Thursday, 24 May 2012

இயல்பினைக் களையாதே!!யிர்தரித்து ஆங்கே
உடல் வளர்த்து!
வாழும் நாளெல்லாம்
ஏதோ ஒன்றுக்காய்
ஏக்கப் பெருமூச்சுடன்
பொற் பொழுதுகளை  
கற்களாய் சமைப்பதுதான்
வாழும் நிலையோ?!!
 
துதான் இலக்கென்று
தூரத்துப் பச்சையாய்
நிர்ணயம் தருவித்து!
கடிகார முட்களின்
ஓட்டத்திற்கு இணையாய்
நாடியங்கே சென்றாலும்
சுழியத்தை தழுவியதுபோல்
இலக்கோ இன்னும் தூரமாய்!!
 

 


வாழ்நிலை மேன்மைக்காய்
சூழ்நிலை அறியாது
கோள்களை கடந்தும்
கொண்ட இலக்கின் முடியதை
விண்டிட துடிக்கையில்
தடம் மாறும் தவறுகளால்
புடம்போட்டு வைத்த
இயல்பங்கே புதைந்ததுவே!!

ளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென
ஆன்றோர் உரைத்தாலும்!
அவசர அவனியில்
அன்றே அரியாசனம் ஏறும்
ஆசைகளின் கொள்கலனாய்
அவதியாய் மாறிப்போய்
இயல்பினை இழப்பதேன்??!!
 
 
தென்னைமர உச்சியில்
பனங்காய் காய்த்திடுமோ?!
வேம்பின் கிளைகளில்
விழுதுகள் தான் விளைந்திடுமோ?!
தன்னிலை அறிந்திருந்தும்
தன் நிலை புரிந்திருந்தும்!
பொய்வாழ்க்கை வாழ்ந்திட
இயல்பினை இழப்பதேன்??!!
 
முரளியின் மேனியிலே
துளையது இருந்தால் தான்
ராகங்கள் கேணியாய் சுரக்கும்!
அதன்பால் கொண்ட ஈர்ப்பால்
மத்தள மேனியிலே
குத்தலாய் துளையிட்டு
ராகங்கள் வருமென
எண்ணுதல் தவறன்றோ??!!


திகட்டாத தேனென
மிடுக்கான எண்ணத்தால்
பகட்டு வாழ்வின்
பசிக்கு இரையாகி
இயல்பினை இசைவாய்
போலிச்சாயம் போர்த்தி
சாயம் வெளுத்தபின்னே
சுயம் இழந்து போவதேன்??!!

காற்றுவெளி மண்டலத்தில்
சுவாச வாயுவது
தன் கொள்ளளவில் மாறி
மிகையுற்றுப் போனால்
கொடிய விடமாக
குணம் மாறிப்போகுமென
சிந்தையில் ஊன்றிக்கொள்
இயல்பினை மறவாது!!
 
 
சுவின் மடியது
தினமும் படியளவு
சுரக்கும் அமுதென
திண்ணமாய் அறிந்தபின்
மடி அறுத்து அகம் வைத்தால்
அமுதிங்கே நமக்கேது?!
இயன்றதை கைகொண்டு
இச்சகத்தில் கோலேச்ச  
இயல்பு நழுவாதே!!
 
வியாபித்த வையகத்தில் 
உனக்கான இடமொன்று 
தருவித்தே உள்ளது!
முனைப்பான முயற்சியும் 
தளராத தன்னம்பிக்கையும் 
கையகத்தில் பூட்டிவைத்து 
இட்டுவைத்த இலக்கதை
இயல்பாக எட்டிவிடு!!
 
 
தீத தன்னம்பிக்கையும் 
அவசர புத்தியும்!
விவேகமற்ற செயலும் 
பொறாமைக் குணமும்!
மார்நிமிர்த்தச் சொல்லும்  
வறட்டு கௌரவமும்!
புவனத்தில் கோலேச்சும் உனை 
புதைகுழியில் தள்ளுமென 
புத்தியில் போட்டுவை!!
 
திர்கால இலக்கிற்காய் 
எதிர்நீச்சல் போடுவதே 
வாழ்வின் நிலையாம்!
குறுக்கு வழியில் 
குறுகிய காலத்தில் 
பெருத்த நிலை அடைந்திட 
இயைபாய் அமைந்திட்ட 
இயல்பினைக் களையாதே!! 
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 
 
 
 


 

75 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணே,
எமது இயல்பினை நாமே துறந்து, இயந்திரம் போல் செயற்படுவது பற்றி அருமையான ஓர் கவிதை கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

விக்கியுலகம் said...

அழகிய கவிதை...இயல்பானதே என்றும் இருக்கும்!

