Powered By Blogger

Monday 18 July 2011

என் மூச்சின் மூன்று சுவாசங்கள்!! (தொடர் பதிவு )





பதிவுலகின் சிறுகுழந்தையாம் எனை சக பதிவாளராய் அங்கீகாரம் கொடுத்து  தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம். எனக்குத் தெரிந்த நடையில் இங்கே என் வாழ்வின் மூன்று உச்சங்களை இங்கு பதிவிடுகிறேன்.

1) இந்த விதையை விளைவித்த மூன்று உயிர்கள்:


  • என் கண்ணின் மணியில் குடியிருக்கும் என் தந்தை.
  • எனை இங்கு சான்றோர் சபையில் அமரச் செய்த என் தாய்.
  • என் மூளையின் பிம்பமாய் என்னுள் இருக்கும் என் மனைவி.

2) நன்றி சொல்ல விரும்பும் மூவர்:
  • வலைப்பதிவுகளில் எனை அறிமுகம் செய்த தோழி அனு
  • பதிவிட்டதும் ஓடோடி வந்து கருத்துரைக்கும் தோழர் சிவ.சி.மா.ஜானகிராமன்
  • வலைச்சரத்தில் எனை முதலில் அறிமுகம் செய்த தோழர் கவிதைவீதி சௌந்தர்.

3) விரும்பும் மூன்று:
  • என்னுயிரில் கலந்திருக்கும் எம்மொழியாம் தமிழ்
  • எனை வாழவைக்கும் செய்யும் தொழில்
  • மழலை மனம் மாறா என் குழந்தைகள்.

4) விரும்பாத மூன்று:
  • புறம்பேசுபவர்கள்
  • நம்பிக்கைத் துரோகம்
  • முகத்திற்கு முன் நல்லவராய் நடித்தல்.

5) கோபப்படும் மூன்று:
  • உறவுகளின் உன்னதத்தை உதறுபவர்கள் மீது
  • கருக்கலைப்பு செய்பவர்களை காணும் போது
  • கையூட்டு வாங்குபவர்களை காணும் போது









6) பிடித்த மூன்று:

  • நாட்டுப்புறக்கலைகள்
  • சடுகுடு ஆட்டம்
  • மனைவியின் சமையல்

7) தெரிந்துகொள்ள விரும்பும் மூன்று:
  • நாடகம் இயற்ற
  • தோட்டக்கலை
  • நீச்சல் பழக (தண்ணீரைப் பார்த்தால் பயம்)

8) வியந்த திரைப்படங்கள் மூன்று:
  • சித்தி (பழையது)
  • அறிவாளி (பழையது)
  • பிதாமகன்

9) பிடித்த பின்னணிப் பாடகர்கள் மூவர்:
  • ஸ்வர்ணலதா
  • எஸ்.ஜானகி
  • எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

10) பிடித்த நாட்டுப்புறப்பாடகர்கள் மூவர்:
  • தேக்கம்பட்டி சுந்தரராஜன்
  • பரவை முனியம்மா
  • புஷ்பவனம் குப்புசாமி

11) சகிக்க முடியாத மூன்று:
  • குழந்தைகளின் அழுகை
  • விபத்து
  • கொடூர நோய்

12) புரிந்துகொள்ள முயற்சிக்கும் மூன்று:
  • ஆன்மிகம்
  • இயந்திரவியல்
  • விஞ்ஞானம்

13) செய்ய நினைக்கும் மூன்று:
  • கவிதைகளின் மூலம் நல்லவைகளை எடுத்துரைக்க
  • வாழ்வியல் தத்துவங்களை தவறும் ஒருவரையேனும் நல்வழிப்படுத்த
  • நாட்டுப்புறக்கலைகளை முடிந்தவரை உலகமெங்கும் எடுத்துச் செல்ல

14) இதை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..? (மனப்பூர்வமாக)

  • http://sivaayasivaa.blogspot.com/ (சிவ.சி.மா.ஜானகிராமன்)
  • http://rupika-rupika.blogspot.com/(
  • http://thulithuliyaai.blogspot.com/(M.R)

வாருங்கள் தொடருங்கள் நண்பர்களே.




அன்பன்
மகேந்திரன்

24 comments:

கூடல் பாலா said...

நாட்டுப்புற சாயலில் வரும் தங்கள் கவிதைகள் மிக அர்த்தமுள்ளதாகவும் சுவையானதாகவும் உள்ளன .....உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அன்புடன் வணக்கம் மகேந்திரன்,

நெஞ்சார்ந்த நன்றிகள்..

நன்றி சொல்ல விரும்பும் மூவரிலே எம்மையும் ஒரு பொருட்டாய் குறிப்பிட்டமைக்கு..

கைமாறு செய்ய முடியாத
கௌவரத்தை தந்திருக்கிறீர்கள்..

மிக்க நன்றி..

தங்கள் அழைப்பை ஏற்றுப் போற்றுகிறேன் நண்பரே..

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்
தாழ் ?


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

PUTHIYATHENRAL said...

வணக்கம் மகேந்திரன் வாழ்த்துக்கள் பதிவு ரொம்ப நல்லா இருந்தது. அதே நேரம் உங்கள் பதிவிற்கு அழகு சேர்ப்பது அழகான படங்கள் நன்றி. சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கள் பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கமெண்ட்ஸ் என்கிற எழுத்தின் கலரை மாற்றுங்கள் அதுவும் உங்கள் டம்லேட் கலரும் ஒன்றாக இருப்பதால் கருத்து பகுதியை தேடவேண்டியது உள்ளது நன்றி.

M.R said...

