Powered By Blogger

Wednesday 2 May 2012

வழுக்களே ..... வடுக்களாக!!







காயப் பந்தலாம்
வெளிர்நீலக் குடையின்கீழ்!
வெங்காயத் தாமரை போல்
படர்ந்திருக்கும் மானுடரின்
வளர்பிறைத் தடங்களில்
தோய்ந்திருக்கும் கறைகளோ
கணக்கில் அடங்காது!!
 
டுமாறும் பயணங்களில்
தவறுகள் என்பது
யதார்த்த நிகழ்வு தான் - எனினும்
நிகழ்த்தியே ஆகவேண்டிய
நித்திய செயலும்  அல்ல!
வளர்த்தே ஆகவேண்டிய
வான்புகழ் பண்பும் அல்ல!!
 
 
ண்பாடு இன்னதென
கலாச்சாரம் இதுவென!
மரபுவழி குணங்களெல்லாம்
மார்வழிக் குடித்திருந்தும்!
மரபுகளின் தன்மையெல்லாம்
புழக்கடையில் போட்டுவைக்கும்
மரபுவழு ஏனிங்கு?!!
 
யிர்களின் வகைகளில்
பிரிவுகள் ஏகமெனினும்!
உயிரென்பது பொதுவென
உள்ளூர உணர்ந்திருந்தும்!
உயர்வென்றும் தாழ்வென்றும்
பிரிவினைகள் ஊக்குவிக்கும்
திணைவழு ஏனிங்கு?!!

 


ன்மையாய் தம்மை
தரம்கொண்டு ஏற்றிவைத்து!
முன்னிற்கும் முன்னிலைக்கும்
புறமிருக்கும் படர்க்கைக்கும்
செயலாலும் சொல்லாலும்
தவறிழைத்து மகிழும்
இடவழு ஏனிங்கு?!!

ன்றிழைக்கும் தவறுகள்
இன்னுமோர் யுகத்திற்கு
இழிநிலை சாற்றுவிக்க!
மறைந்தகால புகழ் ஒழித்தும்
வரும்கால ஏற்றம் தடுக்கும்!
நிகழ்நிலைத் தவறுகளாய்
காலவழு ஏனிங்கு?!!
 


னங்களை இனிமையாய்
பிரித்து வைத்ததெல்லாம்!
மொழியின் சொற்சுவைக்கே - அன்றி
ஒன்றனுக்கு மற்றொன்று
தாழ்வென உரைப்பதற்கு அல்லவென
கற்று கற்பித்து அறிந்தாலும்
பால்வழு ஏனிங்கு?!!

வினாக்கள் தொடுப்பது
விளைந்திருக்கும் அறிவதனை
உரம்கொண்டு வளர்த்திடவே - என
உணர்ந்தே இருந்தாலும்
தகாத வினாக் கணைகளால்
துளையிட்டு மகிழ்வேற்கும்
வினாவழு ஏனிங்கு?!!
 


தொடுத்துவரும் வினாக்களுக்கு
தகுந்த விடை உண்டென
தன்னிலையாய் உணர்ந்தாலும்!
நேர்மறை விடைகள் தவிர்த்து
எதிர்மறை எண்ணங்களுடன்
பொதுமறை புறந்தள்ளும்
செப்புவழு ஏனிங்கு?!!

வாழ்வின் காலநிலைகளில்
வழுக்களின் நிகழ்வுகள்!
நடந்தேறும் போதெல்லாம்
வழாநிலை தழுவிடவே
வழுவமைதி கைகொண்டு
வழுக்களின் தடங்களை
துடைத்துப் போகின்றேன்!!
 


ழுக்கள் என்பதெல்லாம்
புறங்காலில் ஒட்டிய
சேறுகள் போன்றவையே!
நிகழும் தருணம்
அகற்றவில்லை எனில்
வடுக்களாக நிலைகொண்டு
வாழ்வைச் சீரழிக்கும்!!

ழுக்கள் இங்கே
வடுக்களாக மாறுமுன்!
வழுக்களின் நிறம்
மாற்றிடுக!
வழாநிலையே வாழ்வின்
நிலைப்பென கொண்டிடுக!!


 
அன்பன்
மகேந்திரன் 

37 comments:

ராஜி said...

இனங்களை இனிமையாய்
பிரித்து வைத்ததெல்லாம்!
மொழியின் சொற்சுவைக்கே - அன்றி
ஒன்றனுக்கு மற்றொன்று
தாழ்வென உரைப்பதற்கு அல்ல
>>
இதை உணர்ந்தாலே ஜாதி, மத, நாட்டு சண்டை வராமல் உலகமெ சுபிட்சிக்குமே. நடக்குமா?!

ராஜி said...

