித்துக்கொண்டு இருக்கிறான்...
கேட்டால் இதுதான் நாகரிகமாம்...

Unknown said...

நல்ல குத்து கவிதை சகோ

//ரொம்ப நாளாச்சு
ஆளையே பார்க்கலைன்னு
மெத்துக்கு சொல்வாங்க!
இவனைப் பார்த்து
நமக்கென்ன ஆகுமின்னு
மனசுக்குள்ளே மெல்லுவாங்க!//

உண்மை, ரொம்ப பிடிச்ச வரிகள்

காட்டான் said...

வணக்கம் மாப்பிள..!
அருமையான கவிதை!! இத நாங்க இப்ப சொல்லப்போனா ஏதோ வேற்று கிரகத்தில வந்திட்டானோன்னு பாக்குறாங்க.. கவிதைக்கேற்ற படங்கள் மனதை கவர்கின்றது..!!

வாழ்த்துக்கள்.,

சக்தி கல்வி மையம் said...

ஒத்தைவீடு காணவில்லை
ஓட்டுவீடு பார்க்கவில்லை!
புள்ளிவைச்சு கோலம்போட்ட
வீட்டுமுத்தம் எங்குமில்லை!// நிதர்சன உண்மை..

சக்தி கல்வி மையம் said...

கவிதையும் அதற்கேற்ற படங்களும் அசத்தல்.

சாகம்பரி said...

நாட்டுப்புற பாடலில் உள்ள உயிர் துடிப்பு இங்கேயும் கேட்கிறது. நம்மை சுற்றியாவது இவற்றை கொண்டு வருவோமே. அருமையான கவி.

Anonymous said...

ஒத்தைவீடு காணவில்லை
ஓட்டுவீடு பார்க்கவில்லை!
புள்ளிவைச்சு கோலம்போட்ட
வீட்டுமுத்தம் எங்குமில்லை//

நாகரீகமாய் நவீன நாகரீக அவலங்களை குட்டி நாம் இழந்த பாரம்பரியத்தை
நினைக்க வைத்தமைக்கு ...ஒரு தனி பாராட்டு

ரசித்தேன்...

வெளுத்து கட்டுங்கள் சகோதரரே...

shanmugavel said...

எங்கள் கிராமத்தை கவிதையில் வடித்த மாதிரி இருக்கிறது.இயல்பான ,வருடும் வார்த்தைகள்.நன்று மகேந்திரன்.

குறையொன்றுமில்லை. said...

ஆமா நீங்க சொல்லி இருப்பதுபோல நாம் இழந்தது மிக, மிக அதிகம்தான்

முனைவர் இரா.குணசீலன் said...

ரொம்ப நாளாச்சு
ஆளையே பார்க்கலைன்னு
மெத்துக்கு சொல்வாங்க!
இவனைப் பார்த்து
நமக்கென்ன ஆகுமின்னு
மனசுக்குள்ளே மெல்லுவாங்க!


வாழ்வியல் உண்மையை அழகாச் சொன்னீங்க நண்பா..

இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் பேசும்போது அவர்கள் பேசும் வார்த்தைகளைவிட மனதுக்குள் என்ன பேசுகிறார்கள் என்று உணர்ந்துகொள்ளமுடிந்தவர்களால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெறமுடியும்.

சம்பத்குமார் said...

//நாகரீகமின்னு இதை
நாசூக்காக சொல்லிபுட்டு!
தலைமுறை தலைமுறையா
புழங்கிவந்த பழக்கத்தை
பாழாக்கி போட்டுபுட்டு!
கலாச்சார பெருமையெல்லாம்
காற்றோடு பறக்கவிட்டு!//

நெத்தியடி நண்பரே..

நாகரீக மோகத்தில் பாரம்பரிய கலாச்சாரத்தை மறந்தவர்களுக்கு

ஷைலஜா said...

கலாசாரம்னா என்னனு கேக்கறாங்க சில இளைய தலைமுறையினர்!!! நல்ல நறுக் கவிதை!

கோகுல் said...

பொங்கலுக்கு ஊருக்கு போயிட்டு திரும்ப நகருக்கு வந்த உணர்வு ஏற்படுத்திடுச்சு இந்த கவிதை.
சினிமாவில் மட்டுமே அதுவும் பீரியட் படங்களில் மட்டுமே இன்றைய நகரத்து குழந்தைகளுக்கு கிராமங்களையும் கிராம மக்களின் குணங்களையும் அடையாளம் காண வைக்க முடியும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
மிகச் சரியாகச் சொன்னீர்கள்..
வருங்கால சந்ததிகள் தலைமுறைகளின் கலாச்சாரம் பண்பாடு
பற்றி பாடபுத்தகங்கள் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்..

தங்களின் மேலான கருத்துக்கும் அன்பு வாழ்த்துகளுக்கும்
என் நெஞ்சம்கணிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,


தங்களின் மேலான கருத்துக்கும் அன்பு வாழ்த்துகளுக்கும்
என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சம்பத் குமார்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
மிகச் சரியாகச் சொன்னீர்கள்..


தங்களின் மேலான கருத்துக்கும் அன்பு வாழ்த்துகளுக்கும்
என் நெஞ்சம்கணிந்த நன்றிகள்.

அம்பாளடியாள் said...