எஸ்தர் சபி said...

அழகுற தமிழில் கவி மழை பொழியும் மகேந்திரன் அண்ணா... உங்கள் கவியை சொலிடவும் வேண்டுமா
அருமை மிக அருமை..

ரேவா said...

இயல்பு தொலைக்காமல் இருப்பதே நல்லதென்பதை அழகான வீரியமிக்க வரிகளைக்கொண்டு கவிவடித்திருக்கின்றீர்கள் சகோ, இன்றே இந்த கவிதை மண்டபத்தில் இளைப்பாற வந்தேன்....... உங்கள் வரிகளால் நம்பிக்கை கொண்டேன்......... வாழ்த்துகள் சகோ :)

Lakshmi said...

அழகான இயல்பான கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

இதுதான் இலக்கென்று
தூரத்துப் பச்சையாய்
நிர்ணயம் தருவித்து!
கடிகார முட்களின்
ஓட்டத்திற்கு இணையாய்
நாடியங்கே சென்றாலும்
சுழியத்தை தழுவியதுபோல்
இலக்கோ இன்னும் தூரமாய்!

இதுவே வாழ்வாய் வாடும் நமக்கு விரைவில் விடிவு வரட்டும் !

இராஜராஜேஸ்வரி said...

குறுக்கு வழியில்
குறுகிய காலத்தில்
பெருத்த நிலை அடைந்திட
இயைபாய் அமைந்திட்ட
இயல்பினைக் களையாதே!!

இயல்பாய் இருத்தலே
இனிமையான வரம் !

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//இதுதான் இலக்கென்று
தூரத்துப் பச்சையாய்
நிர்ணயம் தருவித்து!
கடிகார முட்களின்
ஓட்டத்திற்கு இணையாய்
நாடியங்கே சென்றாலும்
சுழியத்தை தழுவியதுபோல்
இலக்கோ இன்னும் தூரமாய்!!
//

அழகான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

koodal bala said...

சிந்தித்துப் பார்க்கவேண்டிய விஷயங்கள் அடங்கிய கவிதை...அருமை!

MANO நாஞ்சில் மனோ said...

அதீத தன்னம்பிக்கையும்
அவசர புத்தியும்!
விவேகமற்ற செயலும்
பொறாமைக் குணமும்!
மார்நிமிர்த்தச் சொல்லும்
வறட்டு கௌரவமும்!
புவனத்தில் கோலேச்சும் உனை
புதைகுழியில் தள்ளுமென
புத்தியில் போட்டுவை!!//

அருமையான் புத்திமதி கவிதையில் இலையோடுது....!!!

செய்தாலி said...

நல்ல
சிந்தனையுள்ள கவிதை தோழரே

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Anonymous said...

இனிய கலை வணக்கம் அண்ணா ....நல்ல சுகமா

அண்ணா எப்புடி அண்ணா இப்புடிலாம் எழுதுறிங்க ....

அந்த ரகசியம் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் எனக்கும்

கணேஷ் said...

இயல்பாய் இருத்தலே சிறப்பென்ற எழிலுறச் சொன்ன அழகிய கவிதை! வழக்கம் போல் வியந்து நோக்குகிறேன் மகேன் உங்களை!

அண்ணா எப்புடி அண்ணா இப்புடிலாம் எழுதுறிங்க .... அந்த ரகசியம் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் எனக்கும்.

-யம்மா கலை... உனக்கு முன்னாலேயே நான் கேட்டாச்சு. எனக்கும்கூட ‌சொல்லித்தர மாட்டேங்கறார் உங்கண்ணன்!

கீதமஞ்சரி said...

மனம் நிறைக்கும் அற்புத வரிகள் மகேந்திரன். சூழலையும், செயலையும், சொல்லையும், பொருளையும் அதனதன் இயல்போடே அழகாய்ச் சொல்லி விளக்கியவிதம் மிகவும் அருமை. இந்த இயல்பு மாறாக் கோட்பாட்டில் இழப்புக்கு இடமில்லை. இதம் தரும் யாவும் சுகமே. பாராட்டுகள் மகேந்திரன்.

புலவர் சா இராமாநுசம் said...

தம்பீ!
விடுமுறை முடிந்ததா?

பொருள்வழிப் பிரிவு, வரிகள் தோறும் உங்கள் ஏக்கத்தை ஏதிரொலிக்கக் காண்கிறேன்
இயல்பு வாழ்க்கையை இழக்கச்
செய்வதும் அதுவே
கவிதை நன்று!

புலவர் சா இராமாநுசம்

Nirosh said...

//அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென
ஆன்றோர் உரைத்தாலும்!
அவசர அவனியில்
அன்றே அரியாசனம் ஏறும்
ஆசைகளின் கொள்கலனாய்
அவதியாய் மாறிப்போய்
இயல்பினை இழப்பதேன்??!!//
மனதை அதிகம் கவர்ந்து செல்கிறது தங்கள் கவிதை....!

அரசன் சே said...

இனிமை கொஞ்சும் இயல்பான கவிதை ..
கவிதைக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா

மாத்தியோசி - மணி said...

அழகான தத்துவங்களோடு கூடிய சிந்தனைக் கவிதை! வாழ்த்துக்கள் மகேந்திரன் அண்ணா!!!

ஹேமா said...

//முரளியின் மேனியிலே
துளையது இருந்தால் தான்
ராகங்கள் கேணியாய் சுரக்கும்!
அதன்பால் கொண்ட ஈர்ப்பால்
மத்தள மேனியிலே
குத்தலாய் துளையிட்டு
ராகங்கள் வருமென
எண்ணுதல் தவறன்றோ??!!//

வாழ்வியலை இத்தனை சாட்சியங்களோடு ஒப்பிட்டு யாராலும் சொல்லமுடியாது மகி.எப்போதும்போல அற்புதம் !

Anonymous said...

இயல்பாகவே என் சகோதரருக்கு வரும் வாழ்வியல் கவிதை...

நலமா?

இந்த முறையாவது எங்கள் தொந்தரவு இன்றி விடுமுறை...

செல்வங்கள் நலம் தானே?

இளைப்பாறி வந்திருக்கிறீர்கள்..

இனி உங்கள் கவி வரிகளால் தொடர்ந்து எங்களுக்கு சாமரம் வீசுங்கள்...

ஆயாசமாய் ரசிக்க காத்திருக்கிறோம்...-:)

சென்னை பித்தன் said...

இயல்பினைக் களையாதே என இயல்பான கவிதை சொன்னீர்கள்.நன்று.

GowRami Ramanujam Solaimalai said...

//பொற் பொழுதுகளை
கற்களாய் சமைப்பதுதான்
வாழும் நிலையோ?!! ............எல்லோரும் சிந்திக்க வேண்டிய கேள்வி :)

தனிமரம் said...

எப்போதும் இயல்பினைப் பேனவேண்டியதன் அவசியத்தைப் பகிரும் அழகிய கவிதை பொருளாதார  தேடல் என்ன செய்வது சில நேரங்கள்! இயல்பு கெடுகின்றதே!

AROUNA SELVAME said...

வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா.

கவிதையின் ஒவ்வொரு வரியும் மனத்தைத் தொடுகிறது. அருமைங்க.

ரமேஷ் வெங்கடபதி said...

வார்த்தை பூக்களால் கோர்க்கப்பட்ட உற்சாக பாமாலை! அபாரம்! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

இயல்பான கவிதை அருமை ! மிக்க நன்றி நண்பரே !

சசிகலா said...

தன்னிலை அறிந்திருந்தும்
தன் நிலை புரிந்திருந்தும்!
பொய்வாழ்க்கை வாழ்ந்திட
இயல்பினை இழப்பதேன்??!!//
இயல்பாய் இருந்துவிட்டால் இன்பம் தேடி வரும் சிறப்பாய் சொன்ன விதம் அருமை அண்ணா .

சத்ரியன் said...

குறுக்கு வழியே சிறக்க வழியென நம்பி வீழும் விட்டில் எண்ணங்கள் விளையும் மனங்களுக்கு நல்ல (கசப்பு) மருந்துக்கவிதை.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,
வணக்கம்..
நலமும் அதுவே நாடாளும்.
இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை எஸ்தர் சபி,
கவிதையை சிலாகித்து அருமையான கருத்து கொடுத்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வருக வருக சகோதரி ரேவா அவர்களே,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
இனிமையான கருத்திட்டு வாழ்த்துரைத்தமைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

தேர்வுப்பணி காரணமாக ஒருமாத இடைவெளிக்குப் பின் இன்றுதான் வலையுலகத்திற்கு வருகிறேன்..

வந்தவுடன் நான் தேடிவந்த முதல் வலை தங்களுடையதுதான் நண்பரே..

நீ நீயாக இரு என்னும் வாழ்வியல் நுட்பத்தைத்தாங்கள் கவித்துவமாக்கியவிதம் அருமை.

தாங்கள் கூறிய ஒவ்வொரு கருத்துக்களும் சீர்த்தூக்கிப்பார்க்கவேண்டிய சிந்தனைகளே!

நன்று!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

Ramani said...