மின்சார தடையினால் தடையின்றி வரமுடியலைஅண்ணா. மன்னிக்கவும்

தினேஷ்குமார் said...

இன்றிழைக்கும் தவறுகள்
இன்னுமோர் யுகத்திற்கு
இழிநிலை சாற்றுவிக்க!//

இன்னிலையுணர்ந்து இனியாவது மாற்றம் கொள்வோமெனில் யுகம் மாறி இனியவை சூடும் ....


நல்ல மாற்றங்கள் தெரிகின்றன உங்கள் வரிகளில் வாழ்த்துக்கள் மகேந்திரன் ...

MARI The Great said...

//////////////இனங்களை இனிமையாய்
பிரித்து வைத்ததெல்லாம்!
மொழியின் சொற்சுவைக்கே - அன்றி
ஒன்றனுக்கு மற்றொன்று
தாழ்வென உரைப்பதற்கு அல்ல//////////


அருமையான வரிகள் சகோ ..!

செய்தாலி said...

//வழுக்களே ..... வடுக்களாக!!//

ரெம்ப
அற்புதமா அழமாய்
சொல்லப்பட்டு இருக்கு

உணர்பவர்கள் உணரலாம்
மெய்யினை

குறையொன்றுமில்லை. said...

வழுக்கள் இங்கே
வடுக்களாக மாறுமுன்!
வழுக்களின் நிறம்
மாற்றிடுக!
வழாநிலையே வாழ்வின்
நிலைப்பென கொண்டிடுக!!


அழ்கான வரிகளில் நல்ல கவிதை வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை.
மிகவும் பிடித்தது:

//பண்பாடு இன்னதென
கலாச்சாரம் இதுவென!

மரபுவழி குணங்களெல்லாம்
மார்வழிக் குடித்திருந்தும்!

மரபுகளின் தன்மையெல்லாம்
புழக்கடையில் போட்டுவைக்கும்

மரபுவழு ஏனிங்கு?!!//

பாராட்டுக்கள்.

Anonymous said...

நலமா சகோதரரே..
இரு செல்வங்களும் நலமாய் இருப்பார்கள் என நினைக்கிறேன்...
ஊர் போனாலும் வலையை விட மனதில்லையா..

மற்றுமொரு தரமான படைப்பு...
நல்லா ஊர் சுத்திட்டு வாங்க..

அந்த செட்டினாடுல பிரியாணியும் ...பொதிகைல ஸ்வீட்டும்...மறக்காம வாங்கி வரவும்...

இராஜராஜேஸ்வரி said...

வழுக்கள் இங்கே
வடுக்களாக மாறுமுன்!
வழுக்களின் நிறம்
மாற்றிடுக

வசந்தமாய் வழுமாற்றம் கொள்ள
வந்து மொழிந்த அருமையான பகிர்வுகள் பாராட்டுக்கள்..

Yaathoramani.blogspot.com said...

வழுக்களையேவண்ண கவிதைகளாக்கி
எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha,ma 4

Mahan.Thamesh said...

வணக்கம் அண்ணா ; நலமா ? : நல்லதொரு படைப்பினை தந்துள்ளீர்கள் ;

பால கணேஷ் said...

மன்னிச்சுடுங்க மகேன். இந்த இந்த வரிகளை ரசித்தேன்னு என்னால பிரிச்சுக் கூற முடியலை. பிரமிக்க வைத்தது உங்க கவிதைன்னு மட்டும் சொல்லி உஙகளை மனமார வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Seeni said...

உங்களுடைய வரிகளை!
மெதுவாக -
சுவையாக படித்தேன்!

என்ன ஒரு புது-
புது வரிகள் வார்த்தைகள்!

நல்ல அருமை-
கவிதை!

சுதா SJ said...

//வழுக்களே ..... வடுக்களாக!!//


அழகான தலைப்பில் ஆழமான கவிதை :)))

Unknown said...

கருத்துக்களின் தோரணத்துடன் கோர்வையாக கவி....தை எனக்குதித்து இருக்கும் கவிதை!

வெங்கட் நாகராஜ் said...

//மானுடரின்
வளர்பிறைத் தடங்களில்
தோய்ந்திருக்கும் கறைகளோ
கணக்கில் அடங்காது!!//

நல்ல வரிகள் மகேந்திரன்.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி நண்பரே.

Unknown said...

வழுக்களை துடைந்தெரிந்தே...!
நட்புடன் அரவனைத்து
புது சமுதாயம் படைக்க
உங்களுடன் நானும் கை கோர்க்கிறேன்......



(காலத்திக்கு ஏற்ற கவிதை! இணையத்தில் இப்பொழுது நடப்பதை கண்டு கவிதை பிறந்ததோ எனக் கருதுகிறேன்)

Unknown said...

