Powered By Blogger

Thursday 17 November 2011

மழலையாய் இருத்தல் வேண்டும்!! (தொடர் பதிவு)

குழந்தைகள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர் வண்டி போல  வெகு அருமையாக சென்றுகொண்டிருக்கும் இத் தொடர் பதிவை என்னை மதித்து எழுத அழைத்த மகிழம்பூக்களால் சரம் தொடுக்கும் அன்பு சகோதரி பேராசிரியை சாகம்பரிக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். என்னால் இயன்ற அளவு இப்பதிவை சிறப்பிக்க முயற்சி செய்கிறேன்.

மழலை எனும் சொல்லை சொல்கையிலே உச்சரிப்பின் குழைவு நம்மை ஏகாந்தம் கொள்ளச் செய்யும். மழலை எனும் அந்த குழந்தைப்பருவத்தில் தான் எத்தனை பருவங்கள். அத்தனை பருவங்களுக்கும் தனிப்பட்ட குணங்களும் எவ்வளவு அற்புதமாய் படைக்கப் பட்டு இருக்கின்றன.
பிறந்த குழந்தை அழுகை எனும் மெய்ப்பாட்டை அடுத்து காண்பிக்கும் அத்தனை மெய்ப்பாடுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
உதாரணமாக மருட்கை எனும் வியப்பு, குழந்தை வியப்பு கொள்கையில் அந்த விழிகளை காண வேண்டுமே!! யப்பப்பா..
கோழிக்குண்டு விழிகளை உருட்டி உருட்டி தம்மை சுற்றி நடக்கும் செயல்களை வியப்புடன் காணும் பொழுது, வழிந்தோடும் அந்த அழகை காண கோடி கண்கள் இருந்தாலும் போதாது.

எந்தவித எதிர்வினையும் காட்டாது நடக்கின்ற செயல்களுக்கு ஏற்ப தம் குணங்களை காட்டும் இக்குழந்தைகள் தானே வளர்ந்து வந்து தீயவைகளையும் நன்மைகளையும் கலந்து செய்கின்றார்கள். யார் இவர்களை வழி நடத்துகிறார்கள்?!
இழிசெயல் அறியா இவர்களின் மனதில் வினையை விதைத்தவர்கள் யார்?!

மழலை முதல் அவர்களின் மனதில் நல்லவைகளையே (தம் குடும்பத்திற்கு தேவையான) விதைக்க முயற்சி எடுக்கும் தாயும் தந்தையும் காரணமா?
சிறுகச் சிறுக பொல்லாதவைகளை பதியம் போடும் இந்த பொல்லாத சமுதாயம் காரணமா?!
எல்லா குழந்தைகளும் மழலைப் பருவத்தில் நல்லவர்களாகத்தானே இருக்கிறார்கள். வளர்ந்து வருகையில் சிலர் ஏன் மாற்றமடைகிரார்கள்?!
இதற்கான விதை எங்கே விதைக்கப்படுகிறது?!

ஏ! மழலையே!
உன் அழகு கண்டு
விழிவிரிய வியந்திருந்தேன்!
உன் பருவங்களின்
வெவ்வேறு குணங்களை
ரசித்து உவந்திருந்தேன்! 

தத்தக்க புத்தாக்க என
நீ நடையும் போட்டு
கைதட்டி சப்பாணி கொட்டுகையில்
என்னையே மறந்திருந்தேன்!
வாய்திறந்து வெள்ளருவியாய்
சொல்லால் கவிபாடுகையில்
மெய்மறந்து சிலிர்த்திருந்தேன்!

வளர்ந்து வா மழலையே!
வழிதோறும் விரியும்
இன்னல்கள் ஆயிரம்
கொடும் நாகங்கள் ஆயிரம்!
கடந்து வா மழலையே!
நீ வளர்ந்த வேளையிலே
உன்னறிவு வியாபித்திருக்கவேண்டும்!
உன் குணமோ
அதே மழலையாய்
இருத்தல் வேண்டும்!!

கண்ணில் காணும் குழந்தைகளின் நற்குணங்களுக்கு நாம் வித்திடுவோம். இன்று இடும் விதைதானே நாளைய விருட்சம். விருட்சம் விளைந்து அதன் பயன் நற்பயனாய் கிடைக்கவேண்டுமெனில் விதைக்கும் விதையது நல்விதையாய் இருக்கட்டும்.

கடந்த சில தினங்களாக நம் நண்பர் நிறைய பேர் மழலை பற்றிய தொடர்பதிவு எழுதக் கண்டேன். ஆகையால் யாரை எழுத அழைப்பது என்ற எண்ணத்தைக் கைவிடுத்து, இதை யார் தொடர்ந்து எழுதினாலும் நான் வரவேற்கிறேன்.

அன்பன்
மகேந்திரன்

66 comments:

கோகுல் said...

ஆம் நண்பரே எந்த கஷ்டத்தையும்
வெறுப்பையும் ஒரு மழலையின் சிரிப்பு லேசாக்கிவிடும்.