ஒத்தைவீடு காணவில்லை
ஓட்டுவீடு பார்க்கவில்லை!
புள்ளிவைச்சு கோலம்போட்ட
வீட்டுமுத்தம் எங்குமில்லை!
பக்கத்து வீட்டிலோ
பூட்டியுள்ள வாசக்கதவு
வைகுண்ட வாசத்து
தெற்கு வாசல்போல
ஏகாதசிக்கு திறக்குதய்யா!!

நெஞ்சை நெகிழ வைக்கின்றது
கவிதை வரிகள் விளையாடிச்
செல்லும் வார்த்தை ஜாலம்!....
அருமை ..வாழ்த்துக்கள் சகோ .
நன்றி பகிர்வுக்கு ......

ஹேமா said...

இப்பிடியே பழசை அசைபோட்ட்டுக்கிட்டே காலத்தைப் போக்கவேண்டியதுதான்.நிச்சயமாக இனி இல்லை !

அம்பலத்தார் said...

அநியாயமாகத் தொலைத்த நம் வாழ்வியலை, கிராமிய நாட்டுப்புறபாடல்போன்று அழகுபட சொல்லியிருக்கிறீர்கள்.

ரிஷபன் said...

ஒத்தைவீடு காணவில்லை
ஓட்டுவீடு பார்க்கவில்லை!
புள்ளிவைச்சு கோலம்போட்ட
வீட்டுமுத்தம் எங்குமில்லை!
பக்கத்து வீட்டிலோ
பூட்டியுள்ள வாசக்கதவு
வைகுண்ட வாசத்து
தெற்கு வாசல்போல
ஏகாதசிக்கு திறக்குதய்யா!!


அடடா.. அப்படியே அந்த ஏக்கம்.. யதார்த்தம்.. வரிகளில் குமுறுகிறது..

மாய உலகம் said...

எல்லாம் கானல் நீரா மாறிக்கிட்டு இருக்கு நண்பா ... என்ன செய்ய பழையதை நினைத்து ஏங்க வேண்டியதான்...

Rathnavel Natarajan said...

அருமை மஹேந்திரன்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

துரைடேனியல் said...

Kiramathu paadal pola elimaiyaga ullathu.
TM 16.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் பார்த்தேன். விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அம்பலத்தார்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரிஷபன்,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

Unknown said...

மிக நன்று !
வாழ்க வளமுடன் !

arasan said...

அன்பின் நண்பருக்கு முதலில் கம்பீர வணக்கம் ,..

நெடு நாட்களாய் என் மனதில் தேங்கி கிடக்கும்
மிகப்பெரிய சோகம் இது ..
கவிதையின் உண்மை ஒவ்வொருவரையும் சுடுகின்றது ..
இப்படி ஒரு கவிதை படித்து ரொம்ப மனசு தெம்பா இருக்கு ..
உணர்வுகளின் , பண்பாடுகளின் அடையாளம் இக்கவிதை ..

இதற்கு தகுந்த படங்களும் கவிதையின் வரிகளுக்கு வலு சேர்க்கின்றது ...
பெரிய நன்றிகளும் வாழ்த்துக்களும் ...

M.R said...

உண்மை தான் நண்பரே ,அந்த அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு தான் இருக்கிறது .

உண்மையான ஆதங்கம் நண்பரே

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை...அருமை...

மாலதி said...

நாகரீகமின்னு இதை
நாசூக்காக சொல்லிபுட்டு!
தலைமுறை தலைமுறையா
புழங்கிவந்த பழக்கத்தை
பாழாக்கி போட்டுபுட்டு!
கலாச்சார பெருமையெல்லாம்
காற்றோடு பறக்கவிட்டு!
சுயமிழந்து நிற்கிறாயே
உன் தலைமுறையை
இன்றும் காட்டிநிற்கும் - அந்த
அடையாளக் குறியை - நீ
இழந்தது ஏன்??!!//

அப்பப்ப மிகசிறப்பா பதிவு நாட்டுபுற வழக்கிலேயே அதே பழமை குன்றா நடையோடு இன்றைய நாகரீகத்தை சாடியும் இப்படி பழைமைய முன்னெடுப்பவர்கள் இன்று குறைவாக உள்ளனர் இதனால்தான் நமது பழமை பாழ்பட்டு போகிறது பாராட்டுகள் வணக்கங்கள் .

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஆகாயமனிதன்,
தங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது.
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் மேலான ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

சுதா SJ said...

புகைப்படங்கள் கொள்ளை அழகு அதை விட உங்கள் கவிதைகள் மிக மிக அழகு...

உங்கள் கவிதை நாம் இழந்த சந்தோஷங்களை நினைவு படுத்துது.....
எவ்வளத்தை இழந்து விட்டோம்.....;(

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு வாழ்த்துக்கள்!

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா? மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள், தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள் என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா? பார்ப்போம் please go to visit this link. thank you.

ராஜி said...

படங்களும் கவிதையும் வெகு அருமை. உங்கள் படைப்பை காணும்போது நாம் எவ்வளவு விலைப்பதிப்பற்ற விசஹ்யங்களை இழந்துள்ளோம் என்று தெரிகைறது பகிர்வுக்கு நன்றி சகோதரா

kupps said...

"அடையாளக் குறியை - நீ
இழந்தது ஏன்??!! " விடை தெரிய வில்லை.அவசர உலகில் நாம் எதை சாதிக்க சென்றுகொண்டு இருக்கிறோம்?ஒன்றுமே புரியவில்லை.கவிதை அருமை.

Post a Comment