வணக்கம் நண்பரே

தாமதமாயிற்று மன்னிக்கவும்

உண்மையின் வெளிப்பாடு

பகிர்வுக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுடைய மனதை..
தங்குடைய குணாதிசயத்தை பிரிதிப்பலிக்கிறது...

வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////

8) வியந்த திரைப்படங்கள் மூன்று:

சித்தி (பழையது)///////

இந்தப்படம் கல் நெஞ்சங்களைக்கூட கறைத்துவிடும்..

இந்தப்படத்தைப்பார்த்து சிறு வயதில் நானே அழுதிருக்கிறேன்..

மாய உலகம் said...

//4) விரும்பாத மூன்று:

• புறம்பேசுபவர்கள்
• நம்பிக்கைத் துரோகம்
• முகத்திற்கு முன் நல்லவராய் நடித்தல்.

9) பிடித்த பின்னணிப் பாடகர்கள் மூவர்:

• ஸ்வர்ணலதா
• எஸ்.ஜானகி
• எஸ்.பி.பாலசுப்ரமணியம்.


12) புரிந்துகொள்ள முயற்சிக்கும் மூன்று:
• ஆன்மிகம்
• இயந்திரவியல்
• விஞ்ஞானம்//


எனைக் கவர்ந்த வரிகள்.... அருமை

kunthavai said...

அட..மூச்சில் மூன்று சுவாசங்கள் !.
வேறு ஏதோ கவிதை தான் என்று நினைத்தேன்.
தொடர்பதிவு வேறு...
ஜமாயுங்கள் தோழரே !

( இதில் என்னையும் சேர்க்குமளவுக்கு நான் என்ன செய்தேன் ? எனினும், நன்றி மகேன் )

- அனு.

vidivelli said...

asaththalaana munru suvaachangkal..
ellaame arputham..
vaalththukkal..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் வாழ்த்துரைக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன்
பதிவுகில் நான் கால்பதித்து
எழுத ஆரம்பித்த வெற்றுக்கவிதைகளை
முதன்முதலில் கருத்துரைத்து
அதற்கு உயிரூட்டியவர் நீங்கள் தான் ...
என் வாழ்வில் நிச்சயம் மறக்க முடியாத நபர் நீங்கள்

உங்கள் தொடர் பதிவு வாசித்தேன்
அசத்தல்
நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் புதிய தென்றல்

நிச்சயம் செய்கிறேன் நண்பரே,
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.

தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்

சரியாகச் சொன்னீர்கள்
சித்தி படம் பார்த்து சிறுபிராயத்திலேயே
மனம் கனத்து திரிந்த நேரம் அது.
அற்புதமான திரைப்படம்
/காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே/
அந்தப் பாடல் காதில் இன்னும் ரீங்காரமிடுகிறது.

மகேந்திரன் said...

மாயுலகத்திநின்று இங்கு புதிதாய்
மலர்ந்திருக்கும் அன்பு நண்பர் மாயுலகம்
அவர்களே,

வசந்தமண்டபம் தங்களை வரவேற்கிறது.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து வாருங்கள்.

மகேந்திரன் said...

தோழி அனு

அனுமனுக்கு தன்பலம் தெரியாதாம், அதுபோல தான்
இருக்கிறது நீங்கள் சொல்வதும்.
இந்த வலைத்தளம் ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணமே நீங்கள் தானே.
மறக்க முடியுமா அதை

வாழ்நாள் கடன்கழித்திடினும் அடையாதே.

நன்றி தோழி.

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி

தங்களின் வாழ்த்துரைக்கும்
இனிய கருத்துரைக்கும்
மிக்க நன்றி.

அம்பாளடியாள் said...

உச்சி குளிர்ந்தது உள்ளம் மகிழ்ந்தது
என்ன புண்ணியம் செய்தேனென்று
கண்கள் சொரிந்த ஆனந்தக் கண்ணீர் தெளித்து உந்தன் வாசலில் நின்று கைகூப்பி வணங்குகிறேன்

மூச்சுக்கள் மூன்றில் என் முகவரியைத் தொடுத்தவனே
அன்புக் கரம் இணைத்து என் அண்ணன் நீ என்று
இன்பத் திருநாளில் இன்று என் இதயத்தில் மலர்ந்திட்டாய்!....
வலைத்தளம் தந்த இனிய உறவு இது எங்கிருந்தாலும் வாழ வாசகர்களே நிறைவான மனதோடு எம்மை வாழ்த்துங்கள்...

நன்றி சகோதரரே மிக்க நன்றி.......................

அம்பாளடியாள் said...

தொடருகின்றேன் முடிந்தவரை மூச்சுக்கள்
மூன்று என்னும் தலைப்பில் என் வலைத்தளத்தில்.
உங்கள் அன்புக் கட்டளைக்கு இணங்கி .........

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்

தங்களின் கவிதை வரிகளில் உள்ளத்தை பறிகொடுத்தவர்களில்
நானும் ஒருவன். அழகான வார்த்தைகளில் கவிதை மாலை தொடுப்பதில் நீங்கள் வல்லவர்.
என் படைப்பை தொடர்ந்து எழுத உங்களை அழைத்த முழுமுதற் காரணம் அதுவே.
பதிவுலகில் எனக்கு கிடைத்த அறிவான தங்கை நீங்கள்.
இறைவனுக்கு நன்றி.

உங்கள் அடுத்த படைப்பிற்கு காத்திருக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் பாராட்டுகளுக்கு
மிக்க நன்றி.

நிரூபன் said...

தங்களின் ரசனையினை வெளிப்படுத்தும் வண்ணம், முத்தான மூன்று விடயங்களைத் தித்திபாய்த் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
தங்களின் இனிமையான கருத்துரைக்கு
மிக்க நன்றி.

Post a Comment