Anonymous said...

கொஞ்ச நாட்களாய் ஒரே குவா குவா சத்தம்...உங்களையும் விட்டுவைக்கவில்லை போல..

//உன் குணமோ
அதே மழலையாய்
இருத்தல் வேண்டும்!!//

அது மழலை குணமாய் இருந்தால் யாவருக்கும் நலமே...

// விதைக்கும் விதையது நல்விதையாய் இருக்கட்டும்.//

சரியாக சொன்னீர்கள் சகோதரா...

குழந்தைகள் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்...அவர்களுக்காகவாவது நீங்கள் சொவது போல் நல்லவராய் இருக்க முயல்வோம்...

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
என்னையா எல்லா வீட்டியேயும் மழலை சத்தம் பலமாய் இருக்கு... . நீங்க வளர்ந்து வா மழலையே என்கிறீர்கள்.. எனக்கோ  எதைப்பற்றியும் கவலைப்படாத அந்த புன் சிரிப்போடு வளராமலே இருக்க தோனுது.. அருமையான பதிவு.., 

வாழ்த்துக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .

வெங்கட் நாகராஜ் said...

மழலைத் தொடர் பதிவில் உங்கள் பதிவும்... சிறப்பாக இருக்கிறது நண்பரே....

மழலையின் குரல் கேட்டாலே எல்லா கவலைகளும் சென்று விடும் அல்லவா....

Yaathoramani.blogspot.com said...

வழக்கம்போல் மனதை நெகிழச் செய்து போகும்
அருமையான பதிவு
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7

சாகம்பரி said...

//மருட்கை // பழக்கத்தில் இல்லாத அழகு தமிழ் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறீர்கள் சகோ. ஏற்கனவே 'வியாபிதம்' என்ற வார்த்தை எனது ஐந்தாம் பரிமாணம் தொடருக்கு உதவி செய்தது.
//இன்று இடும் விதைதானே நாளைய விருட்சம். விருட்சம் விளைந்து அதன் பயன் நற்பயனாய் கிடைக்கவேண்டுமெனில் விதைக்கும் விதையது நல்விதையாய் இருக்கட்டும்.// கண்டிப்பாக.

அருமையான பகிர்விற்கு நன்றி சகோ.

rajamelaiyur said...

//தத்தக்க புத்தாக்க என
நீ நடையும் போட்டு
கைதட்டி சப்பாணி கொட்டுகையில்
என்னையே மறந்திருந்தேன்!
வாய்திறந்து வெள்ளருவியாய்
சொல்லால் கவிபாடுகையில்
மெய்மறந்து சிலிர்த்திருந்தேன்!

//

அருமை

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே

SURYAJEEVA said...

வழக்கம் போலவே அருமை.. அதை தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை

சென்னை பித்தன் said...

//நீ வளர்ந்த வேளையிலே
உன்னறிவு வியாபித்திருக்கவேண்டும்!
உன் குணமோ
அதே மழலையாய்
இருத்தல் வேண்டும்!!//
ஆகா!என்னமாச் சொல்லிட்டீங்க!

ராஜா MVS said...

மழலையைப் போல் கவிதையும் அருமை... நண்பரே...

ராஜி said...

கண்ணில் காணும் குழந்தைகளின் நற்குணங்களுக்கு நாம் வித்திடுவோம். இன்று இடும் விதைதானே நாளைய விருட்சம். விருட்சம் விளைந்து அதன் பயன் நற்பயனாய் கிடைக்கவேண்டுமெனில் விதைக்கும் விதையது நல்விதையாய் இருக்கட்டும்.
>>
நன்றாக சொன்னீர்கள் சகோ

Aathira mullai said...

எப்போதும் தங்கள் பதிவு மனத்தை வருடும். இது மழலை பற்றியது.. இன்னும் சற்று கூடுதலாக மென்மையாக வ்ருடும் இதமான பதிவு.

Aathira mullai said...

//நீ வளர்ந்த வேளையிலே
உன்னறிவு வியாபித்திருக்கவேண்டும்!//

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று சொல்லும் அழகிய சொல்லாட்சி.. வியாபித்திருக்க் வேண்டும். அருமை..

MANO நாஞ்சில் மனோ said...

ஏ! மழலையே!
உன் அழகு கண்டு
விழிவிரிய வியந்திருந்தேன்!
உன் பருவங்களின்
வெவ்வேறு குணங்களை
ரசித்து உவந்திருந்தேன்!//

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம், அதுபோல குழந்தையின் சிரிப்பிலும் இறைவனை காணலாம்...!!!

Unknown said...

அருமை மகி!
விளக்க உரையும் மழலை
பற்றிய கவிதையும்சிறப்பாக உள்ளன
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

shanmugavel said...