எதிர்கால இலக்கிற்காய்
எதிர்நீச்சல் போடுவதே
வாழ்வின் நிலையாம்!
குறுக்கு வழியில்
குறுகிய காலத்தில்
பெருத்த நிலை அடைந்திட
இயைபாய் அமைந்திட்ட
இயல்பினைக் களையாதே!

அருமையான கருத்தைதை தாங்கிய பதிவை
மிக மிக அழகாக எளிமையாக ஒரு கவியாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 15

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் ரசிப்புமிகுந்த கருத்துகளுக்கு என்
உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜபாட்டை ராஜா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழர் செயதாலி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை வலையகம் வலைஞன்
நிச்சயம் தங்கள் பக்கம் வருகிறேன்..

மகேந்திரன் said...

அன்புத் தங்கை கலை,
இனிய வணக்கம் பா..
ரகசியம் என்பதே சொல்லக்கூடாத ஒன்று தானே..

ரசித்து கருத்து சொன்னமைக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் பன்முக எழுத்து வடிவங்கள் கண்டு
நான் மிகவும் வியந்து நோக்கியிருக்கிறேன்.
தங்களால் நான் வியப்புற்று நோக்கும் அளவுக்கு
இருக்கிறேன் என்று பெரும் பட்டம் கொடுத்தமைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
இயல்பு மாறா கோட்பாட்டில் இழப்புக்கு
இடமில்லை என்ற தங்கள் கருத்து மிகச் சரி.
ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
விடுமுறை நன்கு கழிந்து பணிக்கு
திரும்பிவிட்டேன்.

என் மனதினில் ஒருபுறம் நான் கருவாகக்
கொண்ட இயல்பினை தெளிவாக கருத்துரைத்தமைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரோஷ்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் அரசன்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் மணி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு
என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
விடுமுறை நன்கு கழிந்து பணிக்கு திரும்பிவிட்டேன்.
அனைவரும் நல்ல சுகம்.
நிச்சயம் சகோதரரே
அடுத்தடுத்து என் கவிதைகள் தங்களை வந்தடையும்..

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வருக வருக நண்பர் சோலைமலை அவர்களே,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
இனிமையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,
பொருளாதாரா தேடலில் சில நேரங்களில்
இயல்பு கெடுகின்றது என்பது நிதர்சனமான உண்மைதான்..
உணர்சிகளுக்கு இடையிலான இயல்பு கெடுவதால்
பாதிப்பேதும் இல்லை..
ஆனால் கொள்கைகளுக்கு இடையில் வந்தால்தான்
துன்பமே...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மௌனகுரு said...

//எதிர்கால இலக்கிற்காய்
எதிர்நீச்சல் போடுவதே
வாழ்வின் நிலையாம்!
//


எதிர்காலத்தை தேடிதேடி நிகழ்காலத்தை இழக்கிறோம் நண்பா...

//குறுக்கு வழியில்
குறுகிய காலத்தில்
பெருத்த நிலை அடைந்திட
இயைபாய் அமைந்திட்ட
இயல்பினைக் களையாதே!!//


இந்த இயல்பினைக்களையாதது தான் முன்னேற்றத்தடயோ?

ஆனாலும் இன்னும் இயல்பை இழக்கவில்லை நண்பா

Seeni said...

சகோதரா!

உண்மை!
நீங்க சொன்ன தன்மை!

புரிந்து கொண்டால்-
சிறப்பாக்கும் வாழ்வை!

அருமை!

மாலதி said...

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென
ஆன்றோர் உரைத்தாலும்!
அவசர அவனியில்
அன்றே அரியாசனம் ஏறும்
ஆசைகளின் கொள்கலனாய்
அவதியாய் மாறிப்போய்
இயல்பினை இழப்பதேன்??!!// உண்மையில் மிகசிறந்த ஆக்கம் இன்று எல்லாவற்றிலும் இந்த முரண்பாடு நிலை நிறுத்தப்படுகிறது அளவிற்கு முகுந்தால் அது விடமே கருத்துக்கள் போற்றத்தக்கன.....

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

சந்திரகௌரி said...

அருமை அருமை .

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செல்வம்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சத்ரியன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டவன்.
கடுமையான பணிச் சூழலிலும் என் தளம் தேடி வந்து
மேலான கருத்திட்டமைக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வருக வருக நண்பர் மௌனகுரு,
வசந்தமண்டபம் தங்களை இருகரம் கூப்பி
வரவேற்கிறது..
இனிய கருத்திட்டமைக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் சீனி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் செய்தாலி,

தங்களின் மேன்மையான அன்புக்கும்

வலைச்சரப் பகிர்தலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்.

Post a Comment