வடு பற்றிய விளக்கம் நன்று!
நாவினால் சுட்ட வடு என்றார்
வள்ளுவர்

புலவர் சா இராமாநுசம்

RAMA RAVI (RAMVI) said...

வழுக்கள் வடுக்களாக மாறும் முன்... வழுக்களின் நிறம் மாற்றிடுக!! அருமை.
மிகச் சிறப்பான கவிதை,மகேந்திரன்.

அருணா செல்வம் said...

பல வருடங்களைக் கழித்த பின் தொல்காப்பியத்தை ஞாபகப் படுத்தியது உங்கள் வழுக்களின் கவிதை வரிகள். நன்றி நண்பரே.

“வழுக்கள் என்பதெல்லாம்
புறங்காலில் ஒட்டிய
சேறுகள் போன்றவையே!
நிகழும் தருணம்
அகற்றவில்லை எனில்
வடுக்களாக நிலைகொண்டு
வாழ்வைச் சீரழிக்கும்!!“ அருமையான வரிகள்.

ஹேமா said...

ஊருக்குப் போயிருக்கும்போதுதான் கவிதைக் கரு மனிதனின் செயற்பாடுகளோடு கசப்புணர்வைத் தரப்பார்க்கிறது.மாற்று மனிதர்களோடு பழகும்போது வேறுபாட்டையும் புரிந்துகொள்கிறோம்.வழுக்களோடு வாழ்ந்து பிரிவினைகளைத்தானே சாதிக்கிறோம்.மகி சிறப்பு !

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கவிதை ! அற்புத வரிகள் ! பாராட்டுக்கள் !

சென்னை பித்தன் said...

//வழாநிலையே வாழ்வின்
நிலைப்பென கொண்டிடுக!!//
அருமை

Unknown said...

முத்திரைக் கவிதை! நன்று! வாழ்த்துக்கள்!

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

kupps said...

வழுக்கள் மனித இயல்பு.ஆனால் அதுவே தொடர்கதையாகும்போது ,நமக்கு பிடித்துப்போகும்போது, வடுக்களாகிறது சமூகத்தின் பார்வையில்.
கலக்கல் கவிதை போங்க! வாழ்த்துக்கள்.

Anonymous said...

வழு - வடு மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

kowsy said...

வழுக்களைத் துடைத்தெறிந்து வாழ்வில் வழுவற்ற வாழ்க்கை வாழ்க . வழுவற்ற பதிவுகளை படைக்க. இலக்கண வழுக்கள் எல்லாம் இங்கே கவிதைக்கு களம் ஏறியிருக்கின்றன . வாழ்த்துகள்

கீதமஞ்சரி said...

வழுக்கள் பற்றிய அறிவோடு வாழ்வியலையும் சொல்லிப்போகும் அற்புதப் பதிவுக்குப் பாராட்டுகள் மகேந்திரன். வழுவமைதி காக்கும் தருணங்களைத் தன்னிரக்கத்துடன் எடுத்துக்கூறி வழாநிலைக்கு வாழ்க்கையை உயர்த்தும் வழியைக் காட்டும் வழிமுறைக்கும் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.

சசிகலா said...

அண்ணா வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

Anonymous said...

Nalam nalamariya aaval...vaalka...valamudan..
Vetha. Elangathiakam.

மாலதி said...

மிகவும் சிறப்பான ஆக்காம் வழுவே இன்று வாழ்க்கையாகிப் போனது வழுக்களை அழகாக படம் பிடித்து இன்று எங்களுக்கு கட்சிக்கு வைத்த விதம் சிறப்பு தொடருங்கள் பாராட்டுகள்

சத்ரியன் said...

//இனங்களை இனிமையாய்
பிரித்து வைத்ததெல்லாம்!
மொழியின் சொற்சுவைக்கே - அன்றி
ஒன்றனுக்கு மற்றொன்று
தாழ்வென உரைப்பதற்கு அல்ல//

மகேந்திரன் அண்ணே,

அனைத்து வரிகளுமே அருமையான கருத்துக்களுடன் மிளிர்கின்றன.

செய்தாலி said...

அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன்
நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:

M.R said...

வழுக்கள் இங்கே
வடுக்களாக மாறுமுன்!
வழுக்களின் நிறம்
மாற்றிடுக!
வழாநிலையே வாழ்வின்
நிலைப்பென கொண்டிடுக!

அருமையான கருத்து நண்பரே
பகிர்வுக்கு நன்றி

மகேந்திரன் said...

வணக்கம் அன்புத் தோழமைகளே,
இனிய கருத்தளித்த அனைவருக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Post a Comment