Powered By Blogger

Tuesday 10 May 2011

கூர்முனை ஏந்துவோம்!




கண்கள் குளிர்ந்தது!
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை பட்டு விரித்தது போல்
பகட்டுத் தோட்டங்கள்!

நீர்க்குடங்கள் ஏந்திக்கொண்டு
நெடுதூரம் போன- நம் வீட்டு பெண்கள்
நிம்மதி பெருமூச்சு விட்டனர்
நிர்மலமாய்!

அண்ணாந்து வானத்தை
பார்த்தே தன்
கழுத்தெலும்பு தேய்ந்துபோன
விவசாயிகள்- அகம் மகிழ
கிணற்று நீரை எட்டி இறைக்க!

ஆற்றின் மணல் மட்டுமே
தேங்கி நின்ற காலம் போய்
நீரின் கரைமீறிய
ஆவேசம் கண்டேன்!

மண்ணில் வீழ்ந்து வடிகாலின்றி
கடலில் கலந்த பொன்னான
மழைத்துளிகள் - இன்று
மதகு கட்டி எம் இல்லத்தில் சேகரிப்பாய்!

தொலைநோக்கு பார்வையுடன்
எம்மை ஆள்பவர்கள் - இன்று
நதிநீர் இணைப்பை நன்கு
நிறைவேற்றிருக்கக் கண்டேன்!

.............................................
..................................

விழித்தெழுந்தேன் - நான்
விழுப்புண் பட்டு
கோடி கொட்டினாலும் கிட்டாத
கனவு கண்டிருந்தேன்!!!

கனவு நனவாகுமா? - மேலும்
நீர்நிலைத்தேக்கங்கள் உருவாகுமா?
புவிவெப்பத்தின் பாதிப்பால்
வருங்கால சந்ததிகள் - அருந்த
நீர் இல்லாமல் போய்விடுமோ?

செய்வதென்னவென தெரியவில்லை!!
எம் முப்பாட்டனிலிருந்து கதறி வரும்
இச்செய்தி எம்மை ஆள்பவர்களுக்கு
எட்டவில்லையோ?!!!!

எட்டவேண்டும்! நண்பர்காள்!
எட்டவேண்டும்!!

நம் ஆயுதமாம்
கூர்முனை போன்ற
எழுதுகோல் கொண்டு!
எடுத்துரைப்போம்!
நம் நாட்டை அரசாளுபவர்களின்
செவியேறும் வரை! 


அன்பன்

ப.மகேந்திரன்

8 comments:

Anonymous said...

அருமையான கனவு
தோழரே,
கனவு கண்ட விதமும் அருமை

எண்ணங்கள் ஈடேற
முயற்சிப்போம்.

தமிழ்தேவன்

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

படிக்க படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது..
அட கடைசியில் இது கனவா ?

நல்ல கனவு தான் கண்டிருக்கிறீர்கள் ..
தங்கள் கனவு நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்..

மகேந்திரன் said...

நண்பர் தமிழ்தேவன் அவர்களே

இனிய கருத்துரைத்தமைக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

நண்பர் ஜானகிராமன் அவர்களே

தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

Sathish Kumar said...

//விழித்தெழுந்தேன் - நான்
விழுப்புண் பட்டு
கோடி கொட்டினாலும் கிட்டாத
கனவு கண்டிருந்தேன்!!!//

//செய்வதென்னவென தெரியவில்லை!!
எம் முப்பாட்டனிலிருந்து கதறி வரும்
இச்செய்தி எம்மை ஆள்பவர்களுக்கு
எட்டவில்லையோ?!!!!//

//எட்டவேண்டும்! நண்பர்காள்!
எட்டவேண்டும்!!//

எண்ணம், கனவு, ஏக்கம், ஆற்றாமை, கோபம், துணிவு, வேறு வார்த்தைகள் இல்லை, மகேந்திரன்...!
நான் வாசித்த கவிதைகளில் சிறந்தவற்றுள் ஒன்று இது...! வாழ்த்துக்கள். தொடர்கிறேன் உங்களை இன்றிலிருந்து...!

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சதிஷ்குமார்,

இங்கு தங்களின் வரவை இரு கரம் கூப்பி

வணக்கி வரவேற்கிறேன்.

இந்த கவிதைக்கான உங்களின் கருத்து

எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

என படைப்புகளுக்கான உங்கள் கருத்துக்களை

ஆவலுடன் எப்போதும் எதிர்பார்க்கிறேன்.

அன்பன்

மகேந்திரன்.

அம்பாளடியாள் said...

கனவு நனவாகுமா? - மேலும்
நீர்நிலைத்தேக்கங்கள் உருவாகுமா?
புவிவெப்பத்தின் பாதிப்பால்
வருங்கால சந்ததிகள் - அருந்த
நீர் இல்லாமல் போய்விடுமோ?

செய்வதென்னவென தெரியவில்லை!!
எம் முப்பாட்டனிலிருந்து கதறி வரும்
இச்செய்தி எம்மை ஆள்பவர்களுக்கு
எட்டவில்லையோ?!!!!

எட்டவேண்டும்! நண்பர்காள்!
எட்டவேண்டும்!!

நம் ஆயுதமாம்
கூர்முனை போன்ற
எழுதுகோல் கொண்டு!
எடுத்துரைப்போம்!
நம் நாட்டை அரசாளுபவர்களின்
செவியேறும் வரை!
தங்களது இந்தப் பொதுநலன் குறித்த
ஆதங்கம் நிட்சயமாகச் சிந்திக்க வேண்டிய
ஒன்று நீங்கள்மட்டும் அல்ல இன்றைய
சமுகமே.அருமையான பகிர்வு இது அனைவரையும்
சென்றடையா வாழ்த்துக்கள்............

மகேந்திரன் said...

அம்பாளடியாள் அவர்களே,
சரியாகச் சொன்னீர்கள், அனைவரும் இதைப்பற்றி
சிந்திக்கவேண்டும் மற்றும் எல்லோரிடமும் இந்த
விழிப்புணர்வு வரவேண்டும் என்பதே நோக்கம்.

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

அன்பன்
மகேந்திரன்

Post a Comment