//எல்லா குழந்தைகளும் மழலைப் பருவத்தில் நல்லவர்களாகத்தானே இருக்கிறார்கள். வளர்ந்து வருகையில் சிலர் ஏன் மாற்றமடைகிரார்கள்?!
இதற்கான விதை எங்கே விதைக்கப்படுகிறது?!//

அனைவரும் சிந்திக்க வேண்டிய கேள்வி,நன்று மகேந்திரன்.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்.

M.R said...

அழகாய் சொல்லி இருக்கீங்க நண்பரே
வாசித்து ரசித்தேன் அருமை

ஷைலஜா said...

கண்ணில் காணும் குழந்தைகளின் நற்குணங்களுக்கு நாம் வித்திடுவோம். இன்று இடும் விதைதானே நாளைய விருட்சம். விருட்சம் விளைந்து அதன் பயன் நற்பயனாய் கிடைக்கவேண்டுமெனில் விதைக்கும் விதையது நல்விதையாய் இருக்கட்டும்.

>>>>>>>>>>>>>
ஆமாம் விதைப்பதுதானே விளையும்? நல்விதையாகவே விளைப்போம் அழகிய பதிவு ஆழ்ந்த கருத்தும் கவிதையுமாக.

சத்ரியன் said...

மகேந்திரன்,

மழலைகள் உலகம் மகத்தானது. நம் உலகத்திற்கு அவர்களை இழுத்து விட்டு மழுங்கடித்து விடுகிறோம்.

சிறப்பான பதிவு.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

சம்பத்குமார் said...

//கண்ணில் காணும் குழந்தைகளின் நற்குணங்களுக்கு நாம் வித்திடுவோம். இன்று இடும் விதைதானே நாளைய விருட்சம். விருட்சம் விளைந்து அதன் பயன் நற்பயனாய் கிடைக்கவேண்டுமெனில் விதைக்கும் விதையது நல்விதையாய் இருக்கட்டும்.//

மிகச்சரியான வார்தைகள் நண்பரே...நாளைய விருட்சங்களுக்கு இன்றே நல்விதையிடுவோம்

நன்றி நண்பரே பகிர்விற்க்கு..

மாய உலகம் said...

உண்மை தான் அன்பரே! குணம் மழலையாய் இருத்தல் வேண்டும்.. எவ்வளவு அழகாக கவிதையில் பகிருந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் நண்பா.

ஹேமா said...

குழந்தைகள் அப்படியே இருந்தால் நல்லதாய் தோன்றுகிறது.பருவம் மாறும்போதுதான் கோளாறு !

நம்பிக்கைபாண்டியன் said...

மழலையை போற்றும் அழகிய பதிவு! உங்கள் பொதுவான அழைப்பை நான் ஏற்கிறேன் இரு நாட்களில் சில மழலை கவிதைகளை பதிவிடுகிறேன்!

முனைவர் இரா.குணசீலன் said...

இன்று இடும் விதைதானே நாளைய விருட்சம். \\\

அழகாகச் சொன்னீர்கள் நண்பா..

மாலதி said...

வளர்ந்து வா மழலையே!
வழிதோறும் விரியும்
இன்னல்கள் ஆயிரம்
கொடும் நாகங்கள் ஆயிரம்!
கடந்து வா மழலையே!// இன்றைய மழலைகள் தன்னலைய நமது மன்னர்கள் நம்மை செதுக்கும் தச்சர்கள் . சிறந்த ஆக்கம் பாராட்டுகள்

kowsy said...

குழந்தையை வர்ணித்த விதம் அற்புதம். நாம் பெரியவர்கள் ஆகி விட்டோமே என்று குழந்தைகளைப் பார்க்கும் பொது தோன்றும்.குழந்தையின் மாற்றத்துக்கு யார் காரணம் என்று நானும் சிறிது எனது பதிவில் ஆராய்ந்து உள்ளேன். அழகுக் கவிதையும் சிறப்பு. வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

அருமையான பதிவு.

arasan said...

மென்மையான மேன்மை படைப்புக்கு வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை கட்டான் மாமா
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஆதிரா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சத்ரியன்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சம்பத்குமார்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கை பாண்டியன் ,
தொடருங்கள், தங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திர கௌரி.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

இராஜராஜேஸ்வரி said...

கண்ணில் காணும் குழந்தைகளின் நற்குணங்களுக்கு நாம் வித்திடுவோம். இன்று இடும் விதைதானே நாளைய விருட்சம். விருட்சம் விளைந்து அதன் பயன் நற்பயனாய் கிடைக்கவேண்டுமெனில் விதைக்கும் விதையது நல்விதையாய் இருக்கட்டும்./

வசந்தமாய் வீசிய அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

ரிஷபன் said...

நீ வளர்ந்த வேளையிலே
உன்னறிவு வியாபித்திருக்கவேண்டும்!
உன் குணமோ
அதே மழலையாய்
இருத்தல் வேண்டும்!!

நியாயமான எதிர்பார்ப்பு.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரிஷபன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

Post a Comment