Powered By Blogger

Saturday 28 May 2011

எல்லா நாளும் புதியதே!!!








வாய்ப்பு வருமென்று
வாய்பிளந்து நிற்க! நீ
ஒநாயல்ல! - கிடைத்த
நூல் முனையில்! - வெற்றிப்
பட்டத்தைப் பறக்கவிடு!

 

நீ செல்லும் பாதையில்
வாய்ப்பு எனும் காகிதத்தில்
முயற்சி எனும் தூரிகையால்
வெற்றி எனும் காவியத்தை
எப்போதும் எழுதிவிடு!

 

நித்தமும் வாய்ப்புகள் - உன்
முற்றத்தில் உண்டு
வாசல் தாண்டும் முன்
வாய்ப்புகளின் வடம்பிடித்து
வெற்றியை நிலைநிறுத்து!

 

பயணம் சில தூரம்தான்
பாதைகள் மட்டும் பல
வாழ்வின் சுழல்கள்
யாவும் பழகிவிடு - அங்கே
நீந்திக் கரையை தொட்டுவிடு!




வாழ்வை வாழப் பிறந்த நீ
யுக்தியுடன் செயல்படு!
தோல்வி எனும்  சேற்றினை
நம்பிக்கை எனும் நீரில் கழுவி
வெற்றி எனும் சுவடு பதித்துவிடு!


இன்று நிகழ்ந்த அஸ்தமனம்
நாளை உனது விடியல்
நாளைய பொழுதில் - உன்
நம்பிக்கை வைத்தால்
எல்லா நாளும் புதியதே!!


அன்பன்

மகேந்திரன்

8 comments:

Anonymous said...

அழகான தன்னம்பிக்கை கவிதை வரிகள்
நன்றி.
தமிழ்தேவன்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தமிழ்தேவன் அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

akilan said...

வாழ்வில் நம்பிக்கை இருந்துவிட்டால்
எல்லா நாளும் புதிய நாளே எனச் சொல்லும்
உங்கள் கவிதை அருமை

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன் அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

hariharan said...

திரு.மகேந்திரன் அவர்களே நீங்கள் ஸ்பிக் நிறுவந்த்தில் பணியாற்றினீர்களா? எனக்கு குறைவான ஞாபகசக்தியினால் கேட்கிறேன் மன்னிக்கவும்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஹரிஹரன் அவர்களே,
நான் ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றியவன் தான்.
பதினான்காம் குழுமத்தைச் சேர்ந்தவன்
உங்கள் பெயரை வைத்து என்னால் சிறிது யூகிக்க முடிகிறது
இருப்பினும் முழுவதுமாக முடியவில்லை.
தயவுசெய்து முழுமையாக அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்.
தங்களின் வருகைக்கு நன்றி.

hariharan said...

I was working in SPC chennai, when i was in deputation to haldia you also came there.

presently i am in qatar. I have problem to type in tamil as currenlty. sorry to type in english.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஹரிஹரன் அவர்களே
இப்போது உங்களை என்னால் முழுமையாக
அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
எத்தனை வருடமாயிற்று?
அடேயப்பா!!!!
மறக்கமுடியவில்லை அந்த அனுபவங்களை
என்னுடைய மின்னஞ்சல் முகவரி

pmkv2002@gmail.com

தொடர்பில் இருங்கள்.
மிக்க நன்றி.

Post a Comment