Powered By Blogger

Thursday 26 May 2011

ஒருகாணி நிலமிருக்கா??!!!









கொம்பு ரெண்ட ஆட்டிகிட்டு
குதுகலமா ரோட்டு மேல
ஒயிலாக ஒடுவியே - மச்சக்காளையே!

ஒண்டிப்போயி ஓரத்தில
ஒருசாணு இடத்துக்குள்ள
குறுகிப்போயி கிடக்குறியே - மயிலக்காளையே!

உருக்காத இரும்புபோல
உத்தரமாம்  உந்தேகம்
உருக்குழஞ்சு போனதேனோ? - மச்சக்காளையே!

பாவிமனசு தவிக்குதப்பா
பழையகஞ்சி சேரலப்பா
பத்திரமா உன்னநானும்
பார்க்கவில்லையோ?!!! - மயிலக்காளையே!!


-----------------------------------------------
------------------------------------------------

உழைப்பென்றால் உன்னைப்பார்த்து
உலகத்துக்கு சொல்லத்தோணும்
உழைப்பாளி வர்க்கமைய்யா - உழவுக்காரனே!

ஏதேதோ எண்ணம் வந்து
எம்மனச ஆட்டிவைக்க
சோறுதண்ணி இறங்கலியே - உழவுக்காரனே!

எங்கப்பா சொன்னகதை
எப்போதோ கேட்ட கதை
என்காதில் ஒலிச்சுதப்பா - உழவுக்காரனே!

காடுகழனி செங்கழனி
கண்ட இடம் பூங்கழனி
பார்த்ததெல்லாம் பச்சையாக
இருந்ததாமப்பா! - அன்று
வேலைபார்க்க பொழுதில்லையாம் - உழவுக்காரனே!

கீழிருந்து மேலும் சரி
இடமிருந்து வலமும் சரி
எந்தத்திசை பார்த்தாலும்
பச்சையில்லையே! இங்கே
பார்க்குமிடம் பவுசான
கட்டிடம்தான்பா!

ஓராயிரம் ஆசையில்ல
எம்மனசுக்குள்ளே இருப்பதெல்லாம்
ஒரேஒரு ஆசைதான்பா - உழவுக்காரனே!

----------------------------------------------
-----------------------------------------------

நீ சொல்ல சொல்ல
உறுத்துதப்பா எம்மனசு!!

பசுமையான இடமெல்லாம்
கட்டிடமாச்சு! -இங்கே
விவசாய நிலமெல்லாம்
விற்பனையாச்சு! ஐயோ!
எம்பொழப்பும் இங்கே
ஒரு வெறுங்கதையாச்சு! - மச்சக்காளையே!



உலகமெல்லாம் மாறிப்போச்சு
மக்கள்தொகை ஏறிப்போச்சு
நடப்பதெல்லாம் நடக்கட்டும் - மச்சக்காளையே!

உன் ஆசை என்ன சொல்லப்பா?!! - மயிலக்காளையே!

----------------------------------------------------
-------------------------------------------------

எனக்கு ஒரு ஆசையப்பா
என்மனசில் இருக்குதப்பா!
என்னுசிரு இருக்கும்போதே - உழவுக்காரனே!
சின்னஞ்சிறு நிலத்தையேனும்
உழுதிட வேணும்!














ஒருகாணி நிலமிருந்தா
எனக்கு மட்டும் சொல்லிவிடு!!!




அன்பன்

மகேந்திரன்

11 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

///எனக்கு ஒரு ஆசையப்பா
என்மனசில் இருக்குதப்பா!
என்னுசிரு இருக்கும்போதே - உழவுக்காரனே!
சின்னஞ்சிறு நிலத்தையேனும்
உழுதிட வேணும்!//

அருமையான ஆசை மகேந்திரன்..
எனக்குக் கூட இந்த மாதிரி ஆசைகள் நிறைய இருக்கு..

வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//
எனக்கு ஒரு ஆசையப்பா
என்மனசில் இருக்குதப்பா!
என்னுசிரு இருக்கும்போதே - உழவுக்காரனே!
சின்னஞ்சிறு நிலத்தையேனும்
உழுதிட வேணும்/////

உலத்தாரின் ஆசையும் அதுவேதான்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தலான கவிதை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

http://kavithaiveedhi.blogspot.com/2011/05/blog-post_26.html

கூடல் பாலா said...

என்ன ஒரு அருமையான கவிதை .சுற்று சூழல் சம்மந்தமாக இன்னும் நிறைய கருத்துக்களை தெளியுங்கள் .வாழ்த்துக்கள் !

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே
தங்களின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
படைப்பின் மீதான இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர் அவர்களே,
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா அவர்களே,
தங்களை முதலில் வரவேற்கிறேன்.
படைப்பின் மீதான தங்களின் உன்னதமான
கருத்துக்கு மிக்க நன்றி.
சுற்றுச்சூழல் பற்றிய கவிதைகளை
வரும் படைப்புகளில் தருவதற்கு
முயற்சி செய்கிறேன்.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

நன்றி.

akilan said...

அருமையான நாட்டுப்புற பாடல் நடையில்
இனிமையான கருத்தோவியம்
உழவும் தொழிலும் நாம் படைப்போம்
என்று முழங்கும் காவியம்

நண்பர் மகேந்திரன்
சுற்றுச் சூழல் பற்றிய படைப்புகள் இன்னும்
நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்.

நன்று!

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன் அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
சுற்றுப்புறச் சூழல் பற்றிய கவிதைகள் பதிவு
செய்ய நிச்சயம் முயற்சி செய்கிறேன்.

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment